PDA

View Full Version : என் வாழ்க்கை

இணைய நண்பன்
16-08-2007, 11:39 AM
http://www.filehive.com/files/0816/vb.JPG

பள்ளியோரம்
பந்துவிற்கிறேன்
படிக்காத ஏக்கத்தோடு

பள்ளி செல்ல ஆசை
பாழாய் போன வறுமை
தடுத்து விட்டது

என்வயதில்
எத்தனை பிள்ளைகள்
குதூகலமாக இருக்கிறார்கள்

நான் பந்து விற்கவந்தா
நடைப்பிணமாவேன்
என் வயது பிள்ளைகளை பார்த்து

படிப்பு
விளையாட்டு
இதுதான் அவர்கள் வாழ்ககை

கஸ்டம்
வறுமை
இதுதான் என் வாழ்கை

இந்த பந்து எல்லாம்
விற்பனையானால் தான்
என் ஒரு நாள் பசிக்கு உணவு கிடைக்கும்

அதே நேரம்
ஒவ்வொரு பந்தும்
ஒவ்வொரு பிள்ளைக்கும்
சந்தோசமான விளையாட்டு

அவர்களின்
சந்தோசமான நிகழ்வுகளை பார்த்து
என் வாழ்க்கை ஏக்கத்துடன்
கழிகிறது

அமரன்
16-08-2007, 12:15 PM
பந்தடித்து மகிழும்
பருவத்தில்
வியாபாரியாக எத்தனைபேர்
சந்தையாகிவிட்ட உலகில்.

பள்ளிக்கு செல்லவேண்டிய வயதில், பக்கத்தில் காற்றடித்தபந்துடன் காற்றுப்போன பலூனாக ஒருவன். நல்லசமூகக்கவிதை. தொடருங்கள் இக்ராம். பாராட்டுக்கள்.

சிவா.ஜி
16-08-2007, 12:20 PM
ஆஹா அருமையான படத்துக்கேற்ற அருமையான கவிதை.ஏங்கத்தான் முடியும் பாவம் இந்த சிறுவனால்.இந்த பிஞ்சின் தோளிலிருந்து இந்த சுமையை இறக்கி, அந்த தோளில் புத்தகப்பையை யார் மாட்டுவது.....?
நல்ல சமூக சிந்தனையுள்ள கவிதை.படைத்த இக்ராமுக்கு வாழ்த்துக்கள்

ஷீ-நிசி
16-08-2007, 01:39 PM
படத்துக்கான கவிதை! ஏக்கம் வரிகளில் தெரிகிறது.... இன்னும் வடித்திருக்கலாம் சிறுவனின் ஏக்கத்தை.....

வாழ்த்துக்கள் தோழரே!

இலக்கியன்
16-08-2007, 03:43 PM
ஆம் இது போல எத்தனை பிஞ்சுகள்
நெஞ்சத்தை தொட்டது உங்கள் கவிதை

இணைய நண்பன்
16-08-2007, 09:24 PM
படத்துக்கான கவிதை! ஏக்கம் வரிகளில் தெரிகிறது.... இன்னும் வடித்திருக்கலாம் சிறுவனின் ஏக்கத்தை.....

வாழ்த்துக்கள் தோழரே!

நன்றி தோழரே

இணைய நண்பன்
16-08-2007, 09:37 PM
ஆம் இது போல எத்தனை பிஞ்சுகள்
நெஞ்சத்தை தொட்டது உங்கள் கவிதை

நன்றி இலக்கியன்

இளசு
18-08-2007, 07:25 AM
சமூகப் பிரக்ஞை..
பார்வைப்பதிவு..

கவிதைக்குப் பாராட்டுகள் இக்ராம்!

aren
18-08-2007, 11:19 AM
அழகான கவிதை ஆனால் மனதை நெருடுகிறது. பாராடுக்கள்.

இணைய நண்பன்
18-08-2007, 03:37 PM
அழகான கவிதை ஆனால் மனதை நெருடுகிறது. பாராடுக்கள்.

நன்றி

இணைய நண்பன்
18-08-2007, 03:37 PM
சமூகப் பிரக்ஞை..
பார்வைப்பதிவு..

கவிதைக்குப் பாராட்டுகள் இக்ராம்!

பாராட்டுக்களுக்கு நன்றி

இணைய நண்பன்
18-08-2007, 03:38 PM
பந்தடித்து மகிழும்
பருவத்தில்
வியாபாரியாக எத்தனைபேர்
சந்தையாகிவிட்ட உலகில்.

பள்ளிக்கு செல்லவேண்டிய வயதில், பக்கத்தில் காற்றடித்தபந்துடன் காற்றுப்போன பலூனாக ஒருவன். நல்லசமூகக்கவிதை. தொடருங்கள் இக்ராம். பாராட்டுக்கள்.
நன்றி

இணைய நண்பன்
18-08-2007, 03:42 PM
ஆஹா அருமையான படத்துக்கேற்ற அருமையான கவிதை.ஏங்கத்தான் முடியும் பாவம் இந்த சிறுவனால்.இந்த பிஞ்சின் தோளிலிருந்து இந்த சுமையை இறக்கி, அந்த தோளில் புத்தகப்பையை யார் மாட்டுவது.....?
நல்ல சமூக சிந்தனையுள்ள கவிதை.படைத்த இக்ராமுக்கு வாழ்த்துக்கள்

ஒவ்வொருத்தரும் மனசு வைத்தால் அவன் தோளில் புத்தகப்பை மாட்டலாம்.நன்றி சிவா.ஜி

namsec
18-08-2007, 03:46 PM
1992ஆம் ஆண்டு நான் கோவா சென்ற போது துவரங்குறிச்சியை சேர்ந்த சிறுவர்கள் அங்கு வியாபாரம் செய்வதை கண்டேன் ஒரு சிறுவனிடம் நான் கேட்ட பொழுது 100 சிறுவர்கள் ஒட்டு மொத்தமாக இது போல் வந்து வியாபாரம் செய்வதாக கூறினான்.

மனோஜ்
18-08-2007, 03:50 PM
சிறப்பான கவிதை இக்ராம் சிறுவனின் மனதை அப்படியே படம் பிடித்து காட்டி விட்டிர்கள் அருமை

ஆதவா
18-08-2007, 04:22 PM
நான் படிக்கும் உங்களின் முதல் கவிதை..

எல்லாருக்கும் எல்லா வாழ்வும் வாய்ப்பதில்லை.. படிக்காமலே ஏமாந்துபோகிறவர்கள் பலர்.. பாதியிலே படிப்பை நிறுத்திவிட்டு தொழிலுக்குச் செல்லும் பலர்... இன்னும் சிலர் படிக்கத் தெரியாதவனுக்கு படிப்பை திணிப்பார்கள்... எல்லாம் பணம் செய்யும் வேலை.

உடைந்துபோன பந்துபோலவே ஆசைக் கனவுகள் நொடிந்துபோகும் இந்த சிறுவர்களுக்கு..... இன்னும் சில பாதியில் படிப்பை முடித்தவர்களுக்கும்.. இவர்களுக்கு என்ன வித்தியாசம் தெரியுமா ? படிப்பைத் தொடாதவர்கள் பந்து விற்பார்கள். படிப்பைத் தொடராதவர்கள் பந்து செய்வார்கள்..

வறுமையின் பிடியை கிட்ட இருந்து கவனித்துப் பாருங்கள்.. அதன் இறுக்கம் எத்தனை ஆழம் என்று.. வயிற்றுக்கு விடுப்பு கொடுத்துவிட்டு வாழ்க்கை நகர்த்தும் எத்தனையோ நடுத்தர மக்களும் உண்டு என்பது உண்மையே! ஒருநாள் உணவுக்கு அலைபவர்களை கவனித்துப் பாருங்கள்.. அதில் பாதிநபர்கள் குடிகாரர்களாக இருக்கவும் வாய்ப்புண்டு.. சிலர் சொல்வார்கள் தன் குடும்பத்தை மறந்துவிட்டான் என்று.... இருக்கலாம். ஆனால் வறுமையை அவன் மறந்திருக்கமாட்டான்... (ஆதவா நீ என்ன சொல்லவர?)

நம் வறுமைத் தீயில் குளிர்காய்பவர்களை நம் கண்களுத் தெரிய வாய்ப்பில்லை. ஒவ்வொரு வறுமைக்குப் பின்னும் ஒருவன் வாழ்ந்துவருகிறான் இல்லையா இக்ராம்? நீங்கள் சொன்னமாதிரி அவர்களுடைய சந்தோசத்தை ஏக்கமாய் பார்க்கிறது என்பது உண்மையே!

கவிதை அழகு... படம் அழகோ அழகு.. இன்னும் கொஞ்சம் முயன்றிருக்கலாம்... இருப்பினும் கவிதை அழகு குறையவில்லை.. வாழ்த்துக்கள் இக்ராம்.

இணைய நண்பன்
18-08-2007, 04:30 PM
1992ஆம் ஆண்டு நான் கோவா சென்ற போது துவரங்குறிச்சியை சேர்ந்த சிறுவர்கள் அங்கு வியாபாரம் செய்வதை கண்டேன் ஒரு சிறுவனிடம் நான் கேட்ட பொழுது 100 சிறுவர்கள் ஒட்டு மொத்தமாக இது போல் வந்து வியாபாரம் செய்வதாக கூறினான்.

உண்மைதான் இந்த நிலைமை மாற வேண்டும்

இணைய நண்பன்
18-08-2007, 04:32 PM
கவிதை அழகு... படம் அழகோ அழகு.. இன்னும் கொஞ்சம் முயன்றிருக்கலாம்... இருப்பினும் கவிதை அழகு குறையவில்லை.. வாழ்த்துக்கள் இக்ராம்.

நீண்ட விளக்கத்துடன் கருத்துச் சொன்ன தோழர் ஆதவா அவர்களுக்கு எனது மனம் கவர்ந்த நன்றிகள்.

இணைய நண்பன்
18-08-2007, 04:33 PM
சிறப்பான கவிதை இக்ராம் சிறுவனின் மனதை அப்படியே படம் பிடித்து காட்டி விட்டிர்கள் அருமை

நன்றி மனோஜ்

lolluvathiyar
19-08-2007, 07:09 AM
இகராம் கவிதை அருமை. வருமையின் சோகத்தை காட்டிய வரிகள்
அதுவும் படத்தை போட்டு படம்பிடித்து காட்டிவிட்டது .

இணைய நண்பன்
19-08-2007, 07:54 AM
இகராம் கவிதை அருமை. வருமையின் சோகத்தை காட்டிய வரிகள்
அதுவும் படத்தை போட்டு படம்பிடித்து காட்டிவிட்டது .

நன்றி வாத்தியார்

பூமகள்
20-08-2007, 06:57 AM
இவனைப் போல் இளம் தளிர்கள் எத்தனைப் பேர்... ஏக்கங்களோடே... வாழ்க்கை நடத்துகின்றனர்... இப்படி எவரேனும் கண்ணில் பட்டால் கண்ணீர் விட்டு மட்டும் செல்லாமல் கல்வி கற்க உதவவும் வேண்டும் என்று அழகாக உணரவைத்தது உம் கவி...

படத்திற்கான அழகான கவி.. இன்னும் முயற்சியுங்கள் இக்ராம்..! வாழ்த்துக்கள்.

இணைய நண்பன்
20-08-2007, 07:17 AM
இவனைப் போல் இளம் தளிர்கள் எத்தனைப் பேர்... ஏக்கங்களோடே... வாழ்க்கை நடத்துகின்றனர்... இப்படி எவரேனும் கண்ணில் பட்டால் கண்ணீர் விட்டு மட்டும் செல்லாமல் கல்வி கற்க உதவவும் வேண்டும் என்று அழகாக உணரவைத்தது உம் கவி...

படத்திற்கான அழகான கவி.. இன்னும் முயற்சியுங்கள் இக்ராம்..! வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி

ஓவியன்
24-08-2007, 03:42 AM
வாழ்க்கையியினால்
பந்தாடப்பட்ட
எத்தனை எத்தனையோ
சிறார்கள்..........!

இப்படி
அடி பட்ட பந்துகளாக......!

நெஞ்சை உருக்கும் கரு இக்ராம் பாராட்டுக்கள்!.