PDA

View Full Version : கீரை, காய்கனிகளை ஏன் சாப்பிடனும்



sadagopan
16-08-2007, 09:53 AM
காய்கனிகள், கீரைகளில் இல்லாத சத்து எதிலும் இல்லை. இவற்றிலுள்ள 'பைடோ கெமிக்கல்ஸ்' நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றது.


1. கீரை, முட்டைக்கோஸ் ஏன் சாப்பிடணும்?

சில உணவுகளில் உள்ள கிருமி நாசினிகளையும், தேவையற்ற ரசாயனங்களையும் பிரித்து உணவை ஜீரணிக்கச் செய்வதால்

2. பூண்டு, வெங்காயம் ஏன் சாப்பிடணும்?

ரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன. இவற்றிலுள்ள சல்பைட் சத்து ஜீரண சக்தியைத் தருவதுடன் வயிறு உபாதைகளையும் போக்கும்.

3. தக்காளி, பச்சை திராட்சை ஏன் சாப்பிடணும்?

நுரையீரல் புற்று நோய் நீங்க உதவுகிறது. நோய் எதிர்ப்புச்சக்தி ஏற்படுகின்றது.

4. கேரட், மாம்பழம் ஏன் சாப்பிடணும்?

இவற்றிலுள்ள பீடா கரோடின், ஆல்பா கரோடின் என்னும் ரசாயன சத்துக்கள் புற்றுநோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவை.

5. சிவப்பு திராட்சை, ஸ்ட்ராபெர்ரி ஏன் சாப்பிடணும்?

இருதயப் பாதுகாப்பிற்கு மிகவும் நல்லது. இதய ரத்தக்குழாயில் ரத்தம் கட்டுவதைத் தடுக்கிறது.

6. ஆரஞ்சு, எலுமிச்சை ஏன் சாப்பிடணும்?

இவையும் புற்றுநோய் உட்பட நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்தவை. பெண்கள் கண்டிப்பாக சாப்பிடவேண்டும்.

*****
ந*ட்புட*ன்

ச*ட*கோப*ன்

விகடன்
16-08-2007, 10:11 AM
பயனுள்ள தகவல்கள். பழகி வந்தால் வாழ்க்கை தித்திக்கும்.

பாராட்டுக்கள் சடகோபன்

அமரன்
16-08-2007, 10:14 AM
இப்போதேல்லாம் எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிடக்கூடாது என்று பலருக்குத் தெரிவதில்லை. இயந்திர வாழ்வில் கிடைப்பதை சாப்பிட்டுவிட்டு சுழல ஆரம்பிகின்றனர். அவர்களுக்காக பயனுள்ள தகவல்களை தாங்கிய, உடல் ஆர்ரோகியம் தொடர்பான செய்திகள் தாங்கிய இழை என்பதால் மருத்துவப்பகுதிக்கு மாற்றுகின்றேன்.

ஓவியன்
16-08-2007, 03:54 PM
நல்ல தகவல் சடகோபன்!

இப்போதெல்லாம் நல்ல காய்கறிகளைக் காண்பதே பெரிய விடயமாக இருக்கிறதே..........?

lolluvathiyar
23-08-2007, 03:20 PM
பயனுள்ள தகவல். இது போண்ற தகவல்கள் தொடர்ந்து தரவேண்டும்

saguni
01-09-2007, 07:04 PM
மிக உபயோகமான தகவல்தந்த உங்களூக்கு நன்றி

ஓவியா
01-09-2007, 08:22 PM
கடவுளால் படைக்கப்பட்ட எல்லா பழமும் ஏதோ ஒரு மகத்துவதன்மை வாய்ந்ததே!! நல்ல பயனுல்ல பதிவு. நன்றி நண்பா.

தங்கவேல்
02-09-2007, 01:07 AM
அட நீங்க வேற ?? மட்டன், சிக்கன், மீன் எல்லாம் விலை அதிகம். அதனால் வேறவழி இல்லாமல் காய்கறி சாப்பிடவேண்டி உள்ளது.

மட்டன் ஒரு கிலோ ரூபாய் 200
சிக்கன் ஒரு கோழி ரூபாய் 150
மீன் ( கட்லா) ஒரு கிலோ ரூபாய் 60.00
இதைத் தவிர மசாலா மற்ற பொருட்களை சேர்த்தால், எங்கேயோ போய் நிற்கும்.

ஓவியா
02-09-2007, 01:18 AM
மட்டன் பாயையும், சிக்கன் கடைக்காரரையும், மீனவனையும், மசாலா மில் முதலாழியையும் வாழ வைக்க பல மக்கள் குவிந்து கிடக்கின்றனர்,

ஏதோ, நாங்கள் பழ வியாபாரியை கோடிஸ்வரராக்க முயல்கிறோம். ஹி ஹி

தங்கவேல்
02-09-2007, 01:29 AM
கோடீஸ்வரர்கள் ஆக துடிக்கும் உள்ளங்களே,, தங்கை ஓவியாவிடம் தொடர்பு கொள்ளுங்கள்....

ஓவியா
02-09-2007, 01:39 AM
ஹி ஹி ஹி

அண்ணா நீங்களும் உங்கள் வாரிசும் ரொம்பவே ஸ்டைலாதான் போஸ்ட் குடுக்கறீங்க!! வாழ்த்துக்கள்.

தங்கவேல்
02-09-2007, 02:17 AM
ஹி ஹி .....

பூமகள்
02-09-2007, 09:03 AM
பயனுள்ள தகவல் அண்ணா.
உங்க குழந்தை அழகு போங்க... சுத்தி போடுங்க நா...!!

தங்கவேல்
02-09-2007, 09:19 AM
அவனுக்கு இணையத்தில் போட்டோவை பார்ப்பது சந்தோசம் தரும். சிரிப்பான் பார்த்து பார்த்து. ரித்தி ரித்தி என்று சொல்லுவான். அதனால் தான் இணையத்தில் ஏற்றினேன்.