PDA

View Full Version : நீ!



வெண்தாமரை
16-08-2007, 09:11 AM
என்னென்று அறியேன் ஏதேன்று அறியேன்?
கண்டதும் நீ! காதல் சொன்னதும் நீ!
நான் அழும் வேளையில் என் கண்ணீராய் நீ!
சிரிக்கும் வேளையில் ரீங்காரமாய் நீ!
ஆக நினைவே நீ! நித்திரையும் நீ!
முதல்புள்ளியாய் நீ! முற்றுப்புள்ளியாய் நீ!
எல்லாம் நீயாய்.. எதிர்பார்க்கிறேன்....
மங்கலநாளில் மணிச்சரடு தருவாய் என...............

அன்புடன்
மஹா..

விகடன்
16-08-2007, 10:18 AM
ஏதோ ஆண்டவனை துதிபாடுவதுபோலல்லவா தெரிகிறது கவிதை வரிகள் முற்றுப் பெறும் விதம்...


என்ன செய்வது வெண்தாமரை. வாழ்க்கையில் இப்படிப்பட்ட சங்கடங்கள் எல்லாம் வரும். எவராவது ஒருவர் மனம் புண்படும் வகையில் நடக்கவேண்டிய கட்டாயம். தவிர்க்க முடியாத நிலை.


அன்புடன்
மஹா..

அப்படீன்னா?
மஹாலட்மியா? :nature-smiley-003:

இலக்கியன்
16-08-2007, 02:36 PM
என்னெற்று அறியேன் ஏதேன்று அறியேன்?
கண்டதும் நீ! காதல் சொன்னதும் நீ!
நான் அழும் வேளையில் என் கண்ணீராய் நீ!
சிரிக்கும் வேளையில் ரீங்காரமாய் நீ!
ஆக நினைவே நீ! நித்திரையும் நீ!
முதல்புள்ளியாய் நீ! முற்றுப்புள்ளியாய் நீ!
எல்லாம் நீயாய்.. எதிர்பார்க்கிறேன்....
மங்கலநாளில் மணிச்சரடு தருவாய் என...............

நித்திரை என்பதற்கு பதிலாக கனவு என்றால் நன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறேன் நி வரியில் எழுதவேண்டும் என்பதால் அப்படி போட்டிருக்கிறீகள் போல. வாழ்த்துக்கள்

ஓவியன்
16-08-2007, 10:38 PM
முதல் புள்ளியானவன்
காவியம் படைத்து
முற்றுப் புள்ளியாகட்டும்
இடை நடுவே
கமா புள்ளியாகாமல்..............

பாராட்டுக்கள் கவி வடித்த மஹாவுக்கும் அதனை இங்கே பதித்த வெண்தாமரைக்கும்..............:nature-smiley-003:

பூமகள்
20-08-2007, 03:24 PM
எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றம் தராதிருந்தால் சரி தான்.

வாழ்த்துக்களை வெண்தாமரைக்கு வழங்குவதா ?? மஹாவிற்கு வழங்குவதா??

aren
20-08-2007, 03:28 PM
உங்கள் எதிர்பார்ப்புகள்
வெற்றிக் கணியாக
உங்கள் கையில்
கூடிய விரைவில்

வெற்றியை
எதிர்பார்த்தால்
வெற்றி
நிச்சயம்

கவிதை அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

க.கமலக்கண்ணன்
20-08-2007, 04:07 PM
என்னென்று அறியேன் ஏதேன்று அறியேன்?
கண்டதும் நீ! காதல் சொன்னதும் நீ!
நான் அழும் வேளையில் என் கண்ணீராய் நீ!
சிரிக்கும் வேளையில் ரீங்காரமாய் நீ!
ஆக நினைவே நீ! நித்திரை மேகங்களும் நீ!
முதல்புள்ளியாய் நீ! முற்றுப்புள்ளியாய் நீ!
எல்லாம் நீயாய்.. எதிர்பார்க்கிறேன்....
மங்கலநாளில் மணிச்சரடு தருவாய் என...............

அன்புடன்
மஹா..

நித்திரையும் நீ என்பதற்க்கு பதிலாக

நித்திரை மேகங்களும் நீ என்று இருந்தால்

நிஜமாகவே இன்னும் நன்றாக இருக்கும்