PDA

View Full Version : மையல் பெண்ணே...!



வசீகரன்
16-08-2007, 07:27 AM
என் மார்பில் புதைந்து
மையல் கதைகள் ஆயிரம் பேசினாய்...!
மனதிதின் ஆசைகள் மகிழ்ந்திட கூறினாய்...!

அருகில் இருக்கும் நிலவினில்
குடிபுக குதுகலித்தாய்....!

தென்றல் சூழ்ந்த சோலையின்
வனப்பில் விழிகள் விரித்தாய்...!

திங்கள் தனில் மாலை வரும்
நாளை எண்ணி மகிழ்ந்திட்டாய்....!

மங்கை நிண்தான் மனம் முழுவதும்
மாவிலை தோரணங்கள்...!
ஆர்ப்பரிக்கும் ஆசைகள்...
காலம் பல வாழ்ந்திட துடிக்கும் காதல்...!

நகைப்பூண்ட உன் முகம் முழுவதும்....
கண்ட பொழுதினில்
அகன்று போனதடி...ஆரிருள் சோகங்களும்...!
ஆற்றாமை மேகங்களும்...!

இலக்கியன்
16-08-2007, 02:40 PM
அவள் முகம் கண்டு சோகங்கள் பறந்தனவோ வாழ்த்துக்கள்

ஓவியன்
16-08-2007, 10:46 PM
பகலவனைக் கண்ட
இருளென
உன்னைக் கண்டால்
மறையும் சோகங்கள்
உன்னை ஒரு தடவை
கண்டு விட்டு
மறையவெனவோ
வருகின்றன என்னிடம்.......?

வாழ்த்துக்கள் வசீகரன், அழகான ஒரு கவிதைக்கு............:nature-smiley-003: