PDA

View Full Version : கவிதை கேளுங்கள்



sadagopan
16-08-2007, 07:01 AM
அன்பானவளே
அவரவர் வசதிக்கு
அகல நீளம் வைத்து
அறிக்கை செய்கின்றனர்
நம் காதலை.

என் பங்கிற்கு
நானும் எழுதியிருக்கிறேன்.

ஊரோர ஆலமரம்
வேலியோரத்துக் கள்ளிகள்
பள்ளிக்கழிப்பறை
அரசாங்கப் பேருந்து
நான் சுவாசித்துவிடும் காற்று
எல்லாவற்றிலும்
எழுதியிருக்கிறேன்
நம் காதலை!

பதுக்கி வைத்திருக்கும்
நீ - எப்போது
பகிரங்கப்படுத்தப் போகிறாய்?
நாளையா?,
பின்னொரு நாளா?,
இல்லை
உன் பிள்ளைக்குப்
பெயரிடும்போதா?

*******

ந*ட்புட*ன்

ச*ட*கோப*ன்

சிவா.ஜி
16-08-2007, 07:06 AM
அட்டகாசமான வரிகள். ஒரு பள்ளிப்பருவத்துக் காதல் நல்ல வரிகளில் சொல்லப்பட்டிருக்கிறது.அதிலும் அந்த கடைசி வரிகள் நீங்கள் அழுத்தம் கொடுத்ததற்கு ஏற்ப நச்சான வரிகள்.
(என்னுடைய சொல்லாத காதல் அனுபவக் கட்டுரையையை கொஞ்சம் பார்வையிடமுடியுமா...http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11168)

இலக்கியன்
16-08-2007, 02:30 PM
சொல்லாத காதல் செல்லாக்காசு
வாழ்த்துக்கள்

ஓவியன்
16-08-2007, 11:19 PM
நான் உன்னைக்
காதலிப்பதாக
ஊரே
சொல்லும் போது
நான் உன்னைக்
காதலிப்பதாக
நானா
சொல்ல வேண்டும்......?


அழகு வரிகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சடகோபன்.