PDA

View Full Version : என்னவள்



sadagopan
16-08-2007, 06:19 AM
இரா உணவு முடித்து
துப்பட்டிக்குள் தஞ்சம் புகுந்து
துயில் விழையும் வேளையில்
தூங்க விட மறுக்கிறாய்!

எத்தனையோ நினைத்திருந்தேன்
என்னவென்று மறந்தே போனேன்
எப்போதும் உன் நினைவால்
என் கனவெல்லாம் கலைந்தே போனேன்

கண் மூடித் தூங்கும்போது
காதுக்குள்ளே ரீங்காரமிடுகிறாய்
கால் சதையைக் கடித்து
கதண்டு கதண்டாய் வீங்க வைக்கிறாய்

ஏய்... இரக்கமற்ற கொசுவே!
என்னை முழுவதுமாய்த் தந்துவிட்டேன்
என்னவளை மட்டுமாவது உறங்கவிடு


*******
நட்புடன்

சடகோபன்

அமரன்
16-08-2007, 08:51 AM
தூக்கத்தை திருடியவள்
துணையென நினைத்தேன்.
துர்க்குண
கொசுவென உணர்ந்தேன்.
துணையவள் தூங்க
தன்னையே கொடுத்தவன் க(வி)தை பிரமாதம்.

பாராட்டுக்கள் சடகோபன்.

சிவா.ஜி
16-08-2007, 08:59 AM
முல்லைக்கு தேர் தந்த பாரியைப்போல இங்கு ஒரு காதலன் கொடுமைக்கார கொசுவிடமிருந்து தன் காதலியை காப்பாற்ற தன் உடலையே தருகிறானோ...
இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது...தன்னைத்தவிர தன் காதலியை ஒரு கொசு கூடத் தொடக்கூடாது என நினைக்கும் ஆத்மார்த்த காதலனையும் இங்கு காண்கிறோம்.
வாழ்த்துக்கள் சடகோபன்.

அமரன்
16-08-2007, 09:03 AM
முல்லைக்கு தேர் தந்த பாரியைப்போல இங்கு ஒரு காதலன் கொடுமைக்கார கொசுவிடமிருந்து தன் காதலியை காப்பாற்ற தன் உடலையே தருகிறானோ...

அப்போ அவன் சிபிச்சக்கரவர்த்தி..

இலக்கியன்
16-08-2007, 02:38 PM
தூக்கம் கலைத்தது கொசுவா வாழ்த்துக்கள்

ஓவியன்
16-08-2007, 11:11 PM
மனதைக் தைத்த
தைக்காக
கனவைத் தொலைத்து
கொசுவை தைக்க
இடமளித்த கவிதை
அழகு..............