PDA

View Full Version : நேசத்தின் சுகந்தம்

பூமகள்
16-08-2007, 05:43 AM
http://img38.picoodle.com/img/img38/9/8/16/poomagal/f_questionbabm_6f0e029.jpg

வருவேன் என
வாய் மொழிந்ததற்காய்
வாசலிலே வாசம் செய்து
வந்தவுடன்
சன்னமாய்ச்சாடி
உள்ளுக்குள்
நெகிழ்ந்த
அனுபவம் உண்டா
உனக்கு...???!!!

எனக்கு பிடிக்கும்
என்பதற்க்காய்
நானறியாமல்
உண்டியலை
உடைத்து
சிதறும்
சில்லறைகளை
சத்தமின்றி எடுத்து
சீனி மிட்டாய்
வாங்கித்தந்து
மகிழும்
என் முகத்தைப் பார்த்த
பரிச்சயம்
உண்டா உனக்கு....???!!!

சின்னக்குழந்தையின்
சில்மிசங்களை
சிரித்து
ரசித்திருக்கையில்
நீயும்
அப்படியே என்று
சிந்தையுரைத்த
சிந்தனையாளர்களோடு
சிறிது நேரம்
ஸ்நேகித்ததுண்டா நீ...???

விகடன்
16-08-2007, 07:38 AM
பூமகளின் இந்தக் கவிதையில் தான் அனுபவித்ததை மற்றவர்களும் அனுபவித்திருக்கிறீர்களா என்று வினாவுவது போலவும் உள்ளது, தேவேளை இப்படியெல்லாம் செய்திருக்கிறாயா நீ எனக்கு என்று தவறவிட்டதை நினைத்து நிந்திப்பதைப் போலவும் உள்ளது.

விளக்கம் எனக்கில்லையோ கவிதைக்கில்லையோ..

இருந்தாலும் கவிதை நடை நன்றாக உள்ளது.

சிவா.ஜி
16-08-2007, 11:11 AM
இப்படியெல்லாம் செய்யும் ஒரு காதலனை நாடும் உள்ளமாகவும் பார்க்கலாம்,இப்படியெல்லாம் கூடச் செய்து ஒரு உள்ளத்தை மலரச்செய்யமுடியும்...இது ஏன் உனக்குத் தெரியவில்லையென அந்த ரசனையில்லா காதலனைப் பார்த்து கேட்பதாயும் கொள்ளலாம்.
எப்படி பூமகள்...?
அழகான கவிதை வாழ்த்துக்கள்.

பூமகள்
16-08-2007, 12:59 PM
இக்கவிதைக்கு இவ்வளவு விளக்கங்களா??
நன்றிகள் சகோதரர் விராடன் மற்றும் சிவா அவர்களுக்கு..

என் விளக்கத்தையும் சொல்லிவிடுகிறேன்..

நட்பைப் பற்றி தெரியாமல் சண்டையிடும் நண்பரைப் பார்த்து கோபமாய் கேட்பது போல் எழுதியுள்ளேன்... நட்பின் ஆழத்தை காட்ட மன உணர்வுகளைப் பிரதிபலிக்கவே இக்கவி..

இதைக் காதல் கவிதை என்றெண்ணியிருந்தால் நான் அப்பகுதியில் இட்டிருப்பேன்..

சிவா.ஜி
16-08-2007, 01:03 PM
ஆஹா பூமகள் வடித்திருக்கும் கவிதையின் நாயகனாய் ஒரு நன்பன் கிடைத்தால்...மனதுக்கு எத்தனை இதம்....? பாராட்டுக்கள் பூமகள்.

அமரன்
16-08-2007, 03:12 PM
நட்பைப் போற்றும் பூமகளின் அழகு கவிதைக்கு பாராட்டுக்கள்

இலக்கியன்
16-08-2007, 03:27 PM
சிந்தையுரைத்த
சிந்தனையாளர்களோடு
சிறிது நேரம்
ஸ்நேகித்ததுண்டா நீ...???

நட்பு பற்றிய கவிதைக்கு வாழ்த்துக்கள்

ஆதவா
16-08-2007, 07:30 PM
இதை ஏன் காதல் கவிதையாக எடுத்துக்கொள்ளக்கூடாது?

ஒருவன், ஒருத்தி, அவள் அவனை கண்ணளவில் நோக்காமல் மனதளவில் நோக்கச் சொல்லுகிறாள். இது நட்பிலும் நடக்கலாம் காதலிலும் நடக்கலாம்... வரிகளில் எங்கும் நட்பையோ காதலையோ குறிப்பிடாமல் சொன்னதும் குறிப்பிடத்தக்கது..

கவிதை பாதியில் முடிந்துவிட்ட உணர்வு படித்து முடித்த பிறகு கிடைக்கிறது. சில ஞாபகக் கீறல்களைத் தரும் கவிதைகளை மறக்க முயலுவதில்லை.. மறக்க முடிவதில்லை. என்றோ ஒரு நாள் எனக்காக போரிட்ட அந்த உள்ளங்களை இன்றளவிலும் மறக்க இயலாமல் தவிக்கிறேன். கவிதை படித்ததும் அந்த நிலைக்கும் மீண்டும் சென்று விட்டேன்..

கவிதையில் குறிப்பிட்ட காட்சிகள் மிக அருமை.. நல்ல கவித்திறன். கவிதை முடிக்கப்பட்டிருக்கவேண்டும் என்பது எனது யோசனை...

இளசு
16-08-2007, 08:11 PM
வாழ்க்கை பல வருடங்களுக்குப் பிறகு கிடைக்கப்போகும்
வைப்பு நிதி அல்ல...
தினம் கொஞ்சமாய் செலவழிக்கும் சில்லறை போன்றது..

வாசல் தரிசனம், உண்டியல் உடைப்பு, வார்த்தை கரிசனம்..
இவை சின்ன சந்தோஷங்கள் மட்டுமே அல்ல..
வாழ்க்கை மாலையின் மலர்மொட்டுகள்..

அனுபவிக்கும் உள்ளத்துக்கு
அன்றாட வாழ்வே விழாக்கொண்டாட்டம்தான்!

வாழ்த்துகள் பூமகள்!

பூமகள்
17-08-2007, 01:39 PM
இதை ஏன் காதல் கவிதையாக எடுத்துக்கொள்ளக்கூடாது?

ஒருவன், ஒருத்தி, அவள் அவனை கண்ணளவில் நோக்காமல் மனதளவில் நோக்கச் சொல்லுகிறாள். இது நட்பிலும் நடக்கலாம் காதலிலும் நடக்கலாம்... வரிகளில் எங்கும் நட்பையோ காதலையோ குறிப்பிடாமல் சொன்னதும் குறிப்பிடத்தக்கது..

கவிதை பாதியில் முடிந்துவிட்ட உணர்வு படித்து முடித்த பிறகு கிடைக்கிறது. சில ஞாபகக் கீறல்களைத் தரும் கவிதைகளை மறக்க முயலுவதில்லை.. மறக்க முடிவதில்லை. என்றோ ஒரு நாள் எனக்காக போரிட்ட அந்த உள்ளங்களை இன்றளவிலும் மறக்க இயலாமல் தவிக்கிறேன். கவிதை படித்ததும் அந்த நிலைக்கும் மீண்டும் சென்று விட்டேன்..

கவிதையில் குறிப்பிட்ட காட்சிகள் மிக அருமை.. நல்ல கவித்திறன். கவிதை முடிக்கப்பட்டிருக்கவேண்டும் என்பது எனது யோசனை...

நன்றி சகோதரர் ஆதவா அவர்களே.

தாங்கள் சொன்னது சரியே.... கவிதை என் பள்ளிப் பருவத்தில் நான் எழுதியது... ஞாபகம் வந்தவற்றை இங்கு பதித்தேன்...
வாழ்த்துக்கவி போல் அன்று முடித்ததாக ஞாபகம் என் தோழிக்காக....
வரிகள் மறந்துவிட்டேன்...மன்னிக்கவும்...

நம் தோட்டத்தில் தான் கவிப்பூக்களுக்கு பஞ்சமில்லையே..... எவரேனும் முயற்சித்து என் கவியை முடித்துத் தாருங்களேன்... இதைப் போட்டியாகவும் கொள்ளலாம்...

aren
17-08-2007, 02:29 PM
வாசலில் காத்திருப்பது போல் ஒரு மகிழ்ச்சி கிடையாது. இந்தக் கவிதை காதல் பற்றியும் எடுத்துக்கொள்ளலாம். அந்த காத்திருத்தலை அனுபவித்தவர்கள்தான் சொல்லமுடியும். அது ஒரு கிளுகிளுப்பான நேரம், காத்திருப்பதில் இருக்கும் சுகமே ஒரு அலாதி.

பாராட்டுக்கள். கவிதை அருமையாக உள்ளது.

நன்றி வணக்கம்
ஆரென்

rocky
17-08-2007, 02:31 PM
கவிதை மிகவும் நன்றாக இருந்தது தோழி. பாராட்டுக்கள். குழந்தைப்பருவத்தை என்னும் போது மனதில் ஏற்படும் நிம்மதியை நாம் நிச்சயம் உணர முடியும். அதுபோல் குழந்தையாகவே இருந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கமும் நம் அனைவருக்கும் தோன்றும். நண்பர்கள் பிரிவதைப் பற்றி கோபமாக எழுதியதாக சொல்கிறீர்கள், நான் நினைப்பது பெரியவர்களின் நட்பு வேண்டுமானால் சில காரணங்களுக்காக பிரியலாம், ஆனால் குழந்தைகளின் நட்பில் என்னைப்பொருத்தவரை பிரிவிற்கு இடமில்லை, காரணம் குழந்தைகள் எவ்வளவு பெரிய சண்டையிட்டு அடித்துக் கொண்டாலும் மறுகனமே அதை மறந்து சேர்ந்து விடும் விளையாடுவதை நாம் பார்க்கலாம் ஏன் நாமே செய்திருக்கலாம் ஆனால் இந்த குணம் பெரியவர்களுக்கு இருப்பதில்லை. ஆகையால் நீங்கள் கவிதைக்கு மேல் போட்டிருந்த படத்தில் இருக்கும் குழந்தையின் சண்டை தற்காலிகமானதே. ஆகையால் நீங்கள் கோபப்பட்டு கேள்வி கேட்பதாயிருந்தால் அந்த குழந்தையின் படம் வேண்டாம். நம் போன்ற பெரியவர்களின் படத்தைப் போடுங்கள். மீண்டும் உங்கள் கவிதைக்கு பாராட்டுக்கள்.

பூமகள்
17-08-2007, 03:15 PM
நன்றி rocky and aren சகோதரர்களே...

பொருத்தமான பெரியோரின் படம் கிடைக்காததாலே தான் இப்படத்தைப் போட்டேன்...

ஆமாம்.... என் இக்கவி பாதியில் முடியாமல் உள்ளது...

முடித்து தந்து உதவுங்களேன் கவிச்சக்ரவர்த்திகளே......

சகோதரர் ஓவியன் அண்ணா, ஓவியாக்கா, இலக்கியன் அண்ணா அனைவரும் ஓடியாங்கோ.... வந்து உதவுங்கள் என் கவி முற்றுபெற.....

பின் குறிப்பு:
மற்றவர்கள் கோபிக்க வேண்டாம்...
அனைவரும் வருக...!! கவி முடித்து தருக..!!

நன்றிகளுடனும்...எதிர்பார்ப்புகளுடனும்...

சிவா.ஜி
18-08-2007, 05:15 AM
வாழ்க்கை பல வருடங்களுக்குப் பிறகு கிடைக்கப்போகும்
வைப்பு நிதி அல்ல...
தினம் கொஞ்சமாய் செலவழிக்கும் சில்லறை போன்றது..

அபாரமான சிந்தனை.பல்ர் வாழ்க்கையை வைப்பு நிதியாக நினைத்துக்கொண்டுதான் சில்லறையை "சில்லறையாய்" நினைத்து வீணடித்து விடுகிறார்கள்.வைப்புநிதியாய் அவர்கள் நினைத்திருக்கும் அந்த வாழ்க்கை வாழப்படாமலேயே முடிந்து விடுகிறது. கிரேட் இளசு.

ஷீ-நிசி
18-08-2007, 05:20 AM
இப்படியான அனுபவங்கள் உண்டு.... காதலின் நேசம் கிடைக்கபெற்ற அனைவருக்கும்.. தொடருங்கள்..... வாழ்த்துக்கள்!

இளசு
18-08-2007, 06:39 AM
.வைப்புநிதியாய் அவர்கள் நினைத்திருக்கும் அந்த வாழ்க்கை வாழப்படாமலேயே முடிந்து விடுகிறது. .

நான் சொல்லவந்ததை இன்னும் தெளிவாய்ச் சொன்னீர்கள் சிவா..

நன்றி!

ஆதவா
18-08-2007, 06:44 AM
கவிதை மிகவும் நன்றாக இருந்தது தோழி. பாராட்டுக்கள். குழந்தைப்பருவத்தை என்னும் போது மனதில் ஏற்படும் நிம்மதியை நாம் நிச்சயம் உணர முடியும். அதுபோல் குழந்தையாகவே இருந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கமும் நம் அனைவருக்கும் தோன்றும். நண்பர்கள் பிரிவதைப் பற்றி கோபமாக எழுதியதாக சொல்கிறீர்கள், நான் நினைப்பது பெரியவர்களின் நட்பு வேண்டுமானால் சில காரணங்களுக்காக பிரியலாம், ஆனால் குழந்தைகளின் நட்பில் என்னைப்பொருத்தவரை பிரிவிற்கு இடமில்லை, காரணம் குழந்தைகள் எவ்வளவு பெரிய சண்டையிட்டு அடித்துக் கொண்டாலும் மறுகனமே அதை மறந்து சேர்ந்து விடும் விளையாடுவதை நாம் பார்க்கலாம் ஏன் நாமே செய்திருக்கலாம் ஆனால் இந்த குணம் பெரியவர்களுக்கு இருப்பதில்லை. ஆகையால் நீங்கள் கவிதைக்கு மேல் போட்டிருந்த படத்தில் இருக்கும் குழந்தையின் சண்டை தற்காலிகமானதே. ஆகையால் நீங்கள் கோபப்பட்டு கேள்வி கேட்பதாயிருந்தால் அந்த குழந்தையின் படம் வேண்டாம். நம் போன்ற பெரியவர்களின் படத்தைப் போடுங்கள். மீண்டும் உங்கள் கவிதைக்கு பாராட்டுக்கள்.

பலே! ராக்கி... நல்ல விமர்சனம்... இப்படியே தொடர்க...

lolluvathiyar
19-08-2007, 07:21 AM
காதல் கவிதை அருமை என்றாலும்
ஒரு குழந்தை படத்தை வைத்து மயக்கிய்
பூமகள் கைவரிசையும் அதைவிட அருமை

பூமகள்
21-08-2007, 12:46 PM
விமர்சித்த சகோதரர்கள் இளசு அவர்கள், ஷீ− நிதி அவர்கள், ஆதவா அவர்கள், லொள்ளுவாத்தியார் அவர்கள்... மற்றும் அனைத்து மன்றத்து நெஞ்சங்களுக்கும் நன்றிகள் கோடி...!

தொட*ர்ந்து செதுக்குங்க*ள் என்னை... க*விதாயினியாய் மாற*....!!
:icon_08:

ஓவியன்
24-08-2007, 05:18 AM
வாழ்க்கைப் பாதையிலே
எமைச் சுற்றிக்
கொட்டிக் கிடக்கின்றன
அற்புதங்கள்
ஏராளம் ஏராளமாக........

நட்பு, காதல்
அந்த அற்புதங்களில் இரண்டு!

இரண்டிற்குமே ஒரு
ஓற்றுமை.........
காலத்தால் உடைந்தால்
காணாமலே போய்விடும்....

காணாமல் போக்கிய
கணங்கள் நெஞ்சிலே
தினமும் வலிகளாய்........

ஏன் அந்த கணம்
என் வாழ்க்கையில்
வந்தது என்ற
ஏக்கத்துடனேயே
மீதி வாழ்க்கை...............!

பூமகள் அழகான ஒரு கவிதை பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...!

பூமகள்
24-08-2007, 05:25 AM
காணாமல் போக்கிய
கணங்கள் நெஞ்சிலே
தினமும் வலிகளாய்........

ஏன் அந்த கணம்
என் வாழ்க்கையில்
வந்தது என்ற
ஏக்கத்துடனேயே
மீதி வாழ்க்கை...............!

அழகான பின்னூட்டக் கவியில் அருமையாய் சொன்னீர் நிஜத்தை... நன்றி ஓவியரே.. தங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்துக்களுக்கும்.

நன்றிகளோடு,

அக்னி
08-09-2007, 02:41 PM
அனுபவித்த சுகமா...
கனவுகாணும் மனமா...
இன்னமும்
எனக்குள் பச்சைகுத்தப்பட்ட
வாழ்வின் சின்னங்கள்...
நிரந்தரமான பசுமையா..? வலியா...?

கவிதை அருமை... என்னாலியன்ற சின்ன முற்று...
பாராட்டுக்கள் பூமகள், மற்றும் பதிவாளர்கள் அனைவருக்கும்...