PDA

View Full Version : என்னவளே

இலக்கியன்
15-08-2007, 07:16 PM
மயில் என்பான்
மயங்காதே
கிளி என்பான்
கிறங்காதே
குயில் என்பான்
குழையாதே

ஆசைகள் காட்டிடுவான்
அசைந்திடாதே

காதல் என்பான்
கலந்திடாதே

சிறகடிக்கும்
பட்டாம் பூச்சி நீ

சிறகொடிந்த
பறவையாகாதே!

அமரன்
15-08-2007, 07:48 PM
மொத்தத்தில் வலைவிரிக்கும் வேடனிடத்தில் சிக்காதே. பொதுவாக பெண்களுக்கு இளகிய மனம். எளிதில் ஏமாந்து விடுவார்கள். (இப்போது கொஞ்சம் உசாராகிவிட்டார்கள். எத்தனை நாட்களுக்குத்தான் ஒரே பல்லவியை பாடுவார்கள் ஆண்கள்)அப்படியான பசப்பு வார்த்தைகளை நம்பி மோசம் போகும் மங்கயற்கு பங்கம் வராதிருக்க இலக்கியன் சொல்லும் அறிவுரைக்கவிதை நன்று. பாராட்டுக்கள்

இலக்கியன்
15-08-2007, 07:51 PM

உங்கள் அழகிய விமர்சன பின்னுட்டம் நன்றாக உள்ளது
இப்போது ஆண்கள்தான் அவதானமாக இருக்க வேண்டு என்றாலும்
இப்படி ஒரு கற்பனை அறிவுரை

இளசு
15-08-2007, 08:04 PM
மான்கள் புலிகளை வேட்டையாடும்
வினோதக் காடாமே காதல்?

ஆனாலும் காதல் போர்வையில்
அப்பாவி மான்கள் பலியானபடிதான்..

பொய் முகமூடி உய்த்துணரும் உள்ளுணர்வு
பொதுவாகவே அதிகம் ஆணை விட பெண்ணுக்கு
ஆனாலும் தாய்மை, இரக்க உணர்வுகள் மேலிட
அல்லல்கள் அடிக்கடி வந்து சேரும் அவளுக்கு!

இலக்கியன் முழங்கிய கவிதைச் சங்கு..
சில கிழக்குகளாவது வெளுத்தால் நன்று!

இலக்கியன்
16-08-2007, 02:42 PM
மான்கள் புலிகளை வேட்டையாடும்
வினோதக் காடாமே காதல்?

ஆனாலும் காதல் போர்வையில்
அப்பாவி மான்கள் பலியானபடிதான்..

அழகாக சொன்னீர்கள் வாழ்த்துக்களும் நன்றியும்

ஓவியன்
16-08-2007, 10:53 PM
பசு தோற் புலிகளின்
தோலுரித்து
பசுக்களைக் காக்கும்
இலக்கிய முயற்சிக்கு
என் பாராட்டுக்கள்......

இலக்கியன்
17-08-2007, 09:13 AM
பசு தோற் புலிகளின்
தோலுரித்து
பசுக்களைக் காக்கும்
இலக்கிய முயற்சிக்கு
என் பாராட்டுக்கள்......

ஓவியன் கருத்துக்கு நன்றி பல

சிவா.ஜி
19-08-2007, 07:30 AM
பட்டதை சொல்லி,உஷார்படுத்துவது ஒன்று,.....படுவாய் என்று முன்னமே சொல்லி,பாதுகாப்பாய் இருந்துகொள் என்று எச்சரிக்கைப்படுத்துவது மற்றொன்று.இதில் இரண்டாவதை இலக்கியன்..இலக்கியமாய் சொல்லியிருக்கிறார். வரிகள் அழகு..கருத்தும் அழகு...வாழ்த்துக்கள் இலக்கியன்.

இலக்கியன்
19-08-2007, 04:45 PM

சிவா ஜி உங்கள் பின்னுட்டத்துக்கு நன்றி

அரசன்
21-08-2007, 01:55 PM
மயில் என்பான்
மயங்காதே
கிளி என்பான்
கிறங்காதே
குயில் என்பான்
குழையாதே

ஆசைகள் காட்டிடுவான்
அசைந்திடாதே

காதல் என்பான்
கலந்திடாதே

சிறகடிக்கும்
பட்டாம் பூச்சி நீ

சிறகொடிந்த
பறவையாகாதே!

இவற்றையெல்லாம் யாருக்கு சொல்கிறீர்கள்.

இலக்கியன்
22-08-2007, 07:46 AM
இவற்றையெல்லாம் யாருக்கு சொல்கிறீர்கள்.
உங்களுக்குத்தான்:medium-smiley-029:

Narathar
22-08-2007, 08:32 AM
அட! போங்க இலக்கியன் இதுக்கெல்லாம் மயங்கிய பெண்கள் இப்போ காணக்கிடைப்பது குறைவு............

இப்போ இவர்கள் விரிக்கும் வலையில் ஆண்கள் விழுவதுதான் அதிகம்

மனோஜ்
22-08-2007, 08:54 AM
சரியா சென்னீங்க நாரதரே இப்ப இலக்கியன் எழுதிய கவிதையை ஆண்கள் தங்களுக்கா எடுத்து கொள்ளலாம அந்த நிலை வந்து விட்டது

Narathar
22-08-2007, 09:01 AM
சரியா சென்னீங்க நாரதரே இப்ப இலக்கியன் எழுதிய கவிதையை ஆண்கள் தங்களுக்கா எடுத்து கொள்ளலாம அந்த நிலை வந்து விட்டது

அதே அதே

இலக்கியன்
22-08-2007, 06:27 PM
பின்னூட்டம் தந்த அணைவருக்கும் நன்றி

பூமகள்
26-08-2007, 04:02 AM
சரியாக சொன்னீர்...இலக்கியரே...
ஆண்கள் அனைவரும் அப்படி இல்லை..:icon_nono:
பெண்கள் அனைவரும் அப்படி இல்லை...:icon_nono:

எங்கோ ஆனால் இது போன்ற சம்பவங்கள் காதல் எனும் கொடுமையால் நடந்த வண்ணமே உள்ளன.. இங்கே என்னதான் சொன்னாலும் பெண்களின் நிலை மிகுந்த கவலைக்கிடமே..!
ம்...மறந்தே விட்டேனே... பாராட்டுக்கள்!!
உங்கள் கவி அற்புதம்..

தளபதி
26-08-2007, 07:25 AM
நண்பரே!! இலக்கியன், உங்கள் கவிதை அருமை. இதையே சிறிது நவீன படுத்தியும் கொடுக்க முயற்சிக்கிறேன்.

செல்போன் என்பான்
செவி கொடுக்காதே!

டேட்டிங் என்பான்
தேதி கொடுக்காதே!!

பைக் என்பான் − அவனுடன்
பறந்து விடாதே!!!

பகட்டாய் இருப்பான்
பயந்து விடாதே!!

கார் என்பான்
கலந்து விடாதே!!

கடைசிவரை காதல் என்பான்
கரைந்து விடாதே!!

கல்யாணம் என்றால் மட்டும் − வீட்டில்
பெரியவர்களிடம் பேசச்சொல்.

அமரன்
26-08-2007, 08:41 AM
தளபதியரே...நவீனம் சிறப்பு.
தொடருங்கள்.

அக்னி
27-08-2007, 12:02 PM
இலக்கியனின் கவியும், தளபதியின் நவீனமும் அபாரம்....
இருவருக்கும் பாராட்டுக்கள்...

காதலில்,
இதயத்தைக் குருடாக்கு...
உணர்வுகளை விழிப்பாக்கு...

பூமகள்
27-08-2007, 12:32 PM
அழகான இலக்கியனின் கவிக்கு நவீனத்துவம் கொடுத்த தளபதியின் கவிவரிகள் அத்தனையும் அருமை.. நிதர்சனம்.:icon_give_rose:

வாழ்த்துக்கள் நண்பர்களே அன்பு இலக்கியன் மற்றும் தளபதி இருவருக்கும்.:aktion033:

சுகந்தப்ரீதன்
28-08-2007, 04:00 AM
சிறகடிக்கும்
பட்டாம் பூச்சி நீ

சிறகொடிந்த
பறவையாகாதே

உற்சாக*மூட்டும் வ*ரிக*ள்...என்ன* ஒரு இல*க்கிய*த*ன*ம் இல*க்கிய*ரின் வ*ரிக*ளில்...வாழ்த்துக்க*ள்!

இலக்கியன்
28-09-2007, 07:26 PM
அட! போங்க இலக்கியன் இதுக்கெல்லாம் மயங்கிய பெண்கள் இப்போ காணக்கிடைப்பது குறைவு............

இப்போ இவர்கள் விரிக்கும் வலையில் ஆண்கள் விழுவதுதான் அதிகம்

நிறைய அனுபவம் போல நாரயணா :lachen001:

இலக்கியன்
28-09-2007, 07:29 PM
சரியா சென்னீங்க நாரதரே இப்ப இலக்கியன் எழுதிய கவிதையை ஆண்கள் தங்களுக்கா எடுத்து கொள்ளலாம அந்த நிலை வந்து விட்டது

இது இருபாலாருக்கும் பொருந்தும் நன்றி மனோஜ்

இலக்கியன்
28-09-2007, 07:30 PM
சரியாக சொன்னீர்...இலக்கியரே...
ஆண்கள் அனைவரும் அப்படி இல்லை..:icon_nono:
பெண்கள் அனைவரும் அப்படி இல்லை...:icon_nono:

எங்கோ ஆனால் இது போன்ற சம்பவங்கள் காதல் எனும் கொடுமையால் நடந்த வண்ணமே உள்ளன.. இங்கே என்னதான் சொன்னாலும் பெண்களின் நிலை மிகுந்த கவலைக்கிடமே..!
ம்...மறந்தே விட்டேனே... பாராட்டுக்கள்!!
உங்கள் கவி அற்புதம்..

நன்றி தோழி உங்கள் பின்னூட்டத்திற்கு

இலக்கியன்
28-09-2007, 07:31 PM
நண்பரே!! இலக்கியன், உங்கள் கவிதை அருமை. இதையே சிறிது நவீன படுத்தியும் கொடுக்க முயற்சிக்கிறேன்.

செல்போன் என்பான்
செவி கொடுக்காதே!

டேட்டிங் என்பான்
தேதி கொடுக்காதே!!

பைக் என்பான் − அவனுடன்
பறந்து விடாதே!!!

பகட்டாய் இருப்பான்
பயந்து விடாதே!!

கார் என்பான்
கலந்து விடாதே!!

கடைசிவரை காதல் என்பான்
கரைந்து விடாதே!!

கல்யாணம் என்றால் மட்டும் − வீட்டில்
பெரியவர்களிடம் பேசச்சொல்.

ஆமாம் தோழரே

இலக்கியன்
28-09-2007, 07:32 PM
இலக்கியனின் கவியும், தளபதியின் நவீனமும் அபாரம்....
இருவருக்கும் பாராட்டுக்கள்...

காதலில்,
இதயத்தைக் குருடாக்கு...
உணர்வுகளை விழிப்பாக்கு...

அக்னி உங்கள் கருத்துக்கு நன்றி

இலக்கியன்
28-09-2007, 07:34 PM
சிறகடிக்கும்
பட்டாம் பூச்சி நீ

சிறகொடிந்த
பறவையாகாதே

உற்சாக மூட்டும் வரிகள்...என்ன ஒரு இலக்கியத்தனம் இலக்கியரின் வரிகளில்...வாழ்த்துக்கள்!

மீண்டும் நன்றி பூமகள்
பின்னூட்டத்திற்கு நன்றி சுகந்தப்ரீதன்