PDA

View Full Version : எழுத்தாளன்



இனியவள்
15-08-2007, 06:50 PM
உறைந்த உண்மைகளை
உறையா மை கொண்டு
அச்சிடுகின்றான்
இரத்தத்தை வேர்வையாய் சிந்தி...

பணம் என்னும் முகமூடி அணிந்து
உண்மையை விலைகொடுத்து வாங்குகின்றன
சில பணமுதலைகள்
அதற்கு அடிமையாகின்றனர்
சில பணந்திண்ணிகள்...

இருட்டில் இருக்கும் நீதியை
எழுத்தெனும் ஒளிகொண்டு
உயிர்ப்பிக்கின்றான் எழுத்தாளன்..

உயிர்கொண்டு ஒளியேற்ற அதனை
லஞ்சம் என்னும் நீர் ஊற்றி அணைக்க
முற்பட விழித்தெழுகின்றது சமுதாயம்...

தூங்கும் சமுகத்தை தட்டித் தட்டி
எழுப்புகின்றான் எழுத்தாளன்
பேனையெனும் எழுத்தாணி கொண்டு..

இளசு
15-08-2007, 06:56 PM
கருத்தழகு ஏராளம் − சொற்
கட்டழகு இன்னும் ஏறலாம்!

வாழ்த்துகள் இனியவள்..

இலக்கியன்
15-08-2007, 06:59 PM
எழுதுகோல் என்பது ஒரு ஆயுதம் இந்திய சுகந்திரப்போராட்டத்தில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாடல்களால் வெள்ளையர்களுக்கு எதிராகவும் பெண்விடுதலைக்காகவும் குரலாக்கினார்.
எழுதாளன் பற்றிய கவிதை நன்றாக உள்ளது

அமரன்
15-08-2007, 07:05 PM
தட்டித்தட்டி விரல்களும்
எழுதி எழுதி ரேகைகளும்
அழிந்ததுதன் மிச்சம்.

சமுதாயத்தில்
மனிதாபிமானம் பஞ்சம்
எழுத்தாளனின்
இல்லத்தை போலவே.

இனியவளின் கவிதை
நிஜமாகினால் பூமி சொர்க்கம்

பாராட்டுக்கள் இனியவள்.

ஓவியன்
19-08-2007, 02:07 AM
பேனை தூக்கிப் போராடுபவனுக்கு
வரிகளாலே ஒரு பாமாலை............

பாராட்டுக்கள் இனியவள்........:nature-smiley-002:

விகடன்
19-08-2007, 03:26 AM
எச்சக்தியையும் இணையாக இருக்கும் பேனாவின் சக்தியை கவிதையாகவே வடித்துவிட்டீர்கள் இனியவள்.

கருத்தாழத்துடன் கவினமமிக்க வரிகள். பாராட்டுக்கள்.

lolluvathiyar
19-08-2007, 07:00 AM
அருமை இனியவள் காதல் என்னும் கோட்டையை விட்டு வெளியே வந்து படைத்த இந்த கவியை நீங்கள் ஆதவா நடத்தும் போடியில் போடலாமே

இனியவள்
19-08-2007, 07:06 PM
நன்றிகள் அனைவருக்கும்

கவிக்கு அழகு சேர்க்கும்
அழகிய பின்னூட்டங்கள்

நன்றிகள் பல தோழர்களே

ஷீ-நிசி
21-08-2007, 03:23 AM
கருத்தழகு ஏராளம் − சொற்
கட்டழகு இன்னும் ஏறலாம்!

வாழ்த்துகள் இனியவள்..

மிக அழகான விமர்சனம்....:icon_03:

வாழ்த்துக்கள் இனியவள்...