PDA

View Full Version : கடலில் கலந்த மழைத்துளியாய்



இனியவள்
15-08-2007, 06:29 PM
அன்பெனும் நீர் தெளித்து
மனம் என்னும் நிலத்தில்
காதல் கோலம் போட்டு விட்டாய்
அழகாய்...

அழகுக்குள் ஒர் அழகாய்
உன் காதல் என்னை அழகுபடுத்த
ஆர்பாரித்து நிற்கின்றேன் கடலலைகள் போல்...

உன் காதல் மாற்றியது இவ்வுலகை
அழகாய் என் கண்களுக்கு மட்டும்
மீனாய் நீந்தி திரிந்தேன் உன்
அன்பெனும் கடலில்...

முத்தாய் கொட்டும் உன் சிரிப்பை
அள்ளிக்கோர்த்தேன் மாலையாய்..

மாலைச்சூரியன் நிலவைப் பரிசளித்துச்
சென்றுவிட ஆனந்தக் குக்கூரலிட்டன
விண்மீன்கள் குளிர்ச்சியில்...

நிலவின் ஒளியில் உன் நினைவின் துணையில்
இரவின் தனிமையில் இன்றைய நினைவுகளை
கவிதை புனைந்து கொண்டிருந்தன மனம்...

காற்றுக்கு கூட வேலிபோட முடியும் அன்பே
ஆனால் உன் நினைவுகளுக்கு வேலி
போட முடியவில்லையே...

ஆழ்ந்த உறக்கத்தில் கூட சிரிக்கின்றேன்
ஆழமாய் உற்று நோக்கினேன் என்னுள்
நீ இரண்டறக் கலந்து விட்டாய்
கடல்நீரில் கலந்து விட்ட மழைத்துளியாய்...

இலக்கியன்
15-08-2007, 06:43 PM
ஆழ்ந்த உறக்கத்தில் கூட சிரிக்கின்றேன்
ஆழமாய் உற்று நோக்கினேன் என்னுள்
நீ இரண்டறக் கலந்து விட்டாய்
கடல்நீரில் கலந்து விட்ட மழைத்துளியாய்...

காதல் மயக்கத்தின் உணர்வுகளை வரிகளுக்குள் சிறைப்பிடித்தீர்கள்
வாழ்த்துக்கள்

இளசு
15-08-2007, 08:11 PM
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
நான் தேடித் தேடிப் பார்த்தேன்
கடல் நீரிலே துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப்பார்த்தேன்..

காதல் வேதனை சொல்லும் அழகிய வரிகள் இவை..

இரண்டறக்கலந்த நினைவை இதைவிட அழகாய்ச் சொல்ல முடியுமா?
இனியவளின் இடையறா இனிய நினைவுகளுக்கு பாராட்டுகள்!

ஓவியா
16-08-2007, 12:41 AM
கவிதையில் மயங்கி, அந்த மழைநீர்ப்போல் நானும் கலந்துவிட்டேன்.

காதலை சுலபமாக பிரித்து விடலாம் என்று சிலர் நினைக்கின்றனர், அது சுலபமா இல்லை நடக்குமா!!

கவிதை அருமை.

பூமகள்
16-08-2007, 06:47 AM
கடல்நீரில் கலந்து விட்ட மழைத்துளியாய்...
நானும் கலந்துவிட்டேன் உங்கள் கவிதைக்கடலில்....
நீச்சல் தெரியாமவிடினும் காதல் காக்கும் என்ற
நம்பிக்கையில்.......

அழகான, ஆழமான காதல் பிரிவின் உணர்வைக் காட்டியிருந்ததற்கு என் பாராட்டுக்கள்...!

சிவா.ஜி
16-08-2007, 06:57 AM
காதலையும், பிரிவையும்,காதலியைப் பற்றியும் சொல்ல இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக முயலுங்கள் இனியவள். மிக அதிக காதல் கவிதைகள் நீங்கள் எழுதி விட்டதால்...எல்லாம் ஒரே மாதிரியாக தோற்றமளிக்கிறது. மாற்றம் வேண்டும்.நிலவு,சூரியன் நட்சத்திரம்,கடல்,நினைவு.....இதையெல்லாம் விடுத்து புது சொற்களுடன் வாருங்கள்....உங்களால் முடியும். ரசிக்க காத்திருக்கிறேன்.

அமரன்
18-08-2007, 07:59 PM
செம்மண் புழுதியில்
காதல்தூரல் கோலம்போட்டதுபோல்
காதல் மணக்கிறது கவிதை எங்கும்.

அழகுக்கு அழகு சேர்த்தாற் போல்
நிலாச்சாரலில் குளித்த விண்மீன்களின்
ஆனந்தராகம் கவிதையில்.

மொத்தத்தில் காதல் கடலில்
கலந்துவிட்ட துளிதேடி
புனைந்த கவிதை
முத்துச்சரமாக ஜொலிக்கிறது.
பாராட்டுக்கள் இனியவள்.

ஆதவா
18-08-2007, 08:54 PM
காதல் செய்யும் போது வரும் உளறல்கள். இனிய நினைவுகள் அருமை...
இன்னும் முயன்றிருக்கலாம்.... இருப்பினும் கவிதை அழகு.....

எங்கேப்பா இனியவளைக் காணோம்??

ஆதவா
18-08-2007, 08:56 PM
செம்மண் புழுதியில்
காதல்தூரல் கோலம்போட்டதுபோல்
காதல் மணக்கிறது கவிதை எங்கும்.

அழகுக்கு அழகு சேர்த்தாற் போல்
நிலாச்சாரலில் குளித்த விண்மீன்களின்
ஆனந்தராகம் கவிதையில்.

மொத்தத்தில் காதல் கடலில்
கலந்துவிட்ட துளிதேடி
புனைந்த கவிதை
முத்துச்சரமாக ஜொலிக்கிறது.
பாராட்டுக்கள் இனியவள்.

அருமை அருமை...

lolluvathiyar
19-08-2007, 06:59 AM
காதல் கவிதைகள் எழுதி குவித்த இனியவள் சில நாட்களாகா கானாமல் போயிருந்தார். மீண்டும் அவரின் இந்த விஜயம் காதல் கவிதைகளை ஒரு தூக்கு தூக்கி விடும்

ஆதவா
19-08-2007, 07:04 AM
காதல் கவிதைகள் எழுதி குவித்த இனியவள் சில நாட்களாகா கானாமல் போயிருந்தார். மீண்டும் அவரின் இந்த விஜயம் காதல் கவிதைகளை ஒரு தூக்கு தூக்கி விடும்

பார்த்துங்க. கனம் தாங்காம கீழ போட்டற போறாங்க./.

இனியவள்
19-08-2007, 06:22 PM
நன்றி அனைவருக்கும்

முயற்சிக்கின்றேன் சிவா
நீங்கள் கூறிய மாதிரி
வித்தியாசமாக படைப்பதற்கு

அமர் உங்கள் கவி அருமை வாழ்த்துக்கள்

நன்றி ஓவி
நன்றி ஓவியன்
நன்றி ஆதவா
நன்றி அமர்
நன்றி இளசு அண்ணா.
நன்றி பூமகள்
நன்றி சிவா
நன்றி வாத்தியார்
நன்றி இலக்கியன்

aren
20-08-2007, 12:12 AM
அருமை இளையவள். அழகான வரிகள். எப்படித்தான் அருவிபோல் வந்து விழுகிறதோ அந்த வரிகள். நான் என்னதான் யோசித்தாலும் ஒன்றுமே வரமாட்டேங்குதே. பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஓவியன்
24-08-2007, 04:29 AM
இனியவள் கவிதை அருமையாக இருக்கின்றது, ஆனால் சிவா கூறியது போல கொஞ்சம் வித்தியாசமாகவும் முயன்று பாருங்களேன் − உங்களால் நிச்சயமாக முடியும் ஆவலுடன் நாங்கள் காத்திருக்கின்றோம்.

வசீகரன்
24-08-2007, 05:41 AM
நிலவின் ஒளியில்
உன் நினைவின் துணையில்

இரவின் தனிமையில்
இன்றைய நினைவுகளை

கவிதை புனைந்து கொண்டிருந்தன மனம்...

வ*ரிக*ளில் விளையாடி இருக்கிறார் இனியவள்...
அருமையான* க*விதை,,,,,,
பாராட்டுக்க*ள் இனிய்வலே.....
அருமையான கவி....!
வசீகரன்....

சுகந்தப்ரீதன்
25-08-2007, 10:45 AM
காற்றுக்கு கூட வேலிபோட முடியும் அன்பே
ஆனால் உன் நினைவுகளுக்கு வேலி
போட முடியவில்லையே...

...

மிக அருமையான வ்ரிகள் எனக்கு மிக பிடித்த வரிகள்!

எப்படி இவ்வளவு அழகா எழுத முடியுதோ? பொறாமையா இருக்கு...!
வாழ்த்துக்கள் இனியா....