PDA

View Full Version : பிரிவு



பூமகள்
15-08-2007, 03:28 PM
http://img35.picoodle.com/img/img35/9/8/15/poomagal/f_lonelym_669361a.jpg

புழங்காத இரும்பு

துருப்பிடிக்குமாம்! - உன்

புழக்கமில்லாமல்

நானும்.........!!!

அமரன்
15-08-2007, 03:35 PM
உப்புக்காற்றின் ஈரம்பட்டு
துருப்பிடிக்குமாம்
இரும்புலோகம்-உன்
மூச்சுக்காற்றின் ஈரம்படாது
துருப்பிடிக்கிறது-என்
கரும்பிதயம்.

அரும்போவியம் மனதைக் கொள்ளைகொள்கின்றது.
புழக்கத்தால் பிறந்த கவிக்குழந்தையில் பழத்தின் சுவை
பாராட்டுக்கள் பூமகள்

namsec
15-08-2007, 03:38 PM
கவிதையுடன் சேர்ந்த படம் அருமை இது போல் மேலும் பல பதிவுகள் கொடுக்க வாழ்த்துக்கள்

இலக்கியன்
15-08-2007, 05:25 PM
சிறிய கவிதைகள் எனக்கும் மிகவும் பிடிக்கும்
துருப்பிடித்து வெந்த என் இதயம்
இன்று மலர்ந்தது உங்கள் கவிதையால்
வாழ்த்துக்கள் பூமகள்

இனியவள்
15-08-2007, 06:39 PM
வாழ்த்துக்கள் பூமகள்
அழகிய குறுங்கவிக்கு

ஓவியன்
16-08-2007, 03:29 AM
இரும்பாக இருந்த நான்
துரும்பாக இளைத்தேனே
உன் அருகாமையின்றி........

பூ மகள் அழகிய ஒரு குறுங்கவி பாராட்டுக்கள் − இன்னும் இன்னும் எழுதுங்க சகோதரி!.:sport009:

விகடன்
16-08-2007, 03:44 AM
பூமகளின் படத்துடனான குறுங்கவி மிக நன்றே. ஓரிரு வரிகளில் ஓராயிடம் விடயத்தை சொல்லிவிடும் போக்கு உடையவர்போலும்.

அது சரி பூமகள். ஒரு சந்தேகம்.....
புழங்காத இரும்பில் துருப்பிடிக்காத அல்லது பிடித்த துரு துடைக்கப் பட்டுவிடுகின்றனவா???

குழப்பத்துடன் விராடன்...

பூமகள்
16-08-2007, 04:50 AM
பூமகளின் படத்துடனான குறுங்கவி மிக நன்றே. ஓரிரு வரிகளில் ஓராயிடம் விடயத்தை சொல்லிவிடும் போக்கு உடையவர்போலும்.

அது சரி பூமகள். ஒரு சந்தேகம்.....
புழங்காத இரும்பில் துருப்பிடிக்காத அல்லது பிடித்த துரு துடைக்கப் பட்டுவிடுகின்றனவா???

குழப்பத்துடன் விராடன்...

நன்றி சகோதரரே.... புழங்காத இரும்பின் துரு துடைக்கப்பட்டுவிட்டால்,
இக்கவியின் தேவை தான் என்ன?

துருக்கள் துடைக்கப்பட வேண்டும் என்பதற்கே.... இக்கவி....!

சிவா.ஜி
16-08-2007, 04:54 AM
நான்கு வரிகளில் நிறைய செய்தி சொல்லி யோசிக்கவைத்த கவிதை.வாழ்த்துக்கள் பூமகள்.

பூமகள்
21-08-2007, 12:49 PM
உப்புக்காற்றின் ஈரம்பட்டு
துருப்பிடிக்குமாம்
இரும்புலோகம்-உன்
மூச்சுக்காற்றின் ஈரம்படாது
துருப்பிடிக்கிறது-என்
கரும்பிதயம்.

அரும்போவியம் மனதைக் கொள்ளைகொள்கின்றது.
புழக்கத்தால் பிறந்த கவிக்குழந்தையில் பழத்தின் சுவை
பாராட்டுக்கள் பூமகள்

அழ*கு பின்னூட்ட*க் க*வியுட*ன் பாராட்டிய*மைக்கு ந*ன்றிக*ள் அம*ர் அண்ணா.

kampan
21-08-2007, 12:55 PM
[QUOTE=அமரன்;256755]உப்புக்காற்றின் ஈரம்பட்டு
துருப்பிடிக்குமாம்
இரும்புலோகம்-உன்
மூச்சுக்காற்றின் ஈரம்படாது
துருப்பிடிக்கிறது-என்
கரும்பிதயம்.

துருப்பிடித்த இரும்புடன் இன்னொரு உலோகம் ஒட்டாது அது போல
காதல் துருப்பிடித்த இதயத்துடன் இந்த உலகமே ஒட்டாது

பூமகள்
21-08-2007, 12:56 PM
கவிதையுடன் சேர்ந்த படம் அருமை இது போல் மேலும் பல பதிவுகள் கொடுக்க வாழ்த்துக்கள்

தங்களின் வாழ்த்துக்கு நன்றிகள் கோடி...!

பூமகள்
21-08-2007, 12:58 PM
சிறிய கவிதைகள் எனக்கும் மிகவும் பிடிக்கும்
துருப்பிடித்து வெந்த என் இதயம்
இன்று மலர்ந்தது உங்கள் கவிதையால்
வாழ்த்துக்கள் பூமகள்

உங்களின் இதயத்தை மலரவைத்ததற்கு மட்டற்ற மகிழ்ச்சி சகோதரரே..
நன்றி அன்பரே!

பூமகள்
21-08-2007, 01:00 PM
வாழ்த்துக்கள் பூமகள்
அழகிய குறுங்கவிக்கு

அன்புச் சகோதரியின் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பல..

பூமகள்
21-08-2007, 01:05 PM
இரும்பாக இருந்த நான்
துரும்பாக இளைத்தேனே
உன் அருகாமையின்றி........

பூ மகள் அழகிய ஒரு குறுங்கவி பாராட்டுக்கள் − இன்னும் இன்னும் எழுதுங்க சகோதரி!.:sport009:

சுகந்தமான பின்னூட்டக்கவியோடு வந்து பாராட்டிய ஓவியருக்கு நன்றிகள்.
தொடந்து எழுதுவேன்..

நன்றிகளோடு,

பூமகள்
21-08-2007, 01:07 PM
நான்கு வரிகளில் நிறைய செய்தி சொல்லி யோசிக்கவைத்த கவிதை.வாழ்த்துக்கள் பூமகள்.

நிரம்பச் சொன்ன செய்தியை புரிந்து கொண்டு வாழ்த்தியமைக்கு நன்றிகள் சகோதரர் சிவா.ஜி அவர்களே..! :wub:

பூமகள்
21-08-2007, 01:11 PM
துருப்பிடித்த இரும்புடன் இன்னொரு உலோகம் ஒட்டாது அது போல
காதல் துருப்பிடித்த இதயத்துடன் இந்த உலகமே ஒட்டாது

நன்றி கவிச்செம்மல் கம்பரே..!

அரசன்
21-08-2007, 01:49 PM
பூமகளின் இந்த பூக்கவிக்கு என் பாராட்டுக்கள்!

பூமகள்
21-08-2007, 02:01 PM
பூமகளின் இந்த பூக்கவிக்கு என் பாராட்டுக்கள்!

நன்றி நண்பரே..!

ஆதவா
21-08-2007, 02:07 PM
வாவ்..... அழகு...

பூமகள்
21-08-2007, 02:10 PM
வாவ்..... அழகு...

நன்றி சகோதரரே.... ! என் கவியினும் சுருக்கிவிட்டீர் விமர்சனத்தை...!!

இளசு
21-08-2007, 07:23 PM
பயன்படாது மக்கி மாய்வதைவிட
பயனாகி பட்டுத் தேய்வதே மேல்..

மண்ணானால் நான் விளைநிலம்..பட்ட
மரமானாலும் நான் வீட்டுத் தூண்!

மனம் புழங்கவேண்டும்.. புழுங்கக்கூடாதென
நச்சென சொன்ன பூமகள்..
பின்னூட்டக்கவி சொன்ன அமர், ஓவியன்..
அனைவருக்கும் பாராட்டுகள்!

அக்னி
28-08-2007, 03:55 PM
உன் அருகாமை தந்த,
ஆனந்தக் கண்ணீர்...
மனதைச் சிலிர்க்க வைத்தது...

உன் பிரிவில் வந்த,
ஆறாக் கண்ணீர்...
மனதைத் துருப்பிடிக்க வைத்தது...

அன்று நான் உயிர்ப்பு...
இன்று நான் இரும்பு...

பாராட்டுக்கள் பூமகள்...

மனோஜ்
28-08-2007, 04:00 PM
நான்கு வரியில்
வாழ்க்கையின்
முக்கியஎதிர்பார்ப்பு அருமை பூமகள்

பூமகள்
28-08-2007, 04:00 PM
பயன்படாது மக்கி மாய்வதைவிட
பயனாகி பட்டுத் தேய்வதே மேல்..

மண்ணானால் நான் விளைநிலம்..பட்ட
மரமானாலும் நான் வீட்டுத் தூண்!

மனம் புழங்கவேண்டும்.. புழுங்கக்கூடாதென
நச்சென சொன்ன பூமகள்..
பின்னூட்டக்கவி சொன்ன அமர், ஓவியன்..
அனைவருக்கும் பாராட்டுகள்!

அருமையான பின்னூட்டக் கவி இளசு அண்ணா.
அழகான விமர்சனமும் கூட.
நன்றிகள் அண்ணா.

பூமகள்
28-08-2007, 04:04 PM
உன் அருகாமை தந்த,
ஆனந்தக் கண்ணீர்...
மனதைச் சிலிர்க்க வைத்தது...

உன் பிரிவில் வந்த,
ஆறாக் கண்ணீர்...
மனதைத் துருப்பிடிக்க வைத்தது...

அன்று நான் உயிர்ப்பு...
இன்று நான் இரும்பு...

ஆகா..அக்னியாரே...... எப்படி தான் உங்களால் இப்படி முடிகிறது....!!!!!!!!
என் கவிக்கருவை மிக அழகாய் வடித்து விட்டீர்.......:icon_dance:
இளசு அண்ணாவும் நீங்களும் என் கவிக்கு மற்றுமொரு உருவம் கொடுத்துவிட்டீர்கள்.
மிக்க மகிழ்ச்சி........:grin:

நன்றிகள் சகோதரர்களே...!:sport-smiley-018:

பூமகள்
28-08-2007, 04:06 PM
நான்கு வரியில்
வாழ்க்கையின்
முக்கியஎதிர்பார்ப்பு அருமை பூமகள்

ஆம் அண்ணா. அன்பின் புழக்கம் இல்லையென்றால் அனைவரும் துருபிடித்துத்தானே போவோம்...!
நன்றிகள் அண்ணா தங்களின் பாராட்டுதலுக்கு.:nature-smiley-008:

அக்னி
28-08-2007, 04:20 PM
ஆகா..அக்னியாரே...... எப்படி தான் உங்களால் இப்படி முடிகிறது....!!!!!!!!
என் கவிக்கருவை மிக அழகாய் வடித்து விட்டீர்

கருவைச் சுமந்தது வாடகைத் தாயானாலும்,
மகவின் தாய், கருவைத் தந்த தாயே...
நன்றி... பூமகள்...

பூமகள்
28-08-2007, 04:26 PM
கருவைச் சுமந்தது வாடகைத் தாயானாலும்,
மகவின் தாய், கருவைத் தந்த தாயே...
நன்றி... பூமகள்...
தன்னடக்கம்... அதிகம் தான் உங்களுக்கு.... போங்கள் அண்ணா........!!:nature-smiley-008::sport-smiley-018:

சாராகுமார்
12-09-2007, 02:18 PM
பூமகள்
நீங்கள் இதயத்துக்கு
பூவால் வீசும்
மகள்.
உங்க படமும்,கவியும் அருமை.வாழ்த்துக்கள்.

ஷீ-நிசி
12-09-2007, 02:45 PM
படமும் அழகு... கவிதையும் மிக அழகு பூ..

வாழ்த்துக்கள்!

கலைவேந்தன்
12-09-2007, 03:28 PM

ல்

ஹைக்கூ!

aren
12-09-2007, 03:31 PM
http://img35.picoodle.com/img/img35/9/8/15/poomagal/f_lonelym_669361a.jpg

புழங்காத இரும்பு

துருப்பிடிக்குமாம்! - உன்

புழக்கமில்லாமல்

நானும்.........!!!

பாத்தும்மா, யாராவது காந்தகத்தை எடுத்துவந்துவிடப் போகிறார்கள்.

கவிதைவரிகள் அருமை. பாராட்டுக்கள்.

வசீகரன்
13-09-2007, 04:52 AM
புழங்காத இரும்பு

துருப்பிடிக்குமாம்! - உன்

புழக்கமில்லாமல்

நானும்.........!!!

அட....அட என அசத்துது பூமகள் ஸ்டைல்...!

சின்ன கவிதை சிகரக்கவிதை...! பாராட்டுக்கள்



வசீகரன்

பூமகள்
13-09-2007, 05:32 AM
மிக்க நன்றிகள் சகோதரர் வசீகரரே..!!
தொடர்ந்து விமர்சியுங்கள்..!!