PDA

View Full Version : கவிதையில் நகைப்போம்



சிவா.ஜி
15-08-2007, 12:29 PM
மன்ற உறவுகளே,கவிதையால் எதையும் செய்யலாம்.சாம்ராஜ்யங்களையே மாற்றக்கூடியது கவி வரிகள். இங்கு நாம் அப்படி எதுவும் செய்யவேண்டாம்.
எல்லோரும் இன்புற்றிருக்க சிரிக்க வைக்கலாம்.[U]நகைச்சுவையாய்[/ஊ]மட்டுமே கவிதைகள் படைப்போம்,அவை படைத்தவரையும்,படித்தவரையும் மனம் விட்டு சிரிக்க வைப்பதாய் இருக்க வேண்டும்.நம்மைச்சுற்றி எத்தனையோ நிகழ்வுகள்..அதிலிருந்து அமுத சுரபியாய் கவிதைக்கான கரு கிடைத்துக்கொண்டே இருக்கும்.அதனால் கவலையின்றி கவிதை படைக்க தொடங்குங்கள்.சந்தோஷப்படுத்த தெரிந்த அனைவரும் இதில் பங்கேற்கலாம்.

உதாரணமாக

நான் டாடா காட்டினால்
அவள் பாட்டா காட்டுகிறாள்
அவளுக்கென்ன தெரியும்
அடி வாங்குவதற்கென்றே
நான் தினம் பேட்டா
வாங்குபவனென்று!

பேட்டா−தினப்படி(இதிலும் அடி...!)

leomohan
15-08-2007, 12:37 PM
என்று தான் நீ நேரத்திற்கு வந்தாய் என்று அவள் திட்ட
இன்று சரியான நேரத்தில் போக வேண்டும் என்று நேரம் பார்க்க
அவளுக்கு திரிகாணி வாங்க அடகு வைத்த கடிகாரம்
எங்கோ நேரம் காட்டியதே

paarthiban
15-08-2007, 12:44 PM
நல்ல விஷயம் நன்றி அய்யாக்களே

சிவா.ஜி
15-08-2007, 12:46 PM
அசத்தலான ஆரம்பம் மோகன். தொடருங்கள்.அடகுவைத்த கடிகாரம் எங்கோ அசைகிறது...நல்ல வரிகள்.வாழ்த்துக்கள்.

ஆதவா
22-08-2007, 04:42 AM
நண்பரே! எனக்கும் சிரிப்புக் கவிதைகளுக்கும் வெகு தூரம்.. பிரச்சனைகளைக் குழைத்து எழுதவே என்னால் தெரியும்... ஜோக்ஸ் வேண்டுமானால் முயற்சிக்கிறேன்.. கவிதையில் புகுத்தத் தெரியாது.

சிவா.ஜி
22-08-2007, 04:49 AM
ஆதவாவுக்குத் தெரியாது என்பதை என்னால் ஒத்துக்கொள்ளமுடியாது.என்ன இங்கே கொஞ்சமாய் உங்கள் பாண்டித்தியத்தை லேசாக்கிக்கொள்ள வேண்டியிருக்கும்....முயலுங்களேன்.

அவசரமாய் வீடு வந்த
கணவன்
அகப்பையை மறைக்கிறான்
அரைமணியில்
அவன் தவறு
மனைவிக்குத் தெரியும்போது
அகப்படாமலிருக்க..!


இப்படி ஏதாவது....ஆதவா....

ஓவியன்
23-08-2007, 03:00 AM
நல்ல முயற்சி சிவா..........
நானும் எழுத முயற்சிக்கின்றேன்.............

இனியவள்
23-08-2007, 08:05 PM
உன்னைப் பார்த்ததும்
காதல் வந்தது
உன் அண்ணனைப்
பார்த்ததும் ஓட்டம்
வந்தது...

நகைச்சுவை இல்லாட்டியும்
நகைச்சுவை என்று நினைச்சாவது
சிரிச்சுடுங்கா

ஆதவா சொன்ன மாதிரி எனக்கும்
நகைச்சுவைக் கவிதை எல்லாம் வராது :icon_wacko:

aren
23-08-2007, 11:40 PM
நல்ல ஆரம்பம் சிவா. எனக்கு கவிதை எழுதத்தெரியாது. ஆகையால் நான் ஏதாவது கிருக்கமுடியுமா என்று பார்க்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
23-08-2007, 11:47 PM
முதல் காதல் கடிதத்தை
என்னவளிடம் கொடுத்தேன்
அவள்
என் வலது கண்ணத்தில்
ஒரு அடி கொடுத்தாள்!!!

மறுநாள்
என்னவளிடம் மறுபடியும்
காதல் கடிதம் கொடுத்தேன்
அவள் இம்முறை
என் இடது கண்ணத்தில்
ஒரு அடி கொடுத்தாள்!!!

துவளவில்லை நான்
முயற்சியுடையார்
இகழ்ச்சியடையார்
ஆயிற்றே!!!

மூன்றாவது நாள்
என்னவளிடம் மறுபடியும்
காதல் கடிதம் கொடுத்தேன்!!!

அவள் என்னைப் பார்த்து
நாக்கைப் பிடிங்கிக்கொண்டு
சாகிற மாதிரி கேட்டாள்

நீ எழுதுவதை
நீ படிப்பதே
இல்லையா?

எவ்வளவு எழுத்துப்பிழைகள்
உன் முகரகட்டையைப்போல்

திருத்தி அழகாக
எழுதிக்கொண்டுவா
என்றாள்.

எனக்கு குதுகூலம்
ஆனால் முகத்தில்
ஈயாடவில்லை!!!

அவள்
முகரகட்டையை
அழுத்திச் சொன்னவிதம் கண்டு
ஒரு அசட்டுச்
சிரிப்புடன் நான்!!!!

aren
24-08-2007, 01:52 AM
என்னவளுக்கு
காதல் கடிதம்
இரண்டு கொயர்
நோட்டு பாழாகி
பின்னர் கடைசியாக
கவிதையை முடித்து
அவள் கையில்
கொடுத்தேன்!!!!

வாங்கினாள்
படித்தாள்
என்னைப் பார்த்தாள்!!!

உன் நண்பர்கள்
நன்றாக
கவிதை
எழுதுவார்கள்
போலிருக்கிறதே
என்றாள்!!!

நான்
ஒன்றும் புரியாமல்?????

aren
24-08-2007, 01:53 AM
மேலேயுள்ள கிருக்கலை வேறுவிதமாக:

என்னவளுக்கு
காதல் கடிதம்
இரண்டு கொயர்
நோட்டு பாழாகி
பின்னர் கடைசியாக
கவிதையை முடித்து
அவள் கையில்
கொடுத்தேன்!!!!

வாங்கினாள்
படித்தாள்
என்னைப் பார்த்தாள்!!!

அடுத்த தடவையாவது
ஒழுங்காக
தமிழில் எழுது
என்றாள்!!!

நான்
ஒன்றும் புரியாமல்?????

aren
24-08-2007, 01:58 AM
மேலேயுள்ள கிருக்கல்களை கொஞ்சம் மாற்றி:

என்னவளுக்கு
காதல் கடிதம்
இரண்டு கொயர்
நோட்டு பாழாகி
பின்னர் கடைசியாக
காதல் கவிதையை முடித்து
அவள் கையில்
கொடுத்தேன்!!!!

வாங்கினாள்
படித்தாள்
என்னைப் பார்த்தாள்
கண்களில் தீச்சுவாலை!!!

எவளுக்கோ எழுதியதை
என்னிடமே கொடுக்கிறாயா
என்று என் முகத்தில்
அந்த காகிதத்தை எறிந்தாள்!!!

நான் என்னவென்று தெரியாமல்
கசங்கிய காகிதத்தை எடுத்து
பிரித்துப் பார்த்தால்
அன்புள்ள மலர் என்றிருந்தது
கொடுத்தது மேகலையிடம்!!!

நான் என்ன செய்வது
ஒன்றும் புரியாமல்?????

ஷீ-நிசி
24-08-2007, 03:59 AM
நல்ல முயற்சி சிவா...

முயற்சிக்கிறேன்....

சிவா.ஜி
24-08-2007, 04:32 AM
ஒன்றும் பிரமாதமில்லை இனியவள் இங்கு நீங்கள் எழுதியதுதான் நகைச்சுவை கவிதை.நன்றாக இருக்கிறது.தினமும் நிகழும் நிகழ்விலிருந்து நமக்கு நிறைய பொறி கிட்டும் அதை கவிதையாக்க சொல்லியாதர வேண்டும் கவிதாயினிக்கு.வாழ்த்துக்கள் இனியவள்.

சிவா.ஜி
24-08-2007, 04:35 AM
கலக்கிட்டீங்க ஆரென் ஒரே கவிதையை பல வடிவங்களில் தந்து அசத்திவிட்டீர்கள்.நகைச்சுவை கவிதையில் முக்கியமானது முடிக்கும் விதம்தான்.எதிர்பாராத திருப்பம் இருந்தால் அருமையாக இருக்கும்.இன்னும் முயலுங்கள்...சிரிப்பு கியாரண்டி...வாழ்த்துக்கள்

சிவா.ஜி
24-08-2007, 04:36 AM
கவிதையின் நாயகன் ஷீ−நிசி கலக்கப்போகும் கவிதைக்காக காத்திருக்கிறோம்.வாங்க....வாழ்த்துக்கள்.

ஓவியன்
24-08-2007, 04:44 AM
ஆரென் அண்ணா!
பிச்சு உதறிட்டீங்க......!
உங்கள் கவிதைகள் சூப்பர்.....!
காதல் கவிதைகள் எழுதி ரொம்பவே நொந்து போயிருக்கீங்க போல.....!!! :icon_wink1:

aren
24-08-2007, 06:50 AM
கலக்கிட்டீங்க ஆரென் ஒரே கவிதையை பல வடிவங்களில் தந்து அசத்திவிட்டீர்கள்.நகைச்சுவை கவிதையில் முக்கியமானது முடிக்கும் விதம்தான்.எதிர்பாராத திருப்பம் இருந்தால் அருமையாக இருக்கும்.இன்னும் முயலுங்கள்...சிரிப்பு கியாரண்டி...வாழ்த்துக்கள்

நன்றி சிவா. ஏதோ எழுதவேண்டும் என்று தோன்றியது. நம் கவிதை மன்னர்கள் அனைவரும் எழுதும்பொழுது நானும் ஏதாவது கிருக்கவேண்டும் என்று தோன்றியது, அவ்வளவே. நன்றாக வந்திருந்தால் சந்தோஷமே.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
24-08-2007, 06:52 AM
ஆரென் அண்ணா!
பிச்சு உதறிட்டீங்க......!
உங்கள் கவிதைகள் சூப்பர்.....!
காதல் கவிதைகள் எழுதி ரொம்பவே நொந்து போயிருக்கீங்க போல.....!!! :icon_wink1:

நன்றி ஓவியன். நல்லா இருந்ததா?

நொந்தெல்லாம் போகவில்லை. நகைச்சுவையாக ஏதாவது எழுதவேண்டுமே, அதனால் எழுதினேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
25-08-2007, 05:00 PM
ஆஹா அருமையான முயற்சி. பாராட்டுக்கள். அட்டகாசம் பண்ணும் சிவாவுக்கும் தொடர்வேட்டுத் தீர்க்கும் ஆரென் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்.
-அமரன்

அமரன்
25-08-2007, 05:02 PM
ஐ லவ் யூ
சொன்னவள் அறைந்தாள்
என் பதில் கேட்டதும்
என்பீட்டர் மேட்டர்
எப்படித்தெரிந்தது அவளுக்கு..
ஐ 2 லவ்...!

ஓவியன்
25-08-2007, 05:05 PM
அடச் சே......!
உன் வீட்டுப்
பொமரேனியன் மீது
கூட பொறாமை
வருகிறதே,
நீ அதனைக்
கொஞ்சும் போது.

ஓவியன்
25-08-2007, 05:07 PM
ஐ 2 லவ்...!

நல்லாவே அனுபவப் பட்டிருக்கீங்கப்பு!

:grin: :grin: :grin: :grin:

அக்னி
25-08-2007, 05:11 PM
அடடே...
இத இத்தன நாள் கவனிக்காம விட்டுட்டோமே...
சும்மா அதிருதில்ல...

அத்தனையும் சூப்பருங்கோ.. பாராட்டுக்கள்...

ஆமா...
ஆரென் அண்ணா... நீங்களும் கூட மலரை விட்டு வைக்கவில்லையா..?

அமரன்
25-08-2007, 05:16 PM
பந்தியில் இருந்தவர்கள்
கொல்'லென சிரித்தனர்
ரசமா இருக்குதா...?
கேட்ட கேள்விக்கு
சொன்ன பதில் கேட்டு
ரசம் இன்னும் வரலைங்க..!

ஓவியன்
25-08-2007, 05:56 PM
கவிதை எழுதி
மடித்துக் கொடுத்தேன்
மனம் கவர்ந்தவளிடம்,.
வாசித்து முடித்ததும்
மலர்ந்து சிரித்தாள்,
டேய் நீ நல்லாவே
கிறுக்கல் சித்திரம்
வரையுறாயடா.........!

ஓவியன்
25-08-2007, 06:00 PM
கிறுக்கி கிறுக்கி
கிறுக்கி வரைந்தேன்
கிறுக்கி அவள்
காதலுக்காக,
கிறுக்கிய பின்னரே
உணர்ந்து கொண்டேன்
கிறுக்காமல், எழுதியே
இருக்கலாம் இன்னமும்
நன்றாக வந்திருக்கும்.....!

மலர்
25-08-2007, 06:02 PM
என்ன ஓவியரே சும்மா கிறுக்கு கிறுக்கு என கிறுக்கியுள்ளீர்.....
கிறுக்கல் அருமை...

ஷீ-நிசி
25-08-2007, 06:04 PM
(சும்மா ஒரு கற்பனை. ஆபீஸ்ல ஒருநாள் நல்ல விருந்து. அன்னைக்கு பார்த்து பாருங்க எனக்கு வாய் முழுக்க புண். சாப்பிட முடியாது.. ஆனா அந்த விருந்து சும்மா தடபுடலா இருந்தது. சாப்பிட முடியாத அவஸ்தையை நகைச்சுவையா சொல்லியிருக்கேன். பாருங்க..)


அன்புள்ள வாயே!
நீ புண் நாக்காகி -என்னை
புண்ணாக்காய் ஆக்கிவிட்டாயே!

எப்பொழுதும்,
அலுவலக விருந்தென்றால்,
சாம்பாரும், தயிருந்தான் மாறிமாறி
கண்ணில் தென்படும்...

இப்பொழுது
சிக்கனும், மீனும் பரிமாறி
கண்ணெலாம் புன்படுகிறதே!

கேரட்டும், பீன்ஸும்
வெஜ்டபிள் ரைஸில்!
சிக்கன் 65-யோ
பெரிய பெரிய சைஸில்!

தொட்டுக்க
உருளைக்கிழங்கு சிப்ஸ்....
டொமெட்டா, மஸ்ரூம் சூப்போ,
ஆளுக்கு ரெண்டு கப்ஸ்!

பார்க்க பார்க்க..
நாக்கு எச்சில் ஊறுகிறது!
இன்னுமின்னும்
எரிச்சல் ஏறுகிறது!

பசிக்கு எத்தனை விரல்களோ!
இப்படி வயிற்றை கிள்ளுகிறதே!

தூராத்தில் பார்த்து சிரித்தது
தயிர் சாதம்....

தண்டனை தருகிறேன் நாவே!

உனக்கு போதும்..
வெறும் பால் மட்டுமே!
இது என் மனதின்
வெறுப்பால் மட்டுமே!

சீக்கிரம் செத்து போ!
உனக்கு பாலாய் ஊற்றுகிறேன்,
என் பாழாய் போன புண்ணே!

அமரன்
25-08-2007, 06:06 PM
ஹஹ்ஹ்ஹ்ஹ்ஹா....! அதிருது ஷீ..

அக்னி
25-08-2007, 06:06 PM
என்ன ஓவியரே சும்மா கிறுக்கு கிறுக்கு என கிறுக்கியுள்ளீர்.....
கிறுக்கல் அருமை...

அதானே... மலர் பற்றி எழுத அவரிடம் அனுமதி வாங்கினீரா ஓவியரே...
இல்லாவிட்டால் 1 iCash நட்டஈடாக கொடுத்துடுங்கோ....
இல்லேன்னா, மலர் சார்பில் போர்க்கொடி உயர்த்துவோம்...

ஓவியன்
25-08-2007, 06:09 PM
அன்புள்ள வாயே!
நீ புண் நாக்காகி -என்னை
புண்ணாக்காய் ஆக்கிவிட்டாயே!!

அசத்திட்டீங்க ஷீ!
நகைச்சுவையுடன் சிலேடையையும் சேர்த்து பின்னிட்டீங்க.........
நாக்கு வெந்து நானும் உண்ண முடியாமல் மனம் வெந்த நாட்கள் ஏராளம்................... :sport-smiley-007:

மலர்
25-08-2007, 06:09 PM
ஷீ-நிசி உங்கள் கவிதை பார்த்ததும் பசிக்கிறது...
புண் இருந்தாலும் நாங்க எல்லாம் வெழுத்து கெட்டுவோமில்ல....

அக்னி
25-08-2007, 06:11 PM
சூப்பர் ஷீ...
ஓவியனின் ஆற்றாமையையும் சேர்த்தே கொட்டிவிட்டீர்கள் போலிருக்கிறதே....
ஹா ஹா ஹா...

ஷீ-நிசி
25-08-2007, 06:14 PM
ஷீ-நிசி உங்கள் பார்த்ததும் பசிக்கிறது...
புண் இருந்தாலும் நாங்க எல்லாம் வெழுத்து கெட்டுவோமில்ல....

புன்னிட்டீங்க போங்க!:icon_nono:

aren
26-08-2007, 02:22 AM
ஷீ − யார்கிட்டே போய் வாய்கொடுத்தீர்கள், இப்படி புண்ணாக்கிவிட்டாள். ஜாக்கிரதை. அடுத்ட முறையாவது ஒரு நல்ல ஹெல்மட் (குறிப்பாக வாய்க்கு கொஞ்சம் கவசம் மாதிரி இருக்கவேண்டும்) போட்டுக்கொண்டு பேசுங்கள்.

aren
26-08-2007, 02:25 AM
ஐ 2 லவ்...!


1 லவ்வுக்கே இங்கே முழி பிதுங்குது. நீங்க எப்படி 2 லவ்!!!!

ஆனால் எனக்கு Love All தான் பிடிக்கும். டென்னிஸ் விளையாட்டைச் சொன்னேன்ப்பா!!!

aren
26-08-2007, 02:27 AM
அடடே...
இத இத்தன நாள் கவனிக்காம விட்டுட்டோமே...
சும்மா அதிருதில்ல...

அத்தனையும் சூப்பருங்கோ.. பாராட்டுக்கள்...

ஆமா...
ஆரென் அண்ணா... நீங்களும் கூட மலரை விட்டு வைக்கவில்லையா..?


நான் மாத்தி மேகலையிடம் கொடுத்து வாங்கிக்கட்டிக்கொண்டதைதான் விலாவாரியாக எழுதியிருக்கிறேனே.

aren
26-08-2007, 02:27 AM
ஆஹா அருமையான முயற்சி. பாராட்டுக்கள். அட்டகாசம் பண்ணும் சிவாவுக்கும் தொடர்வேட்டுத் தீர்க்கும் ஆரென் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்.
-அமரன்

நன்றி அமரன். ஏதோ கொஞ்சம் கிருக்கியிருக்கிறேன்.

aren
26-08-2007, 02:28 AM
அடச் சே......!
உன் வீட்டுப்
பொமரேனியன் மீது
கூட பொறாமை
வருகிறதே,
நீ அதனைக்
கொஞ்சும் போது.

பொறாமை ஏன்
நீங்கள் அந்த
பொமரேனியாக
மாறிவிடுங்கள்
உங்களுடைய
நல்ல
செய்கையால்!!

aren
26-08-2007, 02:30 AM
பந்தியில் இருந்தவர்கள்
கொல்'லென சிரித்தனர்
ரசமா இருக்குதா...?
கேட்ட கேள்விக்கு
சொன்ன பதில் கேட்டு
ரசம் இன்னும் வரலைங்க..!

ரசம் வரல்லேன்னு உண்மையைத்தானே சொன்னார். ஏன் சிரிக்கவேண்டும்!!!

நல்லாயிருக்கு அமரன். இன்னும் எழுதுங்கள்.

aren
26-08-2007, 02:33 AM
டேய் நீ நல்லாவே
கிறுக்கல் சித்திரம்
வரையுறாயடா.........!

ஏன் காதல் கடிதத்தைப் படமாகவே வரைந்து கொடுத்துவிட்டீர்களா?

aren
26-08-2007, 02:34 AM
கிறுக்கி கிறுக்கி
கிறுக்கி வரைந்தேன்
.....!

தலை கிரு கிருன்னு சுத்தது உங்கள் கவிதையைப் படித்தவுடன்.
ஒரு அனாசின் இருந்தா கொடுங்கப்பா!!!

ஓவியன்
26-08-2007, 02:54 AM
தலை கிரு கிருன்னு சுத்தது உங்கள் கவிதையைப் படித்தவுடன்.
ஒரு அனாசின் இருந்தா கொடுங்கப்பா!!!

கனவில் புலம்பினேன்
அசின், அசின் என்று
தட்டி எழுப்பி
அம்மா தந்தா
ஒரு அனாசின்,
இந்தா தம்பி
குடிச்சிட்டுப் படு.......!

ஓவியன்
26-08-2007, 02:55 AM
நல்ல
செய்கையால்!!

என்
செய்கையால் தானே
அடிவாங்கினேன்
அவள் கையால்......!

ஓவியன்
26-08-2007, 02:58 AM
சூப்பர் ஷீ...
ஓவியனின் ஆற்றாமையையும் சேர்த்தே கொட்டிவிட்டீர்கள் போலிருக்கிறதே..

ஓவியனின் ஆற்று ஆமையா என்ன சொல்லுறீங்க அக்னி? :sport-smiley-018:

aren
26-08-2007, 03:07 AM
கனவில் புலம்பினேன்
அசின், அசின் என்று
தட்டி எழுப்பி
அம்மா தந்தா
ஒரு அனாசின்,
இந்தா தம்பி
குடிச்சிட்டுப் படு.......!

கனவில்
அசின் அசின்
என்றவுடன்
தட்டி எழுப்பினாளாம்
அன்னை
ஒரு பக்கெட்
தண்ணியையல்லவா
மேலே
கொட்டியிருக்கவேண்டும்!!!

ஓவியன்
26-08-2007, 03:12 AM
கண்ணீருடன்
தண்ணீர் தான்
தேடினாள் அன்னை
ஆனால்,
தண்ணீர் லாறி
வந்து நாலு
நாளாயிற்றே.......!

aren
26-08-2007, 03:22 AM
கண்ணீருடன்
தண்ணீர் தான்
தேடினாள் அன்னை
ஆனால்,
தண்ணீர் லாறி
வந்து நாலு
நாளாயிற்றே.......!


ஏன்
இப்போ
குழாயில்
தண்ணீர்
தினமும்
வருவதாலா!!!!

ஓவியன்
26-08-2007, 03:37 AM
குழாயைத் திருகி
அதிர்ந்தேன்,
உஸ்ஸ்.... என்ற
சத்தத்தால்
பின்னர் தானே
புரிந்தது
வந்தது பாம்பல்ல*
காற்று என்று..........!

aren
26-08-2007, 04:06 AM
காற்று வருகிறது
குழாயிலிருந்து
என்று
கடுப்பாகிப்போன பின்
மறுபடியும்
சோதித்தபோது
தெரிந்தது
தண்ணீர்வரும்
குழாயை யாரோ
வழியிலேயே
மூடிவிட்டார்கள்
என்று!!!!

சிவா.ஜி
26-08-2007, 04:11 AM
அன்புள்ள வாயே!
நீ புண் நாக்காகி -என்னை
புண்ணாக்காய் ஆக்கிவிட்டாயே!


பசிக்கு எத்தனை விரல்களோ!
இப்படி வயிற்றை கிள்ளுகிறதே!

என்னா கற்பனை... என்னா கற்பனை....அசத்தல்

தூரத்தில் பார்த்து சிரித்தது
தயிர் சாதம்....

தண்டனை தருகிறேன் நாவே!

உனக்கு போதும்..
வெறும் பால் மட்டுமே!
இது என் மனதின்
வெறுப்பால் மட்டுமே!

வெறும் பால்..வெறுப்பால் ஆனதே....அட்டகாசம்

சீக்கிரம் செத்து போ!
உனக்கு பாலாய் ஊற்றுகிறேன்,
என் பாழாய் போன புண்ணே!

கலக்கிட்டேளே ஷீ−நிசி.....உங்கள் வாய் புண்ணின் புண்ணியத்தில் எங்கள் வயிறு புண்ணானது....பிரமாதம்...வாழ்த்துக்கள் ஷீ..

ஓவியன்
26-08-2007, 04:15 AM
தண்ணீர்வரும்
குழாயை யாரோ
வழியிலேயே
மூடிவிட்டார்கள்
என்று!!!!

மூடிய குழாயில் எப்படீங்க காற்று வரும்.....?:sport-smiley-007::sport-smiley-007:

சிவா.ஜி
26-08-2007, 04:21 AM
அமரனின் I 2 lov முடிவதற்குள்...ரசவாதம் வந்து ரசிக்க வைத்து போனது.
ஓவியனின் வள் வள் உடன் சேர்ந்த கிறுக்கல்ஸ்..கலக்கல்ஸ்....அசின்...அனாசின் ஆனதும், வாட்டர்..காற்றான மேட்டரும் சூப்பர்.
ஆரென் அவர் பங்குக்கு கலக்கிட்டார்.
இதெல்லாம் இப்படியே தொடர்ந்தா ஒண்ணு மட்டும் உறுதி..டாக்டரெல்லாம்..கேஸ் போடப்போறாங்க பேஷன்டே வராம எங்களுக்கு வருமானமே இல்லன்னு..
வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்..கலக்குங்க மக்களே....ஹா..ஹா...ஹா....

aren
26-08-2007, 04:24 AM
மூடிய குழாயில் எப்படீங்க காற்று வரும்.....?:sport-smiley-007::sport-smiley-007:

வழியிலேயே மூடிவிட்டார்கள் என்று எழுதியிருக்கிறேன். இன்னொரு தபா நான் எழுதியதை படித்துப்பாருங்கள்.

ஓவியன்
26-08-2007, 04:37 AM
வழியிலேயே மூடிவிட்டார்கள் .

வழிமேல் விழி வைத்து
காத்திருந்தேன்
அழகி உனக்காக,
வழியை மூடி
செப்பனிடுவது தெரியாமல்...!

சிவா.ஜி
26-08-2007, 04:39 AM
வழிமேல் விழி வைத்து
காத்திருந்தேன்
அழகி உனக்காக,
வழியை மூடி
செப்பனிடுவது தெரியாமல்...!

அடடா என்னவொரு சோகம்...இந்த முனிசிபாலிட்டி ஆட்களுக்கு இந்த நேரம்தான் கிடைத்ததா...சைக்கிள் கேப்புல வேற யாராவது தட்டிக்கிட்டு போயிடப்போறாங்க ஓவியன்...

ஓவியன்
26-08-2007, 04:49 AM
சைக்கிள் கேப்புல வேற யாராவது தட்டிக்கிட்டு போயிடப்போறாங்க ஓவியன்...

உன்னைத்
தட்டிப் போக
நினைத்தேன்...
நீ என்னைத்
தட்டி விட்டு
என் நண்பனைத்
தட்டிக் கொண்டு
போய் விட்டாயே....!:sport-smiley-018:

சிவா.ஜி
26-08-2007, 04:56 AM
தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும்
மறையில் சொன்னதை நினைத்து
அவள் வீட்டுக்
கதவைத் தட்டினேன்
கேட்காமலே.....
நிறையக் கொடுத்தார்கள்
அவள் அப்பாவும்,அண்ணனும்...!

ஓவியன்
26-08-2007, 05:05 AM
அண்ணா என்றவளை
கண்ணே என்றேன்
மீண்டும் அண்ணா
என்றாள் என்னையல்ல
அவள் அண்ணனை.....!

ஷீ-நிசி
26-08-2007, 05:09 AM
http://i174.photobucket.com/albums/w81/avavanaraj/Wall%20Posters/Crystal/BnW.jpg


சட்டி தலைக்கு ஒரு கவிதபா.......

சட்டித் தலையழகி...
முட்டை கண்ணழகி..

முட்டைபோல ரெண்டு கண்ணு!
இத சொல்லவந்தா...
முட்ட வரா இந்த பொன்னு!

செவப்பு துண்டெடுத்து
நெத்தியில கட்டிகிட்டா..
செப்பு காலானுங்க எடுத்து
சுத்தி பூராவும் ஒட்டிகிட்டா...

வளைஞ்சி நிக்கறது
அழகான கூந்தலுன்னு...

இப்படி அட்டகாசம்
பன்னலாமா?

அது கூந்தல் இல்ல,
பின்னாடி மறைஞ்சிருக்குற
பூனையோட வாலுன்னு,

எல்லாருக்கும்
சொல்லலாமா?

சிவா.ஜி
26-08-2007, 05:37 AM
ஆஹா..படமும் அருமை..படத்துக்கான வரிகளும் அருமை.சட்டித்தலை பொண்ணுக்கு கெட்டியான கவிதை...அசத்துறீங்க ஷீ...வாழ்த்துக்கள்.

kampan
26-08-2007, 06:07 AM
வேளை வருமுன்பே விழித்தெழுந்து
கோதித்தலைதனையே
குழலுக்குள் குதித்தெழுந்து
மாலைப் பொழுதுவரை
மங்கைக்காய் காத்து நிற்பான்

மங்கை வரும் நேரமென்றால்
அங்கமெலாம் நடு நடுங்கி
தங்கத் தமிழெடுத்து
தன்னுணர்பை பகிர்ந்து
நின்றால்

சிங்கக் குகைக்குள்
தடுமாறி வந்தது போல்
வங்கக் கடலே அலைபாய்ந்து
எழுந்தது போல்
கற்களும் முற்களும்
காதுக்குள் விழுந்தது போல்
திட்டிய அவள் வார்த்தை
தீக்குளிக்கச் செய்தனவே.

aren
26-08-2007, 12:28 PM
பல வருடங்களுக்குப்பின்
பள்ளி நண்பனை சந்தித்தேன்
பல விஷயங்களைப்
பேசினோம்
சில சந்தோஷமானவை
சில துக்கமானவை
சில அசிங்கப்பட்டவை
சில மார்தூக்கிவிட்டுக்கொள்பவை
இப்படி பல விஷயங்கள்!!!

பேச்சு காதல்பக்கம்
எப்படி இருக்கிறாள்
உன் மேகலா
வினவினான் நண்பன்!!!

காதல் கசக்குதடா
என்றேன்
வருத்தத்துடன்!!!

கையில் ஏதோ திணித்தான்
வெள்ளையாக இருந்தது
இருட்டில் சரியாகத்
தெரியவில்லை!!!

சாப்பிடு என்றான்
மறுப்பு சொல்லாமல்
வாயில் போட்டேன்
சர்க்கரை!!!

ஒன்றும்
பேசத்தெரியாமல்
நான்!!!!

சிவா.ஜி
26-08-2007, 12:30 PM
ஆஹா...பிரமாதம்...நளவென்பா போன்று நகைவென்பாவா...அழகுதமிழில் சிறப்பான ஒரு நகைக்கவி. பாராட்டுக்கள் கம்பன்.(கம்பனுக்கே..... பாராட்டான்னு கேக்குறது காதுல விழலயே.....)

aren
26-08-2007, 12:34 PM
அண்ணா என்றவளை
கண்ணே என்றேன்
மீண்டும் அண்ணா
என்றாள் என்னையல்ல
அவள் அண்ணனை.....!


என்ன தங்கச்சி
என்று அண்னன் வர
வம்புக்கிழுக்கிறான் இவன்
என்ற அவள்
உங்களைக் காட்ட
வாங்கிய உதைகள்
இன்றும்
விழுப்புண்ணாய்
உங்கள் முதுகில்!!!

சிவா.ஜி
26-08-2007, 12:35 PM
ஆரெனுக்கு அவள் அல்வா கொடுத்தாள்.....நன்பன் சர்க்கரை கொடுத்தாரா....ஐய்யோ பாவம்....போனாப்போகுது விடுங்க ஆரென்..அடுத்த முயற்சிக்கு வாழ்த்து சொல்லி சர்க்கரை கொடுத்ததாக வைத்துக்கொள்ளுங்கள்.

aren
26-08-2007, 12:37 PM
ஆரெனுக்கு அவள் அல்வா கொடுத்தாள்.....நன்பன் சர்க்கரை கொடுத்தாரா....ஐய்யோ பாவம்....போனாப்போகுது விடுங்க ஆரென்..அடுத்த முயற்சிக்கு வாழ்த்து சொல்லி சர்க்கரை கொடுத்ததாக வைத்துக்கொள்ளுங்கள்.

அவள் அல்வா கொடுத்திருந்தால் அது எப்படி கசப்பாக இருந்திருக்கமுடியும்.

சிவா.ஜி
26-08-2007, 12:52 PM
அய்யோ ஆரென் காதலி அல்வா கொடுத்தால் கசக்கத்தான் செய்யும்...இது சத்யராஜ் 'அல்வா'

kampan
27-08-2007, 06:19 AM
ஆஹா...பிரமாதம்...நளவென்பா போன்று நகைவென்பாவா...அழகுதமிழில் சிறப்பான ஒரு நகைக்கவி. பாராட்டுக்கள் கம்பன்.(கம்பனுக்கே..... பாராட்டான்னு கேக்குறது காதுல விழலயே.....)

நன்றி சிவாஜி அவர்களே. சிவாஜியின் பாராட்டுக்களைப்பெறுவதென்றால் என்ன சும்மாவா?

kampan
27-08-2007, 06:26 AM
அண்ணா என்றவளை
கண்ணே என்றேன்
மீண்டும் அண்ணா
என்றாள் என்னையல்ல
அவள் அண்ணனை.....!

அண்ணனென்று சொன்னாலென்று நீ
அன்றே சொல்லியிருந்தால்
நான் உங்கள் அண்ணனின் நண்பனென்று
அறிமுகப்படுத்தி
அவளை என்பால் ஒருமுகப்படுத்தியிருப்பேன்

சிவா.ஜி
27-08-2007, 06:35 AM
எதனைபேரப்பா இப்படி கிளம்பியிருக்கீங்க....அண்ணனுள்ள பெண்களே... எச்சரிக்கையாய் இருந்துகொள்ளுங்கள் இந்த அண்ணனின் நன்பர்களிடம்....

aren
28-08-2007, 08:34 AM
அண்ணனென்று சொன்னாலென்று நீ
அன்றே சொல்லியிருந்தால்
நான் உங்கள் அண்ணனின் நண்பனென்று
அறிமுகப்படுத்தி
அவளை என்பால் ஒருமுகப்படுத்தியிருப்பேன்


அண்ணனின் நண்பன்
என்றவுடன்
என் அண்ணனின் புத்தியும்
உன் புத்தியும்
ஒரே மாதிரியா
அப்படியானால்
என்னை இனிமேல்
சந்திக்காதே என்று
அனுப்பிவிடுவாள்!!!

சிவா.ஜி
28-08-2007, 08:43 AM
அப்ப எப்படித்தான் ரூட் போடறது.....ஆரென்......?

அமரன்
28-08-2007, 08:48 AM
அப்ப எப்படித்தான் ரூட் போடறது.....ஆரென்......?

கிளையைப் வளைத்து
கனி பறிப்பதை விட
மரத்தில் ஏறி
கனி பறிப்பது பாதுகாப்பானது...!


அனுபவஸ்தன் அமரன்

aren
28-08-2007, 09:02 AM
கிளையைப் வளைத்து
கனி பறிப்பதை விட
மரத்தில் ஏறி
கனி பறிப்பது பாதுகாப்பானது...!


அனுபவஸ்தன் அமரன்


இப்படிச் சொல்லும்பொழுதே
அமரனின் கை
பின்னால் முதுகில்
எதையோ
நெருடுகிறது
வாங்கிய உதையின்
தழும்பா!!!!

aren
28-08-2007, 09:03 AM
அப்ப எப்படித்தான் ரூட் போடறது.....ஆரென்......?


அதான் அமரனே சொல்லிவிட்டாரே
அவர் தழும்பை முதலில் பாருங்கள்
பின்னர் முடிவு செய்யுங்கள்

சிவா.ஜி
28-08-2007, 09:28 AM
அதான் அமரனே சொல்லிவிட்டாரே
அவர் தழும்பை முதலில் பாருங்கள்
பின்னர் முடிவு செய்யுங்கள்

அப்ப அடுத்தது அமரனின் வீரத்தழும்பு வரலாறு பாகம்−1 தொடங்கும் என்று நினைக்கிறேன்....:aktion033:

ஓவியன்
28-08-2007, 10:18 AM
அப்ப அடுத்தது அமரனின் வீரத்தழும்பு வரலாறு பாகம்−1 தொடங்கும் என்று நினைக்கிறேன்....:aktion033:

தொடக்கிட்டா போச்சு........! :icon_shades:

இதை விட்டா நமக்கு வேற என்ன வேலை.......?

அக்னி
28-08-2007, 10:25 AM
ஓவியனின் ஆற்று ஆமையா என்ன சொல்லுறீங்க அக்னி? :sport-smiley-018:

ஓவியனின் ஆற்று ஆமை அல்ல...
ஓவியனின் ஆற்றா மை...
இன்னமும் தூரிகைகளில் ஆறாத மை என்று புகழ்ந்தேன்...
(இவங்கள சமாளிச்சு சமாளிச்சே காலம் போகுது... எப்பிடியெல்லாம் யோசிக்கிறாங்கபா...)

அக்னி
28-08-2007, 10:28 AM
அனைவருமே சூப்பரா கவியில் கலாய்க்கிறாங்களே..
பாராட்டுக்கள்...

ஓவியன்
28-08-2007, 10:28 AM
ஓவியனின் ஆற்று ஆமை அல்ல...
ஓவியனின் ஆற்றா மை...
இன்னமும் தூரிகைகளில் ஆறாத மை என்று புகழ்ந்தேன்...

ஓ!!!!!!
ரொம்ப நன்றிங்க.......! :D

சிவா.ஜி
28-08-2007, 10:30 AM
அனைவருமே சூப்பரா கவியில் கலாய்க்கிறாங்களே..
பாராட்டுக்கள்...

நீங்க எப்ப ஜோதியில ஐக்கியமாகப்போறீங்க அக்னி.....(அக்னியே ஜோதியில ஐக்கியமான்னு கேக்கறீங்களா....)

ஓவியன்
28-08-2007, 10:37 AM
அக்னியே ஜோதியில ஐக்கியமான்னு கேக்கறீங்களா....

பிரிச்சு மேஞ்சிடலாமேனு பார்த்தா இப்ப எல்லோரும் அலேர்டாவே இருக்காங்களே........!:D

அக்னி
28-08-2007, 10:41 AM
உனது நடுப்பகுதி
என்ன என்றேன்...
அடித்துத் துவைத்துவிட்டார்கள்...
"ன"
என்று சொல்ல,
ஏன் இத்தனை வன்முறை..?

அக்னி
28-08-2007, 10:42 AM
பிரிச்சு மேஞ்சிடலாமேனு பார்த்தா இப்ப எல்லோரும் அலேர்டாவே இருக்காங்களே........!:D

மேஞ்சிட்டு தண்ணிகுடியுங்கோ மறக்காம...
நன்றி: ஓவியன்

சிவா.ஜி
28-08-2007, 10:43 AM
அடி வாங்கறதுக்காகவே இப்படி வடிவேல்தனமாக் கேட்டா துவைக்காம என்ன பன்னுவாங்க..நல்ல வேளை காயப்போடாமல் விட்டாங்களே....கலக்கல்ஸ் அக்னி.

ஓவியன்
28-08-2007, 10:56 AM
மேஞ்சிட்டு தண்ணிகுடியுங்கோ மறக்காம...
நன்றி: ஓவியன்

:sport-smiley-013::sport-smiley-013::sport-smiley-013::sport-smiley-013:

aren
28-08-2007, 01:43 PM
மேஞ்சிட்டு தண்ணிகுடியுங்கோ மறக்காம...
நன்றி: ஓவியன்


அதானே. இது உண்மைதானே. செய்யாமல் இருப்பாரா என்ன. நிச்சயம் தண்ணிகுடிப்பார் (எந்த தண்ணீ என்று கேட்காதீர்கள், நான் சொல்லமாட்டேன்)

சிவா.ஜி
28-08-2007, 01:47 PM
அதானே. இது உண்மைதானே. செய்யாமல் இருப்பாரா என்ன. நிச்சயம் தண்ணிகுடிப்பார் (எந்த தண்ணீ என்று கேட்காதீர்கள், நான் சொல்லமாட்டேன்)

ஐய்யையோ ஆரென் அவர் ரொம்ப நல்ல பிள்ளை அதெல்லாம் செய்யவே...........................மாட்டார்.
இதற்காக ஒரு கானா பாட்டு
நாங்கல்லாம் நல்ல புள்ளைங்க
கறி திங்க மாட்டோம்
அடுத்த வீட்டு
கோழியக் கண்டா
விட்டுவைக்க மாட்டோம்

aren
28-08-2007, 01:52 PM
அடுத்த வீட்டு
கோழியைக் கண்டா
விட்டு வைக்க மாட்டோம்

அடுத்த வீட்டு
மாமரத்தில்
மாங்காயைக் கண்டா
விட்டு வைக்க மாட்டோம்

அடுத்த வீட்டு
அங்கிள்
சிகரேட் பாக்கெட்டைப் பார்த்தால்
விட்டு வைக்க மாட்டோம்

அடுத்த வீட்டு
அங்கிள்
ஸ்காட்ச் பாட்டிலைப் பார்த்தால்
விட்டு வைக்க மாட்டோம்

வேறு எல்லாவற்றையும்
விட்டு விடுவோம்!!!!!

அக்னி
28-08-2007, 02:01 PM
காக்க வந்ததே,
கடித்து குதறியது...
புதுச்செருப்பு...

சிவா.ஜி
28-08-2007, 02:04 PM
காக்க வந்ததே,
கடித்து குதறியது...
புதுச்செருப்பு...

காக்க வந்ததே
கடித்து குதறியது
பழகாத நாய்...!

aren
29-08-2007, 01:20 AM
காக்க வந்ததே
கடித்துக் குதறியது
என் கணவர்!!!

சிவா.ஜி
29-08-2007, 04:29 AM
காக்க வந்ததே
கடித்துக் குதறியது
காவலர்...!

மாதவர்
29-08-2007, 04:45 AM
டாட்டா பேட்ட்டா
எனக்கு
கொஞ்சம்
லேட்ட்டா தெரியுது

சிவா.ஜி
29-08-2007, 04:47 AM
லேட்டா தெரிந்தாலும் வழக்கம்போல் லேட்டஸ்ட்டா வாங்க மாதவர்..வந்து கலந்துக்குங்க.

சிவா.ஜி
30-08-2007, 12:34 PM
வாசலில் உருமிச்சத்தம்
எட்டிப்பார்த்த
இல்லாள் இயம்பினாள்...
ஏற்கனவே இங்கொன்று
வெளியில் வேறு பூம்பூம் மாடு!

lolluvathiyar
30-08-2007, 01:04 PM
அட இது வித்தியாசமான திரி என் கன்னில் படாமல் போனது
நான் எழுதிய கவிதைகளில் நிரைய நகைசுவை கவிதைகளாவே எழுதினேன். இதோ சில* சுட்டிகள்
காதலித்தால் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8985)
காலை எழுந்தவுடன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9439)
சுத்தி சித்தி அடிவாங்க (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11010)

கீழே என் கவிதைகள் கொட்டி கூட பார்க்கலாம்

ஓவியன்
30-08-2007, 01:13 PM
வளைஞ்சி நிக்கறது
அழகான கூந்தலுன்னு...

இப்படி அட்டகாசம்
பன்னலாமா?

அது கூந்தல் இல்ல,
பின்னாடி மறைஞ்சிருக்குற
பூனையோட வாலுன்னு,

ஆகா ஷீ!
அட்டகாசம் பண்ணிட்டீங்க.......?
அது சரி, உண்மையில் அது யாரோட கூந்தலுங்க? :icon_shades:

சிவா.ஜி
30-08-2007, 01:14 PM
இப்ப கண்ணுல பட்டுடிச்சில்ல...இனி என்ன நீங்களும் வந்து கலந்துக்குங்க வாத்தியாரே.....

ஓவியன்
30-08-2007, 01:15 PM
போனாப்போகுது விடுங்க ஆரென்..அடுத்த முயற்சிக்கு வாழ்த்து சொல்லி சர்க்கரை கொடுத்ததாக வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்த முயற்சியா?
ஆரென் அண்ணாவுக்கா?
சிவா இது கொஞ்சம் கூட நல்லா இல்லை? :icon_blush:

சிவா.ஜி
30-08-2007, 01:18 PM
அடுத்த முயற்சியா?
ஆரென் அண்ணாவுக்கா?
சிவா இது கொஞ்சம் கூட நல்லா இல்லை? :icon_blush:

அய்யய்யோ...ஓவியன் இது அவரோட கல்லூரிகாலத்துக்கு சம்பந்தப்பட்டது.
வம்புல மாட்டிவிடப்பாக்கறீங்களே.....

ஓவியன்
30-08-2007, 01:19 PM
எந்த தண்ணீ என்று கேட்காதீர்கள், நான் சொல்லமாட்டேன்

ஆமா அண்ணா!
பச்சைத் தண்ணியத் தானே சொல்லுறீங்க........

பச்சைப் புள்ளை
ஓவியன்.

சாராகுமார்
30-08-2007, 01:23 PM
அருமையான சிரிப்பு கவிதைகள்.

முதல் காதலும்
முதல் முத்தமும்
மறக்க முடியவில்லை...

எப்படி முடியும்
அவள் அண்ணனும் அப்பனும்
அடித்த அடி
அப்படி.

ஓவியன்
30-08-2007, 01:24 PM
காக்க வந்ததே,
கடித்து குதறியது...
புதுச்செருப்பு...


காக்க வந்ததே
கடித்து குதறியது
பழகாத நாய்...!


காக்க வந்ததே
கடித்துக் குதறியது
என் கணவர்!!!


காக்க வந்ததே
கடித்துக் குதறியது
காவலர்...!

ஏம்பா எல்லாக் கவிதையிலும் ஒரே கடியா இருக்கே
அசத்தலாகீது........!
தொடருங்க............!:icon_clap:

சிவா.ஜி
30-08-2007, 01:26 PM
அடடே..அசத்தல் சாராகுமார்....இன்னும் அடிவாங்க...மன்னிக்க..இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்.

ஓவியன்
30-08-2007, 01:26 PM
அருமையான சிரிப்பு கவிதைகள்.

முதல் காதலும்
முதல் முத்தமும்
மறக்க முடியவில்லை...

எப்படி முடியும்
அவள் அண்ணனும் அப்பனும்
அடித்த அடி
அப்படி.

அடியில் இருந்து
ஆரம்பிக்கணும் எல்லாமே
ஆதலால்
அடியிலிருந்து ஆரம்பித்தேன்
என் காதலை...........!

சாராகுமார்
30-08-2007, 01:29 PM
அடடே..அசத்தல் சாராகுமார்....இன்னும் அடிவாங்க...மன்னிக்க..இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்.

நன்றி சிவா.ஜி.எல்லாம் உங்கள் முலம் தான்.

சிவா.ஜி
30-08-2007, 01:33 PM
பாவம்ப்பா நம்ம பசங்க....அடிவாங்கிதான் எல்லாத்தையும் ஆரம்பிக்கறாங்க..
ஓவியன் அடி வாங்கியது சரி....காதல் சமாச்சாரம் என்ன ஆச்சு..

சாராகுமார்
31-08-2007, 10:05 AM
மிராண்டா

சாராகுமார்
31-08-2007, 10:08 AM
கண்ணே மிராண்டா
காலேஜ் வராண்டா
நீயும் நானும்
கட்டிப்புரண்டா
என்ன கிராண்டா

கண்ணே மிராண்டா.

சிவா.ஜி
01-09-2007, 05:24 AM
மிரட்டறீங்களே சாராகுமார்.அசத்திட்டீங்க..மிராண்டா அண்ணன் வராண்டா....எஸ்கேப்..

aren
01-09-2007, 07:15 AM
என் பக்கத்துவிட்டூ
அழகுக்கிளி மிராண்டாவிடம்
மிராண்டா
உன்னை எனக்குப்
பிடித்திருக்கிறது என்றேன்!!

உள்ளே ஓடிச்சென்று
கையில் கோப்பையுடன் ஓடிவந்தாள்
கையில் மிராண்டா குளிர்பானம்!!!

சாராகுமார்
02-09-2007, 02:07 PM
மிரட்டறீங்களே சாராகுமார்.அசத்திட்டீங்க..மிராண்டா அண்ணன் வராண்டா....எஸ்கேப்..

நன்றி சிவா.ஜி.

aren
06-09-2007, 09:43 AM
இதை யாருமே தொடரவில்லையா?

நண்பர்களே இதையும் கொஞ்சம் கவனியுங்கள்.

அக்னி
06-09-2007, 09:53 AM
காதல் மொழி பேசி,
எதிர்பார்க்காத தருணத்தில்,
"இச்" என்று முத்தமிட்டேன்...
வெட்கித்தாள் என்னவள்...
எச்சில்பட்டு நனைந்தது,
என் தொலைபேசி...

aren
06-09-2007, 09:53 AM
காதல் மொழி பேசி,
எதிர்பார்க்காத தருண்த்தில்,
"இச்" என்று முத்தமிட்டேன்...
வெட்கித்தாள் என்னவள்...
எச்சில்பட்டு நனைந்தது,
என் தொலைபேசி...


பார்த்து, ஷாக் அடிக்கப்போகுது!!!!

aren
06-09-2007, 09:54 AM
காதல் மொழி பேசி,
எதிர்பார்க்காத தருண்த்தில்,
"இச்" என்று முத்தமிட்டேன்...
வெட்கித்தாள் என்னவள்...
எச்சில்பட்டு நனைந்தது,
என் தொலைபேசி...


நல்லகவிதை அக்னி. தொடருங்கள். ஆனால் எப்படி உங்களுடையவள் வெட்கித்ததைப் பார்த்தீர்கள். வீடியோ உள்ள தொலைபேசியோ?

அக்னி
06-09-2007, 10:02 AM
நல்லகவிதை அக்னி. தொடருங்கள். ஆனால் எப்படி உங்களுடையவள் வெட்கித்ததைப் பார்த்தீர்கள். வீடியோ உள்ள தொலைபேசியோ?

ஓடியோ மௌனமாகியதால் உணர்வில் கண்டேன்...
பின்னர் எழுந்த மெல்லிய சிணுங்கலினால் உறுதி செய்தேன்...

aren
06-09-2007, 10:22 AM
ஓடியோ மௌனமாகியதால் உணர்வில் கண்டேன்...
பின்னர் எழுந்த மெல்லிய சிணுங்கலினால் உறுதி செய்தேன்...


அடாடா!!! என்ன ஞானம் உங்களுக்கு. பாராட்டுக்கள்.

அக்னி
06-09-2007, 11:04 AM
அடாடா!!! என்ன ஞானம் உங்களுக்கு. பாராட்டுக்கள்.

ஆமா... பரீட்சையில் பாஸாயிட்டேன்... பட்டமளிப்பு நடக்கவேண்டியதுதான் பாக்கி...

சிவா.ஜி
07-09-2007, 05:09 AM
அக்னியின் அலைபேசி வைப்ரேஷன் அணைக்கப் பட்டிருந்தாலும் அதிர்ந்தது...அவரின் காதலியின் எக்குத்தப்பான இதய அதிர்வுகளால்...அசத்துங்க அக்னி தொடர்ந்து...

ஓவியன்
07-09-2007, 05:15 AM
ஓவியன் அடி வாங்கியது சரி....காதல் சமாச்சாரம் என்ன ஆச்சு..

சமாச்சாரம் சம்சாரம் ஆகப் போகுது − வேறு ஒருவருக்கு!. :sport-smiley-019:

ஓவியன்
07-09-2007, 05:18 AM
என் பக்கத்துவிட்டூ
அழகுக்கிளி மிராண்டாவிடம்
மிராண்டா
உன்னை எனக்குப்
பிடித்திருக்கிறது என்றேன்!!!!!

அப்புறம் அவர் அண்ணனைப் பார்த்து மிரண்டு
வாராண்டாவிலே வைத்து......
மிராண்டாவிடம் மன்னிப்பு கேட்டதை விட்டுட்டீங்களே......? :sport-smiley-018:

ஓவியன்
07-09-2007, 05:20 AM
காதல் மொழி பேசி,
எதிர்பார்க்காத தருண்த்தில்,
"இச்" என்று முத்தமிட்டேன்...
வெட்கித்தாள் என்னவள்...
எச்சில்பட்டு நனைந்தது,
என் தொலைபேசி...

யார் எதிர் பார்க்காத தருணம்..........?
உங்கள் காதலியா?
இல்லை
உங்கள் தொலைபேசியா..........?

தொலைபேசிக்கு தொல்லை தந்த அக்னி வாழ்க.......! :icon_dance:

aren
07-09-2007, 05:01 PM
அப்புறம் அவர் அண்ணனைப் பார்த்து மிரண்டு
வாராண்டாவிலே வைத்து......
மிராண்டாவிடம் மன்னிப்பு கேட்டதை விட்டுட்டீங்களே......? :sport-smiley-018:

இப்படி யாரும் உண்மையை வெளியே சொல்லமாட்டார்கள். நண்பருக்கு நண்பர் உதவி செய்வதில்லையா, அதுமாதிரி, கப் சிப் என்று இருக்கவேண்டும். விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது.

அக்னி
07-09-2007, 05:04 PM
இப்படி யாரும் உண்மையை வெளியே சொல்லமாட்டார்கள். நண்பருக்கு நண்பர் உதவி செய்வதில்லையா, அதுமாதிரி, கப் சிப் என்று இருக்கவேண்டும். விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது.

கப் சிப் என்று இருப்பது உதவிசெய்வதா...
அப்போ டாஸ்மார்க் எல்லாம், ஹெல்பிங் சென்டெரா...

aren
07-09-2007, 05:09 PM
கப் சிப் என்று இருப்பது உதவிசெய்வதா...
அப்போ டாஸ்மார்க் எல்லாம், ஹெல்பிங் சென்டெரா...

அங்கே போகிறவன் அனைவரும் உண்மையையே பேசுவார்கள், ஆகையால் அது சரிபட்டுவராது. நம்ம வண்டவாளம் உடனே வெளியேவந்துவிடுமே!!!

அக்னி
07-09-2007, 05:16 PM
அங்கே போகிறவன் அனைவரும் உண்மையையே பேசுவார்கள், ஆகையால் அது சரிபட்டுவராது. நம்ம வண்டவாளம் உடனே வெளியேவந்துவிடுமே!!!

உங்களுக்குத்தான் மண் ஒட்டாதே...
அப்புறம் என்னத்த சொல்ல நான்...

அக்னி
13-09-2007, 03:03 PM
என் பேச்சை மறுக்காத காதலி...
"காதலி" என்றேன்...
காதலித்தாள்...
என்னையல்ல...

சாராகுமார்
13-09-2007, 03:09 PM
என் பேச்சை மறுக்காத காதலி...
"காதலி" என்றேன்...
காதலித்தாள்...
என்னையல்ல...

காதலித்தாள்...
என்னையல்ல...
என் பணத்தை.

aren
13-09-2007, 03:20 PM
என் பணத்தைக்
காண்பித்தும்
காதலித்தாள்
என் காதலி
இன்னொருவனை!!!

சாராகுமார்
13-09-2007, 03:29 PM
என் பணத்தைக்
காண்பித்தும்
காதலித்தாள்
என் காதலி
இன்னொருவனை!!!

காதலித்தாள்
இன்னொருவனை...
நானே தாடியுடன்.

aren
13-09-2007, 03:35 PM
தாடி வைத்ததும்
என்னைத் தேடி வந்தாள்!!!

திருப்பதி வேண்டுதலாம்
அவள் மகனுக்கு பள்ளி சீட்டுக்காக
என் தாடி பணயமாம்!!!

சாராகுமார்
13-09-2007, 03:48 PM
திருப்பதி என்றதும்
ஞாபகம் லட்டு அன்று...
வேண்டுதலுக்காக
மொட்டை அடித்து
மஞ்சள் பூசி
காதலிக்காக
இன்று.

aren
13-09-2007, 03:50 PM
காதலிக்காகவும்
காதலுக்காகவும்
இழந்தது
ஏராளம்!!!

பட்டியலிட்டால்
பக்கங்கள் போதாது!!!

இருந்தது ஒன்று
அழகாக
தாடா என்று
தாடியையும்
எடுத்துக்கொண்டு விட்டாளே!!!

ஓவியன்
25-09-2007, 06:55 AM
நாய் என்று திட்டினான்
நண்பன்...!
நாய்க்கோ பிடிக்கவில்லை
நாடி ஓடி வந்து
நண்பனைக் கடித்து விட்டது.

தன்னை
இன்ஸல்ட் பண்ணியதாக.... :D

சிவா.ஜி
25-09-2007, 07:03 AM
ஓவியன் நாயுக்கும் உங்களுக்கும் ரொம்ப நெருக்கமோ...உங்கள் கவிதைகளிலும்,நகைச்சுவையிலும் அடிகடி "லொள்' சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறதே....அருமையான கவிதை.ஆனால் பாவம் அந்த நன்பன்தான்...

ஓவியன்
25-09-2007, 07:05 AM
ஓவியன் நாயுக்கும் உங்களுக்கும் ரொம்ப நெருக்கமோ...உங்கள் கவிதைகளிலும்,நகைச்சுவையிலும் அடிகடி "லொள்' சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறதே.......

ஆமாங்க...
நான் ரொம்ப நன்றி உள்ளவன்... :D

சிவா.ஜி
25-09-2007, 07:07 AM
ஆமாங்க...
நான் ரொம்ப நன்றி உள்ளவன்... :D

ரொம்ப சந்தோஷம்...திட்டினாக்கூட இப்படி சொல்லலாம்.
(திட்டினா கவலைபடாம இருக்க என்னோட 'வெட்டியாயிரு'கவிதையை படிங்க)

kampan
25-09-2007, 07:38 AM
நாய் என்று திட்டினான்
நண்பன்...!
நாய்க்கோ பிடிக்கவில்லை
நாடி ஓடி வந்து
நண்பனைக் கடித்து விட்டது.

தன்னை
இன்ஸல்ட் பண்ணியதாக.... :D

நீ கடிக்காமல் நாய் கடித்தது
உன் நண்பனுக்கு ஒரு வகையில்
சந்தோசம்

சிவா.ஜி
30-09-2007, 01:21 PM
பொன்னகை விலையேறலாம் ஆனால்
புன்னகை இலவசம்...எனவே இதனைத் தொடருவோம் நன்பர்களே...

நிமிர்ந்து பார்க்கிறேன்
உயரமாய் நிற்கிறது
செங்குத்தாய் இம்மலை!
எப்படியும் அடைவேன் உச்சியை
நம்பிக்கையோடு பார்த்தேன்
கைக்குச்சியை!
கல்லும் குழியுமாய்
செல்லும் பாதையெல்லாம்
சிதறிய முள்ளுமாய்..
எப்படியோ முயன்று
முக்காலை அடைந்தேன்..
இதோ உச்சி......
தொட்டுவிடும் தூரம்தான்..
சட்டென்று கேட்டது
வரிபுலியின் உறுமல்..
அய்யகோ..
ஓட வழியில்லை..
ஓடாமல் வேறுவழியில்லை..
நடுக்கத்தில் நகர்ந்ததில்
காலிடறி...கீழே...கீழே..
சட்டென்று விழிப்புவர
கட்டிலுக்கு கீழே நான்...
உறுமும் குறட்டையோடு
கட்டிலில் மனைவி!

aren
30-09-2007, 01:24 PM
மனைவியின் குறட்டையை புலியின் உறுமலுடன் ஒப்பிடுகிறீர்கள். நீங்கள் தப்பித்துவிடுவீர்கள் குள்ளநரி என்ற வார்த்தையை உபயோகிக்காதலால்.

சிவா.ஜி
30-09-2007, 01:26 PM
மனைவியின் குறட்டையை புலியின் உறுமலுடன் ஒப்பிடுகிறீர்கள். நீங்கள் தப்பித்துவிடுவீர்கள் குள்ளநரி என்ற வார்த்தையை உபயோகிக்காதலால்.

அப்படித்தானே ஆரென் இத்தனைநாளும் தப்பிச்சிக்கிட்டு வரேன்...

aren
30-09-2007, 01:43 PM
கவலைவேண்டாம் சிவா. நீங்கள் நிச்சயம் தப்பித்துவிடுவீர்கள்.

ஓவியன்
01-10-2007, 04:10 AM
ஹீ.ஹீ சிவா...!

உங்க மனைவி இந்த கவிதையைப் படிக்கும் சந்தர்ப்பம் எப்போவது கிட்டுமா...??? :D

சிவா.ஜி
01-10-2007, 04:33 AM
ஹீ.ஹீ சிவா...!

உங்க மனைவி இந்த கவிதையைப் படிக்கும் சந்தர்ப்பம் எப்போவது கிட்டுமா...??? :D

கண்டிப்பாக இருவரும் சேர்ந்தே இதைப் படிப்போம் ஓவியன்.ஆரென் எழுதியிருப்பதைப் படித்தீர்களா...நான் எப்படியும் தப்பித்துவிடுவேன்...ஹி..ஹி..

ஓவியன்
01-10-2007, 04:46 AM
நான் எப்படியும் தப்பித்துவிடுவேன்...ஹி..ஹி..

அதுக்கு என் வாழ்த்துக்கள்....!!! :)
அனுபவசாலிகளிடமிருந்து நிறையவே படிக்க வேண்டி இருக்குப்பா.....!! :rolleyes:

சிவா.ஜி
01-10-2007, 04:51 AM
வாழ்க்கையில் அடிபட அடிபட அனுபவம் தானாய் வரும்.(வாழ்க்கையென்பதை மனைவி என்று எடுத்துக்கொள்ளக் கூடாது...)

ஓவியன்
01-10-2007, 05:10 AM
வாழ்க்கையில் அடிபட அடிபட அனுபவம் தானாய் வரும்.(வாழ்க்கையென்பதை மனைவி என்று எடுத்துக்கொள்ளக் கூடாது...)

வாழ்க்கையில் அடிபடு!
தம்பி
வாழ்க்கையில் அடிபடு!
என் அப்பா
அடிக்கடி சொல்வதுண்டு

வாழ்க்கையில்
அடி பட முடிவெடுத்து
முடிவெடுத்தேன்
ஒரு திருமணத்துக்கு....!

சிவா.ஜி
01-10-2007, 05:15 AM
அப்படி போடுங்க....நல்ல கராத்தே தெரிந்த பெண் இருக்கிறார்...பார்க்கட்டுமா ஓவியன்...ஹி..ஹி..

ஓவியன்
01-10-2007, 05:27 AM
அப்படி போடுங்க....நல்ல கராத்தே தெரிந்த பெண் இருக்கிறார்...பார்க்கட்டுமா ஓவியன்...ஹி..ஹி..

ஆமா அந்த பொண்ணை நீங்க பார்க்கணும்னா தாராளமா கண் குளிரப் பாருங்க சிவா...!!! :D
அதுக்கு ஏன் என்னைக் கேட்கிறீங்க....!!! :icon_rollout:

சிவா.ஜி
01-10-2007, 06:38 AM
ஆமா அந்த பொண்ணை நீங்க பார்க்கணும்னா தாராளமா கண் குளிரப் பாருங்க சிவா...!!! :D
அதுக்கு ஏன் என்னைக் கேட்கிறீங்க....!!! :icon_rollout:

அய்யோ அய்யோ தாங்க முடியலையே.....நான் பாத்தா..என்ன ஆகுன்னு உங்களுக்குத் தெரியாதா....உங்களுக்காகத்தான் பேசலாமென்று சொன்னேன்.
பேசுங்க வாய் குளி(ழ)ர பேசுங்கன்னு சொல்லப்படாது ஆமாம்.

aren
01-10-2007, 07:01 AM
ஆமா அந்த பொண்ணை நீங்க பார்க்கணும்னா தாராளமா கண் குளிரப் பாருங்க சிவா...!!! :D
அதுக்கு ஏன் என்னைக் கேட்கிறீங்க....!!! :icon_rollout:


அதானே!!!

சிவா பார்பதற்கு உங்களிடம் ஏன் அனுமதி வாங்கவேண்டும்.

சிவா நீங்கள் நல்லாவே பாருங்கள். அடி கொடுத்தாலும் நல்லாவே வாங்கிக்கொள்ளுங்கள்.

ஓவியன்
01-10-2007, 09:00 AM
சிவா கேட்டுக்குங்க....
ஆரென் அண்ணாவே சொல்லிட்டார்.....
எதுக்கும் கொஞ்சம் கவனமாக இருங்க, சவூதியிலே வேற இருக்கீங்க.....! :rolleyes:

aren
01-10-2007, 10:15 AM
வீட்டைக் கட்டிப்பார்
கல்யாணம் செய்துப்பார்
என்றார்கள்!!!

வீடு கட்டுவது எளிது
என்று
தெரிந்துகொண்டேன்

mania
01-10-2007, 10:44 AM
வீட்டைக் கட்டிப்பார்
கல்யாணம் செய்துப்பார்
என்றார்கள்!!!

வீடு கட்டுவது எளிது
என்று
தெரிந்துகொண்டேன்

என்னுடைய அநுபவம் சுத்தமா உல்டா....!!!????(இரண்டு பெண்களுக்கு கல்யாணம் செய்து பார்த்தாச்சு.....இன்னும் ஒரு (பெருசோ..... சிறுசோ!!!)
வீடு கட்டியாகலை.....:D:D:D
அன்புடன்
மணியா...

aren
01-10-2007, 10:56 AM
என்னுடைய அநுபவம் சுத்தமா உல்டா....!!!????(இரண்டு பெண்களுக்கு கல்யாணம் செய்து பார்த்தாச்சு.....இன்னும் ஒரு (பெருசோ..... சிறுசோ!!!)
வீடு கட்டியாகலை.....:D:D:D
அன்புடன்
மணியா...

காண்டிராக்டர்கிட்டே விட்டுங்க, அவர் கட்டிக்கொடுப்பார். பணத்தை மட்டும் மாமிகிட்டேயிருந்து வாங்கி கொடுத்துவிடுங்க.

ஓவியன்
04-10-2007, 06:36 AM
இன்னும் ஒரு (பெருசோ..... சிறுசோ!!!)
வீடு கட்டியாகலை.....:D:D:D
அன்புடன்
மணியா...

ஆமா மணியா அண்ணா வீடு வீடாகத் தானே இருக்கும், அது எப்படி கட்டியாகும்.....????!!!! :sprachlos020:

குளப்பத்துடன்
ஓவியன்.... .:icon_rollout:

சிவா.ஜி
04-10-2007, 07:11 AM
ஆமா மணியா அண்ணா வீடு வீடாகத் தானே இருக்கும், அது எப்படி கட்டியாகும்.....????!!!! :sprachlos020:

குளப்பத்துடன்
ஓவியன்.... .:icon_rollout:

வந்துட்டாருய்யா குழப்பத்துல கும்மியடிக்கிறவரு....மணியா அண்ணன் வருவார்..அப்ப எப்படி கட்டியாகுதுன்னு காமிப்பார்.

aren
04-10-2007, 03:55 PM
வாழ்க்கையில்
வாழ்க்கையில்
அடி பட முடிவெடுத்து
முடிவெடுத்தேன்
ஒரு திருமணத்துக்கு....!

விதி யாரை விட்டது. அடிபடனும்னு முடிவெடுத்தவிட்ட பிறகு உங்களை யார் தடுக்க முடியும்.

உங்களுக்கு என் வாழ்த்துக்கள் (அனுதாபங்கள்).

சாராகுமார்
04-10-2007, 04:32 PM
வாழ்க்கையில் அடிபடு!
தம்பி
வாழ்க்கையில் அடிபடு!
என் அப்பா
அடிக்கடி சொல்வதுண்டு

வாழ்க்கையில்
அடி பட முடிவெடுத்து
முடிவெடுத்தேன்
ஒரு திருமணத்துக்கு....!

அடி பட
அடி பட
வாழ்க்கையில்
அடி பட
திருமணத்திற்கு
அடி போட
பின்னர்
கரண்டியால்
அடி வாங்க.

அமரன்
15-10-2007, 02:41 PM
"ஏனுங்க.."
நளின நெளியலுடன்
மஞ்சத்தில்
இரையுண்ட களைப்பில்சாரை..

"சொல்லுங்க..."
எகத்தாளக் கலவையுடன்
எதிர் லொல்லில் மயில்...

"சாரிங்க...."
சாரையின் சாரீரத்திற்கு
மஞ்ஞை ஜொல்லியது..
"இப்ப அது தேவையில்லை"

"எப்பவும் உங்களுக்கு
லொல்லும் ஜொல்லும்தான்
காலை உடைச்சிடுவேன்"

சாரையின் சரீர நடுக்கத்தில்
நடுங்கியது மயில்..
"சரி சரி..புறப்படு
ஜவுளிக்கடை போவோம்"

கேட்டமகவு அகமகிழ்ந்தது
"தீபாவளிக்கு ட்ரெஸ் ரெடி."

சிவா.ஜி
15-10-2007, 02:46 PM
அமரன் இருங்க இந்த கவிதையைக் காப்பி எடுத்து வைத்து அதை..உங்கள் வருங்கால துணைவியாருக்கு பரிசாகக் கொடுக்கிறேன்.....
சும்மா சொல்லக்கூடதுங்க அமரன்...கலக்கிட்டீங்க....பிரமாதம்.

அமரன்
15-10-2007, 02:52 PM
ஹஹ்ஹ்ஹ்ஹா...இதைத் தனியாகப்போடலாம் என நினைத்தேன். அடையாளம் கண்டுபிடிப்பது எளிதாகிவிடும் என்பதாலும் ஏற்கனவே கவியில் நகைக்க ஒரு திரி இருப்பதாலும் இங்கே பதிந்தேன். அதுவே எனக்கு வேட்டாகும் என தெரியாமல் போய்விட்டது. ஏதாச்சும் கோபதாபங்கள் இருந்தால் இருவரும் பேசித்தீர்த்துக்கொள்வோம் சிவா.

சாராகுமார்
28-10-2007, 02:49 PM
அமரன் அவர்களே,அருமையான சாரையின் கவிதை.

உங்களுக்கு வேட்டு
வைக்க சிவா அண்ணன்
வேட்டுடன் தயார்.

ஓவியன்
28-10-2007, 04:08 PM
ஆகா அமரா, இப்போதே இவ்வளவு விடயங்கள் தெரிந்து வைத்துக்கொண்டு எதிர்காலத்தை சமாளிக்க ஆயத்தமாகத் தான் இருக்கிறீர் போல...!!! :D:D:D

சாரை, சரீரம், சரி என இனிதே தமிழ் அழகில் செழித்த அமரகவி அருமை...! :)