PDA

View Full Version : வந்தே மாதரம் வரலாறுlolluvathiyar
15-08-2007, 11:50 AM
வந்தே மாதரம் வரலாறு

வந்தே மாதரம் இந்த பாடல் தான் சுதந்திர எழுச்சியை தூண்டி விட்டு நமக்கு சுந்ததிரம் கிடைக்க உதவியது. சுந்ததிர போராட்ட வீரர்களுக்கு இந்த வந்தே மாதரம் மந்திரம் தான் தாரக மந்திரம். இந்த திரியில் நான் வந்தே மாதிரம் எப்படி வந்தது என்ற கதையை சுருக்கமாக தருகிறேன். நாம் சுதந்திரம் பெற்று 60 ஆண்டு சுதந்திர தின திரு நாளில் இதை தயாரித்து வழங்கு என்ற ஆசை நிரைவேறியதில் எனக்கு ஆத்ம திருப்தி.

இந்த பாடல் சமஸ்கிருதமும் பெங்காளி மொழியும் கலந்து படைக்க பட்ட பாடல். இதை இயற்றியவர் பக்கிம் சந்திர சத்தோபத்யா அவர்கள். 1870 ஆம் ஆங்கிலேய அரசு "காட் சேவ் தி குயின்" என்று பிரிட்டிஷ் ரானியை போற்றி ஒரு பாடலை அனைத்து பள்ளிகளிலும் பாட சொல்லி கட்டாயபடுத்தியது. அதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த பாடலை இயற்றினார்.

வந்தே மாதரம் பாடலை அவர் ஆனந்த மாதா என்ற ஒரு கதையில் அவர் 1882 இடம் பெயர செய்தார். ஆனந்த மாதா கதை 1800 இல் நடந்த சன்னியாசி புரட்சியின் கருவை வைத்து எழுதபட்டது. அந்த கதையில் ஒரு கானகத்தில் ஆனந்த மாதா என்ற ஒரு மடம் இருந்தது. அதில் தங்கி இருந்த சன்னியாசிகள் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் அவர்கள் சண்டையிடும் போது வந்தே மாதரம் என்ற மந்திரத்தை உதிர்த்து சண்டையிட்டனர் என்று எழுதபட்டது. பக்கிம் அவர்கள் இந்த கதையை கற்பனையில் எழுதினாரா அல்லது வரலாற்று ஆதாரத்தை வைத்து எழுதினாரா என்று குழப்பம் நீடிகிறது. காரனம் இன்னும் சன்னியாசி புரட்சி பற்றி வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு குழப்பம் நலவுகிறது.

ஆனால் இந்த பாடல் இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஒரு மந்திரமாக திகழ்ந்தது. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த வார்த்தையை தடை செய்யும் அளவுக்கு இருந்தது. பெங்காளி வார்த்தை நாடு முழுவதும் உள்ள சுந்திர போராட்ட வீரர்கள் சொல்ல தொடங்கினர். பாரதியாரும் கூட
வந்தே மாதிரம் என்போம்
நம் பாரத தாயை வனங்குதல் என்போம் என்று முழக்கமிட்டார்.
நம் நாடு சுதந்திரம் அடையும் தருவாயில் வந்தே மாதிரம் பாடலை தான் தேசிய கீதமாக வைக்க திட்டமிட்டனர். ஆனால் இந்த பாடலின் மைய கருத்து துர்கை அம்மனை போற்றி இருக்கிறது ஆகையால் இந்த பாடல் முஸ்லீம்களுக்கு எதிராக அமைந்து விடும் என்பதை இதை ரபீந்திர நாத் தாகூர் வலியுருத்தினார். ஆனால் சுதந்திர போராட்ட வீரர்கள் இந்த பாடலை ஹி ந்து மத பாடலாக கருதவில்லை. முஸ்லீம் போராளிகளும் இந்த மந்திரத்தை மனதிலிருந்து உச்சரித்தனர். இந்த பாடலுக்கு நிரைய முஸ்லீம், சீக்கியர்களிடமிருந்து மற்றும் கிருஸ்த்தவர்களின் ஆதரவு இருந்தது. ஆரிப் முகமத் கான் என்ற ஒரு இஸ்லாமிய பாரளுமன்ற உருப்பினர் இந்த பாடலை உருது மொழியில் மொழிபெயர்த்தார்.

ஆனால் வருங்காலத்தில் முஸ்லீம்களுக்கு எந்தவித மனகசப்பு வந்துவிட கூடாது என்று நமது சுதந்திர அரசு ஜன கன மன பாடலை தேசிய கீதமாக அமைத்து விட்டனர். வந்தே மாதிரம் பாடலை தேசிய பாடலாக போற்றி வருகிறது நம் அரசு.

பாரதியாரின் வந்தே மாதிரம் பாடலை உங்களுக்கு தருகிறேன்.
வந்தே மாதரம் என்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே)

ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம் இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)

ஈனப் பறையர்க ளேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத்த ராய்விடு வாரோ? - பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)

ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி? - ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)

எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே)

புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)


அன்பு தமிழ் மன்ற உருப்பினர்களே இந்த பாடலின் கதை இந்தியர் நம் அனைவருக்கு தெரிந்ததே. ஆனால் நான் அதன் வரலாற்றை எகலப்பையில் டைப் அடித்டு பதிக்க வேண்டும் ஆசையினால் இதை பதிகிறேன்.
வந்தே மாதிரம்

வெண்தாமரை
15-08-2007, 11:55 AM
வந்தே மாதரம் வரலாற்றை அழகாக அருமையாக கொடுத்தமைக்கு மிக்க நன்றி!..

leomohan
15-08-2007, 12:19 PM
[B][U][COLOR="Red"][CENTER][SIZE="6"]ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி?

அருமையான வரிகள். மீண்டும் நினைவுபடுத்தியதற்கு நன்றி வாத்தியார்.

சிவா.ஜி
15-08-2007, 01:11 PM
சரியான தருணத்தில் சரியான பதிவு.வாத்தியார் வாத்தியார்தான்.
நன்றி மிக உண்டு என நானும் பகர்வேனின்று.

namsec
15-08-2007, 03:29 PM
நினைவு படுத்திய வாத்தியாருக்கு நன்றி ! நன்றி !! நன்றி !!!