PDA

View Full Version : புகைப்படமும் பொருத்தமான கவிதைகளும்.......alaguraj
15-08-2007, 10:46 AM
மன்றத்தில் ஏராளமான கவிஞர்கள் பவனிவருகின்றார்கள். இதோ அவர்களுக்கு ஒரு புதுமையான போட்டி.. கீழே உள்ள படத்தை பாருங்கள்..உங்கள் கற்பனை குதிரையை தட்டி விடுங்கள்.

http://i224.photobucket.com/albums/dd304/kavithai/school_bus.jpg

நீங்களும் உங்களிடம் நல்ல புகைப்படமிருந்தால் இதில் இடலாம்...

சிவா.ஜி
15-08-2007, 11:15 AM
பயணிகள் பயணிக்கும்
பேருந்து உள்ளது
இது........
பயணிகளால் பயணிக்கும்
பேருந்து.....!

leomohan
15-08-2007, 11:24 AM
பின்னால் இருந்து குத்த இது போர் அல்ல - இது வாழ்கை
புறமுதுகை காட்டி ஓடுவது ஏதிராளி அல்ல - எங்கள் நம்பிக்கை
ஏழைகள் நாங்கள் பணக்காரனை விட விலை உயர்ந்த வண்டியில்
அவ்வபோது இறங்கி தள்ளுவதால் கைகளுக்கும் கால்களுக்கும் ஆரோக்யம்
கிடைக்குமா பணக்காரர்களுக்கு தினமும் இந்த பாக்கியம்

leomohan
15-08-2007, 11:24 AM
நல்ல திரி அழகுராஜ். வெற்றி பெற வாழ்த்துக்கள். தினமும் நல்ல படங்களை போட்டு எங்கள் கற்பனை திறனை வளர்க்க உதவுங்கள்.

alaguraj
15-08-2007, 12:08 PM
நடுவழியில் நின்ற என்னை,
நகர்ந்து சொல்ல வைக்கின்றாய்,

நன்றி சொல்லி கேட்கின்றேன்
நம்பும் தாய விட்டுடதே....நீ

வெள்ளை உடை நீ உடுத்த,
கந்தலாடை தான் உடுத்தி,
கரிசக்காட்டில் கசங்கிப்போயி,
கால்கடுக்க வேலை செஞ்சு,

களப்பெல்லாம் தன் மறக்க,
கண்ணில வச்சு ஏங்குறா..உள்ள்ங்
கையில் உன்ன தாங்குறா...

என்ன படிகிறயே,
என்ன எழுதறயே,
வெவரமெதும் தெரியாம,
விளக்க மெதும் கேட்காம
நீகேட்கும் காசெல்லாம்,
நித்தமும் கொடுக்கிறா,

கண்ணீரை தான் குடிச்சு,
பாசத்தை உனக்கூட்டி...
வறுமையில வாடுகிறா,
வெறிச்சோடி போகிறா....

உன்னை கரசேக்க,
கம்மா கரை அலைஞ்சு
காடு மேடு பல திரிஞ்சு
ஆடி ஓடி வேலை செஞ்சு

சுடராய் நீ ஒளிர
மெழுகாய் தானுருகி
தன்னுதிரம் கொடுத்தவளை
தனியாக விட்டுடாதே....

இது தான் எனது முதல் கவிதையாதலால். ஏதோ ஒரு கிராமத்து பேருந்து பள்ளி மாணவனுக்கு சொல்வது போல அமைத்துள்ளேன்......
தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும்.....

சிவா.ஜி
15-08-2007, 12:14 PM
அசத்தலான ஆரம்பக்கவிதை அழகுராஜ். உணர்வுகளை வார்த்தைகளில் கோர்க்கத்தெரிந்துவிட்டதே இனி என்ன....ஒவ்வொன்றாய் படைத்திட வேண்டியதுதான்.
என்ன படிகிறயே,
என்ன எழுதறயே,
வெவரமெதும் தெரியாம,
விளக்க மெதும் கேட்காம
நீகேட்கும் காசெல்லாம்,
நித்தமும் கொடுக்கிறா,
ஒரு கிராமத்து தாயின் உன்னதத்தை வெகு அருமையாய் வடித்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

leomohan
15-08-2007, 12:17 PM
நல்ல கவிதை அழுகராஜ். நீ்ங்கள் முன்பே எழுதிவிட்டீர்கள் போலிருக்கிறதே.

alaguraj
15-08-2007, 12:30 PM
நன்றி மேகன், சிவா அண்ணா......

இது தான் எனது முதல் கவிதை......ஊக்கத்திற்கு நன்றி...மேலும் முயற்சிக்கிறேன்........

அமரன்
15-08-2007, 02:47 PM
அழகு கவிதை அழகு.

கம்மாக்கரைகளில்
அம்மா காலம் கரைத்து
கண்களினீரம்
எம்மவன் துடைப்பானென
நாட்டுகிறாள் நாத்து
வயலிலும் வாழ்விலும்....!

சும்மா சொல்லக்கூடாது உணர்ச்சிகளைப் பிழிந்து சாறு கொடுக்கிறது கவிதை அழகின் வரிகளில். தொடருங்கள்.

mania
15-08-2007, 04:04 PM
படத்தை பார்த்தவுடன் என் நினைவில் வந்தது (மலரும் நினைவுகள் ....திருச்சியில்)

தள்ளு சார் தள்ளு,,,,,,,TST

தள்ள வேண்டாம் சார்...TVS


அன்புடன்
மணியா....

இனியவள்
15-08-2007, 05:56 PM
உங்களைச் சுமக்கும் என்னை
உயிரூட்ட தள்ளுகின்றீர்கள்
நீங்கள் கால்கடுக்க
என் இயக்கம் தொடங்கட்டும்
போக்குகின்றேன் உங்கள்
அயர்வை என்னில் தாங்கி
உங்களை...

இலக்கியன்
15-08-2007, 06:52 PM
முதல் கவிதையே நன்றாக உள்ளது தொடருங்கள்

alaguraj
16-08-2007, 06:23 AM
என் இயக்கம் தொடங்கட்டும்
போக்குகின்றேன் உங்கள்
அயர்வை என்னில் தாங்கி

சூபர்ப்ப்.....
இதுதான் சரியாக பொருந்துகின்றது........
நானும் முயற்ச்சி செய்கிறேன்...

alaguraj
16-08-2007, 06:23 AM
முதல் கவிதையே நன்றாக உள்ளது தொடருங்கள்

நன்றி இலக்கியன்....

alaguraj
16-08-2007, 06:27 AM
நன்றி அமரன் அண்ட் மணியா...

கவிதை நடை பழகுகின்றோம் உங்கள் விரல்பிடித்து...