PDA

View Full Version : காதலி



இலக்கியன்
15-08-2007, 08:57 AM
மொழிக்கு உயிர்
எழுத்துப்போல
என் உடலின் உயிர்
நீ தான் பெண்ணே

நீ கண்களால் பேசும்
அந்த மொழிக்கு
இவ்வுலகில் வரிவடிவம்
உண்டா பெண்ணே

உன்னுடய சிரிப்புக்கு
நிகரான சொல்
எந்த மொழியில்
உண்டு பெண்ணே

நீ பேசுகின்ற குரலின்
இனிமை எந்த
இசைக்கருவியில்
தோன்றும் பெண்ணே

கருமுகில் போன்ற உன்
கூந்தல் நறுமணம்
எந்த மலரில்
உண்டு பெண்ணே

உன் இதயதின் துடிப்பு என்
பெயர்தான் சொல்கிறதா
பெண்ணே?

உன் சுவாசத்தின்
பிரணவாயு நான் தானா
பெண்ணே?

அமரன்
15-08-2007, 09:17 AM
அருவமான அவள்
வார்த்தைகளின்
உருவங்கள் கோடி..

அல்லாடும் அவன்
உயிர்மூச்சு
அர்த்தங்கள் தேடி...

அப்போது காதலன் இப்போது காதலி.
இலக்கிய(ன்) வரிகளுக்கு ஏது வேலி.
பாராட்டுக்கள் தோழரே...!தொடருங்கள்

ஒற்றும் உயிரும்
ஒட்டினால்
மொழி பூரணம்..

கண்ணும் உளமும்
ஒட்டினால்
மௌனம் தீரணம்


உதடும் உதடும்
ஒட்டினால்
வாழ்வு பரிபூரணம்.

leomohan
15-08-2007, 09:22 AM
மொழிக்கு உயிர்
உன்னுடய சிரிப்புக்கு
நிகரான சொல்
எந்த மொழியில்
உண்டு பெண்ணே


அற்புதமான கற்பனைக்கு வாழ்த்துக்கள். இதோ இபணம் 250.

இலக்கியன்
15-08-2007, 09:42 AM
அருவமான அவள்
வார்த்தைகளின்
உருவங்கள் கோடி..

அல்லாடும் அவன்
உயிர்மூச்சு
அர்த்தங்கள் தேடி...அப்போது காதலன் இப்போது காதலி.
இலக்கிய(ன்) வரிகளுக்கு ஏது வேலி.
பாராட்டுக்கள் தோழரே...!தொடருங்கள்

ஒற்றும் உயிரும்
ஒட்டினால்
மொழி பூரணம்..

கண்ணும் உளமும்
ஒட்டினால்
மௌனம் தீரணம்


உதடும் உதடும்
ஒட்டினால்
வாழ்வு பரிபூரணம்.

காதல் கவிதை கண்டு கவிதை கருத்துரைதீர் நன்றி

இலக்கியன்
15-08-2007, 09:42 AM
அற்புதமான கற்பனைக்கு வாழ்த்துக்கள். இதோ இபணம் 250.

உங்கள் வாழ்த்துக்கும் அன்பளிப்புக்கு நன்றி மோகன்

இனியவள்
15-08-2007, 06:42 PM
கவிதை அருமை இலக்கியன் வாழ்த்துக்கள்

உயிருக்கே உயிர்
கொடுத்து உருப்பெறுகிறது
காதல்

இலக்கியன்
15-08-2007, 07:05 PM
கவிதை அருமை இலக்கியன் வாழ்த்துக்கள்

உயிருக்கே உயிர்
கொடுத்து உருப்பெறுகிறது
காதல்

கருத்துக்கு நன்றி இனியவள்