PDA

View Full Version : காதலைச்சொல்லிவிடு



இலக்கியன்
15-08-2007, 08:52 AM
http://img261.imageshack.us/img261/7889/naamloostk3.png (http://imageshack.us)
காதல் என்றால் என்ன என்று
காகிதத்தில் எழுதிவைத்து- நீயும்
காத்திருந்தால் காதல் வந்திடுமோ
காலம்தான் பதில் சொல்லிடுமோ

காதல் கன்னி அவளைக் கண்டு
காதல் நீயும் கொண்டுவிட்டால்
காத்திராமல் சொல்லிவிடு-அன்பே
காதல் என்னும் கனி இரசத்தை

காதல் கொண்டு நீயும்-உன்
காதல் சொல்லாவிட்டால்-நண்பா
காலம்முழுவதும் அவள் நினைவாகி
காற்றோடு பறந்திடும் உன் வாழ்வு

அமரன்
15-08-2007, 09:27 AM
உள்ளத்தில் உரசலால்
பற்றிவிட்ட தீயை
பரவிடச் செய்யாது
தயங்கித் தவித்து
தடங்கலை தேடியோர்
தரணியில் எத்தனையோ.

காதலை
காகிதங்களில் எழுதி
காவிச்செல்ல திராணியற்று
காற்றாகிப்போனவர்கள்
காசினியில் எத்தனையோ....

காவியமான காதலால்
காலியாகும் வாழ்க்கை
உனக்கு
வேண்டாம் நண்பா..
உரைப்பது
இலக்கிய அன்பன்.


குளவிகளை சுமப்பது சுகம்
குளவியல்ல
சொல்லாத காதல்
கோட்டும் குழவி..!
சுமப்பது தகாது...!
பாராட்டுக்கள். வளர்க இலக்கியன்.

இலக்கியன்
15-08-2007, 09:45 AM
கவிதையில் நயம் கண்டேன்
கவி கண்டு கவியுரைத்தீர் நன்றி

இனியவள்
15-08-2007, 06:38 PM
காகிதத்தில் வரைந்து
வைத்த காதல்
உப்புக்கட்டியாய் கரைந்து விட
இதயத்தில் ஓவியமாய்
பதிந்திட்ட காதல்
என் வாழ்வை வர்ணமயமாய்
மாற்றிச் சென்றுவிட்டது

வாழ்த்துக்கள் இலக்கியன் அழகிய கவிதைக்கு

வாழ்த்துக்கள் அமர் அழகிய கவியோடு கூடிய
பின்னூட்டத்திற்கு

இலக்கியன்
15-08-2007, 07:04 PM
காகிதத்தில் வரைந்து
வைத்த காதல்
உப்புக்கட்டியாய் கரைந்து விட
இதயத்தில் ஓவியமாய்
பதிந்திட்ட காதல்
என் வாழ்வை வர்ணமயமாய்
மாற்றிச் சென்றுவிட்டது

வாழ்த்துக்கள் இலக்கியன் அழகிய கவிதைக்கு

வாழ்த்துக்கள் அமர் அழகிய கவியோடு கூடிய
பின்னூட்டத்திற்கு

இனியவள் உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி