View Full Version : தமிழ் மன்றம் தலைமை மாறுகிறது
இராசகுமாரன்
15-08-2007, 06:17 AM
இனிய நண்பர்களே,
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..!
நான்கு வருடங்களைக் கடந்து ஐந்தாவது ஆண்டில் வெற்றிகரமாக பீடு நடை போட்டுக் கொண்டிருக்கும் நமது தமிழ்மன்றம், இன்று முதல் புதிய தலைமையின் கீழ் ஒப்படைக்கப் படுகிறது
சமீப காலமாக பல தளங்களை நிர்வாகித்து கொண்டிருப்பதால் தமிழ்மன்றத்தில் என்னால் அதிகம் பங்காற்ற முடியவில்லை. அதனால், நண்பர்களுக்காக உருவாக்கிய இந்த தமிழ்மன்றத்தை அவர்களே நடத்த இங்கு நன்றாக பங்காற்றும் இளைய தலைமுறையிடம் இந்த தமிழ் மன்றத்தை ஒப்படைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இனி தமிழ்மன்றத்தில் நானும் உங்களைப் போல ஒரு சாதாரண உறுப்பினராக எனது பங்கை ஆற்றுவேன். நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சிறிது காலம் ஆலோசகர்கள் குழுவில் இருந்து அவர்களுக்கு எப்போதும் போல் உதவி புரிந்து கொண்டிருப்பேன்.
இந்த புதிய தலைமைக்கு அறிஞர் நிர்வாகியாக இருப்பார். அவர் தேர்வு செய்து கொண்ட புதிய நிர்வாகக் குழு பின்வருமாறு:
பழைய மேற்பார்வையாளர்களில் பென்ஸ், ஆதவா இருவரும் தொடர்கிறார்கள். இந்தக் குழுவினர்தாம் தளத்தின் முழு வேலையையும் கவனிக்கும் பொறுப்பாளிகள், அதனால் இனி அவர்கள் பொறுப்பாளர்கள் என அழைக்கப் படுவார்கள்.
சிறப்பாக பணியாற்றி வரும் மன்ற உதவியாளர்கள் அனைவரும் (அமரன், அன்புரசிகன், அக்னி, ஓவியன்) பொறுப்பாளர்களாக பதவி உயர்வு பெறுகிறார்கள்.
மற்ற பழைய மேற்பார்வையாளர்கள் ஆரன், மன்மதன், தாமரை, பிரதீப் ஆலோசர்கள் குழுவின் அங்கமாகிறார்கள்.
இவர்களைத் தவிர ஆலோகர்கள் குழுவில் நான், இளசு, மனோ ஜி சேர்கிறோம்.
எங்களோடு ஆலோசர்கள் குழுவில் புதிய வரவாக பாரதியும் இணைகிறார்.
மொத்தத்தில்;
தளத்தை நிர்வாகிக்க,
நிர்வாகி: அறிஞர்
பொறுப்புடன் பணிகளை செய்திட,
பொறுப்பாளர்கள்:
பென்ஸ், ஆதவா, அமரன், அன்புரசிகன், அக்னி, ஓவியன்
ஆலோசனை வழங்கி மன்றத்தை வழி நடத்திட,
ஆலோசகர்கள்:
இராசகுமாரன், இளசு, மனோஜி, பாரதி, ஆரென், மன்மதன், தாமரை, பிரதீப்
இந்த குழுக்கள் நாளை முதல் தங்கள் பணியை தொடங்கும். நாளை முதல் புதிய நிர்வாகி மற்றும் பொறுப்பாளர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது.
இதுவரை எனக்கு அளித்த ஒத்துழைப்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி..! அது போல இனி புதிய தலைமைக்கும் ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறேன்.
அறிஞர் புதிய அத்தியாயத்தைத் தொடங்கட்டும், அதன்பின் ஒவ்வொரு புதிய தலைமுறையும் இதைத் தொடரட்டும்.
வாழ்த்துக்கள்..!!
நன்றி...!!!
இராசகுமாரன்
விகடன்
15-08-2007, 06:20 AM
மனற ஒருங்கிணைப்பாளர் அனைவரிற்கும் எனது வாழ்த்துக்கள்.
புதிய குழுவுக்கு வாழ்த்துகள்!
தலைவரின் இம்முடிவை முழுமனதுடன் வரவேற்கிறேன்..
தலைமுறைகள் தாண்டியும் தமிழ்மன்றம் நீடூழி வாழும்!
சிவா.ஜி
15-08-2007, 06:23 AM
புதிய நிர்வாகி,பொறுப்பாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இராசகுமாரன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
namsec
15-08-2007, 06:24 AM
பல புதுமைகளை புகுத்தும் நண்பர் இராசகுமாரன் ஆலோசகர் ஆக இருப்பதவிட மூத்த நிர்வாகி என இருக்கலாம் என்பது என் கருத்து அல்லது நிறுவனர் என்றும் இருக்கலாம் சற்று யோசித்து முடிவெடுக்கவும்.
kampan
15-08-2007, 06:27 AM
பொறுப்பாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
ஷீ-நிசி
15-08-2007, 06:30 AM
வாழ்த்துக்கள் அனைவருக்கும்!
இதயம்
15-08-2007, 06:31 AM
உலகில் மாற்றம் ஒன்று தான் மாறாதிருக்கிறது என்பதால் நண்பர் இராசகுமாரன் அறிவித்த இந்த மாற்றத்தை நாம் மனமுவந்து ஏற்க வேண்டியது அவசியம். புதிய பொறுப்பாளர்கள் தன் பணியை செவ்வனே செய்து மன்றத்தை உயர்த்துவார்கள் யாதொரு ஐயமும் இல்லை. மன்றத்தின் நிர்வாகியாக இருந்து தமிழ் மன்றத்தை இதுவரை தலை நிமிர்ந்து நடத்திய மன்றத்தலைவர் இராசகுமாரன் அவர்களுக்கு நன்றிகள்.
மன்றம் தொடர்ந்து தலை நிமிர்ந்து தன் பாதையில் நடக்க காரணியாக அமைய போகும் புதிய நிர்வாகி அறிஞர் அவர்களுக்கும், புதிய மன்ற பொறுப்பாளர்களுக்கு என் வாழ்த்துக்கள்.!
ஓவியன்
15-08-2007, 06:32 AM
பெருந்தன்மையுடன் புதியவர்களுக்கு வழி விடும் பெருந்தகைகளுக்கு நன்றிகள் கோடி........
மூத்தவர்களின் வழிகாட்டலில் அறிஞர் அவர்களின் தலமையில் அணி திரளும் புதிய அணி தமிழ் மன்றத்திற்கு வளத்தையும் பலத்தையும் சேர்க்கட்டும்...............
mania
15-08-2007, 06:51 AM
இராசகுமாரன் பொறுப்பிலேயிருந்து விலகுகிறார் என்ற செய்தி மிகுந்த மனவருத்தத்தை அளிக்கின்றது.. ஆலோசகர் என்ற முறையில் அவர் நமக்கு உதவுகிறார் என்பது பற்றி மகிழ்ச்சி.
புது பொறுப்பு ஏற்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். என்னுடைய உதவி அவர்களுக்கு எப்போதும் உண்டு என்று தெரிவித்துக்கொள்கிறென்.
அன்புடன்
மணியா..
karikaalan
15-08-2007, 07:06 AM
புதிய நிர்வாகக்குழுவிற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். மன்றத்தை மேன்மேலும் உயர்த்துவதற்கு உறுப்பினர்களின் ஒத்துழைப்பு அவசியம் உங்களுக்குக் கிட்டும்.
இராசகுமாரன்ஜியின் தமிழார்வம் மட்டுமே இத்தளத்தை உயிரூட்டுவதற்கும், பரப்புவதற்கும் காரணமாக இருந்திருக்கிறது. என்னைத் தமிழில் தட்டச்ச தூண்டியவரே அவர்தான். Chairman, Emeritus -− ஸ்தானத்தில் அவர் நீடிக்கவேண்டும் என்று வேண்டுகிறேன்.
===கரிகாலன்
மாதவர்
15-08-2007, 07:06 AM
வாழ்த்துக்கள்
.
இராசகுமாரன்ஜியின் தமிழார்வம் மட்டுமே இத்தளத்தை உயிரூட்டுவதற்கும், பரப்புவதற்கும் காரணமாக இருந்திருக்கிறது. என்னைத் தமிழில் தட்டச்ச தூண்டியவரே அவர்தான். .
===கரிகாலன்
முழுக்க முழுக்க ஆமோதிக்கிறேன் அண்ணலே!
எத்தனை நன்றி சொன்னாலும் போதாதென்பதால்
என்னால் நன்றி எனச் சொல்ல இயலவில்லை!!
அன்புரசிகன்
15-08-2007, 07:30 AM
விலகுகிறேன் என முதலில் தலைவர் கூறியதும் வருத்தம் ஏற்பட்டது. மீண்டும் இணைந்திருப்பார் என்பதில் மகிழ்ச்சி...
புதிய தலைவருக்கும் நிர்வாகத்தினருக்கும் வாழ்த்துக்கள்...
praveen
15-08-2007, 07:37 AM
நிர்வாகி, ஆலோசகரில் ஒருவரானதற்கு பதிலாக நிறுவனர் என்று பெயர் மாற்றியிருந்தால் நன்றாயிருந்திருக்கும். தொடர்ந்து வரும் மாற்றங்கள் தளத்தை இன்னும் துடிப்புடன் வைத்திருக்க முடியும்.
எனக்கு ஒரளவு தெரிந்த என்னை இங்கே ஊக்குவித்த, புதிய நிர்வாகியான அறிஞர் அவர்களுக்கும், நானறிந்த தனிப்பட்ட நண்பரான பொறுப்பாளர் அமரன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். மன்றத்தை திறம்பட நடத்தி வரும் மற்ற நிர்வாக உறுப்பினருக்கும் வாழ்த்துக்கள்.
alaguraj
15-08-2007, 07:40 AM
புதிய நிர்வாக குழுவுக்கு வாழ்த்துக்கள்.....மன்றம் ஆல் போல் தளைத்து வளர நமது அனைவரது பங்களிப்பும் அவசியம்..நேரம் கிடைக்கும் போது புதிய பதிவுகள், நேரமில்லாத பேது பதிவுகளை படித்து வாய்ப்புகிடைக்கும் போது பின்னூட்டமிட்டால் இன்னும் பல படைப்பாளிகளை நாம் பெறமுடியும். அன்பர்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டுகிறேன்.
மாற்றம் ஒன்றே மாறுதல் இல்லாதது.
புதிய நிர்வாகத்தின் கீழ் மன்றம் பொலிவுடன் இருக்கும்..!
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்..?
வெற்றியை நாளைச் சரித்திரம் சொல்லும்..!
புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்.
தங்கவேல்
15-08-2007, 08:24 AM
அப்படியா ? வருத்தமா இருக்கு ராசகுமாரன் தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதால். ஆனால் தலைமை பொறுப்பு மிக மிக தகுதியானவரும், அன்பானவரும் ஆன அறிஞரிடம் கொடுத்தது அதிக சந்தோஷம் தருகிறது...
annan
15-08-2007, 08:35 AM
வாழ்த்துக்கள் அனைவருக்கும். தொடரட்டும், சிறக்கட்டும் உங்கள் பணி
தளபதி
15-08-2007, 08:37 AM
அனைவருக்கும் இதயங்கனிந்த சுதந்திர திருநாள் வாழ்த்துக்கள். !!
இந்த உலகில் மாற்றம் ஒன்றுதான் மாற்ற முடியாதது. (ஆகா!! அப்படி பார்க்காதீர்கள். சுட்டதுதான்!!).
சரியான நேரத்தில் நடக்கும் சரியான மாற்றம் மிகவும் நல்லது. பொறுப்புகளை ஏற்ற நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் பணி இனிதே அமையட்டும்.
Mathu
15-08-2007, 08:43 AM
புதிய நிர்வாகத்துக்கு எனது வாழ்த்துகள், தலைவர் எம்முடன் தொடர்ந்தும்
இணைந்திருப்பதில் மகிழ்ச்சி. அறிஞரின் தலைமையில் மன்றம் மேலும்
மெலும் வழரட்டும்.
இலக்கியன்
15-08-2007, 08:46 AM
புதிய நிர்வாக குழுவினர்க்கு என் மனமார்ந்த பாரட்டுக்கள்
மன்மதன்
15-08-2007, 09:24 AM
பொறுப்பாளர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்..
leomohan
15-08-2007, 09:40 AM
புதிய நிர்வாக குழுவிற்கு வாழ்த்துக்கள்.
எந்த ஒரு பக்கமும் சாயாமல், நடுநிலையுடன், ஒரு மதம் புண்பட்டால் பரவாயில்லை இன்னொரு மதம் புண்படக்கூடாது போன்ற நிலையெடுக்காமல், பகுத்தறிவு போர்வையின் கீழ் மெய்யான ஆன்மீக உணர்வுகளை யாரையும் காயப்படுத்தவிடாமல், கருத்துள்ள கண்ணியமான திரிகளை ஊக்குவித்து, தனிமனித தாக்குதல்களை நேரிடியாகவோ மறைமுகமாகவோ ஊக்குவிக்காமல் அரும்பணியாற்றும் என்று நம்புகிறேன்.
அமரன்
15-08-2007, 09:47 AM
மன்ற உறவுகள் அனைவருக்கும் பணிவான வணக்கம்.
தமிழின் மீது தீராப் பற்றுக்கொண்ட தலைவர் இராசகுமாரன் அவர்கள் தொடர்ந்தும் நிர்வாகத்தில் இருப்பேன் என சொல்வது மகிழ்ச்சியான செய்தி. ஏலவே ஆலோசகர்களாக இருந்த இளசு அண்ணன், மனோஜி அவர்கள், போன்றோருடன் தாமரை, பிரதீப், மன்மதன்,ஆரென் என நான்கு தமிழ் ஆவலர்களான அண்ணாக்கள் சேர்கிறார்கள் என்னும் அறிவிப்பில் உள்ளத்தில் உற்காசம் கலந்த உவகையைத் பொங்குகிறது. மன்றம் வந்த நாள் முதல் பாரதி அண்ணாவை இங்கே காண்கிறேன். எல்லாத் திரிகளிலும் தலைவர்தந்த வரத்தால் அவர் வருகை பதிவுசெய்யப்பட்டிருக்கும். அவர் பின்னூட்டங்களில் அழகு தமிழ் குடிகொண்டிருக்கும். அவர் தமிழைப்போல எழுத விளைந்து தோல்வியடைந்த சந்தர்ப்பங்கள் ஏராளம். விதிமுறைகளை மீறும் பதிவுகளை நிர்வாக நண்பர்களுக்கு தெரியப்படுத்தும் முறை இருப்பது இவரால்த்தான் எனக்குத் தெரிந்தது. பல சமயங்களில் இவர் அதைப்பயன்படுத்துவதை கண்டுள்ளேன். தமிழ் மீதும் மன்றம்மீதும் அளவில்லா பற்றுள்ள பாரதி அண்ணாவும் ஆலோசகர் குலாமில் இணைந்துள்ளமை இரட்டிப்பு மகிழ்ச்சி.
அறிஞர் அவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஒரு கையில் அன்பு அமுதசுரபியையும் மறுகையில் சாட்டையும் கொண்டுள்ளவர். இவர் சாட்டையை பயன்பத்துவது அத்தி பூத்தாற்போன்றது. பயன்படுத்துகையில் கொஞ்சும்சாட்டையாகவே கண்டுள்ளேன். பென்ஸ் அண்ணாவின் பயனர் தகவலில் அவரைபற்றிய சில வரிகள் (வாழ்க்கை வரலாறு) எனுமிடத்தில் நிலைகண்ணாடி என இருக்கும். நாம் எப்படிப்பார்கின்றோமோ அப்படித்த் தெரிவார் என நினைத்துக்கொள்வேன். அது உண்மையும் கூட. ஆதவாவைப் பற்றி ஒற்றைவார்த்தையில் சொல்லி விடலாம். அவர் மன்றத்தில் இளவரசன். ஓவியன்,அன்புரசிகன்,அக்னி மூவரும் முத்தமிழ்கள். முத்தமிழ்களைப்பற்றி உங்களுக்கு சொல்லவேண்டுமா என்ன?
மன்றத்தை வழிநடத்திச்செல்லும் சீரிய பணியில் உள்ள இவர்களுடன் இந்த எளியவனையும் நம்பிக்கையுடன் இணைத்துக்கொண்டமைக்கு நன்றி. உங்கள் நம்பிக்கைக்கு களங்கம் ஏற்படாதவாறு இட்ட பணியை, நிர்வாகிகள், ஆலோசகர்கள்,மூத்த பொறுப்பாளர்கள், உறவுகள் போன்றோர் உதவியுடன் செவ்வனே செய்ய முயற்சிக்கின்றேன்.
எனது தோள்களே...!
ஊர் கூடி இழுத்தால்தான் தேர் நகரும். மன்றமெனும் தேர் இணைய வீதியில் பவனிவர அனைவரும் ஒன்றிணைந்து வடம் பிடிப்போம். நிர்வாக நண்பர்களின் நடவடிக்கைகள் சில, தேரினை சரியான பாதையில் செலுத்த அப்பப்போ போடும் கட்டைகள் போல் அமைந்து, வடம்பிடிக்கும் உங்களை வேதனைப்படுத்தலாம். அவ்வேதனைகள் எல்லாம் நம் மன்றம் நிகழ்த்திக்கொண்டிருக்கும் நிகழ்த்தப்போகும் சாதனைகளுக்கான பசளைகளாக நினைத்து ஒத்துழைப்பை நல்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
நான் இணைந்து பணியாற்ற இருக்கும் சக நிர்வாக உறவுகளுக்கும் மற்றைய மன்ற உறவுகளுக்கும் அவர்தம் பணியில் சிறப்பாக செயல்பட வாழ்த்தி, வாழ்த்தும் உள்ளங்களுக்கு நன்றி நவின்று புதிய நிர்வாகக்குழுவுக்கு உங்கள் ஆதரவை வேண்டுகின்றேன்..
நம்பிக்கையுடன்
paarthiban
15-08-2007, 09:51 AM
அனைவருக்கும் வாழ்த்துக்கள். புதிய தலைவர் அறிஞர் வழியில் நடப்பேன் என உறுதி அளிக்கிறேன்.
leomohan
15-08-2007, 09:52 AM
நான் இணைந்து பணியாற்ற இருக்கும் சக நிர்வாக உறவுகளுக்கும் மற்றைய மன்ற உறவுகளுக்கும் அவர்தம் பணியில் சிறப்பாக செயல்பட வாழ்த்தி, வாழ்த்தும் உள்ளங்களுக்கு நன்றி நவின்று புதிய நிர்வாகக்குழுவுக்கு உங்கள் ஆதரவை வேண்டுகின்றேன்..
நம்பிக்கையுடன்
உங்கள் புதிய பொறுப்புக்கு வாழ்த்துக்கள் அமரன். குறைந்த சமயத்தில் மிகவும் உயரிய பதவியை பெற்றுள்ளீர்கள். அதற்கு உங்களுடைய அன்பும் இடைவிடாது பங்களிப்புகளும் நடுநிலையும் காரணம்.
கடினமான பணி. அதை நீங்கள் செவ்வனே செய்வீர்கள் என்று நம்புகிறேன்.
இதயம்
15-08-2007, 09:55 AM
புதிய நிர்வாக குழுவிற்கு வாழ்த்துக்கள்.
எந்த ஒரு பக்கமும் சாயாமல், நடுநிலையுடன், ஒரு மதம் புண்பட்டால் பரவாயில்லை இன்னொரு மதம் புண்படக்கூடாது போன்ற நிலையெடுக்காமல், பகுத்தறிவு போர்வையின் கீழ் மெய்யான ஆன்மீக உணர்வுகளை யாரையும் காயப்படுத்தவிடாமல், கருத்துள்ள கண்ணியமான திரிகளை ஊக்குவித்து, தனிமனித தாக்குதல்களை நேரிடியாகவோ மறைமுகமாகவோ ஊக்குவிக்காமல் அரும்பணியாற்றும் என்று நம்புகிறேன்.
கவலைப்படாதீர்கள்..! நீங்கள் குறிப்பிட்ட கவலைகள் தொடர்பாக உங்களை விட அதிக அக்கறை எடுத்து, இந்த மன்றத்தின் மாண்பை கட்டிக்காப்பதில் மன்ற பொறுப்பாளர்கள் என்றும் தவறமாட்டார்கள்.
எல்லை தாண்டும் திரிகள் உடனுக்குடன் பூட்டப்பட்டு, அவை குப்பைக்கு அனுப்பப்படுவதை கண்டும் உங்களுக்கு ஏன் இந்த சந்தேகம் ஏற்பட்டது என்று தெரியவில்லை. பொறுப்பாளர்கள் தங்கள் கடமையை நம் மன்றத்தில் நடுநிலையுடன் செய்ததற்கு சிறந்த உதாரணங்கள் தான் பூட்டப்பட்ட, குப்பைக்கு போன வீண் திரிகள்..!
இணைய நண்பன்
15-08-2007, 10:35 AM
புதிய நிர்வாகக்குழுவிற்கு என் நல்வாழ்த்துக்கள்.நிர்வாகி இராசகுமாரன் அவர்களின் சேவை மகத்தானது.உங்கள் ஆலோசனையின் கீழ் புதிய நிர்வாகம் செவ்வனே தம்பணியை தொடரும் என்பதில் ஐயமே இல்லை.அதே போல் எங்கள் சேவையும் மன்றத்திற்கு என்றென்றும் இருக்கும்.நன்றி
மன்மதன்
15-08-2007, 10:45 AM
பொறுப்பாளர்கள் தங்கள் கடமையை நம் மன்றத்தில் நடுநிலையுடன் செய்ததற்கு சிறந்த உதாரணங்கள் தான் பூட்டப்பட்ட, குப்பைக்கு போன வீண் திரிகள்..!
எவர் ஒருவரின் திரி 10 தடவைக்கு மேல் பூட்டப்படுகிறதோ, இல்லை குப்பைக்கு அனுப்பப்படுகிறதோ, அவர் தமிழ்மன்றத்திற்கு எதிரானவர் அல்லது தமிழ்மன்றத்தின் விதிமுறைகளை பின்பற்ற இயலாதவர் என்று அவரின் கணக்கை ஒரேதடியாக முடக்க வேண்டும்.. புதிய நிர்வாக குழு இதை பற்றி சிந்தித்து செயல்படுவார்கள் என நம்புவோம்.
leomohan
15-08-2007, 10:55 AM
எவர் ஒருவரின் திரி 10 தடவைக்கு மேல் பூட்டப்படுகிறதோ, இல்லை குப்பைக்கு அனுப்பப்படுகிறதோ, அவர் தமிழ்மன்றத்திற்கு எதிரானவர் அல்லது தமிழ்மன்றத்தின் விதிமுறைகளை பின்பற்ற இயலாதவர் என்று அவரின் கணக்கை ஒரேதடியாக முடக்க வேண்டும்.. புதிய நிர்வாக குழு இதை பற்றி சிந்தித்து செயல்படுவார்கள் என நம்புவோம்.
நல்ல யோசனை மன்மதன். ஆனால் இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று என்னவென்றால் திரி துவங்குபவரை விட அந்த திரியில் புகுந்த அதை திசை மாற்றி அதனை மூட முயல்பவர்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
பெரும்பாலான நேரத்தில் திரி சரியான திசைகளில் செல்லும் போது சில விஷமிகள் அதை பூட்ட முயல எல்லா முயற்சிகளையும் எடுக்கின்றனர். சிலர் ஒருசிலரை குறிப்பிட்டும் இந்த தாக்குதல்களை செய்கின்றனர். இதையும் நிர்வாகம் கண்டுக்கொள்ள வேண்டும்.
விகடன்
15-08-2007, 11:07 AM
இந்த அறிவித்தல்த் திரியும் தற்போது தன் பாதையை தவறவிடுகிறதோ என்றொரு குழப்பம் இருக்கிறது தோழர்களே. ஆகையால் இத்தோடு திரிமூடும் சமாச்சாரத்தை விடுத்து திரியின் பாதையில் செல்வோமா...
வெண்தாமரை
15-08-2007, 11:17 AM
அனைவருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.. மனறம்
மேலும் மேலும் வளர வாழத்துக்கள்..
இதயம்
15-08-2007, 11:26 AM
எவர் ஒருவரின் திரி 10 தடவைக்கு மேல் பூட்டப்படுகிறதோ, இல்லை குப்பைக்கு அனுப்பப்படுகிறதோ, அவர் தமிழ்மன்றத்திற்கு எதிரானவர் அல்லது தமிழ்மன்றத்தின் விதிமுறைகளை பின்பற்ற இயலாதவர் என்று அவரின் கணக்கை ஒரேதடியாக முடக்க வேண்டும்.. புதிய நிர்வாக குழு இதை பற்றி சிந்தித்து செயல்படுவார்கள் என நம்புவோம்.
ஒரு திரி பூட்டப்படுவது பற்றி மன்றத்தவர் முதலில் கவனம் கொள்ளும் விஷயம் "அந்த திரியின் நோக்கம்". அப்படி அந்த திரியின் நோக்கம் நல்லதாக இருந்தால் அதை திசை திருப்ப விரும்புபவர்கள் எச்சரிக்கை செய்யப்படுகிறார்கள், பிறகு அவர்களின் விஷமத்தனமான பதிவு அந்த திரியிலிருந்து நீக்கப்படுகிறது. ஆனால், அந்த திரியே விஷமத்தனமாக இருக்கும் பட்சத்தில் அந்த திரிக்கே திண்டுக்கல் பூட்டுப்போடப்படுவதை தவிர வேறு வழியில்லை. அதைத்தான் பொறுப்பாளர்கள் மிகவும் அருமையாக செய்து வருகிறார்கள். இந்த பணி மிகவும் பாராட்டத்தக்கது. மிக, மிக நடுநிலைத்தன்மையுடையது. ஒரு திரி பூட்டப்பட வேண்டும் என்று யார் வேண்டுமானாலும் கேட்கலாம். அது அவர்களின் உரிமை. ஆனால், அது பூட்டப்படுவது என்பது நிர்வாகிகளின் பகுத்தாய்விலேயே இருக்கிறது. இந்த விஷயத்தில் யாருடைய அறிவுரையும் நிர்வாகிகளுக்கு அவசியப்படுவதில்லை. காரணம், நம்மைவிட அவர்கள் மிகச்சரியாக ஒரு திரியின் நோக்கத்தை அடையாளம் கொண்டு விடுகிறார்கள். அதற்கான நடவடிக்கையையும் உடனடியாக எடுத்துவிடுகிறார்கள்.
மன்மதன் குறிப்பிட்ட யோசனை மிகச்சிறப்பானது என்றாலும் அதனால் சிலருக்கு பாதகம் ஏற்படும் வாய்ப்புள்ளது. அப்படி அவர் கூறுவது போல் விஷம பதிவின் எண்ணிக்கையின் அடிப்படையில் அவரை மன்றத்திலிருந்து நீக்க வேண்டுமென்றால் அப்படிப்பட்ட திரிசங்கு சொர்க்க நிலையில் இங்கு சிலர் உண்டு. இந்த யோசனையை நானும் நிர்வாகிகளுக்கு பரிந்துரைக்கிறேன். நன்மை, தீமையை ஆராய்ந்து அவர்கள் எடுக்கும் நல்ல முடிவுகளை நான் நிச்சயம் வரவேற்பேன்..!
இந்த அறிவித்தல்த் திரியும் தற்போது தன் பாதையை தவறவிடுகிறதோ என்றொரு குழப்பம் இருக்கிறது தோழர்களே. ஆகையால் இத்தோடு திரிமூடும் சமாச்சாரத்தை விடுத்து திரியின் பாதையில் செல்வோமா...
புதிய தலைமை பதவியேற்பது பற்றிய இந்த திரியில் இது போன்ற ஆலோசனைகள் அவசியமற்றது தான். ஆனால், கொடுக்கப்பட்ட முரண்பாடான கருத்திற்கு பதிலிடுவது அவசியம். இல்லையென்றால் அந்த கருத்து உண்மையாகிவிடும் அபாயம் இருக்கிறது. போதும் என நினைக்கிறேன். இதோடு நிறுத்திக்கொண்டு திரி தொடர்பானவற்றை பதிப்போம்.
ஓவியன்
15-08-2007, 11:32 AM
புது விதிகளைப் பற்றி புது நிர்வாகம் நிச்சயமாகக் கவனத்திற் கொள்ளும் நண்பர்களே,
அத்துடன் உங்கள் அனைவரதும் கருத்துக்களுக்கும் நன்றிகள்......
இத்துடன் இந்த திரி அதன் போக்கில் பயணிக்கட்டுமே......
சிவா.ஜி
15-08-2007, 11:51 AM
ஒரு கோலாகலமான விழா நடக்கும்போது...சொல்லாமலேயே சில நல்ல உள்ளங்கள் சுறு சுறுப்பாய் அங்குமிங்கும் ஓடிதிரிந்து,எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு...எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்நோக்காமல்..சேவை ஒன்றையே பிரதானமாகக்கொண்டு செயல்படுவார்கள். அப்படிப்பட்ட நல்ல இதயங்களை அடையாளம் கண்டு,அதே மேடையில் அத்துனை பேர் மத்தியிலும்,அவர்கள் கௌரவரப்படுத்தப்படுவதைப் போல இன்று பொறுப்பாளர்களாகவும்,நிர்வாகிகளாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த மன்றத்தின் மான்புக்கு இது ஒரு சான்று. பொறுப்பளிக்கப்பட்ட பென்ஸ்,ஆதவா,அமரன்,அக்னி,அன்புரசிகன் மற்றும் ஓவியன் அனைவரையும் மனநிறைவோடு வாழ்த்துகிறேன்.மான்புமிக்க இந்த மாமன்றத்தை செவ்வனே நடாத்தி செல்வார்களென்ற பரிபூரண நம்பிக்கை உள்ளது.
Narathar
15-08-2007, 01:19 PM
நான் சில நாட்களாக இங்கு வரவில்லை..................
வந்ததும் வராததுமாக ஆட்சி மாற்றமே நடந்திருக்கின்றது!!!!!
என்றாலும் இங்கு ஆட்சி மாற்றம் மற்ற இடங்களைப்போலலல்லது சுமுகமாக நடந்திருக்கிறது நாராயணா!!!!!!
புதிய நிர்வாக குழுவின்பருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்..........
உங்களுக்கான முழு ஒத்துழைப்பையும் தர காத்திருக்கின்றேன்...
அவ்வவ்வப்போது இங்கு வரும்போதெல்லாம்,
lolluvathiyar
15-08-2007, 01:32 PM
வருத்தமாக இருகிறது நமது நிர்வாகி விலகுவது.
அதே சம்யம் நமது அறிஞர் பொருப்பு வகிப்பது வரவேற்க்க கூடியது
சமீப காலமாக பல தளங்களை நிர்வாகித்து கொண்டிருப்பதால் தமிழ்மன்றத்தில் என்னால் அதிகம் பங்காற்ற முடியவில்லை.
ஆம் உங்கள் படைப்புகளை சமீபமாகா அதிகமாக பார்க்க முடிவதில்லை.
தலைவரே தமிழ் மன்றம் போல் வேறு ஏதாவது பயனுள்ள தளங்கள் நடத்துகிறீர்களா?
புதிய பொருப்பாளர்களுக்கு என் வாழ்த்துகள் தெரிவிப்ப*தோடு நில்லாமல் அவர்களுக்கும் எனக்கு உள்ள இடைவெளி குறையாது. காரனம் நான் அனைவரையும் நன்பராகவே பார்த்து பழகி விட்டேன்
leomohan
15-08-2007, 01:34 PM
நான் சில நாட்களாக இங்கு வரவில்லை..................
வந்ததும் வராததுமாக ஆட்சி மாற்றமே நடந்திருக்கின்றது!!!!!
என்றாலும் இங்கு ஆட்சி மாற்றம் மற்ற இடங்களைப்போலலல்லது சுமுகமாக நடந்திருக்கிறது நாராயணா!!!!!!
புதிய நிர்வாக குழுவின்பருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்..........
உங்களுக்கான முழு ஒத்துழைப்பையும் தர காத்திருக்கின்றேன்...
அவ்வவ்வப்போது இங்கு வரும்போதெல்லாம்,
நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கும் நாரதருக்கு நல்வரவு. இபணம் கம்மியாக இருக்கு சீக்கிரம் பங்களித்து கையிருப்பை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.
புதிதாக பதவியேற்கும் அனைத்து மேற்பார்வையாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். நீங்கள் இன்னும் சிறப்பாக உங்களுடைய பணிகளைச் செய்துவிடுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கு என் வாழ்த்துக்கள்.
அறிஞர் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
நன்றி வணக்கம்
ஆரென்
நான் சில நாட்களாக இங்கு வரவில்லை..................
வந்ததும் வராததுமாக ஆட்சி மாற்றமே நடந்திருக்கின்றது!!!!!
என்றாலும் இங்கு ஆட்சி மாற்றம் மற்ற இடங்களைப்போலலல்லது சுமுகமாக நடந்திருக்கிறது நாராயணா!!!!!!
புதிய நிர்வாக குழுவின்பருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்..........
உங்களுக்கான முழு ஒத்துழைப்பையும் தர காத்திருக்கின்றேன்...
அவ்வவ்வப்போது இங்கு வரும்போதெல்லாம்,
நாரதர் அவர்களை மறுபடியும் காண்பதில் மகிழ்ச்சி. வாருங்கள். அடிக்கடி வாருங்கள்.
பாரதி
15-08-2007, 02:22 PM
புதிய நிர்வாகக்குழு நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
இது நம்மை நாமே வழி நடத்த ஏற்படுத்தப்பட்ட குழு என்பதில் சந்தேகமே இல்லை. நிர்வாகத்தில் உள்ள அனைத்து குழு உறுப்பினர்களைப்போலவே மற்ற மன்ற உறுப்பினர்களும் தவறு நடக்கும் போது சுட்டிக்காட்டவும், மன்றம் சீரிய முறையில் நடைபெற ஆலோசனைகள் வழங்கவும் தயங்கக்கூடாது என் தாழ்மையான வேண்டுகோள்.
இணையத்தில் நமக்கு வாய்த்திருக்கும் அற்புதமான தமிழ்த்தாய் இல்லமான தமிழ்மன்றத்தை நல்ல முறையில் கட்டிக்காப்பாற்றி, வழிநடத்தி செல்வது நம் அனைவரின் கடமையும் உரிமையும் ஆகும்.
அறிஞர்
15-08-2007, 02:30 PM
மன்றத்தில் சாதரண உறுப்பினராக சேர்ந்தேன். சேர்ந்த பொழுது யாரையும் தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆனால் இன்று அநேக சொந்தங்கள். எண்ணிப்பார்க்கவே பெருமையாக உள்ளது. மன்றத்தை நமக்கென உருவாக்கி கொடுத்த இராசகுமாரனுக்கு நன்றி. மன்றத்தில் நிர்வாகியாக இருந்த இளசுவின் வழிநடத்தல் என்றும் நமக்கு தேவை.
மன்றத்தில் இது வரை பொறுப்பு வகித்த இராசகுமாரன், இளசு, ஆரென், மன்மதன், தாமரை மற்றும் பிரதீப்புக்கு மிக்க நன்றி. தங்களின் ஆலோசனையில் மன்றத்தை இன்னும் மெளிர செய்வோம்.
புதிய குழுவுக்கும் வாழ்த்துக்கள்.
எந்த பொறுப்பும் இங்கு நிரந்தரமல்ல. சாதரண உறுப்பினர் நிர்வாகியாக மாறலாம்; நிர்வாகி சாதரண உறுப்பினராக (ஆலோசகராக) மாறலாம் என்பதற்கு இங்கு பல எடுத்துக்காட்டுகள் இருக்கிறது.
பதவி வரும் போகும்... ஆனால் மன்றத்தில் நம் பங்கு என்றும் தொடரும். இன்னும் ஒரு சில வருடங்களில் நானே சாதரண உறுப்பினராக மாறிவிடுவேன்.
பதவி இருக்கும் வரை, சரியாக செயல்படவேண்டும் என்பதே என் ஆவல்.
தனி ஒருவராய் இந்த மாமன்றத்தை நடத்துவது கடினமான காரியம். இது நம் மன்றம்.. நாம் அனைவரும் இணைந்து மன்றத்தை உயர்த்துவோம்.
மன்றம் எந்த நிலையிலும் மதம், சாதி, அரசியலை அனுமதிக்காது. நடுநிலைமையில் செயல்படும்.
ஒருவருடைய பதிவு மற்றவர் மனதை புண்படுத்தும் வகையில் இருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும். முதலில் அன்பாக வலியுறுத்துவோம். கேட்காவிடில் கொஞ்சம் கடுமையாக கையாள வேண்டியிருக்கும். மற்றவரை வம்புக்கு இழுப்பதற்கு, சாடுவதற்கு மன்றம் இடமல்ல...
மற்றவரின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுப்போம். அனைவரும் இணைந்து வளருவோம்.
mania
15-08-2007, 04:22 PM
வாழ்த்துகள் அறிஞர். :4_1_8:மிகவும் அழகாக ஆரம்ப உரை கொடுத்திருக்கிறீர்கள். உங்களால் கண்டிப்பாக முடியும் அறிஞரே...தேவையான எல்லா உதவியும் செய்ய அருமையான பட்டாளமே இருக்கிறதே உங்கள் பின்னால்.....WISHING YOU ALL THE VERY BEST.
. எனக்கு தனிப்பட்ட முறையில் மிக்க மகிழ்ச்சி.....(என்ன ஒரு சிறிய சந்தேகம் ....இனிமேல் முன் மாதிரி உங்களை வார முடியுமா....!!!!????):Nixe_nixe02b:
சந்தோஷத்துடன்
மணியா...:D:D
அறிஞர்
15-08-2007, 04:48 PM
. எனக்கு தனிப்பட்ட முறையில் மிக்க மகிழ்ச்சி.....(என்ன ஒரு சிறிய சந்தேகம் ....இனிமேல் முன் மாதிரி உங்களை வார முடியுமா....!!!!????):Nixe_nixe02b:
சந்தோஷத்துடன்
மணியா...:D:D
வாழ்த்துக்கு நன்றி.. தமிழ் மன்றத்தில் ஈடுபாடு வரவழைத்தவர்களில் நீங்களும் ஒருவர்.... தங்களின் ஆலோசனையில் மன்றம் சிறப்பாக செயல்படும். சில இடங்களில் வார உமக்கு உரிமையுண்டு.
mania
15-08-2007, 04:53 PM
வாழ்த்துக்கு நன்றி.. தமிழ் மன்றத்தில் ஈடுபாடு வரவழைத்தவர்களில் நீங்களும் ஒருவர்.... தங்களின் ஆலோசனையில் மன்றம் சிறப்பாக செயல்படும். சில இடங்களில் வார உமக்கு உரிமையுண்டு.
நான் பதிப்பதே சில இடங்களில்தானே......????
அன்புடன்
மணியா....:icon_hmm:
அன்புரசிகன்
15-08-2007, 05:03 PM
நான் பதிப்பதே சில இடங்களில்தானே......????
அன்புடன்
மணியா....:icon_hmm:
அப்படியனால் இனி நீங்கள் பல இடங்களுக்கு மாறிவிடுங்கள்.... உங்கள் நகைச்சுவை கலந்த பதிவுகளைகக்காண ஆவல்...
mania
15-08-2007, 05:06 PM
அப்படியனால் இனி நீங்கள் பல இடங்களுக்கு மாறிவிடுங்கள்.... உங்கள் நகைச்சுவை கலந்த பதிவுகளைகக்காண ஆவல்...
என் நக சுவையில் எனக்கே ஆவல்....!!!!
அன்புடன்
மணியா....;)
வாழ்த்துக்கள் அறிஞர் மற்றும் பொறுப்பாளர்களே...
உங்கள் மேற்பார்வையில் இம்மன்றம் என்றென்றும் சிறப்பாக செயல்படும்..
pradeepkt
16-08-2007, 05:31 AM
புது நிர்வாகக் குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
மன்றம் இதே பொலிவுடன் காலமெல்லாம் திகழ எம்மால் ஆன அனைத்தும் செய்வோம்.
அன்புடன்,
பிரதீப்
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் நன்றிகள் மற்றும் வருத்தங்கள்..
இளசு அண்ணா முதல் பிரதிப் அண்ணா வரை ஆலோசகர்கள் ஆனது மன்றத்திற்கு பெருமை அளிக்கக் கூடிய விஷயம்... எங்களை (மேற்பார்வையாளர்கள்) சரியாக வழி நடத்த அவர்களின் ஆலோசனை நிச்சயம் தேவை. வாழ்த்துக்கள்.
புதிய பொறுப்பாளர்களான மன்ற உதவியாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். மன்றத்தில் நீங்கள் பின்பக்கமாக செய்த பணிகள் அளவுகடந்தது. உங்களின் மன்ற பாசம் வியக்கவைக்கிறது.... பாராட்டுக்கள்..
என் மேல் நம்பிக்கை வைத்து மன்ற பொறுப்பை கொடுத்த அறிஞர் மற்றும் இராசகுமாரன் ஆகியோருக்கு எனது நன்றிகள்... செய்த பணியை சரியாக செய்தேனா என்றால்... என்னைப் பொறுத்தவரை இல்லை" தான்.. இட்ட பணியை செவ்வனே இனிமேலும் சரியாக செய் என்று பொறுப்பைக் கொடுத்த உங்களுக்கு நன்றியும், அதனை சரியே செய்து நம் மன்றத்தை அலங்கரிக்க செய்வது என் வேலையும் ஆகும்..
இராசகுமாரன் அவர்கள் நிர்வாகத்தை அறிஞரிடம் கொடுத்தது அவரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது... ஒரு தளம் நிர்வகிக்க எத்தனை செலவுகள், எத்தனை பிரச்சனைகள் என்பதை நான் அறிவேன்.. அதனை நமக்காக செய்த இராசகுமாரன் அவர்களை எப்படிப் பாராட்டினாலும் தகும்...
அதோடு அவர் சாதாரண உறுப்பினராகி மன்றத்தில் வலம்வருவது வருத்தம் அளிக்கிறது... ஆலோசகர் பொறுப்பில் இருந்தும் விலகிக்கொள்ளாவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்...
பதிவர்களை கவனிக்க பதிவுகளை கவனிக்க பொறுப்பாளர்கள்
பொறுப்பாளர்களை நிர்வகிக்க ஆலோசகர்கள்
தளத்தை நிர்வகிக்க அறிஞர்
என
அறிஞரின் படை வீறு நடை போட்டுச் செல்லுகிறது....
வெற்றி நிச்சயம் இது வீர சத்தியம்...
franklinraja
16-08-2007, 08:56 AM
மன்றத்தின் புதிய தலைமை குழுவிற்கு வாழ்த்துக்கள் !
தொடர்ந்து ஆலோசனைகளைத் தந்து மன்றத்தை உற்சாகப்படுத்தும் பணிசெய்யவிருக்கும் "இராசகுமாரன்" அவர்களுக்கு நன்றிகள் !!
Hayath
16-08-2007, 09:04 AM
இராசகுமாரன் அவர்கள் நிர்வாகி பொறுப்பிலிருந்து விலகினாலும் அவர் தொடர்ந்து இங்கு செயல்படுவார் என்பது அறிந்து மகிழ்ச்சி.
புதிய நிர்வாக குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்.
Narathar
16-08-2007, 09:08 AM
நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கும் நாரதருக்கு நல்வரவு. இபணம் கம்மியாக இருக்கு சீக்கிரம் பங்களித்து கையிருப்பை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.
அப்ப*டியே கொஞ*ம் அள்ளி கொடுக்கிற*து தானே?
விகடன்
16-08-2007, 09:09 AM
இராசகுமாரன் அவர்கள் நிர்வாகி பொறுப்பிலிருந்து விலகினாலும் அவர் தொடர்ந்து இங்கு செயல்படுவார் என்பது அறிந்து மகிழ்ச்சி.
புதிய நிர்வாக குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்.
ஆஹா
ஹெயத்.
நீண்ண்ண்ண்ண்ட காலத்திற்கு பின்னர்.
அடிக்கடி மன்றம் வாருங்கள்.
ஓவியன்
16-08-2007, 09:15 AM
அப்ப*டியே கொஞ*ம் அள்ளி கொடுக்கிற*து தானே?
நான் நேற்று அள்ளிக் கொடுத்தேன் இல்லே.........!:icon_clap:
kampan
16-08-2007, 09:21 AM
நான் நேற்று அள்ளிக் கொடுத்தேன் இல்லே.........!:icon_clap:
சாவினிலும் ஓவியன் அள்ளிக்கொடுப்பான்
ஆனால் நக்கீரனுக்கு கொடுப்பதைப்பார்கத் தான் பயமாக இருக்கிறது.
ஓவியன்
16-08-2007, 09:28 AM
சாவினிலும் ஓவியன் அள்ளிக்கொடுப்பான்
ஆனால் நக்கீரனுக்கு கொடுப்பதைப்பார்கத் தான் பயமாக இருக்கிறது.
கம்பர்கள் வம்பு செய்யும் உலகில் நானும் வளைந்து கொடுத்துதானே ஆக வேண்டும்:icon_clap:.
kampan
16-08-2007, 12:17 PM
கம்பர்கள் வம்பு செய்யும் உலகில் நானும் வளைந்து கொடுத்துதானே ஆக வேண்டும்:icon_clap:.
கம்பன்கள் வம்பு செய்ய தெம்பு கொடுப்பது
உங்களைப் போன்ற ஓவியன்கள் வளைந்து கொடுப்பதனாலேதான்
வரிகள் வளைவதாலேயே ஓவியம் அழகு பெறுகிறது.
தமிழ்
16-08-2007, 12:24 PM
அன்று
கட்சிக்கு புது இரத்தம் பாய்த்திட காமராஜட் எடுத்த முடிவையே
இன்று
தமிழ் மன்றத்தலைவர் எடுத்துள்ளார். வாழ்த்துக்கள்..
Narathar
17-08-2007, 08:10 AM
நான் நேற்று அள்ளிக் கொடுத்தேன் இல்லே.........!:icon_clap:
அள்ளிக்கொடுத்த வள்ளலுக்கு அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!!!!
அப்ப*டியே கொஞ*ம் அள்ளி கொடுக்கிற*து தானே?
நீங்க கேட்டதற்காக உங்களுக்கு 500 இ−பணம் அனுப்புகிறேன். இனிமேலாவது அடிக்கடி மன்றம் வரவும்.
நாரதர் அணி என்று ஒன்று வேண்டுமாம், நீங்கள் அதற்கு தலைமையேற்று நடத்துங்கள்.
அள்ளிக்கொடுத்த வள்ளலுக்கு அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!!!!
நாரதர் நாராயணனுக்கு மட்டும் சிரம் தாழ்த்துவார்.
Narathar
17-08-2007, 12:35 PM
நாரதர் நாராயணனுக்கு மட்டும் சிரம் தாழ்த்துவார்.
அந்த* வ*ண*க்க*ம் வேறு
இந்த* வ*ண*க்க*ம் வேறு
நாராய*ணா!!!!
Narathar
17-08-2007, 12:39 PM
நாரதர் அணி என்று ஒன்று வேண்டுமாம், நீங்கள் அதற்கு தலைமையேற்று நடத்துங்கள்.
வம்பில் மாட்டி விடுவதென்றே இருக்கின்றீர்கள் போல் தெரிகிறது!!!!!!
நாம் இருக்கும் நிலையில் ஒரு அணியில் உறுப்பினராக இருப்பதே பெரியவிஷயம் அதிலும் தலைமை தாங்க வேண்டுமா????
தாங்குமா அந்த அணி?
Narathar
17-08-2007, 12:40 PM
நீங்க கேட்டதற்காக உங்களுக்கு 500 இ−பணம் அனுப்புகிறேன். இனிமேலாவது அடிக்கடி மன்றம் வரவும்.
.
இது ஒன்றும் லஞ்சம் இல்லையே? :icon_good:
நன்றிகள் பலகோடி
பூமகள்
18-08-2007, 06:40 AM
அறிஞர் அண்ணாவின் தலைமையில் தொடரும் புதிய அணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இதயம்
18-08-2007, 06:42 AM
அறிஞர் அண்ணாவின் தலைமையில் தொடரும் புதிய அணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சிலேடையிலும் தூள் கிளப்புகிறாரே பூமகள்..!:thumbsup:
மனோஜ்
18-08-2007, 09:27 AM
தளத்தை நிர்வாகிக்க,
நிர்வாகி: அறிஞர்
பொறுப்புடன் பணிகளை செய்திட,
பொறுப்பாளர்கள்:
பென்ஸ், ஆதவா, அமரன், அன்புரசிகன், அக்னி, ஓவியன்
ஆலோசனை வழங்கி மன்றத்தை வழி நடத்திட,
ஆலோசகர்கள்:
இராசகுமாரன், இளசு, மனோஜி, பாரதி, ஆரென், மன்மதன், தாமரை, பிரதீப்
ஆனைவருக்கும் என் மனமார்ந்து பாராட்டுக்கள்
புதிய நிர்வாகத்தால்
இனி மன்றம் சிறப்பாக அமையும்
பூமகள்
18-08-2007, 09:28 AM
சிலேடையிலும் தூள் கிளப்புகிறாரே பூமகள்..!:thumbsup:
ஆகா.... கிளம்பிட்டாங்கய்யா.... கிளம்பிட்டாங்க.....! :violent-smiley-010:
இப்பவே கண்ண கட்டுதே.... முடியலை.......! :icon_blush:
புதிய நிர்வாகி அறிஞருக்கும்..பொறுப்பாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும்...
சூரியன்
19-08-2007, 11:32 AM
புதிய பொறுப்பாளர்களுக்கும், புதிய ஆலோசகர்களுக்கும் சூரியனின் வாழ்த்துக்கள்
Mano.G.
19-08-2007, 12:59 PM
கடந்த ஒரு வாரமாக மன்றம் வரவில்லை,
அதோடு இந்திய நாட்டின் சுதந்திர தினத்தில்
தமிழ்மன்றத்தின் தலைமை நிர்வாக பொருப்பு
மாற்றம். பதவிகளில் போட்டி பொறாமையற்ற
ஒரே குழு, ஒரே அரசியல் சாராத குழு,
ஒரே குடும்பம் , நமது தமிழ் மன்றம் ஒன்றே,
இது இக்குடும்பத்தில் பங்கு பெரும் அனைவருக்கும்
தெரிந்ததே.
இந்த கணனி காலகட்டத்தில், இணைய தொடர்புகளால்
பின்னி பிணைக்கபட்ட நம்மை, தமிழால் நம்மை கடந்த 2003ல்
ஒன்று சேர்த்த இந்த தமிழ்மன்றத்தின் உரிமையாளர் இராசகுமரன் அவர்களின் இந்த நான்கு ஆண்டுகளாக தனது நேரத்தையும், பணத்தையும்
செலவிட்டு நமக்காக இந்த மன்றத்தை வழி நடத்தி இப்பொழுது
தலைமை பொருப்பில் தம்பி அறிஞரை அமர்த்தி மன்றம் மேலும் மெருகுர செய்ய எடுத்த முடிவை வரவேற்கிரோம்.
அதோடு சகோதரர் இராசகுமரன் மன்றத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு போகாமல் மன்ற ஆலோசகராக இருப்பது மிக்க மகிழ்ச்சி.
அதோடு மன்றத்தின் புதிய நிர்வாகி தம்பி அறிஞருக்கு வாழ்த்துக்கள்,
அதோ புதிய நிர்வாகஸ்தர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மனோ.ஜி
அனைவருக்கும் வாழ்த்துக்கள்....!!!!
புதிய பொறுப்புக்களைப் பெற்றுக்கொண்ட அனைவரும் தத்தம் பணிகளை செவ்வணே நிறைவேற்ற என்னுடைய வாழ்த்துக்கள்!!! :)
சாராகுமார்
19-08-2007, 05:33 PM
புதிய தலைமையின் கீழ் அன்புடன் பணியாற்றுவோம்.புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்.
Narathar
20-08-2007, 10:04 AM
அறிஞர் அண்ணாவின் தலைமையில் தொடரும் புதிய அணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பெரியவர் ராசகுமாரன் பாணியில்
அறிஞர் அண்ணாவும் நம்மை வழி நடத்தட்டும்?
அடுத்து கலைஞர் எம் ஜி ஆரெல்லாம் யாரப்பா?
இப்பவே சொல்லிவிடுங்க.............. நாராயணா!!!!!!!
அக்னி
23-08-2007, 02:20 PM
என்மேல் நம்பிக்கை கொண்டு, எனக்கும் பொறுப்பாளர் என்ற நிலை தந்த,
தமிழ்மன்ற நிர்வாகத்திற்கும்,
எனக்கு ஆதரவும், பாசமும் தந்து ஊக்குவிக்கும்
தமிழ்மன்ற உறவுகளுக்கும்,
முழங்கும் தமிழில் நிறைந்த நன்றிகள் பலப்பல...
சக பொறுப்பாளர்கள், மற்றும் ஆலோசகர்கள், புதிய நிர்வாகி அவர்களுக்கும்,
வாழ்த்துக்கள் பலப்பல...
எனக்குரிய பொறுப்பில், திறம்பட செயலாற்ற அனைவரின் ஆதரவையும்,
நம்பிக்கையுடன் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றேன்...
கட்டென் பதனை வெட்டென் போம்...
என்ற மகாகவியின் வரிகளுக்கேற்ப செயலாற்றுவோம்...
இணைந்திருப்போம்...
அண்ணன்
28-08-2007, 03:00 PM
எனக்கு இங்கே ஏதாவது பொறுப்பு கிடைக்குமா?
அக்னி
28-08-2007, 03:05 PM
எனக்கு இங்கே ஏதாவது பொறுப்பு கிடைக்குமா?
எனக்கும், உங்களுக்கும், புதிதாக வருபவருக்கும், இணைந்திருக்கும் பழையோருக்கும், அனைவருக்குமே,
முக்கிய பொறுப்புக்கள் உண்டு...
மன்றத்தை வளர்த்தல், பங்காற்றுதல், பயன்பெறுதல்...
பொறுப்போடு செயற்படுவோம்...
பெருமிதமாய் தலை நிமிர்வோம்...
நன்றி!
க.கமலக்கண்ணன்
28-08-2007, 03:35 PM
புதிய ஆட்சி மன்ற குழுவிற்கு
புத்துணர்ச்சியான வாழ்த்துக்கள்...
க.கமலக்கண்ணன்
28-08-2007, 03:39 PM
எனக்கு இங்கே ஏதாவது பொறுப்பு கிடைக்குமா?
எப்போது பொறுப்பு பதவி
என்பதை நீங்கள் கேட்டு வாங்க கூடாது நீங்கள்
எப்படி பணிபுரிகிறீர்கள் என்று பார்த்து பதவி உங்களை தேடி வரும்
எத்தனையோ விசயங்கள் நமது தளத்தில் உள்ளன அனைத்தையும் பார்த்து
எழுத்துகளின் அணிவரிசையுடன் பங்களிப்பை தொடருங்கள் பொறுப்புகள் அனைத்து உங்களை தேடி வரும்.
Narathar
29-08-2007, 11:21 AM
எனக்கு இங்கே ஏதாவது பொறுப்பு கிடைக்குமா?
நீங்கள் சிறந்த பங்காளர் என்ற பொறுப்பை சரிவர செய்யுங்கள்
மற்ற பொறூப்புக்கள் தானே தேடிவரும்
lolluvathiyar
29-08-2007, 11:40 AM
எனக்கு இங்கே ஏதாவது பொறுப்பு கிடைக்குமா?
ஓ இருக்கே உங்களுக்கு அருளபடும் பொருப்புகள் இதோ
1. மன்றத்தில் இருப்பதை படிக்க வேண்டும்
2. விமர்சனம் தரவேண்டும்
3. சொந்தமாக டைப் அடித்து பதிக்க வேண்டும்
4. நட்புரவை வளர்த்து கொள்ள வேண்டும்
இதை விட சிறந்த பொருப்பு யாருக்கும் வழங்கபட்டதில்லை.
சிறப்பாக செய்யுங்கள்
பெரியவர் ராசகுமாரன் பாணியில்
அறிஞர் அண்ணாவும் நம்மை வழி நடத்தட்டும்?
அடுத்து கலைஞர் எம் ஜி ஆரெல்லாம் யாரப்பா?
இப்பவே சொல்லிவிடுங்க.............. நாராயணா!!!!!!!
அதானே!!! இப்பொழுதே சொல்லிடுங்க.
Narathar
31-08-2007, 10:30 AM
அதானே!!! இப்பொழுதே சொல்லிடுங்க.
சொல்ல மாட்டேங்கிறாங்களே????
mathura
31-08-2007, 11:04 AM
இராசகுமாரன் அவர்களுக்கு பிரியா விடை கொடுத்து புது குழுவினை வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்
ஓவியா
31-08-2007, 05:19 PM
அனைவருக்கும் வணக்கம்.
தமிழ் மன்றத்தின் ஐந்தாவது பிறந்தநாளுக்கு எனது வாழ்த்துக்கள். :redface::redface::redface:
முன்னாள் தலைமை நிர்வாகி உயர்திரு இராஜகுமாரன் அவர்களுக்கு எனது பணிவான நன்றிகளும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். சார், உங்களின் நிர்வாகத்தில் என்றுமே மன்றம் செழிப்பாகதான் இருந்தது. நீங்கள் நிருவி, வளர்த்த இந்த அழகிய தமிழ் மன்றத்தினால்தான் இன்று நானும் ஒரு எழுத்தாளினி என்று மார்த்தட்டிக்கொள்கிறேன், என்னை போல் பல மக்களின் வாழ்வில் தமிழ் தாயை தெய்வமாக்கிய உங்களின் தமிழ் சேவைக்கு மிக்க நன்றி சார். அதற்க்காக என்றும் தலை வணங்குவேன்.
புதிய தலைவர் மற்றும் நிர்வாகி அறிஞர் சாருக்கு எனது வாழ்த்துகளும் நன்றியும். இந்த பதவிக்கு மிகவும் சரியான தெரிவு. மன்றம் மென்மேலும் சிறக்க சிறந்த தலைவர் இவர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. என் ஆதரவு என்றுமே உங்களுக்கும் உங்கள் நிர்வாகத்திற்க்கும் உள்ளது சார்.
(எற்கனவே பிரம்போடு உலாவரும் அறிஞருக்கு, இப்ப ஜெல் வச்சு மீசையை வேற முறுக்கி விட்டுட்டீங்களே மக்கா!! இது எங்க போய் முடியுமோ!! எனக்கு பிரம்படி ஃகன்பர்தான்லே :sport-smiley-018::sport-smiley-018:)
ஆலோசனை வழங்கி மன்றத்தை நல்ல முறையில் வழி நடத்தப்போகும் புது ஆலோசகர்கள் இராசகுமாரன், இளசு, மனோஜி, பாரதி, ஆரென், மன்மதன், தாமரை, பிரதீப் அனைவருக்கும் எனது அன்பும் வாழ்த்துகளும்.
நம் முன்னோடி மேற்பார்வையாளர்கள் பென்ஸ், ஆதவா இருவருக்கும் எனது பாராட்டுக்கள். மீண்டும் அதே பணிகளை செவ்வன செய்ய எனது வாழ்த்துக்கள்.
திறமையான புது மன்ற உதவியாளர்கள் என் பாச தம்பிகள் அமரன், அன்புரசிகன், அக்னி, ஓவியன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள், வாழ்த்துகள் மற்றும் ஆசிகள்.
தம்பிகளுக்கு சில அட்வாய்ஸ்:
தம்பிகளே உங்களின் சேவை என்றுமே நடுநிலையோடு இருக்கவேண்டும். நீங்கள் எவ்வளவு உயர்ந்த உயர் பதவில் இருந்தாலும், பல பழைய உருபினர்களின் மனதை காக்க வேண்டும், அவர்களின் பதிவில் தவறிருந்தால் அவர்களின் மனம் புண்படுமபடி எதுவும் செய்யாமல், அன்பாக சுட்டிக்காட்டுங்கள். அவர்கள்தான் இம்மன்றத்தை வளர்த்தவர்கள். அவர்கள் இல்லையேல் மன்றமுமில்லை,நானுமில்லை, நீங்களுமில்லை. மொத்தத்தில் நல்ல திறைமையான நிர்வாகத்தினை தமிழ் மன்றம் கொண்டுள்ளது என பெயர் வாங்கி கொடுக்கனும். சிறப்பாக செய்வையை செய்ய எனது வாழ்த்துக்கள்.
இந்த பொன்னான தருணத்தில் அடுத்த வரிசை மன்ற உதிவியாளர்களின் பெயர்களை இங்கு வழிமொழிந்து செல்கிறேன். நல்ல எழுத்து வலம், சொந்தபடைப்பு செம்புலிகள், விமர்சனம், கருத்துக்கள், கவிதை, பொது அறிவு, மற்றும் தமிழ் மன்றதின் மேல் அளவு கடந்த பாசத்தினை வாரி வளங்கும் நண்பர்கள், மிகவும் அருமையான எழுத்தாளர்களான சிவா.ஜி, விராடன் மற்றும் இனியவளை சிபாரிசு செய்கிறேன்.
நன்றி
வணக்கம்
அக்னி
31-08-2007, 11:16 PM
அசத்தலான பதிவு...
பின்னூட்டம் + பாராட்டு + நன்றி + வரவேற்பு + உற்சாகம் + எச்சரிக்கை + தெரிவு = ஓவியா அவர்களின் பதிவு
உண்மைதான் அக்கா...
பதவிகள் என்பது, மக்கள் வாழ்க்கையில் முக்கியமானதுதான்.
ஆனால், புத்தியை மறைக்கும் போதையாகவோ, புகழ்பெறும் மாயையாகவோ இருக்கக்கூடாது...
இதனை உணர்ந்து, பணியாற்றுவோம்.
பொறுப்பாளர் என்று மன்றத்தில் இருந்தாலும்,
என்றும் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில், இருந்து செயலாற்றுவோம்.
பாராட்டு, அறிவுரை எல்லாவற்றிற்கும் மேலாக அன்பான அக்கறைக்கு,
மிக்க நன்றி...
ஓவியா
01-09-2007, 11:56 AM
நன்றி அக்னியாரே!!!
ஆனாலும் ஒரு விசயம் விட்டு போச்சு, அதை தனி திரியாக* இங்கு போட்டுள்ளேன்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12082
ஜோய்ஸ்
01-09-2007, 02:51 PM
அப்பப்பா புல்லரிக்குதப்பா.என்னே இப்படி ஒரு பதிவு!
கலைவேந்தன்
07-09-2007, 05:56 PM
புதிய நிர்வாகத்துக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!
அறிஞர்
07-09-2007, 08:50 PM
புதிய நிர்வாகத்துக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!
தங்களின் பங்களிப்பும்... ஒத்துழைப்பும் தேவை அன்பரே...
slwaran
07-09-2007, 09:05 PM
புதிய நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள்.
vBulletin® v3.8.5, Copyright ©2000-2012, Jelsoft Enterprises Ltd.