PDA

View Full Version : சுதந்திர நாள்!



ஷீ-நிசி
15-08-2007, 04:11 AM
http://www.indiaflirt.com/_img/frontpage/if_india_flag.gif

இன்று ஒரு நாள்
கருப்பு நிற
காக்கைகளுக்கு
அனுமதியில்லை!

காந்தியின்,
சிலையருகே வருவதற்கு!

வெள்ளை நிற வேட்டிகள்....
அங்கே அதிகம்
கூடுமாதலால்!

இன்று, ஒரு நாள் மட்டும்
கருப்பு நிற காக்கைகளுக்கு
அனுமதியில்லை!

எனக்கென்னவோ!
சுதந்திர தினத்தன்றுதான்...
காந்தியின் சிரிப்பை,
காணமுடிவதில்லை!

ஆளுயர மாலைகள்..... அவரின்
வாயருகே வருவதால்....

எனக்கென்னவோ!
சுதந்திர தினத்தன்றுதான்
காந்தியின் சிரிப்பை
காணமுடிவதில்லை!

இன்னுமொரு,
சுதந்திரம் வேண்டும்.....

இம்முறை,
அடிமைத்தனத்திற்கெதிராய் அல்ல,
இலஞ்சத்தனத்திற்கெதிராய்.......

இம்முறை...
அந்த துரைகளிடமிருந்து அல்ல....
அந்தந்த துறைகளிடமிருந்து......

இன்னுமொரு,
சுதந்திரம் வேண்டும்.....

இவர்கள்.......
இலஞ்சத்திற்கு
பிள்ளையார் சுழி போட்டவர்கள்!

பிள்ளையா சுழி,
போடுவதற்கே
இலஞ்சம் வாங்கியவர்கள்!

அன்று!
இந்த அரசியல் முதலைகள்
தங்கள் வாயை,
அகல திறந்ததனால்தான்....

இன்று!
ஓரத்தில் இருக்கும்
மண்புழுக்கள் கூட
எங்களை அரிக்க
ஆரம்பித்துவிட்டன...

மனிதனையே,
விழுங்கிடுமளவிற்கு...
இந்த ஈக்கள்,
வீரியம் பெற்றுவிட்டன!

இனி,
இவர்களை திருத்துவதற்கு..
மெல்லிய கவிதைகளும்,
சூடான பட்டிமன்றங்களும்
உதவாது!

இந்த சுதந்திரம்...
மகாத்மா அடிகளால்,
பெற்றுத்தர முடியாது!

சட்டத்தின் அடிகளால்
மட்டுமே,
பெற்றுத்தர முடியும்!

காத்திருப்போம்!
காலம் மாறும்!!

மாற்றங்களெல்லாம்......
நம் கரங்களில்தான்.......

leomohan
15-08-2007, 04:14 AM
அழுத்தமான கவிதை. பாராட்டுக்கள். அனைவரின் ஏக்கங்களின் பிரதபலிப்பு.

பூமகள்
15-08-2007, 04:17 AM
நறுக்கென்றிருந்தது...! அருமை கவி படைத்தீர் சகோதரர் ஷீ-நிசி.! பாராட்டுக்கள் பல.
மாற்றங்கள் ஒன்றே
மாறாதது.....!
காலத்தை மாற்றும்
கட்டாயத்தில்
நாம்....!

ஷீ-நிசி
15-08-2007, 04:28 AM
நன்றி மோகன்ஜி! நன்றி பூமகள்!

சிவா.ஜி
15-08-2007, 04:53 AM
விளாசலும்,வீரியமும் சேர்ந்த நல்வரிகள். அதனூடே பொதிந்த ஆதங்கம்,இனி ஒரு நல்லது நடக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு. எல்லாம் கலந்த அழகு கவிதை.
இவர்கள்.......
இலஞ்சத்திற்கு
பிள்ளையார் சுழி போட்டவர்கள்!

பிள்ளையா சுழி,
போடுவதற்கே
இலஞ்சம் வாங்கியவர்கள்!

அசத்தலான வரிகள்.

வாழ்த்துக்கள் ஷீ−நிசி.

ஷீ-நிசி
15-08-2007, 05:00 AM
நன்றி சிவா

விகடன்
15-08-2007, 05:15 AM
சுகந்திரத்திற்காக உழைத்த பெரியார்களிற்கு மரியாதை செலுத்துவதில் ஆரம்பித்து முழுமையான சுகந்திரத்திற்கு என்னத்தை மேற்கொள்ளவேண்டும் என்பதனை உணர்ந்தது மட்டுமின்றி உணர்ச்சிபூர்வமாக கவிதைவடிவில் தந்திருக்கிறீர்கள்.

இந்த சுதந்திரதினமாகிய பொன்னாளில் உங்கள் ஏதிர்பார்ப்புக்களெல்லாம் கண்முன்னே செயல்வடிவமாக்கப்பட்டு நாடு முன்னேற்றப்பாதையில் செல்லவேண்டுமெனெ எல்லாரிற்கும் பொதுவான இறைவனை பிரார்த்திப்போமாக.


:sport-smiley-014: :sport-smiley-014: :sport-smiley-014: வந்தேமாதரம்:sport-smiley-014: :sport-smiley-014: :sport-smiley-014:

இதயம்
15-08-2007, 05:22 AM
சுதந்திரத்திருநாளில் மக்களுக்கு நல்ல செய்தி சொல்லும் அற்புதமான கவிதை ஷீ-நிசியுடையது. வெள்ளையரிடம் வாங்கிய சுதந்திரத்தை நம்மவர்களில் சிலரிடமிருந்து காப்பதுவே நமக்கு பெரும் கஷ்டமாக தெரிகிறது. வேறு சிலரோ, பெற்ற சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி, அதற்கு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெறாமலேயே இருந்திருக்கலாமோ என நினைக்க வைக்கின்றனர். ஒரு பகுதியினரோ சுயநலம், மூடநம்பிக்கை, ஒழுக்கமின்மையினால் மீண்டும் கற்காலத்திற்கு பாரதத்தை கொண்டு செல்ல முயல்கின்றனர். இது போன்ற கயமைகளும், வறுமை, வன்முறை போன்ற தீமைகளும் ஒழிந்து கல்வி, ஒழுக்கம், பொருளாதாரம் தேசத்தில் எப்போது உயர்கிறதோ அப்போது இந்தியா தலை நிமிர்ந்து நிற்கும். அந்நேரம் பாரதத்தாயின் மணிக்கொடி உலகநாடுகளுக்கு முன் பட்டொளி வீசி பறக்கும். அந்நிலை வர ஒவ்வொரு இந்திய குடிமகனும் அயராது பாடுபட வேண்டும் என்பது என் ஆசை.

என் மன உணர்வுகளை பிரதிபலிக்கும் விதத்தில் கவிதை வடித்த ஷீ-நிசிக்கு என் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்..!!

ஷீ-நிசி
15-08-2007, 05:27 AM
நன்றி விராடன்... நன்றி இதயம்,,,,,,



உணர்வுபூர்வமான விமர்சனம் அருமை.....

kampan
15-08-2007, 05:31 AM
இனிய சுகந்திரதின வாழ்த்துக்கள்.



சுகந்திரத்துக்காய் இரத்தத்தில் தோய்ந்துகொண்டிருக்கும் ஈழத்திலிருந்து

அமரன்
15-08-2007, 07:50 AM
ஷீ யின் அகமார் நயத்துடனான கவிதை.
புறக்கண்களால் பார்க்கும்போது காட்சி.
அககண்களால் பார்க்கும்போது கவிதை.
புறக்கண்களுக்கு இல்லாத வீரியம் அகக்கண்களில்
அனுவளவு துளையிலும் புகுந்துவிடும் விசைகொணடது.
ஷீ யின் பார்வை அப்படிப்பட்டத்து.

எப்போதும் பார்க்கும் காந்திச்சிலை.
வழக்கமாக கறுப்பு வெள்ளையில் இருக்கும்.
இன்று மட்டும் சிலைகறுத்திருக்க
காக்கைகள் வெள்ளையில் சிரிக்கிறன.
சுதந்திரம் பெற்றுக்கொடுத்தவர்
இன்று சிரிக்கவில்லையாம்..
ஆளுயர மாலைகளாலாம்.
அங்கே பல கருத்துக்களை பார்க்கலாம்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம்போன்றது இது.
இப்படி ஒவ்வொரு வரியிலும் ஷீ தெரிகிறார்.

பாராட்டுக்கள் ஷீ. ஒவ்வொரு இந்தியப்பிரசையின் மனசை பிசையும் வலிகளை உங்கள் வரிகளில் காண்கின்றேன்.

இலக்கியன்
15-08-2007, 08:13 AM
உள்ளத்து குமுறல்கள் கவிதையாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வரிகள் வாழ்த்துக்கள்

மன்மதன்
15-08-2007, 08:19 AM
இனிய கவிதை ஷீநிசி..

மீனாகுமார்
15-08-2007, 08:21 AM
ஷீ-நிசி அவர்களே.. உங்கள் கனவு விரைவே நனவாகட்டும்....

பதினெட்டாம் நூற்றாண்டு வரை முதன்மை பெற்ற இந்தியா மீண்டும் எழுச்சியுறும்....

கள்வர்களும் கயவர்களும் பதுங்க
இடம் தேடி தெறித்து ஓடட்டும்.
பழங்கால சாதி, சமய, இன வேற்றுமைகளை
ஆழக் குழி தோண்டிப்புதைத்திடுவோம்.
ஒற்றுமையே வேதம் என்று முழங்கிடுவோம்.
வறுமைகளைக் களைந்திடுவோம்.
கல்வி யாவர்க்கும் கிட்டுமாறு செய்திடுவோம்.
1950ல் நல்ல கல்விக்கு வித்திட்ட நாம் இனி...
மகிழ்ச்சியாய் வாழ வழிகாட்டும் சமுதாயத்திற்க்கு
விதையை இன்று விதைத்திடுவோம் அப்பயனை
நம் குழந்தைகளுக்கு கொடுத்திடுவோம்.

அகத்தில் சுத்தம் இருப்பின் புறத்தில்
சுத்தம் தானாய் வந்துவிடும்.
அகத்தில் தெய்வத்தை குடிசெய்ய வைப்போம்.

பதினெட்டாம் நூற்றாண்டு வரை முதன்மை பெற்ற இந்தியா மீண்டும் எழுச்சியுறும்....
இந்தியா மீண்டும் எழுச்சியுறும்....

அனைத்து உள்ளங்களுக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்...

ஷீ-நிசி
15-08-2007, 11:26 AM
விமர்சித்த, வாழ்த்தின அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி,,,,

ஸ்பெஷல் நன்றி அமரன்.. ஆளுயர மாலைகள் வரிகளினை அழகாய் புரிந்து விமர்சித்தமைக்கு....

வெண்தாமரை
15-08-2007, 11:52 AM
வாழத்துக்கள் நறுக்கென்று கவி படைத்ததற்கு..

ஷீ-நிசி
15-08-2007, 12:09 PM
நன்றி வெண்தாமரை

lolluvathiyar
15-08-2007, 12:12 PM
உங்கள் கவிதை உன்மைகளை சுமந்து வந்திருகிறது.
வருங்காலத்தில் லஞ்சம் மாறும் என்று நம்பிக்கையுடன் முடிகிறது.
அருமையான* க*விதை பிடியுங்க*ள் 100 இபண*ம்

சொல்வ*த*ற்க்கு க*ஷ்ட*மாக* தான் இருகிற*து வ*ருங்கால*த்தில் யார் நினைத்தாலும் ல*ஞ்ச*த்தை த*டுத்து நிறுத்த* முடியாது. அதிக*மாகும்

ஷீ-நிசி
15-08-2007, 02:29 PM
நன்றி வாத்தியாரே!

இனியவள்
15-08-2007, 06:04 PM
ஷீ கவிதை அருமை வாழ்த்துக்கள்

உணர்வுகளின் கொந்தளிப்பாய்
உருப்பெற்று அழகாய் கவிகளில்
வடிவம் பெற்று எங்களையும்
லயிக்க வைத்து விட்டது

இளசு
15-08-2007, 07:35 PM
எழுந்து நின்று '' வந்தனம்'' செலுத்தினேன்
பறக்கும் கொடிக்கும் − நம்பிக்கை அனல்
பறக்கும் ஷீயின் கவிதைக்கும்!

கவிதை வடிவம், அடுக்கு − மிக மிக நேர்த்தி!
கவிஞர் வாலியை நினைவுபடுத்தும் அழகு!

அமரன் ரசித்த வெள்ளிக்காக்கை, மறைந்த புன்னகை எனக்கும் பிடித்தது..


நடக்காது என நினைத்த பல நடந்திருக்கின்றன..

பல ஆண்டுகளுக்கு முன் இப்படி
கலிபோர்னியா − கலிங்கப்பட்டி தமிழர்கள்
இணைய மன்றத்தில் தமிழில் கருத்தாடுவார்கள்
என எதிர்பார்த்தோமா?


நல்லவை நடக்கும் என்ற நம்பிக்கையால் மட்டுமே
நாளைய வாழ்வு நடக்கும்!


வாழ்த்துகள் ஷீ!

ஷீ-நிசி
16-08-2007, 01:26 PM
நன்றி இனியவள்....

நன்றி இளசு அவர்களே! மிக அழகிய விமர்சனம்.....