PDA

View Full Version : ஹலோ...rambal
03-06-2003, 06:30 PM
ஹலோ...

கண்கள் மூட
காட்சியாய்
விரிகிறாய்...

அருகில் இருக்கும்
தலையணைக்குள்
குடி புகுகிறாய்..

என்னை இறுக்கித்
தழுவுகிறாய்..
முத்தமிடுகிறாய்...

ஏதேதோ
சொல்லி புலம்புகிறாய்..
புலம்ப வைக்கிறாய்..

ஒருநாள்...
கர்ப்பம் என்று
அறிவிக்கிறாய்..

குழந்தை பெறும்
கணத்திற்கு
காத்திருக்கிறேன்...

உன்னை போலவே
பிறந்த குழந்தைக்கு
பெயரும் வைத்தாகிவிட்டது..

இப்படியாக தொடர
முகத்தில் சூரியன்
சுள்ளென்று பட்டு எழுகிறேன்...

போர்வை உதற
கனவும் சிதறி
வீழ்கிறது எங்கோ?

இத்தனை அவஸ்தைகளையும்
சொல்ல தொலைபேசி
எடுக்கிறேன்..

ஒற்றையாய்
நீ உதிர்த்த
ஹலோ...

ஒரு நொடியில்
எனக்கு
மறு உயிர்ப்பு..

பேச வேண்டுமென்று
உதடு திறக்க முயற்சித்து
முடியாமல் போக..
நியாபகம் வந்தது
என் இறந்த தேதி...

suma
04-06-2003, 01:29 AM
ஆவியின் கனவா???

Emperor
04-06-2003, 07:22 AM
அழகிய கவிதை ராம்பால் அவர்களே, அருமையாக இருந்தது, வாழ்த்துக்கள்

karikaalan
04-06-2003, 08:24 AM
புரியவில்லை!

Narathar
04-06-2003, 10:23 AM
ராம்பால் கலக்கிட்டீங்க போங்க!!!
உண்மையில் அந்த கடைசி பன்ச் சூப்பர்!!!!

prabha_friend
04-06-2003, 02:31 PM
காதலுக்கு அழிவில்லை என்பதை அருமையாக நிறுபித்துவிட்டீர் நண்பரே . நான் படித்த கவிதைகளில் மிகவும் வித்தியாசமான கோணத்தில் எழுதப்பட்டது இதுவே . பாராட்டுக்கள் .

சகுனி
07-06-2003, 06:11 AM
அருமையான நடை இருந்தாலும் இது ஆவியின் கனவா என்று சற்று குழப்பமாக உள்ளது.

poo
07-06-2003, 04:58 PM
கனவுக்குள்ளே கனவு... ஆவியின் கனவு... நல்ல கற்பனை... சற்றே குழப்பமாகத்தான்..

இராசகுமாரன்
15-06-2003, 05:33 AM
வித்தியாசமான கவிதை..
காதல் கவிதையாய் தொடங்கி
கடைசியில் சஸ்பென்ஸ் கவிதையாகி..
வேறு உலகம் அழைத்துச் சென்று
விட்டீர்கள்..

ஆவிக்கு.. ஒரு ஹாலோ

rambal
07-04-2004, 04:27 PM
இது ஒரு வித்யாசமான முயற்சி..
இன்றும் எனது மனதில் நிற்கும் கவிதைகளில் இதற்கும் ஓர் இடம் உண்டு..

நன்றி.. பாராட்டிய அனைவருக்கும்..

இக்பால்
07-04-2004, 04:31 PM
பயமுறுத்துறீங்கபா.... :o

Nanban
07-04-2004, 06:44 PM
நிகழ்காலத்திலே ஒரு இறந்தகாலம்.....

நல்ல கவிதை.....

தொடருங்கள்..... உற்சாகத்துடன்.....

ஜோஸ்
07-04-2004, 09:35 PM
காதலுக்கு மரணமில்லை.. காதலருக்குத்தான் உண்டு என நிரூபித்த அழகிய கவிதை....வாழ்த்துக்கள் நண்பனே...
(அது சரி.. ஆவிகளுக்கும் கனவு வருமா?)

kavitha
08-04-2004, 05:10 AM
என்னால் இதை ஆவியின் கனவாக கற்பனை செய்ய முடியவில்லை!

காதலிக்கும் அனைவருக்குமே தன் துணை தன்னை அழைக்காதா என்ற ஏக்கம் இருக்கும்!
அவள் மறுத்துவிட்டாலும் கனவுலகில் சஞ்சரித்து கொண்டு!
அவளிடம் பேச முற்பட ஏற்கனவே அவள் மறுப்பு தெரிவித்து
தான் மரித்த நாள் நினைவிற்கு வர மீண்டும் தன் காதல் மௌனத்தில், உதடுகள் ஒட்டிக்கொண்டு !

இது ஒரு சுழற்சி நிலை...

ஜோஸ்
08-04-2004, 05:58 AM
நல்ல விளக்கம் கவிதா...

ezhilmal
08-04-2004, 06:54 AM
கவிதை நன்று

பூமகள்
30-05-2008, 09:26 AM
கவி அக்கா கவிதைக் கரு பிடித்துவிட்டார்கள்..!! பாராட்டுகள் அக்கா.

ராம்பால் அண்ணா கவிதையில் நான் கண்டதும் அக்கா வழிமொழிந்ததையே..!! :) அதாவது..

காதலித்து பிரிந்தாலும்..
பல நேரங்களில்..
இல்லை என்பதை
மனம் ஏற்காது
காணும் கனவு..

கனவு தாண்டி
எழுந்து பார்க்கையில்..
நிதர்சனம்..
வனூசி போடும்..

அழகிய சஸ்பென்ஸ்.. கலந்த தி(கி)ல் நிறைந்த காதல் கவிதை ராம்பால் அண்ணா..!!

சூப்பருங்கோவ்...!! :)

இராஜேஷ்
30-05-2008, 10:03 AM
சிறிது கஷ்டமாகத்தான் இருக்கு, கற்பனைக்கு என் பாராட்டுக்கள்