PDA

View Full Version : இயற்கையின் கைதி...



பூமகள்
14-08-2007, 05:46 PM
http://img29.picoodle.com/img/img29/9/8/14/poomagal/f_BackyardSerm_0d0779b.jpg

அதிகாலைச் சூரியன்
அகவும் மயிலின்
ஆட்டம்..!

கூவும் குயிலின்
குரலோவியம்...!

தூரத்தில் போகும்
தண்டவாள ரயிலின்
தாளம்...!

விண்ணில்
வெள்ளைப்புறாக்களின்
வயல்வெளிப் பயணம்..!

இவையனைத்தும் எனை
அசையாச் சிலையாக்க,

கட்டுண்டு போனேன்...
இயற்கைத்தாயின் வனப்பில்
கவி புனைய
மறந்தவளாய்.....!

இணைய நண்பன்
14-08-2007, 05:49 PM
இயற்கையின் அழகை அழகான கவிதை அழகான பட*த்தினூடே சொல்லிவிட்டீர்கள்.வாழ்த்துக்கள்

ஓவியன்
14-08-2007, 05:56 PM
காம்பவுண்டாலும்
கட்டடச் சுவர்களாலும்
வேலி போட்டு முடக்கிய
நகரத்து
நரக வாழ்க்கையில்,
உங்கள் கவிதையின்
கட்டுண்டு கிடக்கும்
இயற்கை அழகுகள்
கனவிலே மட்டுமே
சாத்தியமாகிறதே..........?

அழகு வரிகளால் நான் பிறந்த ஊருக்குக் கொண்டு சென்ற பூமகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

பூமகள்
14-08-2007, 06:03 PM
உங்களின் ஊக்கத்திற்கு நன்றிகள்..

உங்கள் நிலை கண்டு வருந்துகிறேன். ஓவியரே...
நீங்கள் கனவில் கண்டதை நான் நிஜத்தில் காண்கிறேன்..
அதனாலேயே இப்படைப்பு.......

நன்றிகளுடன்,

அறிஞர்
14-08-2007, 06:36 PM
வாழ்த்துக்கள் அன்பரே....

காதல் கவிதை பகுதியில் பதிந்ததின் காரணத்தை அறியலாமா...
இடம் மாற்றியுள்ளேன்.

பூமகள்
14-08-2007, 06:40 PM
மன்னிக்கவும்...

நான் எங்கு போடுவது என்று குழம்பி கடைசியாக இயற்கை மீது கொண்ட காதல் என்று தோன்றியதால் காதல் கவிதை பக்கத்தில் போட்டேன்..

மாற்றியமைத்ததற்கு நன்றிகள் சகோதரரே..

மீனாகுமார்
14-08-2007, 07:24 PM
கட்டுண்டு போனேன்...
இயற்கைத்தாயின் வனப்பில்
கவி புனைய
மறந்தவளாய்.....![/COLOR]

உங்கள் கவிதை அருமை.. இப்பூவுலகுக்கு திரும்பி வந்து மேலும் நிறைய கவிதைகளைத் தாருங்கள்....

இளசு
14-08-2007, 07:53 PM
அசைவும் இசையும் லயமும் கண்டு
அசையாச் சிலையாய் ஆன முரண்.
இயற்கைக்கு அடிமையாவது
இனிய சரண்!

பாராட்டுகள் பூமகள் அவர்களே!

அமரன்
14-08-2007, 09:50 PM
இயற்கையை
கட்டுப்படுத்த நினைபோரே
கட்டுப்பட்டுக் கிடப்பது
இயற்கை...

பொதுவாக் கலைகள் இலயிப்பை தருபவை. அதிலும் லயத்துடன் அமைந்த கலைகள் சொல்லவே வேண்டாம். இயற்கையில் கலைவண்ணம் கண்டு கல்லில் கண்ட கலைவண்ணமானதில் ஆச்சரியமேது. பாராட்டுக்கள் பூமகள்.

ஓவியன்
15-08-2007, 03:07 AM
அசைவும் இசையும் லயமும் கண்டு
அசையாச் சிலையாய் ஆன முரண்.
இயற்கைக்கு அடிமையாவது
இனிய சரண்!!

ஆகா அண்ணா அருமை.........

அக்னி
15-08-2007, 03:08 AM
காலை நேரத்தின்
மகிழ்வில்,
இதழ்விரியும் பூவாய்,
பூமகளின் கவிதை..,
அருமை...
பாராட்டுக்கள்...

பூமகள்
15-08-2007, 03:16 AM
அழகான கவிதைகளினூடே... வாழ்த்தியமைக்கு நன்றிகள் அனைத்து
மன்ற மூத்தோர்க்கும்...

என் கவிதைக்கு இன்னும் அழகு சேர்க்கின்றன தங்கள் அனைவரது கவிப் படைப்பும்......! நன்றிகள்.... அன்பர்களே...!

சிவா.ஜி
15-08-2007, 05:06 AM
தன்னை மறந்து எழுதிய வரிகளே வசீகரிக்கிறதே....நினைவோடு எழுதினால்....இயற்கை இடம் பெயர்ந்து...தானாக தன்னை இங்கே பதித்துக்கொள்ளும்.
இப்போதும் வரிகளில் காட்சியைக் கண்டு சொக்கித்தானே போகிறேனே....
வாழ்த்துக்கள் பூமகள்.

இலக்கியன்
15-08-2007, 08:18 AM
கட்டுண்டு போனேன்... உங்கள் கவிதையில்
காலை வனப்பு நன்றாக உள்ளது

இனியவள்
15-08-2007, 06:14 PM
இயற்கை மேல் கொண்ட
காதலால் இயல்பாய்
அழகிய வரிகொண்டு
உருப்பெற்ற அழகிய
கவிக்கு வாழ்த்துக்கள் பூமகள்

பூமகள்
21-08-2007, 03:45 PM
தன்னை மறந்து எழுதிய வரிகளே வசீகரிக்கிறதே....நினைவோடு எழுதினால்....இயற்கை இடம் பெயர்ந்து...தானாக தன்னை இங்கே பதித்துக்கொள்ளும்.
இப்போதும் வரிகளில் காட்சியைக் கண்டு சொக்கித்தானே போகிறேனே....
வாழ்த்துக்கள் பூமகள்.

நன்றிகள் அண்ணா... !

பூமகள்
21-08-2007, 03:46 PM
கட்டுண்டு போனேன்... உங்கள் கவிதையில்
காலை வனப்பு நன்றாக உள்ளது

நன்றி சகோதரர் இலக்கியன் அவர்களே.. காலை வனப்பில் கவி பாட வந்த என்னை வாழ்த்தியமைக்கு நன்றிகள்..!

பூமகள்
21-08-2007, 03:47 PM
இயற்கை மேல் கொண்ட
காதலால் இயல்பாய்
அழகிய வரிகொண்டு
உருப்பெற்ற அழகிய
கவிக்கு வாழ்த்துக்கள் பூமகள்


நன்றி அருமைச் சகோதரி இனியவள் அக்கா..! :)