PDA

View Full Version : சாப்பாட்டு குணம் − லொள்ளுவாத்தியார்



lolluvathiyar
14-08-2007, 03:04 PM
சாப்பாட்டு குணம் − லொள்ளுவாத்தியார்


மருத்துவம் என்ற பகுதியில் என்னடா நம்ம வாத்தி குணத்தை பற்றி எழுதுகிறார்னு நினைப்பீங்க. சாப்பாடுக்கும் மருத்துவத்துக்கும் சம்மந்த இருக்குனு அனைவரும் அறிந்ததே. மருத்துவம் நோய் வந்த பின் அதை சரி செய்வது. நல்ல சாப்பாடு சாப்பிட்டால் நோய் வராமலே தடுக்கலாம். இந்த வருமுன் காப்போம் என்ற சமாசாரமும் அனைவரும் அறிந்ததே.

இப்பொழுது நான் சொல்ல போவது என்னவென்றால் மனிதனின் குணம் அரோக்கியத்துக்கு மிக முக்கிய காரணியாக விளங்கும். உடல் ஆரோக்கியத்துக்கு முக்கிய காரணம் உடலில் உள்ள வெப்பம் குறைவாக இருக்க வேண்டும். அதிக ஆசை, கோபம், பொச்சசிவ்னஸ் உடலின் வெப்பத்தை அதிகரிக்கும்.

அமைதியாக இருப்பவர்கள் (அதாவது எமோசனை கட்டுபட்டில் வைத்துருபவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்).
அதுவே கோபகாரர்கள் (ஆதாவது எமோசனை கட்டுபடுத்த முடியாதவர்கள் ஆரோக்கியமாக இருக்க முடியாது)

சரி வாத்தியாரே குணத்தை மாற்றுவதற்க்கு கூடா வைத்தியம் சொல்லுவீரோ என்று கேட்பது புரிகிறது. ஆமாம் மானவர்களே அதை தான் சொல்லுகிறேன். ஆனால் மருந்து மாத்திரை அல்ல. குணத்துக்கும் உணவுக்கு அதிக சம்மந்தம் இருகிறது. (சிலர் முறைப்பது எனக்கு தெரிகிறது, சாப்பாட்டுக்கும் நல்ல குணங்களுக்கும் சம்மந்தம் இருக்கா?)

நீங்கள் நன்றாக கவனித்து பாருங்கள், குழந்தைகளுக்கு வேளா வேளைக்கு உணவு கொடுத்திடணும். இல்லைனா அழ ஆரம்பிச்சிடும். உணவு குறைவா போச்சுனா கூட ஒழுங்கா மோசம் போகாது. அப்புற*ம் பாருங்க சோர்ந்து போய் இருக்கும். இதே விசயத்தில் நாய்களிடமும் கவனிக்கலாம் சரியான சமயத்துல சரியான உணவு கொடுக்கலைனா நம்மை பார்த்து குரைக்கும். தரையை பிறண்ட ஆரம்பிச்சிடும். (உங்களால நாய பத்தி எக்ஸாம்பில் தராமல் இருக்க முடியாதா − லொல்லு வாத்திங்கரது சரியாதான் போச்சு) *சாப்பாடு ரொம்ப அதிக சாப்பிட்ட குழந்தைகளையும் கவனிச்சு பார்த்தீங்கன்ன ஓவர குறும்பு பண்ணும். வயிற்றில் இடைஞ்சல் இருந்தா வேற என்ன பண்ணும். ஜீரனம் ஆக கண்ட படி ஓடும். சொன்னபடி கேக்காது. நம்மை எதிர்க்கும்.


பெரியவங்க நாம நாய போல குரைக்க முடியுமா அல்லது குழந்தை போல அழ முடியுமா. ஆகையால் அந்த உண*ர்ச்சிகள உள்ளேயே பூட்டி வச்சுக்குவோம். விளைவு எமோசன். ஆரோக்கியம் கெடும். ஆகையால் சரியான நேரத்தில் சரியான அளவு சாப்பிடுபவர்களுக்கு தான் நல்ல குணம் இருக்கும்.

சாப்பாட்டு ஐட்டங்களை பொருத்து கூட குணம் மாறுபடும். (போச்சுடா ஆரம்பிச்சுட்டாண்டா அறிவுரையை, எத குறைக்க சொல்ல போராரோனு தெரியலியேனு நீங்கள் திட்டுவது என் காதில் விழுகிறது). நான் எதையும் குறைக்கவோ நிறுத்தவோ சொல்லவில்லை தமிழ் மன்ற நன்பர்களே.

உப்பு , காரம், மசாலா, என்னை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு கோபம் அதிகமா வரும். காரனம் இவை உடம்பில் சூட்டை கிழப்பும் பொருட்கள்.
மாமிசம், வறுத்த பொறித்த உண*வு பொருட்களுக்கு கோபத்தை தூண்டும் குணம் உண்டு. முடிந்தால் மட்டுமே இவற்றை குறைத்து கொள்ளுங்கள்.

ஆனால் உங்களுடைய உணவுகளில் நீங்கள் எதை குறைத்தாலும் குறைக்காவிட்டாலும் நிச்சயம் காய்கறிகள், பழங்களை அதிகமாக சேர்த்து கொள்ளுங்கள், அது உங்கள் கோப குணத்தை தூண்டாது.

வாத்தியார் சார் என்னால் எதையும் நிறுத்த முடியாது (சிகரெட், மதுபானம் உட்பட). ஆகையால் என்னை ஆளை விடுங்க என்று ஓட வேண்டாம்.

சூட்டை கிழப்ப கூடிய உணவுகளை முடிந்தால் மட்டுமே குறையுங்கள். ஆனால் அதிக காய்கறிகள், பழங்களை யும் சாப்பிடுங்கள் என்று தான் சொல்லுகிறேன். அவை உடல் சூட்டை தனிக்க கூடிய பொருட்கள். நிறைய தண்ணீர் அருந்துங்கள்.

முக்கியமான ஒன்று மாமிசம், மது, காரம், சிகரேட் போன்ற உடல்சூட்டை அதிகரிக்க கூடிய உணவுகளை நீங்கள் ஆரோக்கியத்துக்கு பயந்து விட கூடாது. ஏதோ ஒரு பயத்தில் அதை நிறுத்தி பிறகு அதை நினைத்து ஏங்குவது சாப்பிடுவதை விட தீங்கானது. ஏக்கம் அதிக சூட்டை கிழப்பும்.

ஏ.கா சிகரெட் பத்தி சொல்லரேன். அது கெடுதல்னு அடிக்கரவங்க அனைவருக்கும் தெரியும். சிலர் ஒரு நாள் நிறுத்திருவாங்க, ஆனா அதை நினைச்சே ஏங்கிட்டு இருப்பாங்க. அதை தான் நான் சொன்னேன், அப்படி ஏங்குவ*து சிகரெட்டை விட கெடுதல். அதுக்கு ஒரு தம் பத்தவச்சுகரது எவ்வளவோ தேவலை. முடிந்தால் உனர்ந்து விட வேண்டும்.

சரி சூட்டை கிழப்ப கூடிய உணவுகளை நம்மால் குறைக்க முடியவில்லை என்ன செய்வது என்று கேட்கிறீர்கள். உடல் நலனுக்கு ஏதாவது தீங்கு விளையுமா?என் அட்வைஸ் முடிந்தால் குறைக்க பாருங்க, முடியலைனா அத பத்தி அலட்டிக்காதீங்க. அலட்டிகரது அத விட கெடுதல்.

ஏ.கா சிகரெட் பிடிப்பதை நிறுத்த பாருங்க, முயற்ச்சி செய்யுங்க, முயற்ச்சி தோல்வி அடைந்து விட்டால்ம், அதை பத்தி பயபடாதீங்க. பயப்படரது சிகரெட் அடிப்பதை விட கெடுதல்.
சிகரெட் பழக்கத்த விடரதுக்கு சரியான தைரியம் வேண்டும். முடியலீனா அத அடிக்கர தைரியம் வேண்டும். ரெண்டு தைரியமும் இல்லாம இருக்காதீங்க. அது அதிக சிக்கலாகிடும்.

(இந்த பகுதியில் இது என் முதல் பதிப்பு, இது வரை மருத்துவ பகுதியில் எதுவுமே பதித்தில்லை என்ற ஆதங்கம் எனக்கு நீண்ட நாள் இருந்தது. ஏதோ என்னல முடிந்து ஒன்றை எழுதி போட்டுட்டேன். நான் எழுதியது உங்களுக்கு எந்தளவுக்கு பயன்படும்னு தெரியல)
தவறு இருந்தால் மன்னிக்கவும்.

அக்னி
14-08-2007, 03:11 PM
குறைக்க முடியாத விடயங்களை (உணவில்) என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றாலும்,
சேர்த்துக்கொள்ளக்கூடிய விடயங்களை நடைமுறைப்படுத்த இயலும்...
முயல்கின்றேன் வாத்தியாரே...

ஆனால், இது மருத்துவக் திரியில் வருமா அல்லது, பயனுள்ள கட்டுரைகள் திரியில் வருமா என்பது புரியவில்லை...

அதுசரி, உணவு, உணர்விலும் ஆதிக்கம் செலுத்துகின்றது என்பது, நிரூபிக்கப்பட்ட உண்மையா..?

lolluvathiyar
14-08-2007, 03:19 PM
அதுசரி, உணவு, உணர்விலும் ஆதிக்கம் செலுத்துகின்றது என்பது, நிரூபிக்கப்பட்ட உண்மையா..?

ஆம் அக்னி நான் மேலே நாய் குழந்தைகளை வைத்து விளக்கி இருகிறேனே.
உனர்ச்சி என்பது உடல் சூட்டின் அடிபடையில் அமைந்த விசயம்.
உடல் சூடு உனவின் கையில் இருகிறது.

அக்னி
14-08-2007, 03:22 PM
நான் என்னையே யோசித்துப் பார்த்தேன் வாத்தியாரே...
புலம் பெயர முன்னர்,
நான் உறைப்பு நன்றாக சாப்பிடுவேன்... மூக்கின்மேல் கோபமும் வருவதுண்டு...
புலம் பெயந்த பின்னர்,
உறைப்புக்கும் எனக்கும் எட்டாப் பொருத்தம்... பொறுமை நிரம்பவே உண்டு...
தவறி எங்காவது உறைப்பாய் உண்ண நேர்ந்தால், அன்று முழுவதும் நான் வழமை போன்று இருப்பதில்லைதான்...

ஏதோ தொடர்பு இருக்கின்றதுதான்...

karikaalan
15-08-2007, 05:17 AM
லொள்ளுவாத்தியார்ஜி

நாய்களைப் பற்றி எழுதினாலும் எழுதினீர்கள், தங்களது பதிவெங்கும், ஒரே "குரைப்பாக" இருக்கிறதே!! கொஞ்சம் குறைத்துக்கொள்ளலாமே!!

===கரிகாலன்

ஓவியன்
16-08-2007, 04:12 PM
நண்பரே!

உங்கள் கட்டுரையை அனுபவித்து எழுதி, எங்களையும் அனுபவிக்க வைத்தீர்கள்............

பல விடயங்கள் நகைச்சுவையாக இருந்தாலும், வாழ்க்கையில் கடைப் பிடிக்க வேண்டியவை.

தொடர்ந்து இவ்வாறான பதிவுகளைத் தாருங்கள் நண்பரே.........! :sport009:

aren
16-08-2007, 04:22 PM
நல்ல விஷயமாக இருக்கிறதே என்று படித்தால் நம்பளை அப்படியே குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது. விடு ஜூட்!!!!

saguni
01-09-2007, 07:06 PM
வித்தியாசமான பதிப்பு தந்து எங்களை அசத்திய லொள்ளுவாத்தியாருக்கு நன்றி

ஓவியா
01-09-2007, 08:20 PM
பல விசயங்கள் எனக்கு உபயோகமானவைகளாகவே இருக்கின்றன. மிக்க நன்றி. ஆனாலும் சில கருத்துக்கள் இடிக்கின்றனவே!!!

சரி, சார் சொன்னா சரியாதான் இருக்கும். ஆமாம் சார்.