PDA

View Full Version : கனவு...



rambal
03-06-2003, 07:07 PM
கனவு...

விலாசமற்ற விலாசத்திற்கு
எழுதாத கடிதத்தை
ஒட்டி அனுப்பி
கிடைக்காத கடிதத்தைப்
பிரித்துப் படிக்காத
கடிதத்திற்கு வார்த்தை இல்லா
பதில் எழுதி..
அனுதினம் நடக்கிறது
இந்த விளையாட்டு...

பேசாத வார்த்தைகளைப்
பேசிப் பழகி
சொல்லாத வார்த்தைகளுக்கு
அர்த்தம் கண்டு
களிப்புற்று
பதிலுக்கு பேசாது பதில் சொல்லி..
அனுபவித்து மகிழ்கிறேன்..

பாராமல் பார்வை வீசி
பறித்த பார்வைக்கு
பதில் பார்வை வீசி
பார்வை வர்த்தகம்
நடக்காமல் நடத்தி..
ரசிக்கிறேன்...

இப்படியாகத்தான்
சொல்லாத காதலை
சொல்லி
கிடைக்காத சம்மதம் கிடைத்து
வெற்றி நடை போடுகிறது
நம் காதல் நம் கனவுகளில்....

Nanban
03-06-2003, 07:13 PM
ஒன்றுகொன்று முரணான கருத்துகள் மோதி, இறுதியில் கனவில் வந்து ஒற்றுமை அடைகின்றன. இந்த வகை முயற்சிக்கு, விரோத அணி என்று பெயர்................

karikaalan
04-06-2003, 09:21 AM
கனவில் என்னவெல்லாம் சாத்தியம் பார்த்தீர்களா!! ராம்பால்ஜி, வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

Narathar
04-06-2003, 11:26 AM
என்ன அன்பரே
விசுகிட்ட ட்ரெயினிங் எடுத்தீங்களா?
இந்த கவிதை எழுத?
ஏகத்துக்கு கனவு கண்டிருப்பீங்க போலிருக்கு?
ஒரே கனவுக்கவிதை மயமா இருக்கு?

prabha_friend
04-06-2003, 03:18 PM
இதற்கு பெயர்தான் "மின்சாரக் கனவு"

poo
07-06-2003, 05:59 PM
கனவுகள் உண்மையிலேயே மனிதர்க்கு கிடைத்த மாபெரும் வரப்பிரசாதம்...(மருத்துவர்கள் கூற்றுப்படி அல்ல.. காதலர்கள் உரைத்த(ளறிய)படி..)

பாராட்டுக்கள் ராம்!!!