PDA

View Full Version : காதல் விஞ்ஞானம்



அமரன்
14-08-2007, 01:08 PM
வீழும் கனங்களால்
விலகுமாம் நீர்
விஞ்ஞானம் சொல்கிறது.

விழிகள் நீ
விழுந்த நாள் முதல்
ரோஜா
இதழ்களில் கசியுமீரம்
கொள்கல பன்னீரா
கொலைக்கள நீரா...!

அக்னி
14-08-2007, 01:13 PM
நீ விலகிய கணங்களிலல்லவா,
வீழ்கின்றது நீர்...
கண்ணீராய்...
விஞ்ஞானமும் பொய்த்திடுமோ,
காதலின் முன்...

வார்த்தைகளின் ஒலிப்புக்குறியில் கவிதை சிறக்கின்றது...
பாராட்டுக்கள் அமரன்!

சிவா.ஜி
14-08-2007, 01:17 PM
அபாரமான வார்த்தையாடல் அமரன்.
என்ன சொல்வதென்று தெரியவில்லை.....
எங்கேயோ...போயிட்டீங்க...வாழ்த்துக்கள்.

அமரன்
14-08-2007, 05:11 PM
நன்றி அக்னி.
பதில் கவிதை சிறப்பு
நன்றி சிவா.
எங்கேயும் போகவில்லை சிவா. உங்கள் உள்ளத்தில் இடம்பிடிக்க முயற்சிக்கின்றேன்.

ஓவியன்
14-08-2007, 05:23 PM
கொள்கல பன்னீரா
கொலைக்கள நீரா...!

என்று ஆராயும் அமர் வரிகள் அழகு!
ரோஜா இதழ்கள் இரட்டை அர்த்தம் தருவது கவிதைக்கு மேலும் அழகு!

சொல்வளத்தால் விளையாடும் காதல் விஞ்ஞானியின் ஆராய்ட்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்!.

அமரன்
15-08-2007, 03:10 PM
ஜொள்ளன் ஓவியனே நன்றி. (ஜோடிக்குதிரைகள் நாமென்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது)

இனியவள்
15-08-2007, 06:41 PM
அடடா என்ன ஒரு கவிதை

அபாரம் அமர் வாழ்த்துக்கள்

இலக்கியன்
15-08-2007, 07:02 PM
விழிகள் நீ
விழுந்த நாள் முதல்
ரோஜா
இதழ்களில் கசியுமீரம்
கொள்கல பன்னீரா
கொலைக்கள நீரா...!

இதழுக்கும் வண்டுக்கும்தான் தெரியும்
வாழ்த்துக்கள் அமரன்

அமரன்
09-09-2007, 04:24 PM
நன்றி இனியவள்
நன்றி இலக்கியன்.