PDA

View Full Version : கவிதை



அமரன்
14-08-2007, 01:01 PM
கண்மணியே
களைகளைக் களைந்தே
களைத்துவிட்ட கரங்களில்
கவின்ற
கவிப்பூக்கள் மட்டும்
கவினாக இருக்கிறதே
கரு நீ என்பதலா...!

சிவா.ஜி
14-08-2007, 01:07 PM
'க' வரிசையில்
கவின் கவி வடித்த*
கவிஞன் அமரனுக்கு
கவிப் பூக்களால்
கருகா மாலையை
கழுத்திலிடுகிறேன்!

அக்னி
14-08-2007, 02:01 PM
கரு நீ என்பதால்தான்...
இன்னமும்,
நான் உருவாக இருக்கின்றேன்...

பாராட்டுக்கள் அமரன்...
ஒவ்வொரு கவிகளிலும், புதுமையாக, புலமையாக...
சிறக்கின்றீர்கள்...

கவினாக என்பதன் அர்த்தம் புரியவில்லை...

சிவா.ஜி
14-08-2007, 02:10 PM
கரு நீ என்பதால்தான்...
இன்னமும்,
நான் உருவாக இருக்கின்றேன்...

பாராட்டுக்கள் அமரன்...
ஒவ்வொரு கவிகளிலும், புதுமையாக, புலமையாக...
சிறக்கின்றீர்கள்...

கவினாக என்பதன் அர்த்தம் புரியவில்லை...

அழகாக என்று பொருள் படும் அக்னி.

அக்னி
14-08-2007, 02:11 PM
அழகாக என்று பொருள் படும் அக்னி.

நன்றி சிவா.ஜி... புதுவிளக்கம் ஒன்றை அறிந்துகொண்டேன்...

ஷீ-நிசி
14-08-2007, 02:20 PM
களைகளைக் களைந்தே
களைத்துவிட்ட கரங்களில்

நல்ல முயற்சி அமரன்,.....


க*ளையிழக்கவில்லை உங்கள் கவிதை...
களை கட்டுகிறது.... அமரன்...

அமரன்
14-08-2007, 05:07 PM
நன்றி நண்பர்களே..மன்னிக்க வேண்டும் அக்னி உங்கள் கேள்விக்கு விடையளிக்கமுடியாது போய்விட்டது. பதில் அளித்த சிவாவுக்கு நன்றி.

ஓவியன்
15-08-2007, 02:49 AM
கரு!
கவி!
களம்!
எல்லாமே ஒன்றாக ஒரு கவிஞனுக்கு கிடைத்து விட்டாலே..........
வரும் வரிகளெல்லாம்......
கவின் தானே...................

அருமை அமர் − அசத்துறீங்க.......! :aktion033:

leomohan
15-08-2007, 04:37 AM
அழகான சிறிய கவிதை. சிறிய கவிதைகள் என்றால் எத்தனை வேண்டுமானாலும் படிக்கலாம். வாழ்த்துக்கள்.

அமரன்
15-08-2007, 07:37 AM
நன்றி தோழர்களே.!

இலக்கியன்
15-08-2007, 08:15 AM
அழகான சொல்நயத்துடன் க வில் கலக்கிவிட்டீர்கள்

அமரன்
15-08-2007, 03:12 PM
ஊட்டமிட்டமைக்கு நன்றி இலக்கியன்

இனியவள்
15-08-2007, 06:00 PM
அழகிய கவி படைத்த
அமருக்கு அழகிய வாழ்த்துக்கள்:icon_good:

இளசு
18-08-2007, 07:32 AM
களைவெட்டியும் பூச்சிக்கொல்லியும் வல்லினம்..
காக்கப்படும் கவின்மலர்கள் மெல்லினம்..

வாழ்க்கையின் இயல்முரண் இது..
வாழ்த்துகள் அமரனின் கவின்கவிக்கு!

aren
18-08-2007, 11:15 AM
கரு காதலியாக இருக்கும் பட்சத்தில் நாம் தளர்ந்தாலும் கவி தானாகவே அருவி மாதிரி கொட்டும் என்பது உங்கள் கவிதைகள் மூலம் வெளிப்படுகிறது. பாராட்டுக்கள்.

அமரன்
18-08-2007, 04:57 PM
நன்றி அண்ணா.
நன்றி ஆரென் அண்ணா.

lolluvathiyar
19-08-2007, 07:07 AM
அமரன் அனைத்து வரிகளும் க வில் ஆரம்பித்து நல்ல கரு கொண்டு அமைந்தது உங்கள் இந்த சின்ன கவிதை.

பூமகள்
22-09-2007, 04:42 AM
கவி அருமை.. கவினாய் இருந்தது. பாராட்டுக்கள்..!!:icon_b:
யார் அந்த கண்மணி அமர் அண்ணா??:icon_wink1::icon_rollout:

அமரன்
22-09-2007, 07:23 AM
கவி அருமை.. கவினாய் இருந்தது. பாராட்டுக்கள்..!!:icon_b:
யார் அந்த கண்மணி அமர் அண்ணா??:icon_wink1::icon_rollout:
என் கண்ணில் உள்ளதுதான்:)