PDA

View Full Version : பருவகாலங்கள்



அமரன்
14-08-2007, 09:56 AM
வாழ்க்கை வட்டத்தில்
அகவைகள் அதிகரிக்க
மானுட
பருவங்கள் மாறுகிறது
மீண்டும் வர மறுத்து...

இயற்கை வட்டத்தில்
ஆண்டுகள் தோறும்
கால
பருவங்கள் மாறுகிறது
மீண்டும் உயிர்த்து.

இரண்டையும் படைத்தவன்
ஒருவனாகும்போது
ஏனிந்த ஓரவஞ்சனை...!

இதனால்தானோ
சீரளிக்கும் இயற்கையை
சீரழிக்கின்றான்...
சிந்திக்க தெரிந்த
மானிடன்....!

அக்னி
14-08-2007, 10:02 AM
அகவை வரும்போதெல்லாம்,
தன் முடிவின் நெருக்கம்,
கிட்டுகின்றது என்பதாலோ,
பருவம் மாறி மீளும்
இயற்கையை,
சிதைத்தே மனிதன்,
இன்புறுகின்றானோ...

பருவங்களின் சுழற்சியும், மானிட வாழ்வின் சுழரா நிலையும்,
கவிதையில் அருமை...
தந்ததும் புதுமை...
வாழ்த்துக்கள்...

சிவா.ஜி
14-08-2007, 10:04 AM
ஆஹ்ஹா அருமையான சிந்தனை அமரன். நாம் மட்டும் இழந்ததை திரும்பப்பெற முடிவதில்லை..ஆனால் இந்த இயற்கை மட்டும் அந்த வரத்தை பெற்றிருக்கிறதேயென பொறாமைப் படுகிறானா..?...பொறாமைப்பட்டோ,சிதைத்தோ, எதுவும் ஆகப்போவதில்லை...மானிடருக்கு இழந்தது எல்லாம் இழந்ததே...அதனால் பெயரை மட்டுமாவது நிலைத்திருக்கச்செய்து போவதுதான் நல்லது.

வாழ்த்துக்கள் அமரன்.

ஷீ-நிசி
14-08-2007, 02:53 PM
சீரளிக்கும்.. சீரழிக்கும்... உள்ள வித்தியாசம் கலக்கல்....

மனிதனின் பருவம் திரும்புவதில்லை... இயற்கையின் பருவம் மட்டுமே திரும்புகிறதே....

மனிதன் இறக்கிறான்... மீண்டும் குழந்தையாய் பிறக்கிறான்..

பூக்கள் இறக்கின்றன்,, வேறொன்று பிறக்கிறது!

அதே பூக்களும், அதே இலைகளும் பிறப்பதில்லையே.. அது வேறொரு இலை.. வேறொரு பூ!

இயற்கையிடம் ஓரவஞ்சனையில்லையே அமரா....

இலைகளும் பூக்களும் நம் பார்வைக்கு ஒரேபோலதான் இருக்கிறது...

பூக்கள், மற்றும் இலைகளின் பார்வைக்கு மனிதர்களும் ஒரே போலதான் தெரிவார்கள்... வித்தியாசம் அதினதின் இனத்திற்கு தெளிவாகவே தெரிகிறது...

நல்ல கரு! சிந்திக்க வைத்தது.... தொடருங்கள் தோழரே!

அக்னி
14-08-2007, 03:03 PM
பூக்கள், மற்றும் இலைகளின் பார்வைக்கு மனிதர்களும் ஒரே போலதான் தெரிவார்கள்... வித்தியாசம் அதினதின் இனத்திற்கு தெளிவாகவே தெரிகிறது...

நல்ல கரு! சிந்திக்க வைத்தது.... தொடருங்கள் தோழரே!

விரிவான ஆய்வான விமர்சனம்...
ஷீ−நிசி...
தொடரவேண்டும் என விரும்புகின்றேன்...
நேரம் எங்களுக்காக உங்களிடம் கூடி வரவேண்டும்.
சிறந்த படைப்புக்களில், ஆய்வுகளில் நாங்கள் மகிழ வேண்டும்...
வாழ்த்துக்கள் ஷீ−நிசி...

aren
14-08-2007, 03:20 PM
மானிடன்
இயற்கையை
வஞ்சம்
தீர்க்கின்றான்
அந்த இயற்கைத்தான்
அவனுக்கு
இதுநாள் வரை
வாழ்வு தந்தது
என்பதை
மறந்து!!!

இதுதான்
மானிடப்
பிறவியின்
மகிமையோ!!!

என்னுடைய கருத்து முரணாக இருந்தாலும், உங்கள் கவிதையில் இருக்கும் வார்த்தை ஜாலங்கள் அருமை. கவிதை அழகாக வந்திருக்கிறது. பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்


அமரன்
14-08-2007, 05:01 PM
நன்றி அக்னி, சிவா,ஆரென் அண்ணா,ஷீ.
ஆரென் அண்ணா, உங்கள் கருத்து முரண்பட்டாலும் இனிமையான கவிதை.

ஷீ. சிறப்பான அலசல். அதிமேதாவி மனிதன் சிந்தித்து இயற்கையை சீரழிக்கிறானோ என்று நான் கிறுக்குத்தனாமாக யோசித்ததால் வந்தது இது.
தொடர்ந்து விமர்சியுங்கள் நண்பர்களே!

இனியவள்
15-08-2007, 06:18 PM
அமர் கவிதை சூப்பர்

அதிலும் சிந்திக்க தெரிந்த
மனிதன் சிந்திக்காமல் அழிக்கின்றான்
இயற்கையை வெகுவாக கவர்ந்தது என்னை

வாழ்த்துக்கள் அமர்

இலக்கியன்
15-08-2007, 06:22 PM
இதனால்தானோ
சீரளிக்கும் இயற்கையை
சீரழிக்கின்றான்...
சிந்திக்க தெரிந்த
மானிடன்....!

மானிடன் என மார்தட்டும் மாந்தருக்கு சாட்டையடி உங்கள் வரிகள்

இளசு
15-08-2007, 08:21 PM
மிக ஆழமான சிந்தனை! அழகான சொல்லமைப்பு!
அமரா.. அசத்திவிட்டாய்! அண்ணனின் அணைப்பு உனக்கு!

ஷீ... மலர் என்பதை மரமாய், வனமாய்ப் பாருங்கள்..
உதிர்ந்து, வளர்ந்து, அடர்ந்து சுழலும் அந்தப் பருவசுழற்சி
ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் மனித உடலுக்கு இல்லைதானே!

ஓவியா
15-08-2007, 11:35 PM
உயர்ந்த உள்நோக்கு கொண்ட அற்புதமான கவிதை, நன்றி அமர்.

அனைத்து 'சப்போர்ட்' கவிதைகளும் பின்னூட்டங்களும் அருமை. நன்றி நண்பர்களே.

அமரன்
16-08-2007, 08:10 AM
நன்றி அண்ணா.
நன்றி அக்கா.

தப்பாக எழுதிவிட்டேனோ என நினைத்தபோது உங்கள் இருவரின் பின்னூட்டங்களும் நிம்மதியைத் தருகிறது.