PDA

View Full Version : இளமைக்காலம்



இலக்கியன்
14-08-2007, 09:22 AM
http://img406.imageshack.us/img406/9217/roosjemo3.gif (http://imageshack.us)

கொத்துக் கொத்தாய்
பூத்த மலர்கள்
தலைகள் சாய்ந்து...

பசுமை இலைகள்
பழுத்து விழுந்து...

சுட்ட சூரியன்
வெப்பம் தனிந்து...

பகல்ப் பொழுதும்
இருள் கவிழ்ந்து...

வெண்திரைப்பனி
வானத்தை மூடி...

குளிரின் வலிமை
உடலைத்துளைக்க...

பிறந்தது குளிர்காலம்
போனது இனிய மோகம்...

மீண்டும் பிறக்கும்
அந்தக்காலம் -இனி...

மீண்டும் மீள்வோமா-நாம்
அந்த இளமைக்காலம்

அமரன்
14-08-2007, 10:06 AM
புத்தகங்கள் சுமையாக
நெஞ்சில் படுத்திருக்க..

அடித்த ஆணியெல்லாம்
மனதில் சுமையாக..

சுட்ட காயங்களில்
வட்டமிட்ட தழும்புகளுடன்..

காலச் சக்கரத்தை
பின்னோக்கிப் சுற்றுகிறார் இலக்கியன்..


புத்தம்புதிய பூக்களாக
புத்தகங்களைச் சுமந்தோம்..!

அடித்ததும் பதித்திடும்
பசுமையான மனதுடன் இருந்தோம்..!

சுட்டதும் வாடிடும்
இளந்தளிர்களாக இருந்தோம்...!


மீண்டும் வருமா
அந்த இளவேனில்காலம்...!


பாராட்டுக்கள் இலக்கியன்..ஏக்கம் நிறைந்த கவிதை. தொடருங்கள்

சிவா.ஜி
14-08-2007, 10:15 AM
"பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித்திரிந்த பறவைகளே"
பாட்டுப்பாட மனம் விழைகிறது.
இளமைக்காலம் என்ற இனிப்புக்காலம்,
இனி எல்லாம் நினைவில் மட்டும்தான்.

ஏங்க வைத்ததற்காக இலக்கியனின் மேல் செல்ல கோபம்.
வாழ்த்துக்கள் வாசனை வரிகளுக்காக்க.

அக்னி
14-08-2007, 10:16 AM
செம்மண் புழுதியிலும்,
மிதமான தென்றலிலும்,
ஆற்றின் ஓட்டத்திலும்,
மழையின் தூறலிலும்,
வெய்யிலின் கடுமையிலும்,
இரவின் கருமையிலும்
கலந்துபோன நாட்கள்..,
கரைந்துபோனதெங்கே..?
புண்ணிய பூமியல்லவா,
தாய்த்தேசம்...
உறவுகள் அங்கே...
உணர்வை அங்கே விட்டுவிட்ட,
உடலோடு,
நாங்கள் இங்கே...
தாய்த்தேசத்திற்கு,
மீண்டு(ம்) செல்ல,
இந்த ஜென்மம்,
வழிவிடுமா..???

புலம் பெயர்ந்து, இயந்திரமாகிவிட்ட ஒரு மனதின் குமுறல்,
நிரந்தரமல்ல என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம், நண்பா...
பாராட்டுக்கள் இலக்கியன்...

சிவா.ஜி
14-08-2007, 10:21 AM
பிரமாதம் அக்னி. எப்போதுமே நான் உங்கள் பின்னூட்டங்களை அவசியமாகப் பார்ப்பேன். மிகச்சிறந்த பின்னூட்டக்கவிதைகளைத் தந்து.பரவசப்படுத்திவிடுகிறீர்கள். வாழ்த்துக்கள் அக்னி.

அக்னி
14-08-2007, 10:23 AM
பிரமாதம் அக்னி. எப்போதுமே நான் உங்கள் பின்னூட்டங்களை அவசியமாகப் பார்ப்பேன். மிகச்சிறந்த பின்னூட்டக்கவிதைகளைத் தந்து.பரவசப்படுத்திவிடுகிறீர்கள். வாழ்த்துக்கள் அக்னி.

நன்றி... சிவா.ஜி
உங்கள், மற்றும் அனைவரின் ஊக்குவிப்பில், என்னை நான் சிறிதேனும்
விரிவாக்கிக்கொள்ளும் சுயநலம்தான்.
என்னையும் கருத்தில் கொண்டு எதிர்பார்க்கும் உள்ளங்களைத் தந்த தமிழ் மன்றத்திற்கு,
தலைவணங்குகின்றேன்...

ஷீ-நிசி
14-08-2007, 02:57 PM
பருவம் மாறும் காலங்கள்...

அதையென்னி உருவானதோ கவிதை! தொடருங்கள் தோழரே!

ஓவியன்
15-08-2007, 03:09 AM
இலக்கியன், அமரன், சிவா, அக்னி...............
என்னே ஒரு கூட்டணி..........
என்னையும் இளமையாக்கிய உங்கள் கவி வரிகளுக்கு நன்றிகள்!.

இலக்கியன்
15-08-2007, 08:32 AM
புத்தகங்கள் சுமையாக
நெஞ்சில் படுத்திருக்க..

அடித்த ஆணியெல்லாம்
மனதில் சுமையாக..

சுட்ட காயங்களில்
வட்டமிட்ட தழும்புகளுடன்..

காலச் சக்கரத்தை
பின்னோக்கிப் சுற்றுகிறார் இலக்கியன்..


புத்தம்புதிய பூக்களாக
புத்தகங்களைச் சுமந்தோம்..!

அடித்ததும் பதித்திடும்
பசுமையான மனதுடன் இருந்தோம்..!

சுட்டதும் வாடிடும்
இளந்தளிர்களாக இருந்தோம்...!


மீண்டும் வருமா
அந்த இளவேனில்காலம்...!


பாராட்டுக்கள் இலக்கியன்..ஏக்கம் நிறைந்த கவிதை. தொடருங்கள்

இலக்கியன், அமரன், சிவா, அக்னி............... அழகான பின்னுட்டக்கவிதைகளால் அசத்திவிட்டீர்கள் வாழ்த்துக்கள்
ஷீ-நிசி ஓவியன் உங்கள் கருத்துக்கு நன்றி

இனியவள்
15-08-2007, 06:10 PM
கவலைகளின் சுவடுகள் இன்றி
எம் சிரிப்பில் பிறர் சிரிப்பைப்
கண்டு சிரித்திட்ட காலம்...

புத்தகைப் பையை சுமையாய்
நினைத்து சுமந்து
பள்ளிசென்ற காலம் இன்று
கண்ணில் நிழலாடி சிந்திச்
செல்கின்றது ஒர் துளி கண்ணீரை...

நினைவுகளால் மட்டும் மீட்டப்
படும் இந்த நினைவுகள் நிஜமாய்
மீண்டும் எம் வாழ்வில் வருமா
என ஏங்குதே...

அன்று அடித்த அரட்டைகள்
பிடித்த சண்டைகள்
இன்று வானத்தைத் தொட
முயற்சிக்கும் பறவையாய்....

உங்கள் கவி எங்கள் கடந்து போன
பாதச்சுவடுகளை கண்முன்னே
நிழலாட வைத்துச் சென்று
விட்டது இலக்கியன் வாழ்த்துக்கள்

இலக்கியன்
15-08-2007, 06:17 PM
நினைவுகளால் மட்டும் மீட்டப்
படும் இந்த நினைவுகள் நிஜமாய்
மீண்டும் எம் வாழ்வில் வருமா
என ஏங்குதே...

அன்று அடித்த அரட்டைகள்
பிடித்த சண்டைகள்
இன்று வானத்தைத் தொட

தமிழ் மன்றத்தில் கவிதை குயில்கள் பாடுகின்றன*
கருத்துக்களைக்கவிதையாக தந்தீர் சகோதரியே வாழ்த்துக்கள்