PDA

View Full Version : கண்ணீர் காலங்கள்...



shangaran
14-08-2007, 09:06 AM
உன்னிடம் மனம் விட்டுப்பேச,
வம்பு பேசி அரட்டையடிக்க,
உன் தோள்சாய்ந்து ஆறுதல் தேட,
கவலை மறந்து
உன் கரம் பற்றி முத்தமிட,
ஆயிரம் விசயங்கள் உண்டு என்னிடம்...

ஏக்கத்தின் எதிரொளியாய் நானிருக்க,
நிராகரிப்பின் நெடுவுருவமாய் நீயிருக்க,
விரும்பி வந்தாலும் விலகியே இருக்கிறாய்...

இடம் மாறியதால் உன் இதயம் மாறியதோ?
கணப்பொழுது கோவத்தில்
நம் நட்பும் காலாவதியானதோ?

சோகங்களை என் சொந்தமாக்கிவிட்டு
சென்றதினால்,
என் சடலம் எரிந்து சாம்பலாகும் வரை,
என் புலம்பலும் ஓயப்போவதில்லை.

அதுவரை, நீ எழுதிவிட்டுப்போன,
என் விழியோரம் வழியும்,
கண்ணீர் கவிதைகளை யார் வாசிப்பது?

இலக்கியன்
14-08-2007, 09:27 AM
ஒருதலைக்காதல் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் தொடரட்டும்

shangaran
14-08-2007, 09:29 AM
வாழ்த்துக்களுக்கு நன்றி இலக்கியன்.

சிவா.ஜி
14-08-2007, 10:18 AM
அதுவரை, நீ எழுதிவிட்டுப்போன,
என் விழியோரம் வழியும்,
கண்ணீர் கவிதைகளை யார் வாசிப்பது?

மிக அழகான வரிகள். காதலால் கசிந்துருகி வழியும் கண்ணீர் துளிகளில் கவிதை படிக்க அவள் வருவாளா...?
அழகான காதல் கவிதைக்கு வாழ்த்துக்கள் சங்கரன்.

அக்னி
14-08-2007, 10:28 AM
விழியோரம் எழுதிய கவிதைகள்,
உன் இதழின் வாசிப்புக்கு ஏங்கியே,
கண்ணீராய் பிரவாகிக்கின்றது...
காதலித்து, சுவைத்துவிடு...
உவர்ப்பும், உன்னை உசுப்பும்...
என் காதலின் வனப்பும்,
உன்னை அசத்தும்...

பிரமாதம் சங்கரன்...
உணர்வின் துடிப்புகளில், மடியாது காதல்...
வெடித்தது சிதறவல்ல... வேர் துளிர்க்க...
என்றே நம்புவோம்...
பாராட்டுக்கள்...

shangaran
14-08-2007, 10:32 AM
நன்றி சிவா.

shangaran
14-08-2007, 10:34 AM
பதில் கவிதை மிக அருமை.
நன்றி அக்னி.

ஓவியன்
14-08-2007, 05:50 PM
நீ என்னோடு பகிர்வதற்கு
ஆயிரம் விடயங்கள்!
உன் இதயத்தைத் தவிர,
என்று......................

அழகான வரிகோர்த்து
காதலின் பிரிவை
எடுத்தியம்பிய கவிதைக்கு
என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.........!

shangaran
16-08-2007, 05:22 AM
வாசித்து விமர்சித்தற்கு நன்றி ஓவியன்.