PDA

View Full Version : இன்னுமொரு கொண்டாட்டம்



சிவா.ஜி
14-08-2007, 07:22 AM
இன்னுமொரு சுதந்திரதினக்
கொண்டாட்டம்!
கிடைக்கு உள்ளே
அடைபட்ட ஆடுகளாய்
இடையனின்
கழியின் கீழ்
கழியும் இன்னுமொரு கொண்டாட்டம்!

பட்டொளி வீசி பறக்குது
பாரத மணிக்கொடி
பாதுகாப்புக்கு
பத்தாயிரம் காவலர்கள்!

குண்டு துளைக்காத
கண்ணாடிக்குள்
இருந்துகொண்டு
அமைதியை வேண்டி
ஆற்றுகிறார் உரையை
நாட்டுத்தலைவர்!

விழா ஏற்பாடுகளையும்
பின்னுக்குத்தள்ளும்
பாதுகாப்பு ஏற்பாடுகள்!

கிடைத்தும் கிடைக்காத
சுதந்திரத்தை
கொண்டாடுவதா,வேண்டாமா...
திண்டாடி..தீர்மானித்து
தின்ற தித்திப்பு கசக்கிறது!

என்று கிடைக்கும்
நம் உண்மை சுதந்திரம்....
ஏக்கத்துடன்.....
"வந்தே மாதரம்".........

பூமகள்
14-08-2007, 07:27 AM
அருமை சிவா அன்பரே... அசத்தி விட்டீர்...
பாராட்டுக்கள்.
இன்றைய நிலையை அழகாக கவியாக்கினீர்.

சிவா.ஜி
14-08-2007, 07:35 AM
அருமை சிவா அன்பரே... அசத்தி விட்டீர்...
பாராட்டுக்கள்.
இன்றைய நிலையை அழகாக கவியாக்கினீர்.

நன்றி பூமகள். ஆனாலும் கலங்கும் கண்களை கட்டுப்படுத்த முடியவில்லை..நமது நிலையை எண்ணி.

அமரன்
14-08-2007, 07:41 AM
சிவா உங்கள் மன பாரத்தை லாவகமாக இறக்கிவைத்துள்ளீர்கள். கூரான வார்த்தைகளால் அபாரமாக ஆணி அறைந்திருகின்றீர்கள். எனக்கு வலிக்கிறது. வலிக்கு மருந்துபோடுவோர் உள்ளனரா என்பது கேள்விகுறி.

கண்ணாடிக்குள் இருப்பது நாட்டுத்தலைவர் மட்டும் அல்ல. சுதந்திரமும்தான். முந்திப்பிறந்த குழந்தையை குளிர்பெட்டியில் வைப்பதுதானே மருத்துவ வழக்கம். காரணங்கள் பல இருந்தாலும் கருவியாக நாமும் உள்ளோம் என்பது மறுக்கமுடியாத உண்மை.

எமக்குப் பாதுகாப்புக்காகத்தான் சுதந்திரம் வேண்டிப் போராடினார்கள். இன்று அச்சுதந்திரத்துக்கே பாதுகாப்பில்லை. இன்னமும் சில மக்கள் நம் நாட்டு அதிபதிகளாக தம்மைத்தாமே சித்தரித்தோரிடம் சுத்ந்திரம்வேண்டி தினம்தினம் போராடிக்கொண்டுதான் இருகின்றார்கள். போராட்டம்தான் வாழ்க்கை என்றாகிவிட்டது. பாராட்டுக்கள் சிவா.

சிவா.ஜி
14-08-2007, 07:52 AM
அபாரம் அமரன். வார்த்தைகளில் வசீகரித்துவிட்டீர்கள். மிக மிக உண்மை உங்கள் கருத்து. நம்மவரிடமே நமக்கான சுதத்திரத்துக்காக போராட வேண்டியுள்ள அவல நிலையில் இருப்பதை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. மிக்க நன்றி அமரன்.

அன்புரசிகன்
14-08-2007, 07:58 AM
என்று கிடைக்கும்
நம் உண்மை சுதந்திரம்....
ஏக்கத்துடன்.....
"வந்தே மாதரம்".........

பாதுகாப்பு இல்லாத விழா...
பேரூந்தில் முதல் மந்திரி
இவைதான் சுதந்திரத்தின் எதிரொலி...

சீக்கிரம் வந்தடைய வாழ்த்துக்கள்..

(ஆனாலும் ரொம்பக்கஷ்டமுங்க.. முன்பு நீங்கள் போரிட்டது வெள்ளைக்காரர்களுடன்... அவர்களுடன் நீங்கள் நியாயத்தை போராடி வெல்லலாம்... தற்சமயம் அது இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் முடியுமா??? சுதந்திர தினத்தில் எதிர் மறையாக கதைக்கிறேன் என தப்பாக எண்ணிவிடாதீர்கள்... )

சிவா.ஜி
14-08-2007, 08:06 AM
நன்றி அன்பு.தப்பாக நினைக்க எதுவுமே இல்லை. உண்மைகள் கசக்கத்தான் செய்யும் ஆனால் உண்மையில்லையென்று ஆகிவிடாது. ஒருவருக்கொருவர் சுதந்திரதின வாழ்த்துக்களை பறிமாறிக்கொள்ளும்போது அது உள்மனதிலிருந்து சந்தோஷமாக உணரும் காலத்துக்குக்குத்தான் காத்திருக்கிறோம்...நம்பிக்கையுடன்...

இலக்கியன்
14-08-2007, 08:48 AM
குண்டு துளைக்காத
கண்ணாடிக்குள்
இருந்துகொண்டு
அமைதியை வேண்டி
ஆற்றுகிறார் உரையை
நாட்டுத்தலைவர்!

இதுதான் சுகந்திரமா அழகாக உங்கள் உள்ளத்து சுமைகளை வரிகளாக்கினீர்

சிவா.ஜி
14-08-2007, 08:49 AM
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி இலக்கியன்.

இளசு
18-08-2007, 07:44 AM
தான் நம்புவதைச் சாதிக்க
எதையும் செய்யலாம் என எண்ணும் கூட்டம்
மனித இனம் இருக்கும்வரை இருக்கும்!

அரசன், அதிபர் − பெயர் மாற்றம் மட்டுமே!
உளவு, எதிரி, உள்நாட்டுச்சதி, மெய்க்காப்பாளர் − எல்லாம் அப்படியே!

வருந்தலாம்.. ஆனால் இவை வேண்டியவையே!

கற்பனை தேசத்தில், எதிர்காலத்தில்
இக்கவிதைக்கு கரு இல்லாமல் போகலாம்!



பாராட்டுகள் சிவாஜி..

சிவா.ஜி
18-08-2007, 08:23 AM
தான் நம்புவதைச் சாதிக்க
எதையும் செய்யலாம் என எண்ணும் கூட்டம்
மனித இனம் இருக்கும்வரை இருக்கும்!

அரசன், அதிபர் − பெயர் மாற்றம் மட்டுமே!
உளவு, எதிரி, உள்நாட்டுச்சதி, மெய்க்காப்பாளர் − எல்லாம் அப்படியே!

வருந்தலாம்.. ஆனால் இவை வேண்டியவையே!

கற்பனை தேசத்தில், எதிர்காலத்தில்
இக்கவிதைக்கு கரு இல்லாமல் போகலாம்!


இல்லாமல் போகவேண்டுமென்பதே எல்லோரின் விருப்பம். நல்லதை எதிர்பார்ப்போம்.
நன்றி இளசு.

lolluvathiyar
18-08-2007, 08:35 AM
அருமை சிவா,
உன்மையான சுந்ததிரம் இன்னும் கிடைக்கவில்லை, கிடைக்காது
மேற்கத்திய நாடுகளுக்கு உற்பத்தி செய்ய கிராமங்களை அழித்து கொன்டிருக்கும் அவலம் நடந்து கொண்டு இருகிறது.
அன்று இங்கு நம்மை ஆண்டார்கள் ஆங்கிலேயர்கள்
அவர்கள் போய் விட்டார்கள் தலைமையை மட்டும் மாற்றி விட்டு
நிலைமை இன்னும் அப்படியே இருகிறது.

விரைவில் ஜி எம் (GM Crops Genetically Modified)பயிர்கள் இந்தியாவுக்கும் ஊடுருவும். அப்புரம்
அவர்கள் நம்மை அங்கிருந்து ஆள்வார்கள் ஆயுதம் இல்லாமலே

இதயம்
18-08-2007, 08:46 AM
நியாயத்திற்கு கொடி பிடிக்க தடை சொல்லும் சவுதி போன்ற தேசம்..!

சுயநலத்திற்கும் கொடி பிடிக்க தடை சொல்லாத நம் சுதந்திர தேசம்..!

இரண்டும் ஒன்றா..?! சுதந்திரம் என்பது தன்னுடைய உடைமையாக நினைத்து பயன்படுத்தினால் விளைவு நன்மையே..! மாற்றானின் உடைமையாக நினைத்து சுயநலவாதிகள் பயன்படுத்துவதில் ஏற்படுவது பல குளறுபடிகள்..! இந்த சூழ்நிலையில் பாதுகாப்பு என்பது மிக, மிக அவசியமாகிறது. அதனால் ஏற்படும் கட்டுப்பாடு சுதந்திர பறிப்பு என்று எண்ணுவது கூடாது.. சுயநலவாதிகளுக்கான விலங்கு.!! வெயிலுக்கு பிடிக்கும் குடை நமக்கு பாரமல்ல, அது பாதுகாப்பு..! அதை நாம் தவிர்த்தல் என்பது நம்மை துன்பத்தில் மட்டுமே கொண்டு போய் விடும்.

முன் சொன்ன சிந்தனையில் முரண்பட்டாலும், வார்த்தை விளையாட்டில் வாய் பிளக்கிறேன்..! பாராட்டுக்கள்..!

சிவா.ஜி
18-08-2007, 08:51 AM
வாத்தியார் உங்களின் நிறைய பதிவுகளில் விவசாயத்தின் பால் உங்களுக்கு இருக்கும் காதலை வெகு உறுதியாக வெளிப்படுத்தி வருகிறீர்கள். அதைப் படிக்கும் போதெல்லாம் மனதுக்குள் பகீரென்கிறது. நம்மால் ஏதாவது செய்ய முடியுமா..? சீரியஸாக கேட்க்கிறேன். உங்களிடம் ஏதாவது திட்டமிருக்கிறதா...ஒத்துழைப்பு தேவையா..? நான் தயாராயிருக்கிறேன்..என்னால் இன்னும் சிலரையும் நம்முடன் இணைத்துக்கொள்ள முடியும்....ஏதாவது செய்ய முடியுமா...?

சிவா.ஜி
18-08-2007, 08:54 AM
நியாயத்திற்கு கொடி பிடிக்க தடை சவுதி போன்ற தேசம்..!

சுயநலத்திற்கும் கொடி பிடிக்க தடை சொல்லாத நம் சுதந்திர தேசம்..!

இரண்டும் ஒன்றா..?! சுதந்திரம் என்பது தன்னுடைய உடைமையாக நினைத்து பயன்படுத்தினால் விளைவு நன்மையே..! மாற்றானின் உடைமையாக நினைத்து சுயநலவாதிகள் பயன்படுத்துவதில் ஏற்படுவது பல குளறுபடிகள்..! இந்த சூழ்நிலையில் பாதுகாப்பு என்பது மிக, மிக அவசியமாகிறது. அதனால் ஏற்படும் கட்டுப்பாடு சுதந்திர பறிப்பு என்று எண்ணுவது கூடாது.. சுயநலவாதிகளுக்கான விலங்கு.!! வெயிலுக்கு பிடிக்கும் குடை நமக்கு பாரமல்ல, அது பாதுகாப்பு..! அதை நாம் தவிர்த்தல் என்பது நம்மை துன்பத்தில் மட்டுமே கொண்டு போய் விடும்.

முன் சொன்ன சிந்தனையில் முரண்பட்டாலும், வார்த்தை விளையாட்டில் வாய் பிளக்கிறேன்..! பாராட்டுக்கள்..!

இதயம் இப்போதுள்ள நிலையைத்தான் சொன்னேன். ஆனால் அதை தவறு என்று சொல்லவில்லை...இந்த நிலை மாறி சுதந்திரத்தை...சுதந்திரமாக கொண்டாடும் நிலை உருவானால் எவ்வளவு நன்றாக இருக்கும்...?

aren
18-08-2007, 11:24 AM
சுதந்திரம் கிடைத்துவிட்டது
இனிமேல் நாம்
என்ன வேண்டுமானாலும்
செய்யலாம்
சுதந்திரமாக செயல்படலாம்
என்று நினைத்துக்கொண்டிருந்த நாம்

இன்று சுதந்திர தின
ஏற்ப்பாடு பலத்த
பாதுகாப்புடன்
ஏதாவது அசம்பாவிதம்
நடக்காமல் தடுக்க

இதுவா சுதந்திரம்
இதற்கா நம்
முன்னோர்கள் பாடுபட்டார்கள்

யோசித்தால்
எல்லாமே வீணானது
பல உயிர்கள்
பல குடும்பங்கள்
பாழானது

எதற்கு வேண்டும் சுதந்திரம்
வந்தே மாதரம்!!!!!

aren
18-08-2007, 11:24 AM
பாராட்டுக்கள் சிவா. அருமையான கவிதை. தொடருங்கள்.

சிவா.ஜி
19-08-2007, 07:34 AM
நன்றி ஆரென்.நீங்கள், நான், மற்றும் அனைத்து இந்திய உள்ளங்களும் வேண்டுவது அப்படிப்பட்ட உண்மையான சுதந்திரத்தைத்தான். கிட்டுமென்ற நம்பிக்கையோடு நாட்களை நகர்த்துவோம்.

ஆதவா
19-08-2007, 07:50 AM
தான் நம்புவதைச் சாதிக்க
எதையும் செய்யலாம் என எண்ணும் கூட்டம்
மனித இனம் இருக்கும்வரை இருக்கும்!

அரசன், அதிபர் − பெயர் மாற்றம் மட்டுமே!
உளவு, எதிரி, உள்நாட்டுச்சதி, மெய்க்காப்பாளர் − எல்லாம் அப்படியே!

வருந்தலாம்.. ஆனால் இவை வேண்டியவையே!

கற்பனை தேசத்தில், எதிர்காலத்தில்
இக்கவிதைக்கு கரு இல்லாமல் போகலாம்!



பாராட்டுகள் சிவாஜி..
நிச்சயம் இருக்காது.. மேலும் கருக்கள் அதிகமாகும் என்பதே எனது கருத்து.. கற்பனை தேசம் என்பது மனதுக்குள் நான் அடைக்கும் நினைவுகள். அதற்குக்கூட சுதந்திரம் கிடையாது. சுதந்திரக் காற்றை எங்கேயும் சுவாசிக்க முடியாது. ஏதாவது ஒரு வகையில் அடிமைப்பட்டுத்தான் ஆகவேண்டும்..

கவிதை அருமை சிவாஜி. வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
19-08-2007, 07:57 AM
ஆமாம் ஆதவா நிதர்சனங்களைப் பார்க்கும்போது அப்படித்தான் தோணுகிறது. அதனால்தான்...அப்படி நடந்து விடாதா என்ற நப்பாசையுடனும்..சின்ன நம்பிக்கையுடனும் நாட்களை நகர்த்தவேண்டியுள்ளது.

ஷீ-நிசி
19-08-2007, 03:53 PM
அர்த்தமுள்ள கவிதை நண்பரே! தொடருங்கள்!

சிவா.ஜி
20-08-2007, 04:45 AM
மிக்க நன்றி ஷீ−நிசி.