PDA

View Full Version : சுடும் நிஜம்...!



பூமகள்
13-08-2007, 06:28 PM
http://img28.picoodle.com/img/img28/9/8/13/f_cryinggirlm_4cf458b.jpg
கற்பனையில்
களித்திருந்தேன்..!

நிஜத்தில் − ஒரு நாள்
நீ
எனை
சொல்லால்
சுட்டாய்...! − அன்றுதானடா
நிஜமாய் நினைத்தேன்...

தவறான இடத்தில்
தலையாட்டி விட்டேனோ??

விகடன்
13-08-2007, 06:31 PM
கவிதையும் அதற்கு தெரியப்பட்ட படமும் கருத்தாழத்துடன்.

இனியவள்
13-08-2007, 06:35 PM
சுடும் நிஜத்தை
நினைவு என்னும்
மருந்து கொண்டு
மாற்றுகின்றேன்..

நிழலாய் மாறிய*
நிழலும் சூரியன்
போல் சுட்டெரிக்கின்றதே...

பூமகள் கவிதை அருமை வாழ்த்துக்கள்:icon_clap:

அமரன்
13-08-2007, 06:40 PM
இரு பார்வையான கவிதை. காதல்துணை, வாழ்க்கைத்துணை என இரண்டு பார்வைகள். காதல் எனும்போது கட்டாயம் ஏதுமில்லை. கல்யாணம் எனும்போது கட்டாயங்களும் உண்டு. இரண்டிலும் இருப்பது கற்பனை. அது அனலாகி ஆவியாகி சுடும்போது ஏற்படும் வலி சொல்லிமாளாது. அவ்வலியை படத்திலும் கவிதையிலும் காண்கின்றேன். பாராட்டுக்கள் பூமகள்.

பூத்திருந்த விழிப்பூவில்
வீழ்ந்துவிட்ட விம்பம்
மருவென நினைத்தே
தலையாட்டி விட்டாள்.

துருவாகி உறுத்துகிறது
நிழல் நிஜமாகும்போது..

அக்னி
13-08-2007, 06:48 PM
கற்பனையில் உருவகித்த
நிகழ்வுகள்...
கற்பாறை வெடித்த
சிதைவுகளாய்...
வெடி வைத்தது நீயல்லவா..?
இன்னமும்,
நான் ஏன் முழுமையாய்... என்றே...
சிதறுகின்றேன்...

பாராட்டுக்கள் பூமகள்...
மற்றும் அமரன்... இனியவள்...

இளசு
13-08-2007, 07:14 PM
ஒருவர் ஒருநாள் சுட
அடுத்தவர் பொறுப்பதும்
அடுத்தநாள் நிலைமாறி இருப்பதும்..
எடுப்பதும் விட்டுக்கொடுப்பதுமான
சமநிலை வரும்வரை இந்த சங்கதி!
சமநிலை வராமல் போனால் அதோ கதி!


இரு மனங்கள் எதிர்பார்ப்புகளைக் கடந்து மெல்ல
இணைவது நாளெடுக்கும் நற்செயல்..
இடையில் இவ்வகை சீறல்கள், சினங்கள் எல்லாம்
இதயக்கச்சேரியின் தடங்கல்..

பாராட்டுகள் பூமகள் அவர்களுக்கு!

ஓவியன்
14-08-2007, 06:22 PM
தீயினால் சுட்டபுண் உள்ஆறும்: ஆறாதே நாவினால் சுட்ட வடு.

என்ற வள்ளுவத்திற்கு இணங்கி அதனைக் காதலுடன் இணைத்த கவி வரிகள் அருமை − பாராட்டுக்கள் பூமகள்!.

ஓவியன்
14-08-2007, 06:24 PM
ஆகா!

அண்ணா, அமர், அக்னி, இனியவள் என நான்கு கவிஞானிகளால் ஆராதிக்கப் பட்டதா இந்தக் கவிதை − அருமை!.

பூமகள்
14-08-2007, 06:32 PM
கவியோடு வந்து பாராட்டிய அத்துனை நெஞ்சங்களுக்கும் பூமகளின் பூப்போன்ற நன்றிகள்....!

சிவா.ஜி
15-08-2007, 05:16 AM
தீ சுட்டால் கருகாத
இந்தப் பூ
நீ சுட்டதால்
கருகி,விலகி விட்டதே காதலா....
இனியும் ஒரு பூவை
நாவால் சுடாதே
கருகிய நந்தவனங்கள்
நாட்டுக்கு நல்லதல்ல...

ஒற்றை சூடு தாங்காத மென் உள்ளமா பெண் உள்ளம்..?
நல்ல வரிகள் பூமகள்....வாழ்த்துக்கள்.

இலக்கியன்
15-08-2007, 08:36 AM
தவறான இடத்தில்
தலையாட்டி விட்டேனோ??
ம்ம்ம் காலங்கடந்த ஞானமோ
வாழ்த்துக்கள்

பூமகள்
15-08-2007, 01:30 PM
தீ சுட்டால் கருகாத
இந்தப் பூ
நீ சுட்டதால்
கருகி,விலகி விட்டதே காதலா....
இனியும் ஒரு பூவை
நாவால் சுடாதே
கருகிய நந்தவனங்கள்
நாட்டுக்கு நல்லதல்ல...

ஒற்றை சூடு தாங்காத மென் உள்ளமா பெண் உள்ளம்..?
நல்ல வரிகள் பூமகள்....வாழ்த்துக்கள்.

அருமையான கவி வரிகள்... நண்பர் சிவா அவர்களே....! பாராட்டுக்களுக்கு நன்றிகள்.

"ஒற்றைச் சூடு குறுங்கவியானால் பொறுக்கலாம்..
சூடு கொடுப்பதே தொடர்கவியான போது
பொறுமைக்கும்
பொறுமை இல்லாமல் போம்...."