PDA

View Full Version : இதயமேகம்!ஷீ-நிசி
13-08-2007, 03:21 PM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/Ithyamegam.jpgகாதலி: நீ ரொம்ப என்னை இம்சை பன்றேடா... உன்னை என்ன செய்யலாம்....

காதலன்: என்ன வேண்டுமானாலும் செய்! கொன்றுகூட போடு!

காதலன்: ஆமாம்! உன்னை கொல்லத்தான் போறேண்டா.....

காதலன்: கொன்றுவிடு கண்ணே! உனக்கு இல்லாததா... யாரேனும் என் இதயத்தை மட்டும் எடுத்துவிடுங்கள்! அவள் என்னை கொல்லப்போகிறாளாம்.....

காதலி: முட்டாள்...... அவளும் அல்லவா இறந்துவிடுவாள்! அவள் உன் இதயத்தில் மட்டுமா இருக்கின்றாள்?! உன் ஒவ்வோர் அனுவிலும் அல்லவா இருக்கிறாள்!

leomohan
13-08-2007, 03:27 PM
டச் பண்ணிட்டப்பா

ஷீ-நிசி
13-08-2007, 03:53 PM
நன்றி மோகன் ஜி

அமரன்
13-08-2007, 05:10 PM
கலக்கிட்டீங்க ஷீ.

என்னைக்கொன்று
ஊரார் பார்வையில்
பழிகாரி ஆகிவிடாதே..!
என்னையே நான்
சாகடிக்கிறேன்
உன்னைப் பத்திரப்படுத்தி..!

தொடர்ந்து கலக்குங்க.

இளசு
13-08-2007, 05:24 PM
சிவாஜி ஃபார்முலா ஆரெனின் ஏன் செய்யத் தவறிவிட்டாய் கவிதையில் படித்துவிட்டீர்களா ஷீ−நிசி?http://www.tamilmantram.com/vb/showthread.php?p=254539#post254539


இங்கே காதலன் இதயத்தில் (மட்டும்) அவளென
இல்லை ஓவ்வோர் அணுவிலும் நான் என அவள் சொல்ல..

''எப்படிப்பா'' என நிஜமாகவே சரணாகதி ஆகலாம் போல..


காதலித்தால் எல்லாமே அழகாகுமாம்!
ஷீ நிசி காதல் கவிதைகள் எல்லாமே அழகுதாம்!!

aren
13-08-2007, 05:27 PM
ஷீ−நிசி கவிதை அருமை. அழகாக இருக்கிறது.

வார்த்தைகள் அருமை. பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

அக்னி
13-08-2007, 05:32 PM
நீ வருவாய் என்று,
என் இதயத்தை,
கோவிலாய் தூய்மைப்படுத்தினேன்...
பாதணிகளோடு வந்து,
மிதித்தே வேதனைப்படுத்துகின்றாயே...

கவிதை, அது பொதிந்த இடம், நேர்த்தியாக...
பாராட்டுக்கள் ஷீ−நிசி...

இனியவள்
13-08-2007, 06:38 PM
அழகிய கவிதை ஷீ வாழ்த்துக்கள்

ஷீ-நிசி
14-08-2007, 08:36 AM
அழகிய விமர்சனங்கள்! நன்றி அனைவருக்கும்.....

சிவா.ஜி
14-08-2007, 11:15 AM
க்யூட்டான கவிதை ஷீ−நிசி. இளமை துள்ளுகிறது. காதோரம் தென்றல் லேசாக உரசும் சுகம், இப்படிப்பட்ட வரிகளை வாசிக்கும் போது.
வாழ்த்துக்கள் ஷீ.

ஷீ-நிசி
14-08-2007, 12:15 PM
நன்றி சிவா

rocky
14-08-2007, 12:33 PM
கவிதை மிகவும் அருமை நிசி அண்ணா.

விகடன்
17-08-2007, 07:52 AM
எப்படியெல்லாம் கதை விட்டு காதலை வளக்கிறாங்கப்பா...

காதல் என்னும் மரத்திற்கு பொய் என்னும் உரம் வேண்டுமாம் உண்மையா???

ஆதவா
17-08-2007, 09:51 AM
அருமை ஷீ−நிசி, இறந்த பிறகும் அவளை காப்பாற்ற நினைக்கும் உள்ளம் நிச்சயம் வேண்டும்.. வாழ்த்துக்கள்.

Narathar
17-08-2007, 10:20 AM
ஷீ−நீ−சீ அருமையான கவிதை
நெஞ்சை அள்ளிச்சென்றது

ஷீ-நிசி
17-08-2007, 10:34 AM
நன்றி ராக்கி, விராடன், ஆதவா மற்றும் நாரதரே

ஓவியன்
19-08-2007, 03:10 AM
இதயத்தில் இருந்து கொண்டு
இதயத்தின் சொந்தக் காரனையே
கொல்ல முயல்கிறாயே............?

ஓ............!
உரிமையுடன் கொல்ல
நினைத்தாயோ........................?
ஓகே, ஒகே!
கொன்று விடு
இன்றே, இப்போதே.........

வாழ்ந்தாலும்
உன்னாலேயே வாழ்கிறேன்.......!
செத்தாலும்
உன்னாலேயே சாகிறேன்..........!

கவிதை அழகோ அழகு − பாராட்டுக்கள் அன்பின் ஷீ!.

ஓவியன்
19-08-2007, 03:12 AM
எப்படியெல்லாம் கதை விட்டு காதலை வளக்கிறாங்கப்பா...
காதல் என்னும் மரத்திற்கு பொய் என்னும் உரம் வேண்டுமாம் உண்மையா???

கவிதைக்குப் பொய் அழகு என்று வைரமுத்து சொல்லி இருக்கிறாரே விராடா........!!!

சுகந்தப்ரீதன்
20-08-2007, 04:15 AM
கலக்கிட்டிங்க நிசி....வாழ்த்துக்கள்!

க.கமலக்கண்ணன்
20-08-2007, 04:18 PM
உன்னை காதலில் மட்டும் அல்ல

உண்மையான அன்பிலும் ஜெயிக்க முடியாது

உள்ளத்தின் பூரிப்பில்

உதித்திட்ட வடிவம் நீ... அசத்துங்கள்...

ஷீ-நிசி
20-08-2007, 04:30 PM
நன்றி ஓவியன்.. நன்றி சுகந்தப்ரீதன்... நன்றி கமல்...

மனோஜ்
20-08-2007, 05:11 PM
அழகான அன்பு ஆழம் மிகுந்த கவிதை ஷீ

ஷீ-நிசி
21-08-2007, 03:27 AM
நன்றி மனோஜ்