PDA

View Full Version : நிழலாடும் நிஜம்



இனியவள்
13-08-2007, 01:15 PM
மைகொண்டு புருவத்தைத்
தீட்டுவது போல் உன்
விழிகொண்டு எனது
இதயத்தைத் தீட்டுகின்றாய்...

பூக்களின் வாசத்தை நுகர்ந்த என் நாசி
இன்று உன் வியர்வையின் வாசத்தை
நுகர்கின்றது...

சாக்கடை நாற்றம் கூட ரோஜா
வாசத்தைத் தாங்கி வருகின்றது
உன்னோடு நான் இருக்கையில்...

மாலைக் காற்று காலைக் காற்றோடு
கைகோர்த்து வருகின்றது உனக்கு
துதிபாட...

தொலைக்காட்சியில் மூழ்கின்றேன்
காணும் பாடல் காட்சிகள் அனைத்திலும்
நீயும் நானும் ..

கனவில் சுற்றுகின்றோம் அகிலம் முழுதும்
நிழல் ஒர் நாளில் நிஜமாகும் என்ற
ஆசையில் கனவு கலைந்து உன்னை
என்னுள் புதைக்கின்றேன் நிஜத்தில்...

உன் குரல் கேட்டதில் இருந்து
என் குரல் கேட்க வில்லை எனக்கு
உன் உருவம் கண்டதில் இருந்து
வேறு உருவம் காட்டவில்லை
என் கண்கள் எனக்கு...

உன்னைத் தவிர மற்றவைகள்
அனைத்தும் குருடன் பார்வையில்
கலர்ப்படமாய் தோன்றுகிறது....

என் நிழலில் கூட உன் நிழல்
நிழலாடுகின்றது
என் நிஜத்தில் உன் நிஜம் நிந்திக்கின்றது

அக்னி
13-08-2007, 01:21 PM
என் நிழல் கூட,
உன்மேல் பாரமாய் அழுந்திடுமோ,
என்றால்,
பிரிவதாக அழுகின்றாய்...

என் நிஜம் கூட,
உன்மேல் பிரியமாய் இருக்கவந்தால்,
என்னைத்,
தள்ளி இருக்கின்றாய்...

ஓ... இதுதான் காதலில் ஊடலோ...???

பாராட்டுக்கள் இனியவள்...
பொங்கும் கவிதைகளின் அரசி நீ(ங்கள்) என்றால்,
சிந்தும் கவிதைகளின் ரசிகன் நான்...

இலக்கியன்
13-08-2007, 02:05 PM
கனவில் சுற்றுகின்றோம் அகிலம் முழுதும்
நிழல் ஒர் நாளில் நிஜமாகும் என்ற
ஆசையில் கனவு கலைந்து உன்னை
என்னுள் புதைக்கின்றேன் நிஜத்தில்...
மடை திறந்த வெள்ளமாக வரும் உங்கள் தமிழ் நளின்ம அழகு. வாழ்த்துக்கள் இனியவள்

இனியவள்
13-08-2007, 06:49 PM
அக்னியாரே துரித கதியில்
ஒரு கவிதை பின்னூட்டம்
எப்படி முடிகின்றதோ
உங்களால் மட்டும் வாழ்த்துக்கள்

நன்றி அக்னி வாழ்த்துக்கு

இனியவள்
13-08-2007, 06:50 PM
...
மடை திறந்த வெள்ளமாக வரும் உங்கள் தமிழ் நளின்ம அழகு. வாழ்த்துக்கள் இனியவள்

நன்றி இலக்கியன்

அக்னி
13-08-2007, 06:56 PM
அக்னியாரே துரித கதியில்
ஒரு கவிதை பின்னூட்டம்
எப்படி முடிகின்றதோ
உங்களால் மட்டும் வாழ்த்துக்கள்

நன்றி அக்னி வாழ்த்துக்கு

ஆனால், உங்கள், மற்றும் மன்றக்கவிகளின் வேகம் என்னைவிட அதிகமல்லவா...
எட்டிப் பிடிக்கும் சிறு முயற்சிதான்...

இளசு
13-08-2007, 07:08 PM
பார்க்கும் மரங்களெல்லாம் உந்தன்
பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா..

எங்கெங்கு காணினும் சக்தியடா...

இறையும் காதலும் ஒன்று என்றே
இனியவள் கவிதையால் கண்டுகொண்டேன்...!

இனியவள்
13-08-2007, 08:20 PM
நன்றி இளசு அண்ணா..

இறைவன் காதல்
கொண்டதால் ஆண்டியானான்
பழனியில் :D:D:D

இனியவள்
13-08-2007, 08:20 PM
ஆனால், உங்கள், மற்றும் மன்றக்கவிகளின் வேகம் என்னைவிட அதிகமல்லவா...
எட்டிப் பிடிக்கும் சிறு முயற்சிதான்...

ஆஹா என் வேகமே
உங்களைப் பார்த்து
உருவானது தான் அக்னியாரே

ஓவியன்
19-08-2007, 07:00 PM
பூ மணம்
இரசித்த நாசி
வியர்வையையும்
இரசிப்பது,
காலத்தின் கோலமோ
இல்லை காதலின்
ஜாலமோ...........?

பாராட்டுக்கள் இனியவள்!.

இனியவள்
19-08-2007, 07:02 PM
நன்றி ஓவியன்

அமரன்
19-08-2007, 07:55 PM
எல்லாம் சிவமயம் என்று சொல்லுவினம். இனியவளுக்கு எல்லாம் காதல் மயம். தொலைக்காட்சி கொண்டு வரும் கலைக்காட்சி பார்த்தாலும் கொலைக்காட்சி பார்த்தாலும் பாட்டுக்கேட்டாலும் பட்டுப்போன மரத்தை மரத்தை பார்த்தாலும் சாக்கடை பார்த்தாலும் அக்கட சூடினாலும் இக்கட சூடினாலுமென எங்கே பார்த்தாலும் காதல் மயம். தெனாலி போல் ஒரு காதலியோ.

பாராட்டுக்கள் இனியவள்.

ஓவியன்
19-08-2007, 08:11 PM
அமரன் கதைக்கேக்க யாரோ பின்னால நிண்டு டப்பிங் கொடுக்கினம்..........!
ஓ அது தெனாலியோ..........?
அய்யோ அப்ப கதை கெட்டுப் போச்சே?

சுகந்தப்ரீதன்
20-08-2007, 04:19 AM
உன்னைத் தவிர மற்றவைகள்
அனைத்தும் குருடன் பார்வையில்
கலர்ப்படமாய் தோன்றுகிறது....

மிகவும் ரசித்த ரசனை கலந்த கவிதை...வாழ்த்துக்கள் இனி!

வசீகரன்
22-08-2007, 06:10 AM
மைகொண்டு புருவத்தைத்
தீட்டுவது போல் உன்
விழிகொண்டு எனது
இதயத்தைத் தீட்டுகின்றாய்...

பூக்களின் வாசத்தை நுகர்ந்த என் நாசி
இன்று உன் வியர்வையின் வாசத்தை
நுகர்கின்றது...

சாக்கடை நாற்றம் கூட ரோஜா
வாசத்தைத் தாங்கி வருகின்றது
உன்னோடு நான் இருக்கையில்...

மாலைக் காற்று காலைக் காற்றோடு
கைகோர்த்து வருகின்றது உனக்கு
துதிபாட...

தொலைக்காட்சியில் மூழ்கின்றேன்
காணும் பாடல் காட்சிகள் அனைத்திலும்
நீயும் நானும் ..

கனவில் சுற்றுகின்றோம் அகிலம் முழுதும்
நிழல் ஒர் நாளில் நிஜமாகும் என்ற
ஆசையில் கனவு கலைந்து உன்னை
என்னுள் புதைக்கின்றேன் நிஜத்தில்...

உன் குரல் கேட்டதில் இருந்து
என் குரல் கேட்க வில்லை எனக்கு
உன் உருவம் கண்டதில் இருந்து
வேறு உருவம் காட்டவில்லை
என் கண்கள் எனக்கு...

உன்னைத் தவிர மற்றவைகள்
அனைத்தும் குருடன் பார்வையில்
கலர்ப்படமாய் தோன்றுகிறது....

என் நிழலில் கூட உன் நிழல்
நிழலாடுகின்றது
என் நிஜத்தில் உன் நிஜம் நிந்திக்கின்றது
என் நிழலில் கூட உன் நிழல்
நிழலாடுகின்றது
என் நிஜத்தில் உன் நிஜம் நிந்திக்கின்றது

என்ன ஒரு கற்பனை...! காதல் நேரங்கள்
எவ்வளவு மயக்கமானது
என்பதை விளக்கும்
அருமையான கவிதை....

பாராட்டுக்கள் நண்பரே....!

வசீகரன்