PDA

View Full Version : MBBS doctor படிப்பு தமிழில் வருகிறது - 10 ஆண்டு&



மீனாகுமார்
13-08-2007, 12:47 PM
செய்தி- தினமலர்.

மருத்துவ படிப்பு தமிழில் வருவதற்க்கு இன்னும் 10 ஆண்டுகளாகுமாம். இது ஒரு நல்ல முயற்சி. இவ்வாறு தமிழிலேயே படிக்க முடிந்தால் மாணவர்களுக்கு நன்றாக புரியும். எளிதில் புரியும். ஒவ்வொரு கடுமையான சொல்லுக்கும் பொருள் பெற அலைய வேண்டியதில்லை. இன்னும் பல நன்மைகள் வளரும்.


தமிழ் வழிக் கல்வி - அது தமிழுக்கு அச்சாணி !!!


----------------------------

தமிழில் எம்.பி.பி.எஸ்.,! ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுகிறது மருத்துவ சொற்களை மொழிபெயர்க்கும் பணி தீவிரம்

தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழகத்தில் மருத்துவ தமிழ் மேம்பாட்டுக் கழகம் என்ற அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது.

மருத்துவச் சொற்களுக்கு உரிய தமிழ் சொற்களை உருவாக்குவது, மருத்துவ படிப் பிற்கான பாடப் புத்தகங்களை தமிழில் மொழி பெயர்த்தல் ஆகிய பணிகளை இந்த அமைப்பு செய்து வருகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் தமிழில் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெற முடியும். தமிழ் ஆர்வலர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வரும் தமிழில் மருத்துவ படிப்பு என்ற கோரிக்கை குறித்து தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் மீர்முஸ்தபா உசேன் கூறியதாவது: மருத்துவ தமிழ் மேம்பாட்டுக் கழகத்தின் முதல் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இதில், முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன், டாக்டர் சுதா சேஷையன் உள்ளிட்ட 15 பேர் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் முதலில் ஒவ்வொரு மருத்துவச் சொல்லுக்கும் உரிய தமிழ் சொற்களை கண்டறிந்து, சொல் அகராதியை உருவாக்குவது என திட்டமிடப்பட்டது.

இரண்டாவது கூட்டம் தமிழ் இணைய பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. இதில் நான், உடற்கூறு இயல் டாக்டர் சுதா சேஷையன், குழந்தைகள் நல டாக்டர் சேரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டோம். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அடிப்படை மருத்துவத் துறைகளான உயிர் வேதியியல், உடல் இயங்கியல், உடற்கூறு இயல் ஆகிய பாடங்களுக்கான புத்தகங் களை தமிழில் மொழி பெயர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மூன்று பாடங்கள் தான் எம்.பி.பி. எஸ்., படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உரியவை. உடற்கூறு இயல் துறைக்கான பாடப் புத்தகம் சுதா சேஷையன் தலைமையிலான குழுவினரால் மொழி பெயர்க்கப்படும். மற்ற இரண்டு துறைகளுக்கான புத்தகங்களை மொழிபெயர்க்கும் குழுவிற்கான அறிஞர்களை தேடி வருகிறோம். இம்முயற்சிக்கு தமிழ் இணைய பல்கலைக் கழகம் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது. மருத்துவ தமிழை உருவாக்கும் திட்டத்திற்கு தமிழ் இணைய பல்கலைக் கழகம் 50 சதவீத நிதியுதவி வழங்குகிறது. மீதித் தொகைக்கு தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ் பல்கலைக் கழகம் ஆகியவற்றிலிருந்து உதவி கோரப்படும்.

மருத்துவத்தில் மொத்தம் 200க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. இத்துறைகள் அனைத்திற்கும் உரிய பாடப் புத்தகங்களை உருவாக்க வேண்டும். இதற்கு ஏழு ஆண்டுகள் ஆகும். அதன்பிறகு, இந்த புத்தகங்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரத்தை பெற வேண்டும். அதன்பிறகே தமிழில் மருத்துவம் படிக்க முடியும். முழு முயற்சியுடனும், முழு மனதுடனும் செயல்பட்டால், இன்னும் பத்து ஆண்டுகளில் மாணவர்கள் தமிழில் எம்.பி.பி.எஸ்., படிப்பை படிக்க முடியும்.

தற்போதுள்ள மருத்துவக் கல்வி பேராசிரியர்கள் மூலமாகவே தமிழ் மொழியில் மருத்துவப் படிப்பை கற்பிக்க முடியும். டாக்டர்கள் ஆங்கிலத்தில் மருத்துவம் படித்தாலும், தமிழில் தான் நோயாளிகளுடன் உரையாடி சிகிச்சை அளிக்கின்றனர். தற்போதுள்ள மருத்துவ பேராசிரியர் களுக்கு தமிழில் மருத்துவப் படிப் பை சொல்லித் தருவதற்கு தேவையான பயிற்சிகளை வழங்க வேண் டும். இங்கு உருவாக்கப்படும் தமிழ் மொழியிலான மருத்துவ பாடப் புத்தகங்களையும், தமிழ் மருத்துவச் சொற்களையும் உலகளவில் ஏற்றுக் கொள்ள செய்ய வேண்டும். இதற்கு தமிழில் மருத்துவ அறிவியல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த வேண்டும். அப்போது தான், மருத்துவத் தமிழ் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்படும். இவ்வாறு மீர்முஸ்தபா உசேன் கூறினார்.
------- நன்றி, தினமலர் ---------