PDA

View Full Version : உன்னுடன்



sadagopan
13-08-2007, 11:58 AM
இரவு நீ
தெருவில் நடக்கும்பொழுது
உன் கூடவே வரும் நிலவு
இப்பொழுதெல்லாம் வரவில்லைதானே
அவளிடம் சொல்லிவிட்டேன்
உன்னுடன் வாழ்க்கை முழுதும் வரும்
உறவு நான் மட்டுமேயென்று

நட்புடன்

சடகோபன்

leomohan
13-08-2007, 12:44 PM
நல்ல காதல் :-)

விகடன்
17-08-2007, 07:48 AM
நிலவுமா பின் தொடர்கிறது.

இளசு
17-08-2007, 08:54 PM
அமாவாசை அன்று ஆசையாய் அள்ளிவிட்டதை
அம்மணி நம்பினாள்(ல்), அடுத்த மூன்றாம் நாள்????



பாராட்டுகள் சடகோபன்...
தற்குறிப்பேற்ற அணிக் கற்பனைக்கு!

aren
18-08-2007, 12:46 AM
கவிதை நன்றாக் உள்ளது சடகோபன். காதலிகளை எப்படியெல்லாம் சொல்லி நம்பவைக்க வேண்டியிருக்கிறது. ஆனால் எப்படி சொன்னாலும் ஏற்றுக்கொள்பவர்கள்தான் காதலிகள்.

இளசு அவர்களின் பின்னூட்டக்கவிதை நல்ல டைமிங் டச்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஓவியன்
24-08-2007, 01:19 PM
ஆகா காதல் எப்படியெல்லாம் கவிதை எழுத வைக்கிறது கவிஞர்களை......

பாராட்டுக்கள் சடகோபன்.........!!! :nature-smiley-003:

தற்குறிப்பேற்ற அணிக் கற்பனையா இளசு அண்ணா, மிக்க நன்றிகள் புதிதாக ஒரு விடயத்தை கற்க வழி சமைத்தமைக்கு..........!!! :nature-smiley-003: