PDA

View Full Version : காலை காதலியே.....!



வசீகரன்
13-08-2007, 11:22 AM
மழை துளி மண்ணில் வந்து விழுந்த நேரம்
மன் மனத்தது.....!

தென்றல் தழுவி சென்ற போது உடல் குளிர்ந்து
உற்சாகம் பிறந்தது....!

அள்ளிசெருகி அழகாய் கோலமிட்டுக்கொண்டிருந்த நங்கயற்களை
பார்க்கையில் மனம் சீறகடித்தது.....!

தேநீர் கடையில் ஒலித்த முன்பே வா பாடலை
உதடுகள் முணுமுணுத்தது!

சாலையோரம் நடந்தபடி பள்ளி சென்ற சிறார்களை
பார்த்து கை அசைத்தது!

உற்சாகமாக இரு சக்கர வாகனத்தில் அந்த காலை
பொழுதை ரசித்தபடி வந்தேன்.!

பொசுக்கென போசுங்கி போனது அவ்வலவும்!
நீ இல்லாத அந்த பேருந்து நிலையத்தை கண்டபோது!

leomohan
13-08-2007, 11:55 AM
பொசுக்கென போசுங்கி போனது அவ்வலவும்!
நீ இல்லாத அந்த பேருந்து நிலையத்தை கண்டபோது!



அதனால தான் சீக்கிரம் பைக் வாங்கி, காதலியை பின்னால் வைச்சிகிட்டு போகனும்னு சொல்றது. ;-) ரசித்தேன் வசீகரன். எங்க நீண்ட நாட்களாக காணோம் நீங்கள்.

பிச்சி
13-08-2007, 01:17 PM
ரொம்ப அருமையா இருக்கு வசீகரன். தலைபபுக்கு நடுவில * போட்டுருக்கீங்கலே ஏதாவது காரனமா?

பிச்சி
13-08-2007, 01:17 PM
அதனால தான் சீக்கிரம் பைக் வாங்கி, காதலியை பின்னால் வைச்சிகிட்டு போகனும்னு சொல்றது. ;-) ரசித்தேன் வசீகரன். எங்க நீண்ட நாட்களாக காணோம் நீங்கள்.

ரொம்ப சூப்பர்.. ரசிக்க வைக்கிறது..

இனியவள்
13-08-2007, 04:07 PM
நிறைய நாட்களுக்கு பிறகு
வந்த உங்களுடைய கவிதை
ஜொலிக்கின்றது வசி வாழ்த்துக்கள்

ஓவியா
13-08-2007, 11:11 PM
அடடா போட வைத்த கவிதை.

என்ன இருந்தும், எத்த*னை பிறந்தும், அவன்/ள் இல்லாத உலகம் வெறுப்பாகதான் இருக்கின்றது.

இந்த வேதனையை அனுபவித்த யுகங்கள் மிகவும் கசப்பானவைதான்.

அருமையான சிந்தனை, கவிதையின் முடிவை மிகவும் ரசித்தேன். நன்றி.

ஓவியன்
14-08-2007, 03:06 AM
அழகான கவிதை!

ஆமா மோகன்!
பைக் வாங்குவது ஒண்ணுமே பெரிய பிரச்சினையில்லை...................
பிரச்சினையே....................!
ஹீ!.ஹீ!
அது தானே..........! :wub:

விகடன்
14-08-2007, 04:11 AM
பல கலர் கலர் கனவுகளிலினால் இடையில் அகப்பட்டதை எல்லாம் இரசித்துவந்த மனம் திடீரென்று அனைத்தையும் மறந்ததுபோல் ...... ஒரு கவிதை.

பாராட்டுக்கள்

அமரன்
14-08-2007, 07:05 AM
மழைமேகம் பூச்சொரிய
கூதல்காற்று இசைக்க
மயில்கள் கோலம்போட
தேனீரையும் கோலத்தையும் கட்டளகர்கள் பருக
காளை இவனுக்கு மட்டும் கசக்கிறதாம்
காலைபொழுது
காதலியை காணாததால்.

வசீகரிக்கவைக்கும் வரிகள். பாராட்டுக்கள் வசீகரன்.

வசீகரன்
14-08-2007, 07:59 AM
மழைமேகம் பூச்சொரிய
கூதல்காற்று இசைக்க
மயில்கள் கோலம்போட
தேனீரையும் கோலத்தையும் கட்டளகர்கள் பருக
காளை இவனுக்கு மட்டும் கசக்கிறதாம்
காலைபொழுது
காதலியை காணாததால்.

வசீகரிக்கவைக்கும் வரிகள். பாராட்டுக்கள் வசீகரன்.
அமரரே.... இவ்வளவு அழகாக அந்த கவிதையை வடித்திருக்க முடியுமா...?உங்களது இலக்கண நடை கண்டு வியக்கின்றேன்....! நானும் முயர்ச்சிக்கிறேன்....!

வசீகரன்
14-08-2007, 08:18 AM
லியோமோகன்,பிச்சி,இனியவள்,ஓவியா,ஓவியன்,விராடன், கவிதை காதலர்களே....! தங்களது பின் ஊட்டங்களலுக்கு மிக்க நன்றி...
தங்களை போன்று அழகாக எழுத முயற்சிக்கிறேன்..... உங்கள் ஆதரவு ,ஊக்கம் தொடர்ந்து தேவை நண்பர்களே....!

என்றும் த*மிழுட*ன்
வசீகரன்

இலக்கியன்
14-08-2007, 09:13 AM
அவள் அழகு வதனம் காணது வேம்பியதா உன் முகம்
கவிதை அழகு