PDA

View Full Version : சிரிப்புகள் இலவசம்



sadagopan
13-08-2007, 10:30 AM
எப்பாடு பட்டாவது டாக்டராகவோ அல்லது பைலட்டவோ ஆகணும். அதுதான் என் லட்சியம்.

எப்படியானாலும் ஜனங்களை மேலே கொண்டு் போகணும்னு முடிவோடதான் இருக்கே!

*****

கோடிக்கோடியா சம்பாதிக்க வழின்னு ஒரு புத்தகம் எழுதினீங்களே, அது என்னாச்சு?

அது என்னைத்தெருக்கோடிலே கொண்டு நிறுத்திடிச்சு.

*****

நான் அந்தக்காலத்தில எட்டு மைல் தூரம் நடந்தே போய் பள்ளிக்கூடத்திலே படிச்சேனாக்கும்!

அப்ப படிப்புக்கும் உங்களுக்கும் ரொம்ப தூரம்ன்னு சொல்லுங்க.

*****

நீதான் நல்லாப் படிப்பியே உனக்கு ஏன் டிவிலே வேலை கிடைக்கல்லே?

'ழ"வுக்குப் பதிலாக "ள" ன்னு படிச்சாத்தான் வேலை கொடுப்பாங்களாம்.

*****

"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற கொள்கையோட ஒரு கட்சி ஆரம்பிச்சீங்களே இப்பொ எப்படி இருக்கு?

அதில் ஒரே தலைவர் ஒரே உறுப்பினர்னு ஆயிடுச்சு.

*****

சும்மா லவ் பண்ணா பாஸ்மார்க்
சின்சியரா லவ் பண்ணா டாஸ்மார்க்

---------

போகிக்கும் பொங்கலுக்கும் ஒருநாள் தான் டிஃபரன்ஸ்.
ஆனா பொங்கலுக்கும் போகிக்கும் ஒரு வருஷம் டிஃபரன்ஸ்
என்ன உலகமடா இது!!!???

---------

என்னதான் டீ.வி. விடிய விடிய ஓடினாலும்
அதனால ஒரு இஞ்ச் கூட நகர முடியாது.
இதுதானய்யா வாழ்க்கை!!!

---------

என்னதான் திருவள்ளுவர் 1330 குறள் சொன்னாலும் அவரால்
ஒரு குரல்ல தான் பேசமுடியும்.

---------

டி.நகர்ல டீ வாங்கலாம். ஆனா,
விருதுநகர்ல விருது வாங்க முடியுமோ?

------−−−
"என்ன இது! டி.வியில சீரியலைப் பார்த்துப் பெண்கள்தானே அழுவாங்க- நீங்க இப்படி அழறீங்களே?".

"அட, நீங்க ஒன்னு! இது என்னோட கல்யாண சி.டி.".

−−−−−−−−−−−
"ஏலக்கடைகாரர் வீடுதானே இது! நீங்க மூணு பேரும் யாரு?".

"நான் முதல் தாரம், இவர் இரண்டாம் தாரம், அவர் மூன்றாம் தாரம்...!".

****

"காதலியோட, ஹனிமூன் போனியே, திருப்தியா வந்தியா?".

'திருப்பதியா வந்தேன்!".

****

"என் பையன், ஃபர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸ் பண்ணிட்டான்!".

"அப்படியா! அப்புறம் என்ன பண்ணப் போறான்?".

"செகண்ட் க்ளாஸ் போகப் போறான்!".

அன்புரசிகன்
13-08-2007, 10:34 AM
சூப்பர் ஜோக்குகள்.... அதிலும் திருமண சீடீ.... உங்க அனுபவமில்லையே!!!,,, :D :D :D

mania
13-08-2007, 10:36 AM
அருமை சடகோபன்.....தொடருங்கள்...
அன்புடன்
மணியா

அக்னி
13-08-2007, 10:36 AM
கடைசி ஜோக் சூப்பர்...
சில முன்னமேயே கேள்விப்பட்டிருந்தாலும், பல எனக்குப் புதிதே...
உங்கள் இலவச சிரிப்புச் சேவையும் தொடரட்டும்...

விகடன்
13-08-2007, 10:39 AM
கடியுடன் ஜோக்குகள் கலந்தே பதித்திருக்கிறீர்கள் சடகோபன்.

வாசித்தேன். மனம்விட்டுச் சிரித்தேன்.

பாராட்டுக்கள்

மலர்
13-08-2007, 11:02 AM
முதலும் கடைசியும் அருமை....
வாழ்த்துக்கள்...இன்னும் இதுபோல நிறைய ஜோக்குகள் கொடுங்கள்..

leomohan
13-08-2007, 11:17 AM
எப்பாடு பட்டாவது டாக்டராகவோ அல்லது பைலட்டவோ ஆகணும். அதுதான் என் லட்சியம்.

எப்படியானாலும் ஜனங்களை மேலே கொண்டு் போகணும்னு முடிவோடதான் இருக்கே!

".
பார்த்து பா, மன்றத்துல நல்ல டாக்டரெல்லாம் இருக்காங்க. அடி வாங்க போகறீங்க.

sadagopan
13-08-2007, 12:04 PM
நல்ல டாக்டர்கள் மன்னிக்கவும்


மன்னிப்புடன்
சடகோபன்

sadagopan
13-08-2007, 12:06 PM
சூப்பர் ஜோக்குகள்.... அதிலும் திருமண சீடீ.... உங்க அனுபவமில்லையே!!!,,, :D :D :D


நான் பிரம்மசாரி திரு அன்புரசிகன்

நட்புடன்

சடகோபன்

sadagopan
17-09-2007, 07:35 AM
யானையை இங்கிலீஷ்ல எலிபண்ட்டுனு சொல்லலாம்.
ஆனா, எலியை யானைபண்ட்டுனு சொல்ல முடியுமா?

இப்படிக்கு இங்கிலீஷ் டெவலெப்மெண்ட் அஸோசியேஷன்,

*****

ஆசிரியர் : உலகத்திலேயே மிகச் சிறந்த தன்னம்பிக்கையாளர் யார்?

மாணவன் : எங்க பக்கத்து வீட்டு 95 வயசு பாட்டிதான் சார்.

ஆசிரியர் : எப்படிச் சொல்ற?

மாணவன் : அது நேத்து ஒரு செல்போன் வாங்கி அதுல லைஃப் டைம் கார்டு போட்டுத் தன் பேரன்கிட்டப் பேசுதுன்னா பாருங்களேன்!

*****

தயாரிப்பாளர் : படத்தோட பேரைக்கேட்டதுமே இளைஞர்கள்லாம் அடிச்சுப் பிடிச்சு ஓடி வரணும். நல்ல தலைப்பா ஒண்ணு சொல்லுங்க.

இயக்குனர் : வாக்கின் இண்டர்வியூ.

*****

இரண்டு மாணவர்கள் தீவிர விவாதத்தில் இருந்தனர். அவர்களை நெருங்கிய ஆசிரியர் என்ன செய்கிறீர்கள் எனக் கேட்க, அவர்கள் கீழே கிடந்தது என நூறு ரூபாயைக் காட்டிவிட்டு, 'யார் மிகப்பெரும் பொய்யைச் சொல்கிறார்களோ அவர்களுக்கு இந்த நூறு ரூபாயைக் கொடுப்பதாக இருக்கிறோம்' எனக் கூறினர். கோபமடைந்த ஆசிரியர், இந்த வயதிலேயே பொய்யா... நான் உங்கள் வயதில் இருக்கும்போது பொய் என்றால் என்னவென்றே தெரியாது. அது தெரியுமா உங்களூக்கு?

மாணவர்கள் இருவரும் ஆசிரியரிடம் அந்த நூறு ரூபாயைக் கொடுத்து விட்டு அமைதியாகச் சென்றனர்.

*****

மொபைல்ல சிம் போடலன்னா... இன்சர்ட் சிம்முனு மெசேஜ் வரும்.
ஆனா, பேட்டரி போடலன்னா... இன்சர்ட் பேட்டரினு வருமா?

- இப்படிக்கு செல்லில் பேட்டரி போடாமலே சீன் காட்டுவோர் சங்கம்.

*******
நட்புடன்

சடகோபன்

lolluvathiyar
17-09-2007, 09:38 AM
சும்மா அசத்தரீங்க. இன்னும் போட்டு தாக்குங்க சடகோபன்


சும்மா லவ் பண்ணா பாஸ்மார்க்
சின்சியரா லவ் பண்ணா டாஸ்மார்க்


அனுபவிச்சு எழுதிட்டாரயா

அமரன்
17-09-2007, 09:42 AM
சிரிப்பு மட்டுமல்ல வலியும் இலவசமிங்கே...!
மருந்துக்கு ஓடித்திரிகிறோம் அங்குமிங்கே...!
நன்றி...தொடருங்கள் வெடிகளை...!

மன்மதன்
18-09-2007, 10:16 PM
அனைத்துமே கலக்கல்ஸ் மாமே.. போட்டுத்தாக்குங்க..

என்னவன் விஜய்
18-09-2007, 10:51 PM
நல்ல நகைச்சுவை. நீங்கள் அவற்றின் மூலத்தையும் தரலாமே
சந்தர்ப்பத்துக்கு நன்றி

aren
18-09-2007, 11:49 PM
அனைத்து நகைச்சுவைகளும் கலக்கல்ரகம், பாராட்டுக்கள்.

arun
23-09-2007, 06:00 PM
அருமை அருமை தொடருங்கள்

பூமகள்
23-09-2007, 06:22 PM
சகோதரர் சடகோபரின் சர வெடி கடிகளால் திணறிப்பொயிருக்கிறது மன்றம்...!!:icon_b:
அருமை...சூப்பர். வாழ்த்துகள் சகோதரரே..!!
நிறைய எதிர்பார்க்கிறோம். இன்னும் கொடுங்கள்.:icon_rollout:
வாக்கின் இண்டர்வூ வைத்து சொன்ன நகைச்சுவை... அருமை.. மிகவும் ரசித்தேன்.:cool:
மொத்தத்தில் எல்லா கடியும் நகைப்போடு வலி தந்தன நன்றாய்..!!
பாராட்டுக்கள்...!!:lachen001:

அறிஞர்
26-09-2007, 02:15 PM
அசத்துறீங்க... வாய் விட்டு சிரிக்க... நல்ல சிரிப்புக்கள்..

இனியவள்
26-09-2007, 02:20 PM
அறை போட்டு சிரிக்கலாம் என்று
ஒரு யோசனை சடகோபன்
கணனிக்கு முன் இருந்து சிரிக்கிறதைப்
பார்த்து பயித்தியம் என்று நினைச்சு ஓரு மாதிரிப்
பாக்கினம் வீட்டிலை ஹீ ஹீ

அனைத்து நகைச்சுவையும் அருமை வாழ்த்துக்கள் தோழரே

அமரு வலிக்கு மருந்து கிடைச்சுட்டா :D

ஜெயாஸ்தா
26-09-2007, 02:29 PM
அனைத்து சிரிப்புகளும் அருமை. அதிலும் பாட்டி-தன்னம்பிக்கை சிரிப்பு நன்று.

மலர்
26-09-2007, 02:31 PM
ஆமா அடுத்த பதிவை எப்போ போட்டாங்கன்னே தெரியலை...
கலக்கல் சடகோபன்....
வாக்கின் இண்டர்வூ, வாத்தியாரு நகைச்சுவைக்கு நான் சத்தமா சிரிச்சிட்டேன்


செல்லில் பேட்டரி போடாமலே சீன் காட்டுவோர் சங்கம்.

என்னத்த சொல்ல இதுக்குன்னே ஒரு கும்பல் அலையுது...

மனோஜ்
26-09-2007, 02:37 PM
அனைத்தும் அருமை சடகோபன்

sadagopan
28-09-2007, 08:31 AM
என்னதான் எம்.பி.பி.எஸ். படிச்சு பெரிய டாக்டரா இருந்தாலும் கம்ப்யூட்டர்ல இருக்கற வைரசுக்கு டேப்லட்ஸ் கொடுக்கமுடியுமோ?

முடியாதுல்ல...இதுதான் உலகம்ங்கிறது.

இப்படிக்கு, வாடகைக்கு ரூம் போட்டு யோசிப்போர் சங்கம்
***

டாக்டர்: இந்தாங்க, டானிக், தினம் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க.
அவன்: ஸ்பூன் ரொம்ப நீளமா இருக்குமே டாக்டர், எப்படி முழுங்கறது?

***

ஏன் கால்குலேட்டருடன் அந்தப் பெண் பின்னாலே சுத்தறே?

கணக்கு பண்ணிக்கிட்டு இருக்கேன்

***

அம்மா அடிச்சா வலிக்கும்
ப்ரெண்ட்ஸ் அடிச்சா வலிக்கும்
போலிஸ் அடிச்சா வலிக்கும்
லவ்வர் அடிச்சாக்கூட வலிக்கும்
ஆனா
சரக்கு அடிச்சா வலிக்குமா?

- இப்படிக்கு, மல்லாக்கப்படுத்து மோட்டுவளையைப் பார்த்து யோசிப்போர் சங்கம்.


****

நண்பன் 1 : (போனில்) மச்சான்..ரொம்ப அர்ஜெண்ட் மேட்டர்டா. நாங்க இங்க சீட்டு விளையாடிட்டு இருக்கோம். ஜோக்கர் கார்டு மட்டும் மிஸ்ஸாகுது. நீ உடனே உன் போட்டோவை யார்கிட்டேயாவது கொடுத்து விட்டா யூஸ் பண்ணிக்குவோம். என்ன சொல்ற?
நண்பன் 2 : ??!!

****

நட்புடன்

சடகோபன்

மலர்
28-09-2007, 08:37 AM
எப்படி சடகோபன் இப்படி.....
சும்மா கலக்குறீங்க......:D:D:D:D

இப்படி ஜோக்ஸ் தாரதுக்கு..மல்லாக்கப்படுத்து மோட்டுவளையை பாத்து யோசிப்பீங்களோ......:confused:

sadagopan
29-09-2007, 07:52 AM
போலீஸ்: என்ன கார் தாறுமாறா ரோடுல இங்கயும் அங்கயுமா ஓடுது...

கோபி : இப்பத்தான் சார் கத்துக்கறேன்...

போலீஸ் : சொல்லி கொடுக்க பக்கத்துல ஆள் இல்லாமலேயா?

கோபி: இல்ல சார் கரஸ்பாண்டன்ட் கோர்ஸ்ல கத்துக்கறேன்...
***********
ஒருவர் தேர்வு எழுதச் சென்றார்.

கேள்விகள் அனைத்தும் அ அல்லது ஆ என்று இருந்தது. அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டிப் போட்டு பூ வந்தால் அ என்றும், தலை வந்தால் ஆ என்றும் பதிலளித்தார்.

தேர்வு முடியும் நேரத்தில் மிகுந்த சோகமாக இருந்தார் அவர். அவரிடம் ஆசிரியர் கேட்டதற்கு, விடைகளை மீண்டும் சரிபார்க்கலாம் என்று நினைத்தால் அந்த நாணயத்தைக் காணவில்லை என்றார்.
************
பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர், மாணவன் ஒருவன் தூங்குவதை பார்த்தார்.

ஆசிரியர் : உன் பக்கத்தில் தூங்குறவனை எழுப்பு.

மாணவன் : நீங்க தூங்க வைப்பீங்க. நான் எழுப்பனுமா? நீங்களே எழுப்பிக்கோங்க.
***************
ஒரு கல்லறையில் நின்று ஆண் ஒருவன் அழுதுக் கொண்டிருந்தான்.
இப்படி நடந்திருக்கக் கூடாது. நீங்கள் இறந்திருக்கக் கூடாது என்று.

அவனிடம், இறந்தவர் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டதற்கு, இவர் என்னுடைய மனைவியின் முதலாம் கணவர் என்றார் மிகுந்த சோகத்துடன்.
*************
நட்புடன்

சடகோபன்

lolluvathiyar
29-09-2007, 08:33 AM
ஜோக் அருமை அதிலும் சில ஜோக் முடிந்த பின் சங்கம் வச்சு கலக்கறீங்க. தொடருங்க*

மலர்
29-09-2007, 08:45 AM
வாழ்த்துக்கள் சடகோபன்.....
உங்கள் ஜோக்குகள் அனைத்தும் அருமை....தொடருங்கள்

கரஸ்பாண்டன்ட் கோர்ஸ்ல கத்துக்குற கோர்ஸாங்க அது....


ஆசிரியர் : உன் பக்கத்தில் தூங்குறவனை எழுப்பு.
மாணவன் : நீங்க தூங்க வைப்பீங்க. நான் எழுப்பனுமா? நீங்களே எழுப்பிக்கோங்க.

ஹீ...பகல்லேயும் தூங்குறோம் ராத்திரியும் தூங்குறோம்....

க.கமலக்கண்ணன்
29-09-2007, 08:51 AM
அனைத்து நகைசுவையும்

அற்புதம் சடகோபன் மிகவும்

அற்புதம் தொடருங்கள்...

sadagopan
09-10-2007, 06:35 AM
"நீங்க செய்ற மந்திர வித்தை பொய்னு சொல்றேன்...!"

"சத்தியமா உண்மைங்க...!"

"அப்படீன்னா என் மனைவியை மறைய வச்சு, திரும்ப வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...!"
************************************
"கண்டக்டரே, அடுத்த ஸ்டாப்பில் நான் இறங்கணும்"

"அதை ஏன்யா எங்கிட்ட சொல்றே, அதோ டிரைவர் தூங்கிட்டிருக்கார். எழுப்பி அவர்கிட்டே சொல்லு."
**********************************
"உப்பு, உரப்பு இல்லாத சுரணை இல்லாம இனிமேல் சாப்பிடனும்."

"கல்யாணமானதிலிருந்து அப்படித்தான் சாப்பிடுறேன் டாக்டர்."
*************************************
"தலைவரே, நான் உங்ககிட்டே உதவியாளரா சேர்ந்த பிறகு, நீங்க ஒரு வேலையும் சொல்லலையே?"

"நான் இப்ப எந்த கட்சியில இருக்கேன்னு கண்டுபிடி பார்க்கலாம்?"

உதவியாளர்: ???

மலர்
12-10-2007, 06:12 PM
முதலும் இறுதியும் சூப்பர் சடகோபன்.......

இப்போதெல்லாம் சங்கத்திலிருந்து
நகைச்சுவை வருவதில்லையே ஏன்.......

அனைத்து நகைச்சுவையும் அருமை வாழ்த்துக்கள் தோழரே

sadagopan
23-10-2007, 07:03 AM
நாளைக்கு காலைல 5.30 மணிக்கு உனக்கு தூக்குன்னு தெரிஞ்சும் எப்படி உன்னால சிரிக்க முடியுது?

ஜட்ஜ் அய்யாவுக்கு தெரியாது நான் எழுந்திருக்கறதே 7 மணிக்குத்தான்னு...
**************************
நம்ம வீட்டுல கல்யாணத்துக்கு சம்மதிக்கலேன்னா தற்கொலை செய்துக்கறதுதான் ஒரே வழி டியர்.

தேவையில்லை டியர் கல்யாணம் பண்ணிவைக்கிறதும், தற்கொலை செஞ்சுக்கறதும்னு ஒண்ணுதான்னு அவங்களுக்கு புரிய வைப்போம்.
**************************


சார்! நீங்க பேசுவது சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது.''

"அப்படியா... நன்றி!''

"முதல்ல சிரிக்கிறோம். அப்புறம் ஏன் சிரிச்சோம்னும் சிந்திக்கிறோம்.

*************************************
ஏம்பா ஸ்கூட்டர தள்ளிக்கிட்டே வர்ற?
ஸ்கூட்டர் சாவிய காலைல வீட்டுலயே வச்சிட்டேன்.
அப்புறம் எப்டி காலைல ஆபீசுக்கு வந்த?
என்ன பண்ணித் தொலையறது தள்ளிக்கிட்டேத்தான் வந்தேன்...
*******************************

மலர்
05-11-2007, 02:07 PM
ஏம்பா ஸ்கூட்டர தள்ளிக்கிட்டே வர்ற?
ஸ்கூட்டர் சாவிய காலைல வீட்டுலயே வச்சிட்டேன்.
அப்புறம் எப்டி காலைல ஆபீசுக்கு வந்த?
என்ன பண்ணித் தொலையறது தள்ளிக்கிட்டேத்தான் வந்தேன்...
*******************************

ஹீ..ஹீ...நீங்க கூட ஆபிஸ்க்கு இப்படி போனதா தகவல் வந்திச்சே உண்மையா........

வாழ்த்துக்கள் தோழரே
இன்னும் நிறைய ஜோக்குகள் கொடுங்கள்.......