PDA

View Full Version : கவிதைகள்



sadagopan
13-08-2007, 10:18 AM
மெதுவாய் சிவந்த இதழ்களை வருடி உன் தோட்டத்து ரோஜாகளுக்கு நீ முத்தம் தரும் போதெல்லாம் எது ரோஜா என் தடுமா நிற்கிறது என் மனசு
__________________________________________________________________________

ஒன்றைச்சொல்லவந்து
இன்னொன்றைச் சொல்கிறாய்
இன்னொன்றைச் சொல்லவந்து
வேறொன்றைச் சொல்கிறாய்
வேறொன்றைச் சொல்லவந்து
மற்றுமொன்றைச் சொல்கிறாய்
என்றபோதிலும்
யுகயுகமாய்
முடிவற்றுத் தொடருது நம் உரையாடல்ஸ
எப்போதுதான்
சொல்லிக்கொள்ளப்போகிறோம்
உனக்கு நானும்
எனக்கு நீயுமாய் சொல்லவந்ததை
நெத்தியடிபோல் நேரடியாய்?
__________________________________________________________________________
ஒவ்வொரு மழை நாளிலும்
தவறாமல் உன் நினைப்பு.

ஒவ்வொரு சொட்டாய் உதிர்க்கும்
என் வீட்டு முற்றம்
மழை விட்ட பின்னும்.

ஜன்னல்களை
மூடி வைக்கிற
நகர வாழ்வில்
வீட்டுக்குள் முற்றமும்
வேடிக்கை இழக்காத மனசும்
விடுமுறை நாளுக்காய்த்
தவமிருக்கும்.

உன்னைக் காதலித்து
இழந்தபின்னும்
என்னைத் தேற்றும் முற்றம்!

எங்கோ ஒரு நகரின்
இயந்திரப் பரபரப்பில்
நீ என்றேனும்
ஜன்னலைத் திற!

என்னைப் போலவே
மழை நாளில்
உனக்கும் வரும்
என் நினைப்பு!.
__________________________________________________________________________

முதல் கவியுடன்
சடகோபன்

அக்னி
13-08-2007, 10:22 AM
நண்பரே...
நீங்கள் தொடர்ந்தும் இவ்வாறு குறுங்கவிதைகளை இந்தத் திரியில் தொடர்வதானால், ஒவ்வொரு கவிதைகளையும் ஒவ்வொரு பதிவாக இடுங்கள். அத்துடன், இந்தத் திரியை தொடர்கவிதைகளுக்கு மேற்பார்வையாளர்கள் உதவியுடன் இணைத்துவிடலாம்.

என்ன சொல்கின்றீர்கள்..?

அக்னி
13-08-2007, 10:25 AM
மௌனமும்,
மௌனம் கலையும்போது,
தொடர்பற்ற பேச்சும்,
பேச்சின் விரிவில்,
சொல்லாத விடயமும்,
காதலில்,
சொல்லிச் செல்லுமோ காதலை...

−−−−−−−−−−−−−−−−−−−

மழை நாட்களில்
சொட்டும் உனது நினைவுகள்...
வெயில் நாட்களில்
வாட்டும் எனது நினைவுகளை...
உணர்வாயா என்னை..?

கவிதைகள் அருமை... தொடர்ந்தும் இணைந்திருங்கள்... பாராட்டுக்கள்...

sadagopan
13-08-2007, 11:43 AM
தங்கள் சித்தம் திரு அக்னி

நட்புடன்

சடகோபன்

வெண்தாமரை
13-08-2007, 11:51 AM
தங்கள் கவிதை நன்றாக உள்ளது.. ஆனால் ஒவ்வொன்றாக தாருங்கள்..

ஓவியன்
14-08-2007, 06:29 PM
சடகோபன் மன்றத்தில் பதித்த முதல் கவிதைப் படைப்புக்கள் அருமை......
அக்னியின் ஆலோசனையின் படி நடந்தால் உங்கள் படைப்பு இன்னமும் அழகு பெறும் நண்பரே!.

இலக்கியன்
15-08-2007, 08:45 AM
எங்கோ ஒரு நகரின்
இயந்திரப் பரபரப்பில்
நீ என்றேனும்
ஜன்னலைத் திற!

என்னைப் போலவே
மழை நாளில்
உனக்கும் வரும்
என் நினைப்பு!.

வாழ்த்துக்கள் சடகோபன்

leomohan
15-08-2007, 08:54 AM
உன்னைக் காதலித்து
இழந்தபின்னும்
என்னைத் தேற்றும் முற்றம்!
முதல் கவியுடன்
சடகோபன்

நல்ல துவக்கம் சடகோபன். பாராட்டுக்களும் இபணம் 250ம். உற்சாகமாய் தொடருங்கள்.