PDA

View Full Version : காதலன்

இலக்கியன்
13-08-2007, 09:50 AM
உன்னைக் கவிபாட
எனக்கு வெக்கமடா

உனைப் போல அழகன்
யாரும் இல்லையடா

கருமை நிற
சுறுள் முடியழகா

உனக்கு
நான்தான்
பேரழகா

அகன்ற தோள்கள்
வீர மார்பழகா

அதில் என் முகத்தை
புதைத்தேன்
அது நாணமடா

சிங்கம் போன்ற
வீர நடையழகா

உன் கருனையின்
கண்கள் தானழகா

என் கண்களின்
ஒளி விம்பம்
நீதானடா

அன்புக்கு நீயும்
என் தந்தையடா

அரவணைப்பில்−நீயும்
என் தாய்தானடா

உனைப்போல−எனை
கவர்ந்தவர் இல்லையடா

மொத்ததில் நீயும்
என் இதயமடா

காதல் கொண்ட பெண் ஆணை வர்ணிப்பதாக ஒரு கவிதை:music-smiley-019:
ஆண்களை எந்தக்கவிஞையும் இங்கு பாடுவதாகக் காணவில்லை:sport-smiley-019:
எல்லாம் கண்ணீராக இருக்கு:sport009:அதனால் நானே எழுதிவிட்டேன்:aktion033:

விகடன்
13-08-2007, 09:59 AM
நல்லதொரு முயற்சி இலக்கியன்.

பெண்கள் ஆண்களை வர்ணித்து பாடினால் இப்படித்தான் இருக்கும் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறீர்கள்.

பாராட்டுக்கள்

அக்னி
13-08-2007, 10:03 AM
பெண்கள் கொண்டால்,
சோகம்...
அதுவே,
பெண்கள் தந்தால்,
சுகம்...
ஆண்களின் நிலை இதுவானால்,
பெண்களின் நிலை எதுவோ..?

ஏக்கத்தில் வந்த கவிதை அருமை இலக்கியன்... பாராட்டுக்கள்...

இலக்கியன்
13-08-2007, 12:40 PM
நல்லதொரு முயற்சி இலக்கியன்.

பெண்கள் ஆண்களை வர்ணித்து பாடினால் இப்படித்தான் இருக்கும் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறீர்கள்.

பாராட்டுக்கள்

உங்கள் கருத்துக்கு நன்றி விராடன்

kampan
13-08-2007, 12:52 PM
இலக்கியன் கவிதை துலக்கியது பல உண்மைகள்
ஆண்களையும் வர்ணிக்க முடியும் என்பதை உணர்த்தினீர்

இலக்கியன் நீர் கலக்கிய கவிதை ஆணிற்கு இருந்த திரையை விலக்கியது
நன்றி

இலக்கியன்
13-08-2007, 12:53 PM
பெண்கள் கொண்டால்,
சோகம்...
அதுவே,
பெண்கள் தந்தால்,
சுகம்...
ஆண்களின் நிலை இதுவானால்,
பெண்களின் நிலை எதுவோ..?

ஏக்கத்தில் வந்த கவிதை அருமை இலக்கியன்... பாராட்டுக்கள்...

அழகான கருத்து தந்த அக்கினிக்கு நன்றி

இலக்கியன்
13-08-2007, 12:59 PM
இலக்கியன் கவிதை துலக்கியது பல உண்மைகள்
ஆண்களையும் வர்ணிக்க முடியும் என்பதை உணர்த்தினீர்

இலக்கியன் நீர் கலக்கிய கவிதை ஆணிற்கு இருந்த திரையை விலக்கியது
நன்றி

நன்றி கம்பன்
பெண்ணாக பாவனை செய்து வரிகளாக்கினேன் அவ்ளவுதான்

பிச்சி
13-08-2007, 01:05 PM
அண்ணா எனது கடைசி கவிதையே ஆணை சிறப்பு படுத்துவதுதான் நீங்கள் ப்டித்திருக்கிறீர்கள் தானே? உங்கல் கவிதையும் சிறப்பாக இருக்கிறது., சூப்பர்!! அண்ணா..

இலக்கியன்
13-08-2007, 01:07 PM
அண்ணா எனது கடைசி கவிதையே ஆணை சிறப்பு படுத்துவதுதான் நீங்கள் ப்டித்திருக்கிறீர்கள் தானே? உங்கல் கவிதையும் சிறப்பாக இருக்கிறது., சூப்பர்!! அண்ணா..

ஆம சகோதரி உங்கள் கவிதையின் இரசிகன் நான். நகைச்சுவைக்காக அந்த பின்னுட்டம் கொடுத்தேன். நன்றி பிச்சி

இனியவள்
13-08-2007, 01:20 PM
ஹீ ஹீ இலக்கியன்

கவிதை அருமை வாழ்த்துக்கள்...

இலக்கியன்
13-08-2007, 01:25 PM
ஹீ ஹீ இலக்கியன்

கவிதை அருமை வாழ்த்துக்கள்...

ஹீ ஹீ நன்றாக சிரிக்கிறீர்கள் இனியவள்:grin:
கருத்துக்கு நன்றி

அக்னி
13-08-2007, 01:27 PM
ஹீ ஹீ இலக்கியன்

கவிதை அருமை வாழ்த்துக்கள்...

தொப்பி ரொம்ப அளவாயிருக்குதோ...
குஷியாய் சிரிக்கற மாதிரி இருக்கே...

இலக்கியன்
13-08-2007, 02:01 PM
தொப்பி ரொம்ப அளவாயிருக்குதோ...
குஷியாய் சிரிக்கற மாதிரி இருக்கே...

அப்படியெல்லாம் இல்லை அக்கினி :grin:

அக்னி
13-08-2007, 05:40 PM
அப்படியெல்லாம் இல்லை அக்கினி :grin:

அது உங்களுக்கில்லை... இனியவளுக்கு சொன்னதாக்கும்...

அமரன்
13-08-2007, 06:12 PM
பெண்களைமட்டுமா வர்ணிக்க முடியும். அவர்கள் மட்டுமா அழகு? அல்லது ஆண்களை வர்ணிக்க பெண்கள் வெட்கப்படுகின்றார்களா.? பலதடவை எனக்குள் நானே கேள்வி எழுப்பி பதில்காணாது/பதில்காண முயற்சிக்காது இருந்துவிட்டேன். அப்படி ஒரு கவிதையை இங்கே பார்க்கும் போது சந்தோசிகின்றேன்.

பெண்ணால் மட்டுமல்ல ஆணாலும் பல அவதாரங்கள் எடுக்க முடியும் என்று சொல்கிறது கவி. தாயாக,தந்தையாக,தக்க துணையாக என எத்தனை அவதாரங்கள் ஆணுக்குள். அங்காங்கே பெண்மை இழையோடுகிறது. பாராட்டுக்கள் இலக்கியன். தொடருங்கள்.

இலக்கியன்
14-08-2007, 08:59 AM
அது உங்களுக்கில்லை... இனியவளுக்கு சொன்னதாக்கும்...

ஓ அப்படியா

இலக்கியன்
14-08-2007, 09:01 AM
பெண்களைமட்டுமா வர்ணிக்க முடியும். அவர்கள் மட்டுமா அழகு? அல்லது ஆண்களை வர்ணிக்க பெண்கள் வெட்கப்படுகின்றார்களா.? பலதடவை எனக்குள் நானே கேள்வி எழுப்பி பதில்காணாது/பதில்காண முயற்சிக்காது இருந்துவிட்டேன். அப்படி ஒரு கவிதையை இங்கே பார்க்கும் போது சந்தோசிகின்றேன்.

பெண்ணால் மட்டுமல்ல ஆணாலும் பல அவதாரங்கள் எடுக்க முடியும் என்று சொல்கிறது கவி. தாயாக,தந்தையாக,தக்க துணையாக என எத்தனை அவதாரங்கள் ஆணுக்குள். அங்காங்கே பெண்மை இழையோடுகிறது. பாராட்டுக்கள் இலக்கியன். தொடருங்கள்.

கவிதைகளுக்கு அழகான பின்னுட்டம் தரும் அமரன் அவர்களுக்கு என்பாராட்டுக்கள். என் எண்ணங்களையும் பிரதிபலிப்பதாக உங்கள் கருத்து உள்ளது நன்றி

ஓவியன்
15-08-2007, 03:03 AM
அண்மையில் சுதந்திர தின சிறப்பு வெளியீடான ஒரு ஆனந்தவிகடன் பார்த்தேன், அதில் நடிகை நதியாவின் பேட்டி வெளியாகியிருந்தது.........

யார் அழகான ஆண்கள் என்ற கேள்விக்கு அவர் பதிலளித்திருந்தார் − அழகாக........

ஒரு விளம்பரத்தில்(சேவ் எக்க்ஷல்) சேற்றில் விழுந்த தங்கச்சி பாப்பாவுக்காக தானும் சேற்றில் விழுந்து நிலத்துடன் அடித்து சண்டை போடுவானோ ஒரு சிறுவன் அவன் உலகப் பேரழகன்..........
எவன் தன் நண்பிக்காக வீதியிலும்..........
எவன் தன் துணைவிக்காக கடை வாசலிலும்...........
எவன் தன் சகோதரிக்காக கோயிலிலும்.............
தவமாய்க் காத்திருக்கிறானோ..........
எவ*ன் அவளுக்காக அவள் சுமையில் பங்கெடுக்கிறானோ அவனே அவளைப் பொறுத்த வகையில் உலகப் பேர*ழகன் என்ற அவர் பதில்கள் அருமையாக இருந்தன.

அதை மீண்டும் ஞாபகப் படுத்தியது உங்கள் இலக்கிய வரிகள்.........
பாராட்டுக்கள் நண்பா − தொடர்ந்து கலக்குங்க........

இலக்கியன்
15-08-2007, 08:27 AM

நீங்கள் படித்தவிடயத்தை பகிர்ந்து கொண்டமைக்கும் கவிதை பற்றிய கருத்துக்கும் நன்றி ஓவியன்