PDA

View Full Version : தகிப்புசுகந்தப்ரீதன்
13-08-2007, 09:18 AM
ஆயிரமாயிரம்பேர் அனுதாப பட்டாலும்
அதிலாயிரம்பேர் ஆறுதல் தந்தாலும்
ஒருநூறுபேர் உதவ வந்தாலும் − இதில்
யாரால் உணர முடியும் இழந்தவன் துயரம்?
இழந்தவனுக்கே தெரியும் இழப்பின் மதிப்பு
இங்கே எத்தனை பேருக்கு தெரியும்
எங்கள் தமிழீழத்தின் தகிப்பு?!

இலக்கியன்
13-08-2007, 09:29 AM
ஆயிரமாயிரம்பேர் அனுதாப பட்டாலும்
அதிலாயிரம்பேர் ஆறுதல் தந்தாலும்
ஒருநூறுபேர் உதவ வந்தாலும் − இதில்
யாரால் உணர முடியும் இழந்தவன் துயரம்?

ஆம் துயரங்கள் துன்பங்கள் தமக்குதாம் வந்தால்த்தான் புரியும் அழகாக சொன்னீர்கள்

சிவா.ஜி
13-08-2007, 09:35 AM
ப்ரீதன் இது ஆதங்க கேள்வியா,கோபக்கேள்வியா அல்லது வெறுப்புக் கேள்வியா...? எதுவென்றாலும் ஒரேபதில்..இல்லை..!
நாங்கள் அனுதாபப்படவில்லை,ஆறுதல் சொல்லப்போவதுமில்லை...ஆனால் உண்மையை உணர்கிறோம். உறவுகளாய் உயிருக்குள் உறைகிறோம். வீரருக்கு அனுதாபம் தேவையில்லை..அதனால் அது எங்களிடமில்லை..போராளிக்கு ஆறுதல் தேவையில்லை...அதனால் அது எங்களிடமில்லை...ஆனால் அனைத்து வலிகளையும்,வேதனைகளையும் உங்கள் ஆன்மாவுக்கு அருகிலிருந்து உணர்கிறோம்.ஆயிரமாயிரம் ஆன்மாக்களின் ஆத்மார்த்த சேர்ந்துணர்வுக்கு சக்தியுண்டு என்ற நம்பிக்கையுடன்.

அக்னி
13-08-2007, 09:36 AM
சூரியனின் தகிப்பு,
இரவானல் அற்றுப்போவதில்லை...
எங்கோ மறைந்தேனும் தகிக்கின்றது...
அதற்காக,
சூரியனின் தகிப்பை உலகம்,
உணரவில்லை என்றாகுமா..?

தமிழீழத்தின் தகிப்பும்,
மலரும்வரை, எம்முள்ளேதான்
இருக்கும்...
உலகம் உணர்ந்தாலும்,
உதிக்கும்வரை வரவேற்காது...
ஆனால்,
தகிப்பை உணராமல்,
உலகமில்லை...

சுகந்தப்பிரீதன், ஏக்கங்கள் விரைவில் தணிந்துபோம் என்று நம்புவோமாக...

விகடன்
13-08-2007, 09:49 AM
சுகந்தப்பிரியனின் சுட்டெரிக்கும் வரிகள்...
குறையை குத்திக் காண்பிக்கின்றனவா?
அல்லது
மனதிற்கு உரமேற்றுகின்றனவா?

சுகந்தப்ரீதன்
14-08-2007, 04:24 AM
சுகந்தப்பிரியனின் சுட்டெரிக்கும் வரிகள்...
குறையை குத்திக் காண்பிக்கின்றனவா?
அல்லது
மனதிற்கு உரமேற்றுகின்றனவா?

அது வாசிப்பவரின் மனநிலையை பொறுத்தது நண்பர்களே!
உணராதவர்களுக்கு உறுத்தும்
உணர்ந்தவர்களுக்கு புரியும் அதன் அர்த்தம்!

இதயம்
14-08-2007, 04:41 AM
நிச்சயம் முழுதும் தெரியாது சுகந்த ப்ரீதன்.! ஒரு உயிர் என்பது மகத்தான விஷயம். அதை வன்முறையின் மூலம் போக்குவது, அதுவும் அநியாயமான முறையில் போக்குவது மிக, மிக கொடுமையானது. இறப்பவருக்கு அது ஓரிரு நிமிட வேதனை மட்டுமே. ஆனால், அந்த உயிரின் இழப்பால், அந்த குடும்பம் படும் வேதனை சொல்லி மாளாது. அதை நாம் உணர்ந்தால் மட்டுமே புரியும். மனிதனின் மிருக குணங்களால் அதிகரித்து வரும் வன்முறையால் உலகம் வனம் ஆகி வருகிறது. நீதி, நேர்மையை தேட வேண்டியிருக்கிறது. தடி எடுத்தவன் தண்டல் காரர்கள் என்ற மனப்போக்கால் எளியோர் சொல்லனாத்துயரத்திற்கு ஆளாகின்றனர். ஈழ மண்ணில் எம் தமிழ் உயிர்கள் படும் பாடு எங்களை நிச்சயம் துயரம் கொள்ளவே செய்கின்றன. இந்நிலை மாறி ஈழ மண் இன்பம் நிறைந்த அமைதிப்பூங்காவாக ஆக வேண்டும் என்பது தான் நம் எல்லோரின் விருப்பமும். உங்கள் கவிதையில் நீங்கள் எடுத்துரைத்த இலங்கைத்தமிழர்களின் இன்னல்களை புரிந்து அந்நிலை மாற ஆண்டவனிடம் பிரார்த்திக்கின்றோம்.

இது பாராட்டுக்குரிய கவிதையல்ல, பிரார்த்தனைக்குரிய கவிதை!

ஓவியன்
14-08-2007, 04:49 AM
இங்கே எத்தனை பேருக்கு தெரியும்
எங்கள் தமிழீழத்தின் தகிப்பு?!

சுகந்தா இன்று தான் நான் அறிந்தேன் தாங்களும் கந்தக பூமியின் குடிமகனென்று.......

சூரியனின் வெப்பம் எல்லோருக்கும் சமமாகக் கிடைத்தாலும், அதனை ஒரு வில்லை வைத்துக் குவித்தாலே அதனை தீயாக்கலாம்.....
அவ்வாறே எங்களது தகிப்பு எல்லாவற்றையும் ஒன்றாக ஒரே திசையில் குவிப்போம் அது பகை எரிக்கும் தீயாகட்டும்...........

இன்று பலர் எங்களது பிரச்சினைகளை அறிந்தே உள்ளனர், அவர்கள் உதவிகளும் செய்கின்றனர் அந்த பெருந்தகைகளின் உதவியோடு இன்னும் வளர்ப்போம் அந்த தீயை உக்கிரமாக..........
அந்த தீ திறக்கட்டும் எங்கள் விடியலின் கதவை..............!

விகடன்
14-08-2007, 04:58 AM
அது வாசிப்பவரின் மனநிலையை பொறுத்தது நண்பர்களே!
உணராதவர்களுக்கு உறுத்தும்
உணர்ந்தவர்களுக்கு புரியும் அதன் அர்த்தம்!

விளக்கத்திற்கு மிக்க நன்றி.
அநுபவப்பட்டவனில் நானும் ஒருவன். அது வேறு விடயம்.
விடியலை நாம் தேடிப் போகவேண்டுமே தவிர, விடியலை இன்னொருவர் தேடித்தருவாரென்று எதிர்பார்த்திருப்பதில் பயனில்லை என்பதை நம்புவர்களில் நானும் ஒருவன்.

அதுமட்டுமின்றி இழப்புக்களும் இன்னல்களும் அறிந்தவனைவிட அநுபவப்பட்டவனுக்கே அதன் வலி தெரியும்.

அவரவர்களிற்கு ஆறுதல் வார்த்தையாவது சொல்ல இடர்பாடுகள்கூட இருந்திருக்கலாம். அப்படியிருந்தும் ஆறுதல் வார்த்தை சொல்வதை இட்டு நன்றி கொள்ளத்தான் வேண்டும். போர்ச் சூழனிலால் என்னைவிட கடுமையாகத்தான் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறீகள். முடிந்தால் ஒரு திரியில் நீங்கள் பட்ட இன்னல்கள் துயரங்களை ஒரு கட்டுரையாக தொகுத்து தாருங்கள் நண்பரே. பல்னாட்டுத் தமிழர்களாக இங்கே ஒன்று கூடி இருப்பதால், படித்து அறிந்து உங்கள் துயரங்களை துடைக்கத்தான் முடியாவிட்டாலும் பங்கெடுத்துக் கொள்கிறோம் .... தமிழன் என்ற வகையில்.

வெண்தாமரை
14-08-2007, 05:08 AM
உண்மைதான் அனுபவ பட்டவர்களுக்கு தான் அதன் வலி தெரியும். காயம் பட்டவருக்கு தானே வலிக்கும்.. வரிகளுக்கு வாழத்துக்கள்..

விகடன்
14-08-2007, 05:21 AM
மீண்டும் உங்களை மீட்பதட்கு மன்னித்துவிடுங்கள் சுகந்தப்ரீதன்.
நம் நாட்டு யுத்த நிலமைகள் பற்றிய விடயங்கள் அயல்னாடுகளுக்கும் சரி மேல் நாடுகளுக்கும் சரி ஆரம்பகாலத்தில் முழுமையாகவும் தெளிவாகவும் போய்ச் சேர்ந்தது கிடையாது. ஒருதலைப் பட்ஷமான செய்திகளே வெளி உலகிற்கு தெரிந்தன. அதுவும் இலங்கைத் தீவின் உத்தியோக பூர்வமான அரசாங்கம் என்ற பெயரில். பிற்காலத்தில் தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் முன்னெடுப்புக்கள் பலவற்றால்த்தான் எங்கள் தேசப் பிரச்சினை பற்றி ஏனைய நாடுகள் காது கொடுத்து கேட்டும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டது. இன்றும் கூட எமக்கு உதவிக்கரம் நீட்டவும் ஒன்றுபட்ட கருத்தை வெளியிடவும் பல உயர்ந்த உள்ளங்கள் இருந்தாலும் "பயங்கரவாதி" என்ற பெயர் அவர்களை தடுத்துவைத்திருக்கிறது. இதைப் போல பல காரணிகள்.

இருந்தாலும்,

உங்கள் கவிதையிலிருக்கும் வலியையும் குறிக்கோள்/எதிர்பார்ப்புக்களையும் அறிந்தேன். இது பல நாட்டு தமிழ் மக்கள் சஞ்சரிக்கும் உன்னது பூமி. இதில் ஆறுதல் மட்டுமே சொல்லக்கூடிய நிலையில் நம்னாட்டில் பலர் இருக்கையில் பிறனாட்டிலிருந்தும் சொன்னோர் இருப்பர். கவிதையில் இருக்கும் அந்த வரி அவர்களை புண்படுத்தினாலும்..... என்ற கவலையில்த்தான் புதிராக ஒரு க்கேள்வியை தொடுத்தேன். மற்றும்படி உங்கள் கவிதையில் எந்த ஆட்சேபனையும் எனக்கில்லை.
நன்றி.

அமரன்
14-08-2007, 06:57 AM
வாழ்த்துக்கள் ப்ரீதன். நண்பர்கள் பலர் ஆழமக அலசியபின்னர் அவற்றைத்தாண்டி சொல்வதுக்கு என்னிடம் ஏதுமில்லை. தொடருங்கள்.

சுகந்தப்ரீதன்
16-08-2007, 04:08 AM
நன்றி நண்பர்களே...!முதலில் உங்கள் எல்லோருக்கும் நான் சொல்லிகொள்வது....என் பிறப்பிடம் இந்தியா....இந்த கவிதையில் நான் கருவாக்கியது என் ஈழநண்பனின் உணர்வுகளையும் அதை உணர்ந்தபோது எனக்குள் ஏற்பட்ட வலிகளையும்தான். என்ன நடக்கிறது என்று அறியும் ஆவலில் என்னுடன் கல்லூரியில் படித்த ஈழநண்பனிடம் கேட்டபோது எல்லாகொடுமைகளையும் கூறிவிட்டு இறுதியாக விரக்தியாக என்னிடம் வினவிய வார்த்தைகள்தான் இங்கே கவிதையின் வரிகளாக உள்ளன.....எனது வலியையும் பகிர்ந்துகொள்ளவே இங்கே இதை பதித்தேன்...!