PDA

View Full Version : ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்டம்



namsec
13-08-2007, 08:15 AM
பங்கு சந்தை சரிவு : இந்திய பெரும் பணக்காரர்களுக்கு ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்டம்

கடந்த இரண்டு வார காலத்தில் மும்பை பங்கு சந்தையில் ஸ்திரமற்ற தன்மையே காணப்படுகிறது. சென்சக்ஸ் 18 ஆயிரம் புள்ளிகள் வரை உயர்ந்திருந்த நிலையில் கடந்த இரு வார காலத்தில் 14 ஆயிரம் புள்ளிகளை விட சரிந்து விட்டது. இதனால் இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்கள் ஐந்து பேருக்கு ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்டம் ஆகி விட்டது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் சேர்மன் முகேஷ் அம்பானி, அவரது தம்பி அனில், டி எல் எப் இன் குஷால் பால் சிங், பார்தி குரூப் சேர்மன் சுனில் மிட்டல் மற்றும் விப்ரோ சேர்மன் அசிம் பிரேம்ஜி ஆகியோர்தான் இந்த ஐந்து பெரும் பணக்காரர்கள். ஜூலை 27 முதல் பங்கு சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டதால் இவர்களது கம்பெனிகளின் பங்கு மதிப்பும் குறைந்தது. இதனால் இவர்களது சொத்து மதிப்பு சுமார் 10.05 பில்லியன் டாலர் ( சுமார் 40 ஆயிரத்து 650 கோடி ரூபாய் ) வரைகுறைந்து விட்டது. அமெரிக்காவில் உள்ள முக்கிய நிதி சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியை தொடர்ந்து, அதன் பாதிப்பு உலகம் முழுவதிலும் உள்ள பங்கு சந்தையை வீழ்ச்சி அடைய செய்தது. இதனால் ஜூலை 26 ம் தேதி அன்று 126.8 பில்லியன் டாலர்களாக ( ரூ.5,12,900 கோடி ) இருந்த இந்த ஐந்து பெரும் பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு, ஜூலை 27க்கு பிறகு 116.75 பில்லியன் டாலர்களாக ( ரூ.4,72,250 கோடி ) குறைந்து விட்டது. இந்த ஐந்து பேரில் அதிக நஷ்டம் அடைந்திருப்பது முகேஷ் அம்பானி தான். ஜூலை 26ம் தேதி ரூ.1,63,000 ஆயிரம் கோடியாக இருந்த இவரது சொத்து மதிப்பு, ஆகஸ்ட் 10ம் தேதி ரூ.1,53,200 கோடியாக குறைந்து விட்டது.


நன்றி தினமலர்

தங்கவேல்
13-08-2007, 12:30 PM
மாய விளையாட்டில் சிக்கியவர்களின் கதி என்னவோ தெரியவில்லை.. பாவம் ....

அறிஞர்
13-08-2007, 03:32 PM
கிடு கிடு என ஏறும்போது.. பல கோடி சம்பாதித்தார்கள்...
இப்பொழுது இழக்கிறார்கள்...

aren
13-08-2007, 03:40 PM
இந்த இழப்பெல்லாம் வெறும் சிறிது நாட்களுக்கே. பின்னர் எல்லாம் சரியாகிவிடும். ஆனால் நம் போல் ஏழைகள்தான் அனைத்தையும் இழப்பார்கள்.

நான் 2000 வருடத்தில் அமெரிக்க ஸ்டாக் மார்கெட்டில் இழந்ததை இன்றுவரை மீட்கவில்லை. நிச்சயம் மீட்கப்போவதுமில்லை.

namsec
14-08-2007, 02:46 PM
இந்த இழப்பெல்லாம் வெறும் சிறிது நாட்களுக்கே. பின்னர் எல்லாம் சரியாகிவிடும். ஆனால் நம் போல் ஏழைகள்தான் அனைத்தையும் இழப்பார்கள்.

நான் 2000 வருடத்தில் அமெரிக்க ஸ்டாக் மார்கெட்டில் இழந்ததை இன்றுவரை மீட்கவில்லை. நிச்சயம் மீட்கப்போவதுமில்லை.

அப்படி என்னாதீர்கள் முயன்றால் கிட்டும்.