PDA

View Full Version : பிறந்தநாள் எது?



சிவா.ஜி
13-08-2007, 08:13 AM
ஒரு மகாபெரிய குழப்பம்..இன்னும் அது தீர்ந்தபாடில்லை...
அது என் பிறந்தநாள் எது என்பதுதான். பிறந்த வருடம் தெரியும்..பிறந்தநாள்..அதாவது.வெள்ளிகிழமை என்பது தெரியும்
ஆனால் எந்த வெள்ளிக்கிழமை..என்ன தேதி..ஹீஹும்..தெரியாது.
இப்போது நான் உபயோகப்படுத்துவது(?) என்னை ஆரம்பப்பள்ளியில் சேர்த்தபோது ஏதோ ஒரு ஆசிரியர் எழுதி வைத்தது.

என் தாயார் எழுத்தறிவில்லாதவர்,ஆனால் தந்தையார் அந்த காலத்து அஞ்சாங்கிளாஸ். இருந்தாலும் ஓரளவுக்கு ஆங்கிலம் தெரிந்தவர். நான் வீட்டின் கட்டைக்குட்டி. நான் பிறந்ததும் வீட்டில்தான்.நாங்கள் சகோதர சகோதரிகள் யாருமே மருத்துவமனையில பிறக்கவில்லை. அதனால் முறையான பதிவு எதுவும் இல்லை..இருந்த ஒரே பதிவு என் தந்தையார் குறித்து வைத்திருந்த டைரி மட்டும்தான்.இப்போது அவரும் இல்லை.டைரியுமில்லை

இதில் சோகம் என்னவென்றால்,என் தந்தையாருக்கு விகடன்,குமுதம்போன்ற வாரப் பத்திரிக்கைக்களைப் படிக்கும் பழக்கம் இருந்ததால்,கண்ணில் கிடைப்பதையெல்லாம் வாங்கி வந்து விடுவார். அவையெல்லாம் அதிகமாக சேர்ந்துவிடும் போது அவற்றை பழையபேப்பர்காரனிடம் போட்டுவிடுவார் என்னுடைய தாயார். அந்தக்கூட்டத்தில் ஒருமுறை இந்த வரலாற்று செப்பேடும் சேர்ந்து போய்விட்டது. நடுத்தரக்குடும்பத்தில் பிறந்தநாள் கொண்டாட்டங்களெல்லாம் இல்லாத காலமானதால்
அதைப் பற்றியெல்லாம் அப்போது நாங்கள் யாருமே சிந்திக்கவில்லை.

அதுவுமல்லாமல் என் தந்தையார் ஜோதிடம்,ஜாதகம் இதன் மேலெல்லாம்
நம்பிக்கை இல்லாதவர். அமாவாசையன்று அசைவம் சாப்பிடக்கூடாது என்றால் அன்றுதான் ஆட்டுக்கறி வாங்கி வருவார். கேட்டால் இன்னைக்குத்தான் யாரும் சாப்பிடாததால் நல்ல கறி கிடைக்கும் என்பார்.அதனால் எங்கள் யாருக்குமே ஜாதகங்கள் எழுதப்படவில்லை. எனவே பிறந்தநாள் அறிந்துகொள்ள உதவும் அடுத்த ஆதாரமும் இல்லையென்றாகிவிட்டது.

என்னுடைய இருபதுகளில் அதற்கான அவசியம் ஏற்பட்டபோது தோண்ட ஆரம்பித்தேன். என் தாயாரின் கணக்கை பாருங்கள்....நாங்கள் வாடகை வீட்டில் இருந்ததால் எல்லா ஒன்றாம் தேதியும் வாடகை கொடுப்பது வழக்கம். நான் பிறந்த அன்று காலையில்தான் வாடகை கொடுத்தார்களாம்.
அதனால் ஒன்றாந்தேதி என்று வைத்துக்கொள்ளலாம் என்றால்..அடுத்து இன்னொன்று சொன்னார்கள்...ஆனி மாசம் 15−ஆம் தேதிதான் நீ பிறந்தாய் என்று கற்பூரமடித்து சத்தியம் செய்தார்கள். ஆனால் அந்த வருடம்(1963)
ஆனி பதினைந்து ஜூன் 29 ஆம் தேதியாக இருந்தது,அதுவும் வெள்ளிக்கிழமையாக இருந்ததால்... மூன்றுக்கு இரண்டு என்ற வாக்கு விகிதத்தில் 29−ஆம் தேதியே என் பிறந்தநாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஆனாலும் இன்னும் குழப்பம் தீரவில்லை.இந்த குழப்பத்தினால் விளைந்த நன்மை நிறைய....ஜாதகம் இல்லாததால் என் திருமணத்தில் அனாவசியமான அலசல்கள் தேவைப்படவில்லை.செவ்வாய்,புதன்,வியாழன் என்ற எந்த தோஷமும் எனக்கில்லை.ராசியோ...நட்சத்திரமோ நானறியேன்
அதனால் "இன்றைய உங்கள் ராசிபலன்..." என்று தொலைக்காட்சியில்...மிகு டெஸிபலில் பயமுறுத்தும்போது அது என்னை பாதிப்பதில்லை.தேமேயென்று பார்ப்பதோடு சரி.

என்ன என் பிள்ளைகள்தான் என்னை கிண்டலடித்துக்கொண்டே இர்ருக்கிறார்கள். அப்பா 29−ஆ...30−ஆ...என்று.

விகடன்
13-08-2007, 08:19 AM
நீங்கள்தான் சந்தோஷப்படக்கூடிய மனிதர், இந்த உலகில். ஏனெனில் எந்த இராசி பலன், எண்சோதிடம் போன்றவற்றுள் கட்டுப்பட்டு மனக்கவலையால் சீரழிய மாட்டீர்கள்.

கவலையை மறவுங்கள், விரும்பிய திகதியை தெரியுங்கள்... உங்கள் மனதிற்கு பிடித்ததிற்கிணங்க.

கிண்டலடிப்பது பிள்ளைகள்தானே. அதெல்லாம் ஒரு காலத்தில் மீட்டுப்பார்க்கும் இனிய நினைவுகளாக மாறும் பாருங்கள்.


வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
13-08-2007, 08:22 AM
நன்றி விராடன். அதைத்தான் எண்ணி நானும் சந்தோஷமாக இருக்கிறேன்.
ராசியுமில்லை பலனுமில்லை.
"நானொரு ராசியில்லா ராஜா........"

அமரன்
16-08-2007, 09:35 AM
ஒரு வகையில் கொடுத்துவைத்தவரய்யா நீங்கள். ஏதாவது நல்ல காரியம் செய்ய நினைக்கையில் இந்த சாஸ்திரங்கள் போடும் தடைகள் அப்பப்பா...சொல்லிமாழாது. பஸ்ஸில் இருந்து விழுந்தவன் மீது லாரி ஏறுவதுபோல ஏற்கனவே மனபாரத்தில் உழல்பவனுக்கு கிலேசத்தை அதிகரிப்பதும்....தப்பிவிட்டீர்கள் சிவா. பிள்ளைகள் கிண்டல் ஒருவித மகிழ்ச்சிதானே. நல்ல பதிவு. ராசி இல்லா ராஜாவே..!

சிவா.ஜி
16-08-2007, 09:39 AM
நன்றி அமரன். அது எப்படி இத்தனை வருடங்களாக நான் நினைத்து சந்தோஷப்பட்டுக்கொள்வது உங்கள் இரண்டு பேருக்கும் தெரிந்தது.....?

விகடன்
16-08-2007, 09:39 AM
"நானொரு ராசியில்லா ராஜா........"

இல்லை இல்லை
நீங்கள் ராசியில்லா சிவா.ஜி:icon_shades:

சிவா.ஜி
16-08-2007, 09:41 AM
இல்லை இல்லை
நீங்கள் ராசியில்லா சிவா.ஜி:icon_shades:

அப்ப ரொம்ப சந்தோஷம்.:icon_clap:

அமரன்
16-08-2007, 09:44 AM
சொந்த அனுபவங்கள் சிவா. ஏதாச்சும் பயனுள்ளதாக ஆரம்பித்தால் அம்மா,பாட்டி,சித்தின்னு ஒரு கூட்டமே கட்டம்கட்டுவாங்க கட்டம் கட்டி பட்டம் விடுவோரை. அப்புறம் நம்ம பாடு சொல்லவேண்டுமா என்ன ..? பிச்சைக்கேட்டுப்போனவனை நாய் துரத்துனால் எப்படியோ அந்த வேகத்தில் செயலுக்கு டாட்டாதான்.

சிவா.ஜி
16-08-2007, 09:46 AM
அட்டகாசமான உவமானம் அமரன்.பிச்சை இழந்தது ஒருபக்கமென்றால்...நாய் இன்னொரு பக்கம் பாவம்.....!

இதயம்
16-08-2007, 09:55 AM
இதை நீங்கள் விவாதப்பகுதியில் இட்டிருந்தால் "பிறந்த தேதி தெரிந்து என்ன செய்யப்போகிறீர்கள்?" என்று உங்களோடு மல்லுக்கட்டியிருப்பேன். இந்த பகுதியில் பதித்ததால் தப்பித்தீர்கள்..!:nature-smiley-007: நானும் சுவையான சம்பவம் என்ற ரீதியில் ரசித்துப்படித்தேன். இதைப்படித்ததன் மூலம் உங்கள் தேதியை நீங்கள் தெரிந்து கொள்ளும் ஆவலை விட, இந்த தேதி பிரச்சினையால் ஏற்பட்ட சுவையான சம்பவங்களை நண்பர்களுடன் பகிர்ந்து, மகிழ வேண்டும் என்ற விருப்பம் தான் உங்களிடம் தெரிகிறது.

உங்களுடைய குழப்பம் இந்தியா, பாகிஸ்தான் குழப்பத்தை விட பெரும் குழப்பமாக தான் தெரிகிறது. உங்கள் தந்தை பகுத்தறிவாளர் மட்டுமல்ல, சூழ்நிலையை தனக்காக பயன்படுத்திக்கொள்ளும் புத்திசாலியாகவும் இருந்திருக்கிறார். அவருடைய வாரிசு என்பதாலேயோ என்னவோ, அவரின் பாதிப்புகளை நான் உங்களிடம் அதிகம் காண்கிறேன்..! நல்லதொரு சுவையான சம்பவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி..!

அன்புரசிகன்
16-08-2007, 10:14 AM
இதுபோல் பல கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தக்கலத்தில் நம்மூரில் எல்லாம் என்று பிறப்புப்பதிவு பதியப்படுகிறதோ அன்றுதான் பிறந்தநாள் இருக்கும்.

இதைவிடவும் ஒரு கொடுமை உண்டு. அதாவது யார் அந்த பதிவை செய்யப்போகிறாரோ (நிச்சயமாக தாய் தந்தையினராக இருப்பது குறைவு என எனது அம்மம்மா கூறினார்) அவரே அந்த குழந்தைக்கு அந்தக்கணத்தில் மனதில் தோன்றும் பெயரை வைத்துவிட்டு வீடு வந்து சொல்வார்களாம்... உன் குழந்தைக்கு இந்தப்பெயர்தான் வைத்திருக்கிறேன் என்பாராம். காரணம் அவர் தான் அந்த ஊரில் சற்று எழுதப்படிக்கத்தெர்ந்தவராக இருப்பார்.

இதில் ஒரு சுவையான சம்பவமும் உண்டு. எனது அம்மம்மாவின் காலத்தில் ஒருவருக்கு பெயர் வைக்கும் போது ஒருவருக்கு சின்னா என பெயர் வைத்து அலுவலகர் பெயர் கேட்க்கும் போது சின்னா வீ (வீ என்பது அவரது தந்தையின் பெயரின் முதலெழுத்து) என கூற அவருக்கு அது சின்னவீ எனக்கேட்க்க அவரது பெயர் சின்னவீ ஆக மாறியது... :D

அதுசரி சிவாஜி... நீங்கள் 29 ஆ.. 30ஆஹ்... :D

அமரன்
16-08-2007, 10:16 AM
ரசிகரே..என்ன இது கேள்வி (நீங்க வெறும்தாசா லார்டு லபக்குதாசா என்பதுபோல)

leomohan
16-08-2007, 10:17 AM
ஹா ஹா.

வரலாறு செப்பேடு தொலைந்து போனது என்று மிகவும் சகஜமாக எழுதிவிட்டீர்கள்.

இதயம்
16-08-2007, 10:22 AM
ரசிகரே..என்ன இது கேள்வி (நீங்க வெறும்தாசா லார்டு லபக்குதாசா என்பதுபோல)


அமரா.. சிண்டு முடிவது அழகாக வருகிறது உங்களுக்கு..!!

அன்புரசிகன்
16-08-2007, 10:23 AM
ரசிகரே..என்ன இது கேள்வி (நீங்க வெறும்தாசா லார்டு லபக்குதாசா என்பதுபோல)

பார்த்திடுங்க சிவாஜி... நான் இப்படி கேட்க்கவே இல்ல...

அமரன்
16-08-2007, 10:27 AM
அமரா.. சிண்டு முடிவது அழகாக வருகிறது உங்களுக்கு..!!

அடுத்தவரைப் பாருங்க இதயம்..தனிமடலில் எனக்கு சொன்னமாதிரியே கத்தியை மாத்திப் போடுகிறார்..

சிவா.ஜி
16-08-2007, 10:57 AM
நன்றி இதயம்.நீங்கள் சொல்லியிருப்பதைப்போலத்தான் என்னிடம் என் தந்தையாரின் பாதிப்பு அதிகம்.ஆனால் என்னைப்பொறுத்தவரை அது எல்லாமே நல்லதுதான்.

சிவா.ஜி
16-08-2007, 10:59 AM
அன்பு சரியான கேள்வியத்தான் கேட்டிருக்கிறீர்கள். இதற்கு அமரன் சொன்னதுபோல அந்த கேள்வியே கேட்டிருக்கலாம்(தாஸா...லாடு லபக்கு தாஸான்னு)

சிவா.ஜி
16-08-2007, 11:01 AM
ஹா ஹா.

வரலாறு செப்பேடு தொலைந்து போனது என்று மிகவும் சகஜமாக எழுதிவிட்டீர்கள்.

என்ன செய்வது மோகன்..நான் ஏன் பிறந்தேன் என்று கேட்டால் அது சிந்த்திக்கக் கூடியது...நான் எப்போது பிறந்தேன் என்று கேட்டும் நிலையில் இருந்தால் என்ன செய்வது.....சகஜமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஓவியன்
08-09-2007, 10:07 AM
நல்லவர்களுக்கு எல்லா நாளும் பிறந்த நாள் தான் சிவா......!

நீங்கள் கூறியது போன்றே, இதனால் பல நன்மைகளும் உண்டே.....
நன்மைகளை அலசி மனமகிழ்வுடனிருக்கும் உங்கள் மனப்பாங்கிற்கு பாராட்டுக்கள்!!!.

Narathar
08-09-2007, 10:14 AM
அது சரி சிவா இந்தியாவில் பிறந்த திகதி சரியாக தெரியாமல் பாஸ்போர்ட் அதாவது கடவுச்சீட்டு எடுக்க முடியுமா?

நம்மூரில் கொடுக்கமாட்டார்கள்....

சிவா.ஜி
08-09-2007, 10:22 AM
நல்லவர்களுக்கு எல்லா நாளும் பிறந்த நாள் தான் சிவா......!

நீங்கள் கூறியது போன்றே, இதனால் பல நன்மைகளும் உண்டே.....
நன்மைகளை அலசி மனமகிழ்வுடனிருக்கும் உங்கள் மனப்பாங்கிற்கு பாராட்டுக்கள்!!!.

அதே அதே...ஓவியன். டென்ஷன் இல்லாத வாழ்க்கை.எப்ப சௌகரியப்படுகிறதோ அப்போது பிறந்தநாள் கொண்டாடிக்கொள்ளலாம்...ராசியிமில்லை பலனுமில்லை..ஹா..ஹா..ஹா..

மனோஜ்
08-09-2007, 10:58 AM
பிறந்தநாளை தேடும் சிவா சிக்கிரமா கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்

பூமகள்
08-09-2007, 11:01 AM
அருமையான வாய்ப்பு...:smartass:

பிடித்த தினத்தை பிறந்த நாள் ஆக்கிக் கொண்டாடலாம்..:icon_blush:
பெரிய விசயம் ஜாதகம் இன்றி அமைதியாய் நடந்து முடிந்த உங்களின் திருமணம்.
அந்த தோசம்.. இந்த தோசம் என்று சொல்லி உயிரை வாங்கும் சாமாச்சாரங்கள் இன்றி நிம்மதியாய் இருங்க அண்ணா.:icon_shades:

எனக்கு அந்த வாய்ப்பு இல்லாமல் போச்சே...!:medium-smiley-100:

ம்.... எப்படியோ.. 29ஓ 30ஓ உங்களுக்கு பிப்ரவரி 29ம் தேதி பிறந்த நாள் இல்லாமல் போனது மிக்க சந்தோசம் அண்ணா.:sport-smiley-018:

உங்களின் உணர்வுகளை எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றிகள் சிவா :icon_35:அண்ணா.

சிவா.ஜி
08-09-2007, 11:38 AM
அது சரி சிவா இந்தியாவில் பிறந்த திகதி சரியாக தெரியாமல் பாஸ்போர்ட் அதாவது கடவுச்சீட்டு எடுக்க முடியுமா?

நம்மூரில் கொடுக்கமாட்டார்கள்....

இங்கே இந்தியாவிலும் கொடுக்க மாட்டார்கள் நாரதரே..ஆனால் பள்ளியில் சேர்க்கும்போது தலைமையாசிரியராகவே ஏதாவது திகதி சான்றிதழில் குறிப்பிட்டுவிடுவார் அதுவே நிரந்தரமான அதிகாரபூர்வ பிறந்த தேதியாகிவிடும்.அதை வைத்துத்தான் கடவுச்சீட்டு வழங்குவார்கள்.

சிவா.ஜி
08-09-2007, 11:40 AM
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி பூமகள்.நீங்கள் சொன்னது மிகச்சரி.தொல்லையில்லா வாழ்க்கை ஆண்டவன் புண்ணியத்தில் வாய்த்திருக்கிறது.

அக்னி
08-09-2007, 01:39 PM
விசித்திரமான சம்பவம்தான்... சில சமயங்களில் வேதனையையும் தரலாம். ஆனால், நீங்கள் ஒரு புரிந்துணர்வு உள்ளவர் என்பதனால், அதனை சுவாரசியமானதாக்கிவிட்டீர்கள்...

இன்று, தமிழீழத்திலே, யுத்தத்தினால் அனாதைகளான சிறுவர் சிறுமியர் அதிகம். வருங்காலத்தில் இந்தப் பிரச்சினை அதிகமானோரிடம் எழும்பும். வயதை அறிவது என்பதைவிட, தாய் தந்தையரை அறியாதவர்கள் என்பதே, அவர்களுக்கு அதிக பாதிப்பைத் தரும்...

எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் பெற்றோருக்குத் தலைவணங்குகின்றேன்.
தமக்குக் கிட்டாத கல்விச்செல்வத்தை, தமது பிள்ளைகளுக்கு நிறைவாக்கி உழைத்த அவர்கள் உன்னதமானவர்கள். அதை உணர்ந்து, நீங்களும் ஊக்கம் காட்டி உயர்ந்திருக்கின்றீர்கள்...
உங்கள் சம்பவத்தின் சுவாரசியத்திற்குள் ஒளித்திருக்கும் உண்மை, உங்கள் பெற்றோரில் எனக்கு மதிப்பைத் தருகின்றது. உங்களில் பிடிப்பைத் தருகின்றது.

வணக்கங்களும் வாழ்த்துக்களும்...

சிவா.ஜி
08-09-2007, 01:45 PM
ஆமாம் அக்னி எங்களை பெற்றோரை என்றும் வணங்கவேண்டும்.படிக்கத்தெரியவில்லையென்றாலும் என் ப்ரோக்ரஸ் ரிப்போர்ட்டைக் கையில் வைத்துக்கொண்டு கண்கலங்கிய என் தாயின் முகம் இன்னும் என் இதயத்தில் இருக்கிறது.பிற்காலத்தில் எந்தாயாருக்கு அவருடைய பெயரை மட்டும் எழுதச் சொல்லிக் கொடுத்தேன்.
தமிழீழத்தின் தளிர்களின் வேர் தேடும் வேதனை நெஞ்சை பிழிகிறது...காலம்தான் பதில் சொல்லவேண்டும் இதற்கெல்லாம்.
மிக்க நன்றி அக்னி.

lolluvathiyar
08-09-2007, 01:46 PM
நல்ல அனுபவம் சிவா ஜி, எப்படியோ உங்கள் பிறந்த தேதி கிடைக்க வில்லை. பிறந்த தேதி தெரிந்து கொள்ள அனைவருக்கும் ஆவல் இருப்பது இயல்பு. உங்கள் பெற்றோர்களுக்கு தேதி நினைவில் இல்லாவிட்டாலும். பிறந்த வருடம், கிழமை தெரிகிறது. அதே சமயம் பிறந்தது அம்மாவாசைக்கு/ பௌர்னமிக்கு எத்தனை நாளைக்கு முன் பின் என்பது உங்கள் தாயாருக்கு நினைவிருக்கலாம் என்று கருதுகிறேன். அதை வைத்து ஓரளவுக்கு சார்லிஸ்ட் பன்ன முடியும்


அது சரி சிவா இந்தியாவில் பிறந்த திகதி சரியாக தெரியாமல் பாஸ்போர்ட் அதாவது கடவுச்சீட்டு எடுக்க முடியுமா?

நம்மூரில் கொடுக்கமாட்டார்கள்....

தாரளமாக எடுக்க முடியும்.
பிறந்த தேதி உறுதி செய்ய 1989 க்கு பிறகு பிறந்தவர்களுக்கு மட்டுமே பிறப்பு சான்றிதல் கட்டாயம். அதற்க்கு முன் பிறந்தவர்களுக்கு பள்ளி சான்றிதழில் இருக்கு பிறந்த தேதி யை ஆதாராமாக எடுத்து கொள்வார்கள். பள்ளி சான்றிதளும் இல்லாதவர்களுக்கு நோட்டரி வக்கீல் மூலம் அபிடவிட் தயார் செய்து அதை ஆதரமாக தரலாம் என்று இந்திய சட்டம் இருகிறது. அதில் தோராயமாக தெரிந்த தேதி என்று குறிப்பிடலாம். சாட்சியாகா பெரியவர்கள் யாரவது சிலர் கை எழுத்து போட வேண்டும்

சிவா.ஜி
08-09-2007, 01:50 PM
அதே சமயம் பிறந்தது அம்மாவாசைக்கு/ பௌர்னமிக்கு எத்தனை நாளைக்கு முன் பின் என்பது உங்கள் தாயாருக்கு நினைவிருக்கலாம் என்று கருதுகிறேன். அதை வைத்து ஓரளவுக்கு சார்லிஸ்ட் பன்ன முடியும்


அதன்படி முயன்றுதான் கிட்டத்தட்ட ஒத்துவந்த ஜூன் 29−ஆம் தேதியை என் பிள்ளைகள் என் பிறந்தநாளாக கடைபிடிக்கிறார்கள்.அவர்களுக்கு ஒரு சந்தோஷம்.இருந்தாலும் ஒரு கிண்டல் 29−ஆ,30−ஆ என்று..எனக்கு இதில் ஒரு சந்தோஷம்.

இளசு
08-09-2007, 02:07 PM
சிவா,

அப்பாவின் ஆட்டுக்கறி தத்துவம் எனக்குப் பிடிக்கிறது..
மார்கழி, ஆடியில் மண்டபம் அமர்த்துவது போல!!!!

அம்மாவின் கண்கலங்கல் − இப்போதும் கலங்கவைக்கிறது..
வாழும் தெய்வங்கள் நம் பெற்றோர்!


பிறந்தநாள் சரியாகத் தெரிபவர்களுக்கு
இப்படி பிள்ளைகளின் சுகமான கிண்டல் கிடைக்குமா?

என் நண்பனுக்கு தமிழாண்டுப்படி ஒன்று −
பள்ளிச் சான்றுப்படி ஒன்று −
அப்போதைய நண்பியை அசத்த ஒன்று
என வருடம் நாலைந்து முறை பிறந்தநாள் வரும்!!!!

சில குழப்பங்கள் − சுகமானவை!

காவியா
08-09-2007, 02:11 PM
நன்பரே... படித்தேன் ரசித்தேன் நன்பரே... நீங்கள் சொன்னது யாவும் நிஜமே...

காவியா...

சிவா.ஜி
08-09-2007, 02:12 PM
உங்கள் நன்பனின் பிறந்தநாள் தத்துவம் உண்மையிலேயே எனக்கு புன்முறுவல் வரவழைத்தது.எத்தனை சரியாக சொன்னீர்கள் இளசு...பிள்ளைகளின் சுகமான கிண்டல்..ஆஹா...இதைப்படிக்கும்போதே சுகமாக இருக்கிறது.மனம் நிறைந்த நன்றிகள்

சிவா.ஜி
08-09-2007, 02:13 PM
நன்பரே... படித்தேன் ரசித்தேன் நன்பரே... நீங்கள் சொன்னது யாவும் நிஜமே...

காவியா...

தோழி காவியா உங்களின் முதல் பின்னூட்டமெனக்கு.மிக்க நன்றிகள்.உங்கள் படைப்புகளையும் ரசிக்க ஆவல்.