PDA

View Full Version : ஒளிதந்தாய்இலக்கியன்
13-08-2007, 08:00 AM
http://img341.imageshack.us/img341/9854/naamloosuy9.png (http://imageshack.us)

உன்னுடைய முத்தங்கள்
என் முகத்தில் கறுப்பாக

உன் ஒளியில் நானும்
என் நிழலில் நீயும்

என் மூச்சுக்காற்று-உனை
அணைக்கத்தூண்டியது

கண்களின் காமத்துக்கு
நீயும் ஒளியானாய்-அன்று

என் ஆற்றல்களுக்கு
தீனி போட்டாய்

இருள் களைந்து
அருள் தந்த

குப்பிவிளக்கே
நன்றியடி.....

விகடன்
13-08-2007, 08:03 AM
குப்பி விளக்கிற்கு ஒரு நன்றி நவிலல் கவிவடிவில்
பாராட்டுக்கள் இலக்கியன்

இலக்கியன்
13-08-2007, 08:05 AM
குப்பி விளக்கு என்பது போத்தலில் செய்யப்பட்ட மண் எண்ணை விளக்கு. ஈழத்தில் இலங்கை அரசினால் தமிழ் பகுதியில் பொருளாதரத்தடைகள் விதிக்கப்பட்ட வேளையில் அதிகமான மாணவர்களுக்கு படிக்க உதவியது இந்த விளக்கு அந்த நினைவுகளை மீட்டு அந்த விளக்கை பெண்ணாக சொல்லி அதற்கு ஒரு நன்றி சொல்லும்பாங்கில் எழுதப்பட்டது இந்தவரிகள்

இலக்கியன்
13-08-2007, 08:07 AM
குப்பி விளக்கிற்கு ஒரு நன்றி நவிலல் கவிவடிவில்
பாராட்டுக்கள் இலக்கியன்

உங்கள் கருத்துக்கு நன்றி விராடன்.
நன்றி மறப்பது நன்றல்ல அதனால் குப்பி விளக்குக்கு ஒரு நன்றி

விகடன்
13-08-2007, 08:08 AM
ஆமம். பசுமரத்தாணி போன்று இன்றும் எனது நினைவலைகளில். குப்பி விளக்கு என்பதை விட சிக்கன விளக்கு என்றுதான் அதற்கு பொருத்தமான பெயராக அமைந்திருந்தது. ஜாம்போத்தலும் சைக்கிள் வால்வு கட்டை அடியும் திரியும் இருந்தாலே போதும். எந்த கடும் காற்றிற்கும் அணையாது வெளிச்சத்தை தரும் அற்புத விளக்கு.

இப்போதுகூட இருக்கிறது இலக்கியன்..

விகடன்
13-08-2007, 08:09 AM
நன்றி மறப்பது நன்றல்ல அதனால் குப்பி விளக்குக்கு ஒரு நன்றி

உண்மைதான். நான் இன்று இந்த நிலையிலாவது இருப்பதற்கு காரணம், எனது அந்த சிறு பிராயத்தில் பிரகாசித்த அந்த விளக்குத்தான். :icon_good:

இலக்கியன்
13-08-2007, 08:17 AM
ஆமம். பசுமரத்தாணி போன்று இன்றும் எனது நினைவலைகளில். குப்பி விளக்கு என்பதை விட சிக்கன விளக்கு என்றுதான் அதற்கு பொருத்தமான பெயராக அமைந்திருந்தது. ஜாம்போத்தலும் சைக்கிள் வால்வு கட்டை அடியும் திரியும் இருந்தாலே போதும். எந்த கடும் காற்றிற்கும் அணையாது வெளிச்சத்தை தரும் அற்புத விளக்கு.

இப்போதுகூட இருக்கிறது இலக்கியன்..

ஈழத்து உறவு என்பதால் அதனை உங்களாலும் புரிந்து கொள்ள முடியும்
இந்தளவுக்கு நானும் எழுதக்காரணம் அந்த சிக்கன விளக்குத்தான். இன்றும் அந்த விளக்கு அங்கு பாவிக்கப்படிகின்றது. அழகான விளக்கம் தந்தீர் நன்றி விராடன்

இலக்கியன்
13-08-2007, 08:18 AM
உண்மைதான். நான் இன்று இந்த நிலையிலாவது இருப்பதற்கு காரணம், எனது அந்த சிறு பிராயத்தில் பிரகாசித்த அந்த விளக்குத்தான். :icon_good:

ஆம் நண்பரே

ஓவியன்
19-08-2007, 06:27 PM
குப்பி விளக்கில் குனிந்து படித்தாலும்
குட்டக் குட்டக் குனிய மாட்டோம்............

என்று ஈழத்தில் நாம் மாணவர் பேரணி ஒன்றில் கோசமிட்டது என் ஞாபகத்திற்கு வந்தது இலக்கியன்..........

பொருளாதாரத் தடைகள் எங்களைப் பிடித்து உலுக்கிய போது எங்கள் கல்விக் கண்களைத் திறந்ததே இந்த குப்பி விளக்குகள் தானே..........

குப்பிவிளக்கிற்கு பெருமை சேர்த்த இலக்கிய வரிகளுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்...........

அமரன்
19-08-2007, 07:03 PM
ஆகா...பலரது ஆட்டோகிராஃப்களை காண்பிக்கும் கவிதை.

மின்சாரத்தடை சிம்னியை நாடவைவைக்க
குப்பைக்கு போயின நாலடி மின் விளக்குகள்.

எரிபொருள் தடைபழைய குப்பிகளை தேடவைக்க
புத்தகத்தில் பதித்த எழுத்துகளை தேடவைத்தன
புத்தக விலையும் எழுதுகோல் விலையும்.

குனிந்து எழுத்துதேடுகையில் தன்னிச்சையாக ஒரு கை
கழுத்தைத் தடவும். இருகைகள் கண்களைத் துடைக்கும்.

தாத்தா சொல்வார்.
இப்படியாவது சமத்துவபுரமானதே எமது ஊர்...!

விசும்பலும் பெருமூச்சும் கைதட்டலாய் மாற
இராச உடையில் மக்கள் திலகம் நடப்பது போல்
கையில் சுருட்டிய பட்டத்துடன் நான்
என்னைபோல பலர் பின் தொடர...!.

நான் முயற்சித்து முடியாது போன கருக்கள்
பல தாங்கி வருகிறது உங்கள் கவிதை.
குனிந்தது நிமிருவதற்கே இலக்கியன்...
நம்பிக்கையுடன் காத்திருப்போம். சாதிப்போம்.

கவிதையில் நிறைகள் பல. பாராட்டுக்கள்.
நிறைகளை மட்டும் சொல்வது நண்பனுக்கு அழகல்ல..
இரு வரிகள் நெருடுகிறன இலக்கியன்.

உன் ஒளியில் நானும்
என் நிழலில் நீயும்

எமது நிழல் குப்பிவிளக்குக்கு குடைபிடிக்க
அனுமதிப்பதில்லை நம் நாட்டு அரசியல்.
தொடருங்கள்....உங்கள் பயணத்தை.

இளசு
19-08-2007, 09:17 PM
என்ன ஒரு அருமையான கவிதை!

மெல்லிய சிலேடையால் மனதை அலையவிட்டு
சில்லென வாழ்க்கை நிகழ்வைச் சொல்லியவிதம்..

குனிந்து வாசிக்கும் கவனத்தில்
முன்நெற்றி மயிர் பொசுங்கிய
வாசம் தந்த விளக்கின் மேல்
பாசம் வைத்த ....

இலக்கியன், ஓவியன், அமரன் அணியில் நானும்!

நன்றி விளக்கே!

aren
20-08-2007, 12:15 AM
குப்பிவிளக்கின்
மகிமை அருமை
கரெண்ட்
இல்லாத போதே
தெரியும்!!!

அதை அருமையாக வெளிப்படுத்துகிறது உங்கள் கவிதை. பாராட்டுக்கள்.
தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

இலக்கியன்
21-08-2007, 08:16 AM
குப்பி விளக்கில் குனிந்து படித்தாலும்
குட்டக் குட்டக் குனிய மாட்டோம்............

என்று ஈழத்தில் நாம் மாணவர் பேரணி ஒன்றில் கோசமிட்டது என் ஞாபகத்திற்கு வந்தது இலக்கியன்..........

பொருளாதாரத் தடைகள் எங்களைப் பிடித்து உலுக்கிய போது எங்கள் கல்விக் கண்களைத் திறந்ததே இந்த குப்பி விளக்குகள் தானே..........

குப்பிவிளக்கிற்கு பெருமை சேர்த்த இலக்கிய வரிகளுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்...........

ஓவியன் உங்கள் நினைவுகளை மீட்டீர்கள். நன்றி

சிவா.ஜி
21-08-2007, 08:20 AM
எத்தனை கீழ்நடுத்தரக் குடும்பங்களிலிருந்து பல அப்துல் கலாம்கள் உதயமாக இந்த குடுவை விளக்குகள் உதவியுள்ளன.
அதற்கோர் கவிதையை அற்புதமாய் படைத்த இலக்கியனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இலக்கியன்
21-08-2007, 08:32 AM
ஆகா...பலரது ஆட்டோகிராஃப்களை காண்பிக்கும் கவிதை.

மின்சாரத்தடை சிம்னியை நாடவைவைக்க
குப்பைக்கு போயின நாலடி மின் விளக்குகள்.

எரிபொருள் தடைபழைய குப்பிகளை தேடவைக்க
புத்தகத்தில் பதித்த எழுத்துகளை தேடவைத்தன
புத்தக விலையும் எழுதுகோல் விலையும்.

குனிந்து எழுத்துதேடுகையில் தன்னிச்சையாக ஒரு கை
கழுத்தைத் தடவும். இருகைகள் கண்களைத் துடைக்கும்.

தாத்தா சொல்வார்.
இப்படியாவது சமத்துவபுரமானதே எமது ஊர்...!

விசும்பலும் பெருமூச்சும் கைதட்டலாய் மாற
இராச உடையில் மக்கள் திலகம் நடப்பது போல்
கையில் சுருட்டிய பட்டத்துடன் நான்
என்னைபோல பலர் பின் தொடர...!.

நான் முயற்சித்து முடியாது போன கருக்கள்
பல தாங்கி வருகிறது உங்கள் கவிதை.
குனிந்தது நிமிருவதற்கே இலக்கியன்...
நம்பிக்கையுடன் காத்திருப்போம். சாதிப்போம்.

கவிதையில் நிறைகள் பல. பாராட்டுக்கள்.
நிறைகளை மட்டும் சொல்வது நண்பனுக்கு அழகல்ல..
இரு வரிகள் நெருடுகிறன இலக்கியன்.

எமது நிழல் குப்பிவிளக்குக்கு குடைபிடிக்க
அனுமதிப்பதில்லை நம் நாட்டு அரசியல்.
தொடருங்கள்....உங்கள் பயணத்தை.

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் சுட்டிக்காட்டிய கருத்துக்கு நன்றி .

இலக்கியன்
21-08-2007, 08:34 AM
என்ன ஒரு அருமையான கவிதை!

மெல்லிய சிலேடையால் மனதை அலையவிட்டு
சில்லென வாழ்க்கை நிகழ்வைச் சொல்லியவிதம்..

குனிந்து வாசிக்கும் கவனத்தில்
முன்நெற்றி மயிர் பொசுங்கிய
வாசம் தந்த விளக்கின் மேல்
பாசம் வைத்த ....

இலக்கியன், ஓவியன், அமரன் அணியில் நானும்!

நன்றி விளக்கே!

இளசு ஆரென் இருவரின் கருத்துக்கும் நன்றி

இலக்கியன்
21-08-2007, 08:36 AM
எத்தனை கீழ்நடுத்தரக் குடும்பங்களிலிருந்து பல அப்துல் கலாம்கள் உதயமாக இந்த குடுவை விளக்குகள் உதவியுள்ளன.
அதற்கோர் கவிதையை அற்புதமாய் படைத்த இலக்கியனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஆம் நண்பரே உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி

ஓவியன்
24-08-2007, 05:34 AM
குனிந்து வாசிக்கும் கவனத்தில்
முன்நெற்றி மயிர் பொசுங்கிய
வாசம் தந்த விளக்கின் மேல்
பாசம் வைத்த ....

இலக்கியன், ஓவியன், அமரன் அணியில் நானும்!
நன்றி விளக்கே!

உண்மைதான் அண்ணா!
எத்தனையோ தடவை நெற்றி மயிர் பொசுங்கியிருக்கும்
அதிகம் படிக்க வேண்டும் என்ற ஆசையில்
தூக்க கலக்கத்தில் குப்பி விளக்கை சரித்து
பாட புத்தகங்களை எரித்த அனுபவங்களும் ஏராளம்.........

ஆனால் இன்று நினைத்துப் பார்க்க
நெஞ்சில் பெருமை பொங்குகிறது......
எம்மை வாழ வைத்த
தெய்வ விளக்கு அது..................!

பி.கு − 1990 ஆண்டிலிருந்து 2000 ஆண்டு வரை ஈழத்தில் எங்கள் பகுதியில் மின்சாரத் தடையும் எரிபொருள் தடையும் அமூலில் இருந்தது − அப்போதெல்லாம் கை கொடுத்தவை இந்த விளக்குகளே.........!

இலக்கியன்
25-08-2007, 08:30 AM

ஆம் உங்கள் நினைவுகளையும் மீட்டீர்கள் நண்பனே

பூமகள்
26-08-2007, 05:27 PM
உன்னுடைய முத்தங்கள்
என் முகத்தில் கறுப்பாக
ஆகா...... அருமையான வரிகள்.. விளக்கின் கருப்புப் புகைக்கறை உங்களுக்கு முத்தமாய்...!! :icon_good:

உன் ஒளியில் நானும்
என் நிழலில் நீயும்
அழகாய்ச் சொன்னீர்... குப்பி விளக்கின் ஒளியில் நாம் படிப்போம்.. நம் குனிந்து படிக்கையில் நம் நிழல் பட்டு குப்பி விளக்கு நம் நிழலில்... நான் புரிந்து கொண்டது சரி தானே இலக்கியரே ??

என் மூச்சுக்காற்று-உனை
அணைக்கத்தூண்டியது

குப்பி விளக்கிலிருந்து வரும் கார்பன் டை ஆக்சைடு வாயு நம் நுரையீரல் தொட்டு மூச்சடைக்கும் சமயம் நம் எண்ணம் அதை அணைக்கத் தூண்டும்.. அருமை.. :icon_good:

அழகான பாடுபொருள் ஒன்றாய் இருக்க, பாடலின் அர்த்தத்தை கடைசி வரி வரும் வரை மறைத்து வேறு பொருள் பட வைத்த உமது கவித்திறன் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது... பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்..!!

ம்ம்... மறந்தே விட்டேனே..... :sprachlos020:
நானும் என் பள்ளிக் காலங்களில் குப்பி விளக்கில் படித்த அனுபவம் உண்டு. முன் தலை முடி கருக்கிய சம்பவங்களும் உண்டு. என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்த குப்பி விளக்கிற்கு என் பணிவான நன்றிகளை சமர்பிக்கிறேன்.:icon_give_rose:

உங்கள் குப்பி விளக்கிற்கு என் இ−பணம் 300 அன்பளிப்பு.. வாழ்த்துக்கள்!

சாராகுமார்
26-08-2007, 05:46 PM
இலக்கியலன் கவிதையும் அருமை.அமரன் அவர்களின் கவிதையும் அருமை.

அக்னி
28-08-2007, 09:38 AM
கனதியான இருளின்
அடர்த்திக்குள்,
தடைகள் மீறி
ஒளிர்ந்த குப்பிவிளக்கால்,
இன்று
சுடரும் அறிவுச்சுடர்கள்...

குப்பிவிளக்கிற்கான நன்றி நவிலல், நன்று...
பாராட்டுக்கள் இலக்கியன்...
அருமையான பின்னூட்டங்களைத் தந்த அனைவருக்கும் பாராட்டுக்கள்...

இலக்கியன்
29-08-2007, 06:12 PM
பூமகள் சாராகுமார் அக்னி அணைவரின் கருத்துக்கும் நன்றி