PDA

View Full Version : பிரபஞ்ச பிரயாசை



பூமகள்
13-08-2007, 06:47 AM
http://img02.picoodle.com/img/img02/9/8/13/f_mainimagefem_ee1d507.jpg
பூலோகம் தாண்டி
ஓசோன்
ஓட்டை வழியே..
பிரபஞ்சம்
பார்க்கிறேன்...

சொல்லவொண்ணா
எண்ணச்சிதறல்களாய்
நட்சத்திரங்கள்.. - விண்வெளியில்
சிறு துகளின் துகளாய்
மானுடம்..

உலகிற்கு உரைக்கப்படாத
நம் நேசத்தைப் போலவே..
உணரப்படாத உன்னத உண்மைகள்
ஊழியின் கையில்
பிரபஞ்ச மிச்சங்களாய்...!

சிவா.ஜி
13-08-2007, 06:53 AM
துகள்களின் துகள்கள்தானே அகல..அகல...கால் பரப்பி அண்டத்தை ஆள ஆசைப்படுகிறது. அதைப்பார்த்து அண்டம் புன்முறுவல் பூக்கிறது...பாவம் இந்த துகள்கள்.. பிரபஞ்ச மிச்சங்கள் சொல்லும் கோடானு கோடி உண்மைகளில் ஒன்றையாவது,என்றைக்கு மானிடன் அறிந்து கொள்கிறானோ அன்று இந்த அண்டம் சொல்லும்...அட...!
உயர்ந்த சிந்தனை பூமகள். வாழ்த்துக்கள்.

பூமகள்
13-08-2007, 07:00 AM
துகள்களின் துகள்கள்தானே அகல..அகல...கால் பரப்பி அண்டத்தை ஆள ஆசைப்படுகிறது. அதைப்பார்த்து அண்டம் புன்முறுவல் பூக்கிறது...பாவம் இந்த துகள்கள்.. பிரபஞ்ச மிச்சங்கள் சொல்லும் கோடானு கோடி உண்மைகளில் ஒன்றையாவது,என்றைக்கு மானிடன் அறிந்து கொள்கிறானோ அன்று இந்த அண்டம் சொல்லும்...அட...!
உயர்ந்த சிந்தனை பூமகள். வாழ்த்துக்கள்.

நன்றிகள் சகோதரரே...!
மானுடம் அறியா பல விடயங்கள் அண்டத்தாயின் கருவறையில்! அறிந்துவிட துடிக்கும் ஆவலில் மனிதனின் வாழ்வு கரையும்...!

ஓவியன்
13-08-2007, 07:02 AM
உணரப் படாத
உண்மைகள் ஊழியின்
கைகளில் மட்டுமல்ல
எம் சமூகத்தின்
பார்வையிலும் தான்......

உறைக்காது உணராதவரை
மன்னித்து விடலாம்
ஆனால்.....
நன்றே உறைத்தும்
உணராதது போல்
நடிப்போரை என்ன செய்ய?

ஓசோனின் துளை வழி பிரபஞ்சம் நோக்கும் உங்கள் கற்பனையில் எனை இழந்தேன் - பாராட்டுக்கள் பூமகள்!.

பூமகள்
13-08-2007, 07:15 AM
உணரப் படாத
உண்மைகள் ஊழியின்
கைகளில் மட்டுமல்ல
எம் சமூகத்தின்
பார்வையிலும் தான்......

உறைக்காது உணராதவரை
மன்னித்து விடலாம்
ஆனால்.....
நன்றே உறைத்தும்
உணராதது போல்
நடிப்போரை என்ன செய்ய?

ஓசோனின் துளை வழி பிரபஞ்சம் நோக்கும் உங்கள் கற்பனையில் எனை இழந்தேன் - பாராட்டுக்கள் பூமகள்!.


அருமையாக உமது ஆதங்கத்தை கவித்துவத்தோடு இயம்புனீர்கள். பாராட்டுதலுக்கு நன்றி தோழரே...! தொடரட்டும் உமது சாதனைகள்...!

அமரன்
13-08-2007, 01:41 PM
ஒரு கவிதையில் இரு கருத்துகளை புதைத்துள்ளார் பூமகள்.

உலகிற்கு உரைக்கப்படாத
நம் நேசத்தைப் போலவே..
புடவையில் என்னதான் வர்ணங்கள் இருந்தாலும் ஜரிகை (பார்டரை புடவையில் எப்படி சொல்வது என்று தெரியாதே) எடுப்பாக இருக்கவேண்டும். அதுபோல இங்கே மானுடம் பரந்த புடவையாக ஜரிகையாக காதல். பாராட்டுக்கள் பூமகள். தொடருங்கள்.
ஓவியரே..பின்னுகின்றீர்.


உன்னில் என்னை
காண்பாயா..?
காதலிக்க மட்டுமல்ல
மானுடமும் பெருக்க.

இனியவள்
13-08-2007, 04:04 PM
பூமகளின் கவிதையும்
அதற்கு பின்னூட்டமாய் வந்த
ஓவியரின் பதில் கவிதையும் அருமை
வாழ்த்துக்கள் இருவருக்கும்

aren
13-08-2007, 04:10 PM
புது உறுப்பினர்
பூமகள்
புதுமைப்பெண்ணாக
அசத்துக்கிறார்
அதற்கு
ஓவியனின்
பின்னுட்டம்
மெருகேற்றுகின்றது.

பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

இதயம்
13-08-2007, 04:57 PM
நம் மன்றத்தின் கவிமகளாக வருகை தந்த பூமகளின் கவிதைகள் மனதை கொள்ளை கொள்கின்றன. குறிப்பாக இந்த கவிதையில் அண்டவெளி அறிவியலும், மானுட தத்துவமும் சொன்ன பூமகளுக்கு பாராட்டு மாலைகள்..!

ஓவியா
13-08-2007, 10:40 PM
அருமையான எண்ணம், காவிதை சிந்தனையை ஓஷோனுடன் இணைத்து பார்பதர்க்கே திறமைகள் பல வேண்டும். பாராட்டுக்கள். :sport-smiley-014:

இலக்கியன்
14-08-2007, 09:30 AM
புதுமையாக கவிதைகள் படைக்கும் பூமகளுக்கு வாழ்த்துக்கள்

அக்னி
14-08-2007, 01:58 PM
பிரபஞ்சம் ஓர் நாள்
வெல்லப்படலாம்...
ஆனால், அன்று...
மானுடம் பஞ்சமாக,
தேடலாய் போய்விடுமோ...
இன்று இங்கிருந்து தேடல்.
நாளை அங்கிருந்து நாடல்.
தொடரும்... என்றும்...
இன்று, நேசம் உணராவிட்டால்...

பாராட்டுக்கள் பூமகள்...
புதுமையான பார்வையில் விரியும் பூவாக உங்கள் வரிகள்...

பூமகள்
07-09-2007, 02:19 PM
உங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள் இலக்கியரே...!

பூமகள்
07-09-2007, 03:00 PM
பிரபஞ்சம் ஓர் நாள்
வெல்லப்படலாம்...
ஆனால், அன்று...
மானுடம் பஞ்சமாக,
தேடலாய் போய்விடுமோ...
இன்று இங்கிருந்து தேடல்.
நாளை அங்கிருந்து நாடல்.
தொடரும்... என்றும்...
இன்று, நேசம் உணராவிட்டால்...

பாராட்டுக்கள் பூமகள்...
புதுமையான பார்வையில் விரியும் பூவாக உங்கள் வரிகள்...

மிக்க நன்றிகள் அக்னியாரே...!!
உங்களின் சிந்தனை அபாரம்.. அழகிய கவிப் பின்னூட்டம்..
நன்றிகள் கோடி..!

அறிஞர்
07-09-2007, 08:21 PM
ஒரு சிந்தனையில்.. மற்றொரு சிந்தனை உருவான விதம் அருமை...

இரு கவிஞர்களின் வரிகள்.. மனதை கொள்ளை கொள்கிறது...

பூமகள்
07-09-2007, 08:29 PM
மிக்க நன்றிகள் அறிஞர் அண்ணா.
பின்னூட்டம் கண்டு அளவிலா மகிழ்ச்சி எனக்கு!!

வசீகரன்
08-09-2007, 05:24 AM
உலகிற்கு உரைக்கப்படாத
நம் நேசத்தைப் போலவே.. உணரப்படாத உன்னத உண்மைகள்
ஊழியின் கையில் பிரபஞ்ச மிச்சங்களாய்...!

வியக்க வைக்கும் வரிகள்......!

பாராட்டுக்க*ள் ந*ண்ப*ரே....!


வசீகரன்

பூமகள்
08-09-2007, 05:59 AM
மிக்க நன்றிகள் வசீகரன் அன்பரே..!

சுகந்தப்ரீதன்
08-09-2007, 11:26 AM
யக்கா..சில நேரம் புரிஞ்சிக்கவே முடியல...உங்களோட கவிதைகளை...ஆனாலும் ரசிக்கதக்க வகையில் எழுதுறிங்க....எப்படி எழுதுறீங்கன்னு சொன்னா நாங்களும் கொஞ்சம் நல்லா எழுதி பார்ப்போம்ல....வாழ்த்துக்கள் அக்கா..!

பூமகள்
08-09-2007, 11:35 AM
மிக்க நன்றிகள் அன்புத் தம்பி ப்ரீதன் அன்பரே..!
உங்களின் ஊக்கம் கண்டு மகிழ்ச்சி..
நான் எழுதியது புரியவில்லையா??

கவிதைக் கரு:
உலகிற்கு உரைக்கப்படாத காதலைப் போல பிரபஞ்சத்தில் நிறைய ரகசியங்கள் மனிதன் தேடல்களுக்கு அப்பால் இன்னும் உணரப்படாமலே இருக்கிறது என்ற கருத்தைத் தான் பிரபஞ்ச பிரயாசையில் சொல்லியிருந்தேன்.

இப்போது புரிகிறதா என்று சொல்லுங்கள் சகோதரரே....??

இணைய நண்பன்
10-09-2007, 11:16 PM
"உலகிற்கு உரைக்கப்படாத
நம் நேசத்தைப் போலவே..
உணரப்படாத உன்னத உண்மைகள்
ஊழியின் கையில்
பிரபஞ்ச மிச்சங்களாய்...!"
உலகிற்கு எடுத்துச்சொல்லாத காதலை பிரபஞ்சத்தின் தோற்றத்தை வைத்து கவி படைத்து விட்டீர்கள்.நல்ல கவிதை

இளசு
11-09-2007, 06:07 AM
ஓசோன் ஓட்டையால் இப்படி ஓர் பயன் உண்டா???

ஆச்சரியமான உள்ளடக்கம் கவிதையில்!
பாராட்டுகள் பாமகள்!

எதிர்வினையாய் வந்த சிவா, ஓவியன், அக்னி ஆக்கங்கள்
இதுபோல் நல்ல படைப்புகளால் விளையும் நன்மைகள்!

பாராட்டுகள் அனைவருக்கும்!

பரந்து விரிந்து புரிபடாமல்
அகன்று சுருங்கி வெடித்து
இருண்டு ஒளிர்ந்து கொதித்துக்குளிர்ந்து
இன்னும் முழுமையாய் அறியப்படாமல் --
மனித மனமே ஒரு பிரபஞ்சம்..
அதில் காதலும் புகுந்தால்????

பிச்சி
11-09-2007, 06:24 AM
கவிதை சூபெர் பிரபஞ்சத்திற்கு கவிஞர்களுக்கும் இடைவெளி ரொம்ப குறைவு

பூமகள்
11-09-2007, 06:42 AM
மிக்க நன்றிகள் இக்ராம் அண்ணா.
உங்களின் பின்னூட்டத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.!!

பூமகள்
11-09-2007, 06:46 AM
ஓசோன் ஓட்டையால் இப்படி ஓர் பயன் உண்டா???

ஆச்சரியமான உள்ளடக்கம் கவிதையில்!
பாராட்டுகள் பாமகள்!

பரந்து விரிந்து புரிபடாமல்
அகன்று சுருங்கி வெடித்து
இருண்டு ஒளிர்ந்து கொதித்துக்குளிர்ந்து
இன்னும் முழுமையாய் அறியப்படாமல் --
மனித மனமே ஒரு பிரபஞ்சம்..
அதில் காதலும் புகுந்தால்????

மிகுந்த நன்றிகள் அண்ணா. உங்களின் அழகிய பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தது என் மனம்.:icon_rollout:

அருமை கவி படித்துவிட்டீர்...!! கூடவே.... "பாமகள்" என்று என் புதுப்பெயரையும் எனக்கு மன்றத்தில் வைத்துவிட்டீரே....!!;)
நன்றிகள்..!!:innocent0002::nature-smiley-002:

பென்ஸ்
11-09-2007, 07:01 AM
முத்தமிடும்போது கண்கள் மூடிவிடுமாம்...
மனது உணரும்போது, கண்கள் எதற்க்கு (முடிந்தால் இளசு விளக்கலாமா, இது ஏன் என்று..??)
அது போல் மனதால் இந்த கவிதையை உணர்ந்தேன், கண்களால் வாசித்த பின்னும்...

நல்ல கவி தோழி...

பிச்சி
11-09-2007, 07:04 AM
முத்தமிடும்போது கண்கள் மூடிவிடுமாம்...
மனது உணரும்போது, கண்கள் எதற்க்கு (முடிந்தால் இளசு விளக்கலாமா, இது ஏன் என்று..??)
அது போல் மனதால் இந்த கவிதையை உணர்ந்தேன், கண்களால் வாசித்த பின்னும்...

நல்ல கவி தோழி...

புறக் கண் விரிந்திருந்தால்
புலப்படாதோ சிந்தனைகள்?
மனக் கண்ணாய்வில்
மறந்து போகாதோ அவை?

பூமகள்
11-09-2007, 07:11 AM
கவிதை சூபெர் பிரபஞ்சத்திற்கு கவிஞர்களுக்கும் இடைவெளி ரொம்ப குறைவு

நன்றிகள் சகோதரி..
உண்மைதான்.... வானம் தாண்டி கவிஞர் சிந்தை லயித்திருக்கும் எப்போதும்.

பூமகள்
11-09-2007, 07:14 AM
முத்தமிடும்போது கண்கள் மூடிவிடுமாம்...
மனது உணரும்போது, கண்கள் எதற்க்கு (முடிந்தால் இளசு விளக்கலாமா, இது ஏன் என்று..??)
அது போல் மனதால் இந்த கவிதையை உணர்ந்தேன், கண்களால் வாசித்த பின்னும்...

நல்ல கவி தோழி...

அழகுப் பின்னூட்டம்... உங்களின் கேள்விக்கு பதில் என் தங்கை பிச்சி சொல்லியிருக்கிறார். நன்றிகள் பிச்சி.
மிக்க நன்றிகள் தோழரே...!!

பிச்சி
11-09-2007, 07:19 AM
இந்த கவிதை படித்தவுடன் முதலில் நான் எழுதிய கவிதை ஞாபகம் வருகிறது. படித்து கருத்து சொல்லுங்கல் அக்கா

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9248