PDA

View Full Version : அன்பே..



பூமகள்
13-08-2007, 06:09 AM
உன்
வார்த்தைகளின் வாசத்தால் − இனி
என்
நெஞ்சில் சுவாசங்களுக்கு இடமில்லை...
துரத்தியடிக்கிறேன்
தூர....
நிதம்
நிமிடம்
உயிர் தொடும்
காற்றை........!!!

ஓவியன்
13-08-2007, 06:16 AM
காதலால் சுவாசித்து
எங்களுக்கும்
வார்த்தைகளால்
சுவாசிக்கும் வித்தையை
லயத்துடன் தந்த
பூ மகளுக்கு
பாராட்டுக்கள்!.

பூமகள்
13-08-2007, 06:27 AM
ஓவியரே...
தாங்கள் வர்ணங்களைக் கொண்டுதான்
விளையாடுவீர்கள் என்றால்...
வாத்தைகளைக் கொண்டுமல்லவா
வடிக்குரீர்கள்...

அற்புதம்...!

நன்றிகள் தங்களது உடன் ஊக்கத்திற்கு...

சிவா.ஜி
13-08-2007, 06:40 AM
காதலில்....சுவாசமின்றி,உயிரின்றி உடல் வாழ்வது சாத்தியமே....காதலில் மட்டுமே..... உலக நியதிகளிலிருந்து ஒதுங்கி நிற்பதே காதல் இலக்கணம்.
வாசமிகு வரிகளுக்கு வாழ்த்துக்கள் பூமகள்.

அமரன்
13-08-2007, 06:51 AM
வார்த்தைகளின் வாசம்
சுவாசமாக..
உயிர்வாயுதனை எதிரியாக்கி
விரட்டிவிட்டு
காதலால் வாழும் புதிய உலகம்
படைத்தாள் பூமகள்.
(மரியாதைகுறைவான வார்த்தைப் பிரயோகத்துக்கு மன்னிக்கவும்)

சூரியதீக்கோளாத்தில் சிதறிய
துளியாக பூகோளமிருக்க
காதல்ஜோதியில் சிதறிய
துளியில் புதுலகம் கண்டேன்.
கவிப்பூமகளின் தூவல்களில்.

வாழ்த்துக்கள் பூமகள்.

பூமகள்
13-08-2007, 07:05 AM
தங்களின் பாராட்டுதலுக்கு நன்றிகள் சகோதரர்களே...(சிவா மற்றும் அமரன்).

தொடர்ந்து பதியுங்கள் உங்கள் கருத்துக்களை..!

விகடன்
13-08-2007, 07:26 AM
பூமகளிற்கு வாழ்த்த என்னிடமில்லை பாமாலை. இருந்தாலும் பாராட்டி வாழ்த்துகிறேன் உங்களின் வார்த்தைஜாலக் கவிக்கு.

பூமகள்
13-08-2007, 07:59 AM
நன்றிகள் விராடன் தோழரே...

என் அடுத்த படைப்பான பிரபஞ்ச பிரயாசையையும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=254912#post254912)பாருங்கள்.. கருத்துக்களை பதியுங்கள்..

இலக்கியன்
13-08-2007, 08:13 AM
காதலன்
காதல் மொழிகளால்
மயங்கி
காற்றோடு விளையாடும்
உங்கள் வரிகள் அழகு வாழ்த்துக்கள்

leomohan
13-08-2007, 08:22 AM
உன்
வார்த்தைகளின் வாசத்தால் − இனி
என்
நெஞ்சில் சுவாசங்களுக்கு இடமில்லை...
துரத்தியடிக்கிறேன்
தூர....
நிதம்
நிமிடம்
உயிர் தொடும்
காற்றை........!!!

காற்றில் இவ்வளவு சக்தியா. தொடருங்கள் பூமகள்.

பூமகள்
26-08-2007, 06:16 AM
காதலன்
காதல் மொழிகளால்
மயங்கி
காற்றோடு விளையாடும்
உங்கள் வரிகள் அழகு வாழ்த்துக்கள்

மிக்க நன்றி இலக்கியரே..:nature-smiley-003:
மன்றத்தின் இலக்கியம் இடம் இருந்தே வாழ்த்துவருவது கண்டு மகிழ்கிறது எம் மனம்....... !! :icon_wink1:
நன்றிகள் கோடி..!

பூமகள்
26-08-2007, 06:17 AM
காற்றில் இவ்வளவு சக்தியா. தொடருங்கள் பூமகள்.

மிக்க நன்றி சகோதரரே..
தொடந்து விமர்சியுங்கள்..! :nature-smiley-002:

சுகந்தப்ரீதன்
26-08-2007, 09:34 AM
நெஞ்சம் முழுதும் நீ
இதில் எனக்கே இடமில்லை!
இதில் காற்றுக்கு எப்படி
நான் இடமளிப்பது?


வாழ்த்துக்கள் பூ..!

அக்னி
27-08-2007, 11:57 AM
உன் வார்த்தைகள் வாசம்
என்றால்,
என் சுவாசம் வாசனை...
ஆனால்,
உன் வார்த்தைகள்
என் இதயத்தைக் கருக்குவதால்,
கரியமில வாயு அல்லவா,
என்னுள் முழுதும்...
வெளிச்சுவாச வாயுவால்,
உயிர்வாழ,
நான் என்ன மரமா..?

பாராட்டுக்கள் பூமகள்...

பூமகள்
27-08-2007, 12:19 PM
நெஞ்சம் முழுதும் நீ
இதில் எனக்கே இடமில்லை!
இதில் காற்றுக்கு எப்படி
நான் இடமளிப்பது?


வாழ்த்துக்கள் பூ..!
நச்சென்று சொல்லிவிட்டீர் ப்ரீதன் அண்ணா..:4_1_8: அழகான பின்னூட்டம்.
நன்றிகள்!

பூமகள்
27-08-2007, 12:20 PM
உன் வார்த்தைகள் வாசம்
என்றால்,
என் சுவாசம் வாசனை...
ஆனால்,
உன் வார்த்தைகள்
என் இதயத்தைக் கருக்குவதால்,
கரியமில வாயு அல்லவா,
என்னுள் முழுதும்...
வெளிச்சுவாச வாயுவால்,
உயிர்வாழ,
நான் என்ன மரமா..?

பாராட்டுக்கள் பூமகள்...
மீண்டும் அழகான பின்னூட்டம் உங்களிடமிருந்து.. நன்றிகள் சகோதரரே..!:grin:

சாராகுமார்
27-08-2007, 02:29 PM
பூ மலர் வீசி வசந்தங்கள் வாழ்த்த பூமகள் அருமையான கவிதை படைத்துள்ளார்.

பூமகள்
27-08-2007, 03:12 PM
பூ மலர் வீசி வசந்தங்கள் வாழ்த்த பூமகள் அருமையான கவிதை படைத்துள்ளார்.

உங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி தோழரே....!!