PDA

View Full Version : புதிய ஐகேஷ் முறை மேம்படுத்தப் படுகிறது

இராசகுமாரன்
12-08-2007, 03:43 PM
இனிய நண்பர்களே..!

நமது பழைய ஐகேஷ் முறையில் இருந்த குறைகளான தமிழ் எழுத்து சரியாக தெரியாமை, கொடுத்த/கிடைத்த விவரம் தெரியாமை போன்ற சில சிக்கல்கள் இருந்தன. அவற்றைக் களைய புதிய ஐகேஷ் முறை இரண்டு நாளைக்கு இங்கே பரிசோதனை செய்யப் படுகிறது.

தற்போது புதிய ஐகேஷ் முறையின் வசதிகளை சோதிப்பதற்காக நிர்வாக உறுப்பினர்களுக்கு தலா 500 புதிய ஐகேஷ், மற்ற உறுப்பினர்களுக்கு 100 ஐகேஷ் கொடுத்துள்ளேன். இவை பரிசோதித்துப் பார்க்க மட்டுமே, பின்னர் இது நீக்கப் படும். அதன் பிறகு பழைய ஐகேஷ் இடத்தை இந்த புதிய ஐகேஷ் எடுத்துக் கொள்ளும். அப்போது உங்களது பழைய ஐகேஷ் தொகை புதிய ஐகேஷ் முறைக்கு தானாக மாற்றப் படும்.

உறுப்பினர்கள் மற்ற உறுப்பினர்களின் பதிப்பில் உள்ள New iCash Credits சுட்டியை சொடுக்கி அவர்களுக்கு சன்மானம்/நன்கொடை (Donation) கொடுக்கலாம்.

இது தவிர நிர்வாக உறுப்பினர்கள் மற்ற உறுப்பினர்களுக்கு அவர்களுடையை பதிப்பின் தரத்தை பொருத்து சிறப்பு சன்மானம் வழங்குவார்கள் அது "ரிவார்ட்" என்று உங்கள் கணக்கில் தெரியும். அது போல விதிமுறைகளை மீறி பதித்தாலோ, அல்லது அனாவசிய குப்பை பதிப்புகள் செய்தாலும், இந்த வசதியை உபயோகித்து தவறு செய்பவர்களிடமிருந்து ஐகேஷ் திரும்ப பெறும் வசதி உள்ளது.

புதிய ஐகேஷ் தகவல்/சுட்டியை கீழ் கண்ட பகுதிகளில் காணலாம்.

1) பதிப்புகளின் வலது புறம்
2) ப்ரோஃபைலில்
3) UserCP எனும் கண்ட்ரோல் பேனலில்
4) மெம்பர்லிஸ்டில்

**பெயர் தெரியாமல் நன்கொடை கொடுக்கும் Anonymous முறை பண்பட்டவர்களுக்கு மட்டும் உண்டு.

**அதிக ஐகேஷ் வைத்திருக்கும் டாப் 10 லிஸ்டில் நிர்வாக உறுப்பினர்கள் யாரும் இடம் பெறமாட்டார்கள்.

**யாருக்கு கொடுத்தோம் என்னும் Transaction log 20-25 வரை தெரியும் படி செய்யப் பட்டுள்ளது. இதனை அதிகமாக்கினால் தள வேகம் குறையலாம்.

புதிய ஐகேஷ் அறிமுகப் படுத்தும் இந்த சமயத்தில் அதற்கான விதிமுறையிலும் சிறிய திருத்தங்கள் வருகின்றன. அவற்றில் சில:

*ஐகேஷ் மற்ற உறுப்பினர்களுக்கு கொடுத்து உற்சாகப் படுத்தவே கொடுக்கப் படுகிறது. அவ்வாறு 3 மாதங்களுக்கு மேல் யாருக்கும் கொடுக்காமல் பதுக்கி வைத்துக் கொண்டால், 50% ஐகேஷ் திருப்பி எடுத்துக் கொள்ளப் படும்.

* அவரே அடுத்த 3 மாதமும், யாருக்கும் ஒன்றும் கொடுக்காவிடில் மீதி முழு தொகையும் திருப்பி எடுத்துக் கொள்ளப் படும்.

*ஒருவர் தன்னிடம் அதிக ஐகேஷ் சேமித்து வைத்துக் கொண்டிருக்க கூடாது. மொத்த தொகை 25,000 ஐகேஷ்களுக்கு மேல் வைத்துக் கொண்டால், மீதி உள்ளவை பறிமுதல் செய்யப் படும். (இன்கம் டாக்ஸ் ரெய்ட் இங்கேயுமா??)

நீங்கள் சோதித்துப் பார்த்து சந்தேகங்கள் கேட்டுக் கொள்ளுங்கள், அல்லது மேலும் தகவல்களை இங்கே சேருங்கள், நானும் அவ்வப்போது மேலும் தகவல்களை சேர்க்கிறேன்.

தொடர்ச்சி இங்கே (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=255767&postcount=41)

நன்றி..

அன்புரசிகன்
12-08-2007, 03:48 PM
நன்றாக உள்ளது.... வாழ்த்துக்கள் அண்ணா....

ஓவியன்
12-08-2007, 03:50 PM
அண்ணா!

பரிசோதித்தும் விட்டேன், அழகாகவும் அருமையாகவும் இருக்கிறது − மிக்க நன்றிகள்!.

namsec
12-08-2007, 03:50 PM
*ஐகேஷ் மற்ற உறுப்பினர்களுக்கு கொடுத்து உற்சாகப் படுத்தவே கொடுக்கப் படுகிறது. அவ்வாறு 3 மாதங்களுக்கு மேல் யாருக்கும் கொடுக்காமல் பதுக்கி வைத்துக் கொண்டால், 50% ஐகேஷ் திருப்பி எடுத்துக் கொள்ளப் படும்.

* அவரே அடுத்த 3 மாதமும், யாருக்கும் ஒன்றும் கொடுக்காவிடில் மீதி முழு தொகையும் திருப்பி எடுத்துக் கொள்ளப் படும்.

*ஒருவர் தன்னிடம் அதிக ஐகேஷ் சேமித்து வைத்துக் கொண்டிருக்க கூடாது. மொத்த தொகை 25,000 ஐகேஷ்களுக்கு மேல் வைத்துக் கொண்டால், மீதி உள்ளவை பறிமுதல் செய்யப் படும். (இன்கம் டாக்ஸ் ரெய்ட் இங்கேயுமா??)

நன்றி..

புதிய முறைகளுக்கு அடியேன் அடிபனிகிறேன்

என்னப்ப இது சிவாஜி படத்தில வரமாதிரி இருக்கு.

அமரன்
12-08-2007, 03:52 PM
சிறப்பான மேம்படுத்தல். நன்றி அண்ணா.
நண்பர்களே...!இ-பணத்தை சக நண்பர்களுக்கு வழங்கி அவர்களுக்கு ஊக்கமளித்தும் மகிழ்வித்தும் நாமும் மகிழ்வோம்.

இளசு
12-08-2007, 03:56 PM
தரமான மேம்படுத்துதல்.. தலைவருக்கு நன்றி!

ஆதவா
12-08-2007, 04:12 PM
மிக எளிதாகவும் தரமாகவும் இருக்கிறது... நன்றி நிர்வாகி அவர்களே!

அமரன்
12-08-2007, 04:25 PM
இன்று காலை பதிவிகளின் வலதுபக்க மேல் மூலையில் ரிப்போர்ட் பட்டனுக்குப் பக்கத்தில் தெரிந்த அவார்ட் என்னும் பச்சை நிற பட்டனைக் இப்போ காணவில்லையே...

விகடன்
12-08-2007, 04:33 PM
புதிய முறை ஐ−கேஷ் முதல் தரம். குறை என்பதே கிடையாதண்ணா. பார்க்கும்போது சந்தோஷமாக உள்ளது.
==============
இன்காம் டக்ஸ்சா.

சூப்பர். இனிமேல் கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் பாடு திண்டாட்டந்தான்.

அக்னி
12-08-2007, 05:26 PM
இதுவரை, iCash சாதாரணமாக இருந்தது...
இதுவே, எனது ஆதங்கமாக,

என்னைப் பொறுத்தவரையில், iCash இன் பெறுமதி அதிகரிக்க வேண்டும்.
அதன் தொகை பார்த்தே, மன்றத்தில் பங்களிப்பும், திறமையும் வெளிப்படவேண்டும்.
மனதில் நிரவும் படைப்புக்களுக்கு, சிறிய மரியாதை செய்ய, iCash உதவுகின்றது.
அதனால், அளித்தேன்.
பாராட்ட வேறு வகையேது...
வார்த்தைகளோடு இணைகிறது iCash உம்...
இங்கே வெளிப்பட்டது. ஆனால், இராசகுமாரன் அவர்களின் செம்மைப்படுத்தலில், iCash பெறுமதியானதாகிவிட்டது.
மிக்க நன்றி!

ஓவியா
12-08-2007, 11:14 PM
சிறப்பான மேம்படுத்தல். நன்றி ராஜகுமாரன் சார்.

ஆனாலும் 25,000 அய்கேஸ்சை மட்டுமே அதிபட்சமாக வைத்திருக்க வேண்டும் என்பது சங்கடமாக உள்ளது,

ஒருலட்சம் ஐகேஸ் (100,000.00) வைதிருந்த லேடி பிகேட்ஸ் என்ற என் எதிர்கால திட்டத்தில் 'கன்டேனர்' கணக்கா மண் விழுந்து விட்டது மிகவும் வருத்ததிற்கூரிய செயல்.

ஒரு ஆலோசனை,
ஒருவர் இவ்வளவுதான் வைத்திருக்க வேண்டும் என்று விதிவகுக்காமல், ஓவ்வொரு மாதமும் அனைவரும் அவசியம் தங்களுடைய மொத்த ஐகேஸிலிருந்து ஒரு 20/25% ஐகேஸை மன்ற மக்களுக்கு ஊக்குவிப்பு தொகையாக அனப்ளிப்பாக அளிக்க/கொடுக்க வேண்டும் என்று விதி வைக்கலாமே!!!!

அவரவர் வங்கி கணக்கை பொருத்து இது அமையலாம், :icon_08::icon_08:

aren
13-08-2007, 12:23 AM
இது ஒரு சிறந்த முறை, ஆனால் ஓவியாவுக்கு இப்படி ஒரு ஆப்பு வைக்கவேண்டாம்.

ஐயோ பாவம் நம்ம ஓவியா!!!

சுரண்டல் திலகம் அறிஞருக்கும் சேர்த்தல்லவா இந்த ஆப்பு என்று யோரோ சொல்வது என் காதில் விழுகிறது.

ஓவியா
13-08-2007, 12:41 AM
ஆமாம் அண்ணா தலைவர் நமக்கு ஆப்புதான் வைத்துள்ளார், ஆனாலும் நீங்கள் வழங்கிய 'சுரண்டல் திலகம்' என்ற பட்டம் அறிஞருக்கு நல்லாவே பொருந்துது.

இராசகுமாரன்
13-08-2007, 04:52 AM
இன்று காலை பதிவிகளின் வலதுபக்க மேல் மூலையில் ரிப்போர்ட் பட்டனுக்குப் பக்கத்தில் தெரிந்த அவார்ட் என்னும் பச்சை நிற பட்டனைக் இப்போ காணவில்லையே...

இந்த வசதி தற்போது நிர்வாகிகள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு மட்டுமே. ஒரு சில மணி நேரங்கள் மன்ற ஆலோசகர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும் கொடுத்து சோதித்த போது கண்டிருப்பீர்கள்.

பின்னாளில் தேவைப் படும் போது மன்ற ஆலோசகர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு இந்த வசதி வழங்கப் படும்.

சிவா.ஜி
13-08-2007, 05:03 AM
சிறந்த முறை. எனக்கு 100 கிடைத்ததும் உடனே பரிசோதித்து பார்த்துவிட்டேன். மிக அருமையாக இருக்கிறது. இராசகுமாரன் அவர்களுக்கு மிக்க நன்றி+பாராட்டுக்கள்.

விகடன்
13-08-2007, 05:05 AM
ஓவியா அக்கா:icon_shout:

உங்களுடைய ஐ−கேஸ் 25,000 இனை தாண்டிவிட்டது. :icon_shok:

இன்காம் டக்ஸ் ஆபிஷர் வருவதற்கும் மேலதீக பணத்தை யாரிடமாவது கொடுத்துவையுங்கள். :grin:

இராசகுமாரன்
13-08-2007, 05:13 AM
ஒரு ஆலோசனை,
ஒருவர் இவ்வளவுதான் வைத்திருக்க வேண்டும் என்று விதிவகுக்காமல், ஓவ்வொரு மாதமும் அனைவரும் அவசியம் தங்களுடைய மொத்த ஐகேஸிலிருந்து ஒரு 20/25% ஐகேஸை மன்ற மக்களுக்கு ஊக்குவிப்பு தொகையாக அனப்ளிப்பாக அளிக்க/கொடுக்க வேண்டும் என்று விதி வைக்கலாமே!!!!

அவரவர் வங்கி கணக்கை பொருத்து இது அமையலாம், :icon_08::icon_08:

இதை செயல்படுத்துவது இங்கே சற்று கடினம்.

மேலும், ஒவ்வொருவர் கணக்கையும் சென்று ஆராய்வதில் நிர்வாக உறுப்பினர்களின் நேரமும் விரயம் ஆகும்.

நிர்வாக உறுப்பினர்கள் அனைவரின் கருத்தறிந்து, தேவைப் பட்டால் தற்போது உள்ள 25,000 என்பதை வேண்டுமென்றால் 50,000 ஆக மாற்றலாம்.

namsec
13-08-2007, 05:24 AM
50 அதிகம் ஆனதுபோல் உள்ளது.

shivasevagan
13-08-2007, 05:25 AM
நன்றாக உள்ளது.

namsec
13-08-2007, 05:36 AM
என்னுடைய இந்த பின்னூட்டம் இடுவதற்க்கு

முந்தைய இருப்பு 242

நான் இராச*குமார*னுக்கு கொடுத்த*து 10

என*க்கு ஓவிய*ன் கொடுத்த*து 50

நிர்வாக*ம் என*க்கு கொடுத்த*து 100

என்னுடையா திரிக்கும், பின்னூட்டத்திற்க்கும் 152 கிட்டியாத இதை நான் எப்படி சோதிப்பது.

விகடன்
13-08-2007, 05:42 AM
திரி ஒன்றை ஆரம்பித்தால் கிடைக்கும் அளவின் வீதம் அதிகமோ தெரியவில்லை....

இதயம்
13-08-2007, 06:00 AM
ஓவியா அக்கா:icon_shout:

உங்களுடைய ஐ−கேஸ் 25,000 இனை தாண்டிவிட்டது. :icon_shok:

இன்காம் டக்ஸ் ஆபிஷர் வருவதற்கும் மேலதீக பணத்தை யாரிடமாவது கொடுத்துவையுங்கள். :grin:

நீங்கள் அடித்து, மிரட்டி பிடுங்கிய உங்கள் சேமிப்பு பத்திரமாக இருக்க வேண்டுமா..? நீங்கள் உடனே அணுகவேண்டிய நிறுவனம் "இதயம் சிட்பண்ட்ஸ் கம்பெனி லிட்"..!! உங்கள் எதிர்கால சேமிப்பை நிர்மூலமாக்குவதில் பல்லாண்டுகள் அனுபவம் பெற்ற நிறுவனம் இது..!!!

உடனடி தொடர்புக்கு உங்கள் Donate me பட்டனை தட்டி எல்லா பணத்தையும் இதயத்தில் இடுங்கள்..!!

இதயம்
13-08-2007, 06:02 AM
நிர்வாக உறுப்பினர்கள் அனைவரின் கருத்தறிந்து, தேவைப் பட்டால் தற்போது உள்ள 25,000 என்பதை வேண்டுமென்றால் 50,000 ஆக மாற்றலாம்.

இதை நான் ஆமோதிக்கிறேன்..! உழைத்து சம்பாதித்த பணத்தை காப்பாற்ற எனக்கு வேறு வழியில்லை..!:D:D

மன்மதன்
13-08-2007, 06:11 AM
மாற்றம் ஒன்றுதானே மாற்றம் இல்லாதது.. இது நல்ல மாற்றம். 25 என்பதை 50 என்று ஆக்க நான் வழிமொழிகிறேன்.. அந்த 3 மாத அவகாசத்தை 1 மாதமாக ஆக்கலாம்..

இராசகுமாரன்
13-08-2007, 06:17 AM
என்னுடைய திரிக்கும், பின்னூட்டத்திற்க்கும் 152 கிட்டியாத இதை நான் எப்படி சோதிப்பது.
நண்பரே,

நீங்கள் ஐகேஷ் வழங்கும் பக்கத்தின் கீழ் பகுதியில் Transaction Log என்ற பிரிவில் நீங்கள் யாருக்கு கொடுத்தீர்கள், யாரிடமிருந்து பெற்றீர்கள் என்பது மட்டும் தெரியும். பின்னூடங்களுக்குறியது தானாக கூடும், அவை இந்த Transaction Log-ல் தெரியாது.

அன்புரசிகன்
13-08-2007, 06:18 AM
50 வரையரறை சரி. ஆனால் வருமானவரி போன்ற முறையை கொண்டுவரலாம்... குறிப்பிட்ட தொகையிலிருந்து 15-20 % பணத்தை குறிப்பிட்ட ஒரு கணக்கிற்கு அல்லது நபருக்கு மாற்றலாம்...நிர்வாகியால் ஒரு கணக்கு (டம்மி நபர்) அவருக்கு அந்த பணத்தை அனுப்பலாம். அந்தப்பணத்தை ஊக்குவித்தலுக்கு பயன்படுத்தலாம்.

ஷீ-நிசி
13-08-2007, 06:55 AM
மிக அருமையான வழிமுறைகள்... ஐகேஸின் பயன் மற்றவர்களை ஊக்குவிக்கவே என்பதின் நோக்கம் அனைவருக்கும் புரியும் வகையில் மிக தெளிவான வரைமுறைகள்....

இராசகுமாரன்
13-08-2007, 07:08 AM
50 வரையரறை சரி. ஆனால் வருமானவரி போன்ற முறையை கொண்டுவரலாம்... குறிப்பிட்ட தொகையிலிருந்து 15-20 % பணத்தை குறிப்பிட்ட ஒரு கணக்கிற்கு அல்லது நபருக்கு மாற்றலாம்...நிர்வாகியால் ஒரு கணக்கு (டம்மி நபர்) அவருக்கு அந்த பணத்தை அனுப்பலாம். அந்தப்பணத்தை ஊக்குவித்தலுக்கு பயன்படுத்தலாம்.

நிர்வாகிகளுக்கு தேவைப் பட்டால் தான் கணக்கில்லாமல் நிறைய ஐகேஷ் பணம் வருமே. அதனால் இந்த பணத்தை கொண்டு தான் ஊக்குவிக்க வேண்டுமென்று இல்லை.

இது ஒரு துவக்கமே. இனி வரும் மாதங்களில் இதைச் சார்ந்து பல புதிய வசதிகள் வரும்.

1) அதிகமான ஐகேஷ்களை சேர்த்து வைக்க "வங்கி" வசதி வரும்.

2) அதிகமான ஐகேஷ்களை செலவழிக்க "ஜாக்பாட் லாட்டரி" வசதி வரும்.

இப்படி வந்து கொண்டே இருக்கும். முடிவில்லை..

விகடன்
13-08-2007, 07:13 AM
அன்புரசிகா. உண்மையிலேயே இந்த ஐ−கேஷ் எல்லாம் டாலராக மாற்றப்பட்டு தேவைக்கேற்ப பயன்படுத்தலாம் என்று சொல்லியிருந்தால் இப்படியெல்லாம் சிந்திக்க தோன்றுமா?

இது ரொம்ப ஓவரடா..

அன்புரசிகன்
13-08-2007, 07:32 AM
விராடா... எல்லாம் சும்மா ஜாலிக்காகத்தான். இதை வைத்து நான் என்ன வீடா கட்டப்போகிறேன்...:traurig001:

ஆனாலும் வங்கி போல எல்லாம் வரவிருக்கிறதாம்... ஜாலியாக விளையாடலாம்....:4_1_8::sport-smiley-014::medium-smiley-080:

நிஜத்தில் இல்லாவிட்டாலும் இவ்வகையான இ-பணத்திலாவது வருமானவரி கட்டலாமே என்றுதான்...:sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018:

ஓவியா
13-08-2007, 06:25 PM
இதை செயல்படுத்துவது இங்கே சற்று கடினம்.

மேலும், ஒவ்வொருவர் கணக்கையும் சென்று ஆராய்வதில் நிர்வாக உறுப்பினர்களின் நேரமும் விரயம் ஆகும்.

நிர்வாக உறுப்பினர்கள் அனைவரின் கருத்தறிந்து, தேவைப் பட்டால் தற்போது உள்ள 25,000 என்பதை வேண்டுமென்றால் 50,000 ஆக மாற்றலாம்.

நன்றி சார்,

வெகு விரைவில் 25,000 என்பதை 50,000 மாற்றுங்கள். அணைத்தும் என் சுய உழைப்பே!! இரவு பகல் பாராமல் கடினமாக உழைத்த பணத்தை நான் காரணமில்லாமல் டூப்பு டுபுகுஸ்க்கு தரமாட்டேன்.

இத்திட்டத்தை முன்மொழிந்து வழிமொழிந்த இதயத்திற்க்கும் மன்மதருக்கும் நன்றி, நண்பர்களே இது அமலுக்கு வந்தவுடன் அடுத்த கட்ட திட்டமாக 75,000 போராடுவோம். போராடுவோம் போராடுவோம் உருப்பினர் எண் ரத்து செய்யும் வரை போராடுவோம்.....

மன்ற மக்கள் நாயகி, ஆட்சி திலகம்
− ஓவியா.

விகடன்
13-08-2007, 06:34 PM

அக்கா:icon_clap:

தேவைப்ப*ட்டால் த*ம்பி ஒருவ*ன் நான் இங்கிருக்கிறேன். ம*ற்ற* த*ம்பிமார்க*ளும் வ*ருவார்க*ள்.(வேறென்னத்திற்கு, புதின*ம் பார்ப்ப*த*ற்குத்தான்):icon_shades:

அறிஞர்
13-08-2007, 06:46 PM
புது புது மாற்றங்கள் புதியவர்களை உற்சாகப்படுத்தட்டும்.

50000 என வைக்கலாம்.

அமரன்
13-08-2007, 06:50 PM
மன்மதன் சொன்னதுபோல் 50000 என வைத்துக்கொண்டு ரேய்டு நாட்களை 30 ஆகக் குறைக்கலாம்.

அக்னி
13-08-2007, 06:52 PM
உடனடி தொடர்புக்கு உங்கள் Donate me பட்டனை தட்டி எல்லா பணத்தையும் இதயத்தில் இடுங்கள்..!!

Join Date: 20 Feb 2005
Location: தஞ்சவூதி
Posts: 1,214
iCash: [COLOR="Red"]26075.63 Donate Me
New iCash Credits: 146
முதல்ல உங்க பணத்தைக் காப்பாத்திற வழியைப் பாருங்க இதயம்....

ஓவியா
13-08-2007, 07:08 PM
அக்கா:icon_clap:

தேவைப்ப*ட்டால் த*ம்பி ஒருவ*ன் நான் இங்கிருக்கிறேன். ம*ற்ற* த*ம்பிமார்க*ளும் வ*ருவார்க*ள்.(வேறென்னத்திற்கு, புதின*ம் பார்ப்ப*த*ற்குத்தான்):icon_shades:

மனதில் வைத்துக்கொள்கிறேன் சபாபதி. நன்றி

மன்மதன் சொன்னதுபோல் 50000 என வைத்துக்கொண்டு ரேய்டு நாட்களை 30 ஆகக் குறைக்கலாம்.

நாந்தான் முதலில் 50,000 வேண்டும் என்று கேட்டேன், மன்முக்கு நன்றியா!!!! சரி நல்லா இருங்கையா.

அக்னி
13-08-2007, 07:11 PM
நன்றி சார்,

வெகு விரைவில் 25,000 என்பதை 50,000 மாற்றுங்கள். அணைத்தும் என் சுய உழைப்பே!!

ஏனோ இந்தப் பாடல் காதில் ஒலிக்கிறது...
"பொய் சொல்ல இந்த மனதுக்குத் தெரியவில்லை...
சொன்னால் பொய் பொய்தானே..."
அருமையான பாடல்...

அமரன்
13-08-2007, 07:11 PM
அக்காவுக்கு நன்றி சொல்லி அந்நியப்படுத்த விரும்பவில்லை. அதுதான்..இப்பிடி

ஓவியா
13-08-2007, 07:19 PM
ஏனோ இந்தப் பாடல் காதில் ஒலிக்கிறது...
"பொய் சொல்ல இந்த மனதுக்குத் தெரியவில்லை...
சொன்னால் பொய் பொய்தானே..."
அருமையான பாடல்...

அக்காவுக்கு நன்றி சொல்லி அந்நியப்படுத்த விரும்பவில்லை. அதுதான்..இப்பிடி

:lachen001::lachen001::lachen001::lachen001:

இணைய நண்பன்
13-08-2007, 07:29 PM
மன்றத்தின் நெஞ்சங்களை ஊக்கப்ப்டுத்துவதற்கான நல்ல முயற்சி.நன்றி

இராசகுமாரன்
14-08-2007, 05:00 AM
**இன்று உங்கள் பழைய ஐகேஷ் தொகை புதிய ஐகேஷ் முறைக்கு மாற்றப் பட்டது.

**உச்ச வரம்பு தொகை 50,000 ஆக்கப் படுகிறது.

**மாதம் தோறும் யாருக்காவது சன்மானம் கொடுத்துள்ளார்களா என்று சோதிப்பது கடினம், பலர் 30−45 நாட்கள் விடுப்பில் செல்ல வாய்ப்புகள் உள்ளது. அதனால், 3 மாதத்திற்கு ஒரு முறையாவது சன்மானம் கொடுத்திருக்க வேண்டும் என்பது தொடரும்.

**போதிய பங்களிப்பு, பதிப்புகள் இல்லாதவர்களுக்கு கொடுக்கப் படும் சன்மானங்கள், மற்றும் அளவுக்கு அதிகமாக கொடுக்கப் படும் சன்மானங்கள் பறிக்கப் படும்.

**அதிகபட்சமாக ஒருவருக்கு ஒரு முறை, அல்லது ஒரு பதிப்புக்கு ஒரு முறை கொடுக்கும் சன்மானத்தின் உச்ச வரம்பு 500. அதற்கு மேல் கொடுக்கப் படும் சன்மானங்கள் பறிமுதல் செய்யப் படும்.

விகடன்
14-08-2007, 05:03 AM
மிக்க சந்தோஷம் அண்ணா.
ஐ−கேஷின் உச்ச பயன்பாட்டையும் அதன் குறிக்கோளையும் நிவர்த்தி செய்வோம்

ஓவியன்
14-08-2007, 05:17 AM
காலத்தோடு ஒன்றி புதிய மாற்றங்களைப் புகுத்த ராஜகுமாரன் அண்ணாவுக்கு நன்றிகள் கோடி......!
புதிய மாற்றங்களோடு மன்றம் இன்னமும் ஜொலிக்கட்டும்.........!

ஓவியா
01-09-2007, 12:47 AM
**இன்று உங்கள் பழைய ஐகேஷ் தொகை புதிய ஐகேஷ் முறைக்கு மாற்றப் பட்டது.

**உச்ச வரம்பு தொகை 50,000 ஆக்கப் படுகிறது.
**மாதம் தோறும் யாருக்காவது சன்மானம் கொடுத்துள்ளார்களா என்று சோதிப்பது கடினம், பலர் 30−45 நாட்கள் விடுப்பில் செல்ல வாய்ப்புகள் உள்ளது. அதனால், 3 மாதத்திற்கு ஒரு முறையாவது சன்மானம் கொடுத்திருக்க வேண்டும் என்பது தொடரும்.

**போதிய பங்களிப்பு, பதிப்புகள் இல்லாதவர்களுக்கு கொடுக்கப் படும் சன்மானங்கள், மற்றும் அளவுக்கு அதிகமாக கொடுக்கப் படும் சன்மானங்கள் பறிக்கப் படும்.

**அதிகபட்சமாக ஒருவருக்கு ஒரு முறை, அல்லது ஒரு பதிப்புக்கு ஒரு முறை கொடுக்கும் சன்மானத்தின் உச்ச வரம்பு 500. அதற்கு மேல் கொடுக்கப் படும் சன்மானங்கள் பறிமுதல் செய்யப் படும்.

என் கோரிக்கையை எற்று செய*ல்ப*டுத்திய*மைக்கு ந*ன்றி ஆலோசகரே. :icon_dance:

சூரியன்
04-09-2007, 05:17 AM
இந்த விதிமுறை பயனுள்ளதாய் அமையும்.

sujan1234
24-12-2008, 03:07 PM
நன்றாக உள்ளது

மஞ்சுபாஷிணி
23-09-2009, 11:34 AM
விவரங்கள் அறிந்தேன் நன்றி இராசகுமாரன் அவர்களே...

வியாசன்
23-09-2009, 01:28 PM
நன்றி உங்கள் அறிவுறுத்தல்களுக்கு