PDA

View Full Version : பல்லி விஷம்....



ரிஷிசேது
12-08-2007, 03:27 PM
தோண்டத் தோண்ட மண்
அவளின் ஞாபகங்கள்

அவள் கை நீட்டிய
பக்கமெல்லாம்
நீள்கிறது வானம்

வானவில்லில்
எட்டாவது நிறம்
அவள்

கனவுகள் தொல்லை
அவளில்லாது

அவள்
உதடழுத்தி
முத்தமிட்ட
இடத்தில்
எப்போதுமொரு பல்லி

அப்பா சொல்வார்
பல்லி விஷமென்று...

ஆதவா
12-08-2007, 03:50 PM
பல்லி என்று எதனை குறிப்பிடுகிறீர்கள் ரிஷி?

இலக்கியன்
13-08-2007, 08:30 AM
பல்லி என்று எதனை குறிப்பிடுகிறீர்கள் ரிஷி?

ஆம் எனக்கும் புரியவில்லை

ஓவியன்
19-08-2007, 06:33 PM
இங்கே பல்லி என்பது இரட்டை அர்த்தத்தில் வருகிறதா.........?
பெரிய பற்களை உடைய பெண்களை பல்லி என்றும் சொல்வார்கள்..........

இளசு
19-08-2007, 09:05 PM
காதல்..

மூழ்கியவருக்கு அமுதம்..
கரையோரம் இருப்பவருக்கு விஷம்!

பல் படாமல் உதடழுத்தம்
பட்ட இடமே இப்படி துடித்தால்..
பல் பட்டுக் காயமும் பட்டிருந்தால்???

காதலி செய்தது அன்பு விஷமம்..
அப்பா சொன்னதில் கரு(எழு)த்துப் பிழை!!!


பாராட்டுகள் ரிஷிசேது!

ஆதவா
20-08-2007, 07:40 AM
இப்போது புரிந்தது
நன்றி இளசு அண்ணா,,,

அமரன்
20-08-2007, 12:01 PM
முத்தான கவிதை. தந்த சிப்பிக்கும் முக்குளித்து எமக்களித்த அண்ணனுக்கும் நன்றி.