PDA

View Full Version : Sub-Prime??



karikaalan
12-08-2007, 02:26 PM
நண்பர்களே!

கடந்த சில நாட்களாக உலகப் பணச்சந்தை, பங்குச்சந்தை களேபரத்தைச் சந்தித்து வருகிறது. BNP Paribas எனும் பிரெஞ்சு வங்கி சிலபல கணக்குகளை -- $ 2.2 பில்லியன் -- முடக்கியுள்ளது.

இதற்கெல்லாம் முக்கிய வில்லனாகக் கூறப்படுவது Sub-Prime என்கிற சொல். ஈதென்ன sub-prime?

விளக்க முயல்கிறேன்.

வங்கிகள் கடன் கொடுக்கும் போது வட்டி விகிதம் Prime Lending Rate (PLR)க்கு சற்றே அதிகமாக இருக்கும். PLR ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு கடன் கொடுப்பதாக இருந்தால் விதிக்கும் வட்டி விகிதம். சில துறைகளுக்கு (விவசாயம், சிறுதொழில், ஏற்றுமதி போன்றவை) அரசு மானியம் வழங்குவதால் PLRக்கு குறைவாகவும் கொடுக்கிறார்கள்.

கடன் வாங்குபவர்களை ஜமக்காளம் உதறுவது போல் உதறிவிட்டுத்தான் வங்கிகள் கடன் கொடுக்கின்றன. அதாவது, முதல் திரும்பி வருமா, தொழில் ஒழுங்காக நடக்குமா, சம்பளம் சரியாக வருகிறதா, நல்ல கம்பெனியில் எத்தனை நாட்களாக வேலை செய்கிறார், என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பார்க்கிற விடை கிடைத்தால் கடன் அனுமதி செய்யப்படுகிறது. PLRக்கு ஓரிரு சதவீதங்கள் அதிகமாகத்தான் வட்டி இருக்கும். AAA கம்பெனிகள், நபர்கள் என்றால் சில சமயம் PLR விகிதத்திலேயே கூட கடன் கொடுப்பார்கள்.

சிலசமயங்களில், தற்போது நடந்துள்ளது போல், Sub-Prime வீதத்திலும் கொடுக்கிறார்கள்.

Sub-Prime என்றால் என்ன? ஆபத்தான நபர்களுக்கு, தொழில்களுக்கு, சரியாக தேர்வு செய்யாமல், PLRக்கு மிக அதிகமான வட்டி விகிதத்தில் கடன் கொடுத்தால், அந்த வட்டிக்கு Sub-Prime என்று பெயர். சில வருடங்களுக்கு முன்னர் தமிழகமெங்கும் பைனான்ஸ் கம்பெனிகள் 42% வட்டி கொடுப்பதாகச் சொல்லி முதலீட்டாளர்களை சந்தியில் விட்டது நினைவு இருக்கும். இப்போது வங்கிகளே இந்த நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

இந்திய ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்களால், நம் நாட்டில் இது நடவாத விஷயம்.

அமெரிக்காவில் (USA) அப்படியல்ல. சட்டத்தில் உள்ள சில ஷரத்துக்களைப் பயன்படுத்தி சில வங்கிகள் கடனை வாரி வழங்கி இருக்கின்றன. புதியதாகக் கேள்விப் படுகிறேன் -- Quant-Funds -- இவற்றில் சில வங்கிகள் முதலீடு செய்திருக்கின்றன. ஜங்க் பாண்டுகளை விடவும் மோசமாம்! வீடு கட்டிக் கொடுப்பவர்களுக்கு வழங்கிய கடன்கள் திரும்பப்பெறுவதில் சில குளறுபடிகள். இவைகளைச் சந்திக்க நேர்ந்தவுடன் வங்கிகள் என்ன செய்கின்றன? அடமானமாக வைத்தவைகளை விற்கத் துவங்குகின்றன -- Distress Sale -- ஈடாக வைத்தவைகள் விலை பாதாளத்துக்கு சரிகின்றன. இவைகளில் பங்குகளும் அடங்கும்.

வரும் நாட்களில் இன்னும் என்னென்ன தெரியவருகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

===கரிகாலன்

karikaalan
12-08-2007, 02:27 PM
அப்பாடா..... ஒரு வழியாக பதித்துவிட்டேன்.

இளவல்ஜி வாழ்க!

===கரிகாலன்

namsec
12-08-2007, 02:38 PM
நல்ல விளக்கங்கள் தொடருங்கள் கரிகாலன்

தங்கவேல்
12-08-2007, 02:41 PM
இப்படியும் ஒரு வழி இருக்கிறதா...

karikaalan
12-08-2007, 02:51 PM
இரண்டு நாட்களுக்கு முன்னர் எழுதியதை இன்றுதான் பதிய முடிந்தது.

இதற்கிடையில் நடந்துள்ளது:

அமெரிக்காவின் ஃபெடரல் ரிஸர்வ் $38 பில்லியன் டாலர்களை மார்க்கெட்டில் விட்டிருக்கிறது (PUMPING).

வேறெங்கும் பரவாது என்று சொல்லப்பட்டாலும், ஐரோப்பாவிலும் இது நுழைந்துள்ளது. European Central Bank & Japan Central Banக் பல பில்லியன்களை மார்க்கெட்டில் புகுத்தியுள்ளன... அதாவது கமர்ஷியல் வங்கிகள் முழுகாமல் தப்பிப்பதற்கான செயல்பாடுகள்.

இந்தியாவிலும் இதன் எதிரொலி கிளம்பியுள்ளது. அதிகம் பாதிக்கப்படாது எனலாம். பங்குகள் வைத்திருந்தால் பயத்தில் விற்றுவிடாதீர்கள்.

===கரிகாலன்

இளசு
12-08-2007, 04:00 PM
பெரிய லெவல் கந்துவட்டிக் கதையாக இருக்கிறதே அண்ணலே!

தொடருங்கள்.. நன்றி!

karikaalan
17-08-2007, 06:15 AM
இன்றைக்கு மும்பை ஸென்ஸெக்ஸ் 14000 புள்ளிகளுக்கும் கீழே வந்துவிட்டது!

குற்றாலத்தில் இடி இடித்தால், கோயம்புத்தூரில் மழை என்பார்கள். இதுதான் அது!!

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, வங்கிகளே மோசம் போயுள்ளன −− அமெரிக்காவில்... பித்தளையைத் தங்கம் என்று சொல்லி அடமானம் வைத்திருக்கிறாற்கள். விற்கப் போனபோதுதான் பல்லை ஈ என்று இளித்தது பித்தளை.

ஃபெடரல் ரிஸர்வும், யூரோப்பியன் சென்ட்ரல் வங்கி இன்னும் எவ்வளவு பில்லியன்களை மார்க்கெட்டில் புகுத்தப்போகிறார்களோ... பார்ப்போம்.


===கரிகாலன்

பாரதி
17-08-2007, 07:01 AM
தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் அண்ணலே. மிக்க நன்றி.

ஓவியன்
17-08-2007, 12:37 PM
அண்ணா!

அவ்வளவு ஆர்வமில்லாமல் நான் இருந்த ஒரு பகுதிகளில் ஒன்று இது, ஆனால் உங்கள் விளக்கத்தால் ஆர்வமூட்டி விட்டீர்கள், மிக்க நன்றிகள்!.

aren
17-08-2007, 05:21 PM
இப்பொழுது ஜப்பானின் நாணயம் யென் விலை ஏறியுள்ளதால் அதில் கடன் வாங்கியவர்கள் தங்களுடைய பங்குகளை விற்கத்துவங்கியுள்ளார்கள். இதனால் உலகில் உள்ள பங்கு சந்தை அனைத்திற்கும் பெரிய அடி. குறிப்பாக ஆசிய சந்தைகள் இந்தியா உடபட.

இது மாதிரி பங்குகளை பெரிய இடத்திற்குக் கொண்டு செல்வதும் அதை ஒரே நாளில் அதள பாதாளத்தில் தள்ளுவதும் இந்த மாதிரியான முதலீட்டாளர்களே.

நாம் ஏதோ நாம் பங்குச் சந்தையில் பணம் போட்ட கம்பெனி நன்றாக வேலை செய்கிறது, அதனாலேயெ நம்முடைய பங்கு நன்றாக விலை ஏறியிருக்கிறது என்று நினைக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல.

இந்த மாதிரியான முதலீட்டாளர்களை Hedge Funds என்று சொல்லுவோம். அவர்களுக்கு பணம் சமபாதிப்பது என்பதே குறி. ஏனெனில் அவர்களுடைய கம்பெனியில் முதலீடு செய்தவர்களுக்கு எப்படியாவது லாபம் சம்பாதித்து கொடுக்கவேண்டும் என்பதே அவர்களுடைய தலையாய கடமை. அதற்காக அவர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள்.

இப்படித்தான் அவர்கள் ஒரு சில பங்கு சந்தைகளில் அதிலும் குறிப்பாக சில கம்பெனிகளின் பங்குகளில் முதலீடு செய்வார்கள். அதன் விலை தானாகவே உயர ஆரம்பிக்கும். நாமும் நாம் முதலீடு செய்த பங்கு நன்றாக் செல்கிறது என்று நினைத்து மேலும் அந்த கம்பெனியின் பங்குகளை வாங்குவோம். இந்த மாதிரி சமயத்தில் ஒரு நாள் இந்த முதலிட்டாளர்கள் தங்களுடைய பங்குகள் அனைத்தையும் ஒரே நாளில் விற்றுவிட்டு லாபம் சம்பாதித்துவிடுவார்கள். நம்மைப்போல் ஏழை வாங்கிய பங்குகள் அப்படியே விலை சரிவில் அடிபட்டு முழு முதலீட்டும் நமக்கு இல்லாமல் போய்விடும்.

இந்த முதலீட்டாளர்கள் விலை குறைந்த பங்கை மறுபடியும் வாங்குவார்கள். எடுத்துக் காட்டாக அவர்கள் முதலில் ஒரு பங்கு 30 ரூபாய் என்ற விலையில் வாங்கியிருப்பார்கள், அது 60 ரூபாய் போகும் சமயத்தில் அனைத்து பங்குகளையும் விற்றுவிடுவார்கள். மறுபடியும் விலை சரிந்து 30 ரூபாய் வரும்பொழுது விலைகொடுத்து மறுபடியும் அதே பங்குகளை வாங்குவார்கள். பாருங்கள் இந்த இடைக் காலத்தில் அவர்கள் 30 ரூபாய் ஒரு பங்கிற்கு லாபம் பார்த்துவிட்டார்கள். நாம் ஏழைகள் அனைத்து முதலீட்டையும் இழந்த நிலையில் செய்வதிறியாது இருக்கிறோம்.

இதுதான் உலகம். ஆகையால் ஜாக்கிரதை.

நன்றி வணக்கம்
ஆரென்

karikaalan
17-08-2007, 05:46 PM
ஆரென்ஜி

தாங்க*ள் சொல்வ*து முற்றிலும் உண்மையே. த*ற்போது இந்த* ஹெட்ஜ் ஃப*ண்ட்க*ளும் ப*ல*த்த* அடியைச் ச*ந்தித்துள்ள*ன*.

===க*ரிகால*ன்

தங்கவேல்
18-08-2007, 01:57 AM
அட்டகாசமான விளக்கம்.. ஆனால் தினமும் ஆயிரக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் ஏழை மக்கள் பணத்தை இழந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.. யார் என்ன சொன்னாலும் கேட்க போவதில்லை..
விதி வலியது

ஆதவா
18-08-2007, 03:43 AM
பங்கு சந்தை என்பது ஒரு விளையாட்டு Gambling என்று சொல்வார்கள்.. அது சரியாத்தான் போச்சு...