PDA

View Full Version : PAN கட்டாயமாகிறது



namsec
12-08-2007, 02:07 PM
வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கிடுக்கிப்பிடி * வருமான வரி கணக்கு எண் கட்டாயமாகிறது

கறுப்பு பண நடமாட்டத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு புது நடவடிக்கை எடுக்க உள்ளது. இதன்படி வங்கி மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான பரிமாற்றங்கள் மற்றும் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும் அனைவருக்கும் கிடுக்கிப்பிடி போட அரசு முடிவு செய்துள்ளது.

வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் இன்சூரன்ஸ் பாலிசி வைத்து இருப்பவர்கள் அனைவரும், "பான்' எண்ணை குறிப்பிட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட உள்ளது. டிசம்பர் 31ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது. வருமான வரி செலுத்துவோர், "பர்மனென்ட் அக்கவுன்ட் நம்பர்' என்ற பான் எண்ணை பெற்றிருக்க வேண்டும். வங்கிக் கணக்கு துவங்கும் போதும், புதிதாக இன்சூரன்ஸ் பாலிசி பெறும் போதும் பான் எண்ணை குறிப்பிட வேண்டும் என்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தவிர வருமான வரி கணக்கில் இருந்து கூடுதலாக செலுத்தப்பட்ட பணத்தை திரும்ப பெறும் போது, ரூ.ஐந்து லட்சம் மதிப்புக்கு மேல் உள்ள அசையா சொத்துக்களை விற்பனை செய்யும் போதும், வாங்கும் போதும், ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரன்ட்களில் ரூ.25 ஆயிரத்துக்கும் மேல் பணம் செலுத்தும் போதும் வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் டைம் டிபாசிட்டாக முதலீடு செய்யும் போதும், ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் இன்சூரன்ஸ் ப்ரீமியம் செலுத்தும் போதும் பான் எண் குறிப்பிட வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.

நாடு முழுவதும் 50 கோடி வங்கிக் கணக்குகள் உள்ளன. ஆனால், 54 லட்சம் பேர் மட்டுமே பான் எண்ணை பெற்றுள்ளனர். இதனால், கறுப்பு பண நடமாட்டம் அழிக்க முடியாத விஷயமாக உள்ளது. இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி வரும் மத்திய அரசு, கடந்த மாதம் 2ம் தேதி ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதன்படி பரஸ்பர நிதியில் முதலீடு செய்பவர்கள் உட்பட பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள், அவர்களின் முதலீடு எந்த அளவாக இருந்தாலும் பான் எண்ணை குறிப்பிட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

கடந்த மாதம் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் கூட கறுப்பு பண நடமாட்டத்தை முற்றிலுமாக அழித்து விட முடியாது என்ற எண்ணம் மத்திய அரசுக்கு தோன்றியுள்ளது. இதையடுத்து, புது நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி, வங்கி பரிமாற்றங்கள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான நடவடிக்கைகளின் போதும் பான் எண்ணை குறிப்பிட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட உள்ளது. தற்போது, ரூ.50 ஆயிரத்துக்கு குறைவான வங்கி டிபாசிட்களுக்கு பான் எண்ணை குறிப்பிட வேண்டாம் என்ற நிலை உள்ளது; இந்த சலுகை இனிமேல் கிடைக்காது. வங்கியில் பணம் எடுக்கும் போதும், செலுத்தும் போதும் எந்த அளவுக்கு தொகை இருந்தாலும் கட்டாயம் பான் எண்ணை குறிப்பிட்டாக வேண்டும். டிசம்பர் 31ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.

இதன்படி இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பவர்கள், வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் என, அனைவருமே பான் எண்ணை பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பான் எண்ணை ஒருவர் பெற்று விட்டால், அவரது நிதி நடவடிக்கைகள் அனைத்தும் வருமான வரித்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும். எனவே, கறுப்பு பண நடமாட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்பது மத்திய அரசின் எண்ணமாக உள்ளது. மத்திய அரசு இந்த அளவுக்கு கடுமையாக செயல்பட்டாலும், அதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழத்தான் செய்கிறது. பரஸ்பர நிதியில் முதலீடு செய்யும் போது, பான் எண்ணை குறிப்பிட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும், இதனால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று இந்திய பரஸ்பர நிதி சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


நன்றி தினமலர்

leomohan
12-08-2007, 02:10 PM
PAN Card அறிமுகப்படுத்தப்பட்டதுமே முதல் batchல் அதை பெற்றவன் என்று பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகவும் அவசியமான ஒன்று. அதே நேரத்தில் போலிகள் வராமல் பார்த்துக் கொள்வதும் மிகவும் அவசியம்.

இங்கு பஹ்ரைனில் கடைகள் திறக்க போலி CR - Company Registration எண்ணை பெற்றுத் தந்தவர்களை பிடித்தார்கள். அதில் பஹ்ரனை சேர்ந்தவர்களும் இந்தியாவை சேர்ந்தவர்களும் சிக்கினர்.

namsec
12-08-2007, 02:28 PM
PAN Card அறிமுகப்படுத்தப்பட்டதுமே முதல் batchல் அதை பெற்றவன் என்று பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகவும் அவசியமான ஒன்று. அதே நேரத்தில் போலிகள் வராமல் பார்த்துக் கொள்வதும் மிகவும் அவசியம்.

இங்கு பஹ்ரைனில் கடைகள் திறக்க போலி CR - Company Registration எண்ணை பெற்றுத் தந்தவர்களை பிடித்தார்கள். அதில் பஹ்ரனை சேர்ந்தவர்களும் இந்தியாவை சேர்ந்தவர்களும் சிக்கினர்.

எந்த batch என்று எனக்கு தெரியாது 1995ல் நான் பதிவு செய்து விட்டேன்.

leomohan
12-08-2007, 02:44 PM
எந்த batch என்று எனக்கு தெரியாது 1995ல் நான் பதிவு செய்து விட்டேன்.

அதே அதே.