PDA

View Full Version : உறைந்து போன நினைவுகள்..



வெண்தாமரை
12-08-2007, 12:45 PM
என்றாவது வருவாய் என
எதிர்ப்பார்த்து காத்திருக்கும்
எனது விழிகள்..
மறந்து போன உனக்காக
காத்திருக்கும் உறைந்து போன என் நினைவுகள்..

பிரியமுடன்
மகா.

சிவா.ஜி
12-08-2007, 12:53 PM
மறந்து போனவன் என்றாவது வந்தும் என்ன பயன்?
அவனுக்காக நினைவுகளை உறங்க வைப்பதே வீண்...இதில் உறைய வைத்தால்...இற*க்கும்வரை இருப்பேன் என்ற உறவுகளே மறைந்து போகும்போது..இருந்ததையே மறந்துவிட்டவனுக்காக காத்திருப்பது வேண்டாம் பெண்ணே..இது அந்த கவிதையின் நாயகிக்கு. அழகாய் எழுதியுள்ள வெண்தாமரைக்கு வாழ்த்துக்கள்.

அக்னி
12-08-2007, 12:54 PM
உறைந்து போன நினைவுகள்...
இற்றுப்போகாது என்றும்...
இன்னமும்
இறுக்கமாக பலமாக கனமாக,
மனதில் பதிந்து விடும்...,
காத்திருக்கும் விழிகளினூடு,
தூதனுப்பினால்,
இன்பமான நிறைவு...
இல்லாவிட்டால்,
கிட்டும்வரை,
துன்பமான நினைவு...

பாராட்டுக்கள் மகா...

பி.கு:
உங்கள் கையெழுத்தில்
பிரியமுடன்
மகா.
என இட்டால், எப்போதும் அதனை தட்டச்சிட வேண்டிய தேவை இல்லையே...
தானாகவே தோன்றுமே...
கவனத்திற்கொள்க...

நன்றி!

வெண்தாமரை
12-08-2007, 12:56 PM
உண்மைதான் காதல் பொல்லாதது. முதல் காதல் யாராலும் மறக்க முடியாது.. என் தோழியின் டைரியிலிருந்து இருந்து சில வரிகள்..