PDA

View Full Version : அபாகஸ் பற்றி?



வெண்தாமரை
12-08-2007, 09:00 AM
:sport-smiley-014: அபாகஸ் தெரிந்தவர்கள் நமது மன்றத்தில் உள்ளனரா? தெரிந்தவர்கள் கற்றுதர முன்னால் வந்தால் நன்றாக இருக்கும்.. :music-smiley-010:

விகடன்
12-08-2007, 09:10 AM
அப்படி என்றல் என்ன?
யாராவது ஒருவருடைய பெயரா?
பிரசித்தி பெற்ற இடமா?
அதுபற்றிய அறிமுகமே இல்லாமல் இப்படிக்கேட்டால் தெரியாதவர்கள் பாடு? அதாவது என்னிலை???

வெண்தாமரை
12-08-2007, 09:16 AM
அபாகஸ் என்றால் நினைவாற்றல் பயிற்சி எளிய கனித முறை.. (மணிசட்டம்) இது படித்தால் குழந்தைகள் வெகுவிரைவில் கணக்கை செய்வார்கள்.. மிகவும் பயனுள்ளது..

விகடன்
13-08-2007, 03:21 AM
அடடா. அதுவா?
நம்ம மொழியில அதை எண்சட்டம் என்று சொல்லுவோம். அந்த முறை தற்போதும் ரஷ்யாவில் கடைகளில் கணக்கு பார்ப்பதற்கு பயன்படுத்துவர். அவர்கள் கணக்குப் பார்க்கும் வேகவோ அதி துரிதகதியாக இருக்கும்...

பென்ஸ்
27-11-2007, 03:41 PM
நண்பரே...
நீங்கள் சொல்லுவது FEA அபாகஸாக இருந்தால் என்னால் உதவமுடியும்...
என்ன சந்தேகம்..??? கேளுங்கள் உதவுகிறேன்...

நேசம்
27-11-2007, 07:14 PM
பென்ஸ் அண்ணா திரியை ஆரம்பித்தவர் வகுப்பு எடுக்க சொல்றார்.சந்தேகம் கேட்க வில்லை.

sakthim
24-08-2008, 11:24 AM
அபாகஸ் இனையத்தில் விளக்குவது மிக கடினம்,அதற்கு நீங்கள் தனியாக பயிற்ச்சி பெற்றவர்களிடம் படிக்க வேண்டும்.

பென்ஸ்
24-08-2008, 03:36 PM
அபாகஸ் இனையத்தில் விளக்குவது மிக கடினம்,அதற்கு நீங்கள் தனியாக பயிற்ச்சி பெற்றவர்களிடம் படிக்க வேண்டும்.
வகுப்பு எடுக்கும் அளவுக்கு முடியாவிட்டாலும் கேள்விகளுக்கு பதிலள்ளிக்க முடியுமே நண்பரே....

leomohan
25-08-2008, 06:50 AM
யூட்யூபில் இதை கண்டேன்

http://www.youtube.com/watch?v=CvsnftXXKdw

பென்ஸ்
27-08-2008, 01:39 AM
பகிர்வுக்கு நன்ரி மோகன்.... நானும் அறிந்து கொண்டேன்...

நான் கூறிய "அபாகஸ்" என்பது ஒரு FEA மென்பொருள்... இது மிக கடினமான Non-linear simulations செய்ய பயன் படுத்துகிறோம்....

உதாரணமாக .....
http://www.youtube.com/watch?v=NyLAtrXGWns&NR=1
இந்த சுட்டியில் Coronary Angioloplasty யின் ஒருவகை செய்முறையை காணலாம்.... இங்கு வைக்கபடும் stent, nitinol என்ற உலோகத்தால் ஆனது, இது coronary artery-யில் வைக்கும் போது என்ன விசைகள் வருகின்றன, அதனால் எதாவது அழுத்தம் வருகிறதா... இதனால் artery-க்கு எதாவது கெடுதல் வருகிறதா என்பதை அறிய, ஆய்வுகூடத்திலோ அல்லது மிருகங்களிலோ சோதனை செய்வது வழக்கம்.. ஆனால் இந்த செயல்பாட்டை அனைத்து வகையிலும் சிறப்பாக செய்ய கணினியில் , artery மற்றும் stent அனைத்தையும் அதன் பண்புகளுடன் உருவாக்கி simulate செய்து பின்னர் அதை சரியாக வடிவமைக்கலாம்.... அதற்க்கு அபாகஸ் போன்ற மென்பொருட்க்கள் உபயோக படுத்துகிறோம்...

அப்படி simulate செய்யபட்ட ஒரு செயலை காணலாம்....
http://www.youtube.com/watch?v=_wJt1P66m1o