PDA

View Full Version : கிரிக்கெட் செய்திகள் : ICC T20 உலகக்கோப்பை .!Pages : 1 2 3 4 5 6 7 [8]

அனுராகவன்
26-02-2008, 03:02 PM
நன்றி ராஜா..
நானும் பார்த்தேன்..
நன்றாக இருந்தது
என் நன்றி

ராஜா
26-02-2008, 03:45 PM
வாழ்த்துக்கள் இந்திய அணி....
இறுதி போட்டிகளில்... சாதிக்குமா.. என்பது பெரிய கேள்விக்குறியே...
----------

3 நாடுகள் கலந்துகொள்ளும் போட்டித் தொடரில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது உறுதியான ஒன்று.

பின்னர்...

அந்த இறுதிப்போட்டியில் தோற்றுப்போவது.... மிக மிக உறுதியான ஒன்று..!

ஆஸி. மண்ணில், ஒருநாள் போட்டித்தொடரை இந்தியா வென்றது எப்போது தெரியுமா..?

1985 ல் "சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்" என்ற தொடரில்தான்...

அதற்குப் பின் எத்தனையோ தொடர்கள்... எல்லாவற்றையும் இந்தியா இழந்துவிட்டுதான் தாயகம் திரும்பியிருக்கிறது.

ராஜா
26-02-2008, 03:47 PM
நன்றி ராஜா..
நானும் பார்த்தேன்..
நன்றாக இருந்தது
என் நன்றி

நன்றிக்கு நன்றி அன்புத்தோழியே..!

:icon_b::icon_b::icon_b:

அறிஞர்
26-02-2008, 05:54 PM
3 நாடுகள் கலந்துகொள்ளும் போட்டித் தொடரில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது உறுதியான ஒன்று.

பின்னர்...

அந்த இறுதிப்போட்டியில் தோற்றுப்போவது.... மிக மிக உறுதியான ஒன்று..!

ஆஸி. மண்ணில், ஒருநாள் போட்டித்தொடரை இந்தியா வென்றது எப்போது தெரியுமா..?

1985 ல் "சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்" என்ற தொடரில்தான்...

அதற்குப் பின் எத்தனையோ தொடர்கள்... எல்லாவற்றையும் இந்தியா இழந்துவிட்டுதான் தாயகம் திரும்பியிருக்கிறது.இந்தியாவிடம் அதிகம் எதிர்பார்க்க கூடாது...
அதிக சம்பாதிக்க (குறிப்பாக சேவாக், யுவராஜிடம்) எப்ப, எப்படி விளையாடனும் எனக்கேளுங்கள்.. சரியா சொல்லுவாங்க....
இனி ஐபிஎல், ஐசிஎல் போட்டிகள் வேறு.....

சென்ற வாரம் ஐசிஎல் மேட்சை பார்த்தேன்...
விளையாட்டு மைதானங்கள் சிறப்பாக இல்லையே..

ராஜா
27-02-2008, 02:53 AM
ஐ.சி.எல்., ஐ.பி.எல். எல்லாமே விளையாட்டை மேம்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டவை அல்ல.

இந்தியர்களின் கிரிக்கெட் ஆர்வத்தை [வெறி என்றாலும் தப்பில்லை..] முதலாகக் கொண்டு கோடிக்கணக்கில் இலாபம் ஈட்டுவதற்காகத்தான்..!

இதுவரை பி.சி.சி.ஐ. ஏகபோகமாக பணம் குவித்து வந்தது.. இப்போது, ஐ.சி.எல். வடிவில் ஜீ குழுமம் போட்டிக்கு வந்திருக்கிறது. பி.சி.சி.ஐ.யின் இரகசியங்கள் ஜீ குழுமத்துக்கும் தெரியுமாதலால், வாரியம் ஒன்றும் செய்ய இயலாமல் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறது.

எல்லாமே மனித வளத்தையும், வேலை நாட்களையும் வீணடிக்கத்தான் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதித்திருக்கின்றன.. முடிந்தவரை அறுவடை செய்வதற்காக...!

aren
27-02-2008, 03:17 AM
ராஜா உங்களுடைய புதிய அவதார் நன்றாக உள்ளது.

என்னதான் பூனை சுத்தி சுத்தி வந்தாலும் அதனுடைய வாலை பிடிக்கவே முடியாது. அதுமாதிரி இந்தியா என்னதான் உதார் விட்டாலும் ஆஸ்திரேலியாவை வெல்லமுடியாது. முடிவு தெரிந்ததுதான். இருந்தாலும் நம் மக்கள் நேரத்தை விரயமாக்கி மாட்சுகளைப் பார்ப்பார்கள் என்பது நிச்சயம்.

அனுராகவன்
29-02-2008, 02:47 AM
புதிய செய்திகள் உண்டா..
சொல்லுங்கள்..

அறிஞர்
29-02-2008, 08:45 PM
இலங்கை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியடைந்தது......

sarathecreator
03-03-2008, 08:45 AM
சிட்னியில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் முதலாவது இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவை இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. ஆஸி. மண்ணில் சச்சின் தனது முதல் ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார்.

வெற்றிபெற 240 ரன்கள் தேவை என்ற இலக்குடன் விளையாடி இந்தியா, 45.5_ ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 242 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இறுதி ஆட்டத்தில் 1- 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. அடுத்து வரும் 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாலே தொடர் இந்தியா வசமாகிவிடும்.

இதற்கு மாறாக அடுத்து வரும் இரண்டு போட்டிகளிலும் வென்றாக வேண்டிய நெருக்கடிக்கு ஆஸ்திரேலியா தள்ளப்பட்டுள்ளது.

கங்காரு தேசத்தில் சச்சின் முதல் சதம்: முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 239 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஹைடன் 82 ரன்கள் எடுத்தார்.

இதன் பின்னர் களமின்றங்கிய இந்தியா, 25 பந்துகள் எஞ்சியிருக்கையில் வெற்றி இலக்கை எட்டியது. இந்திய தரப்பில் துவக்க வீரர் சச்சின் அபாரமாக ஆடி, தனது 42வது சதத்தை பூர்த்தி செய்தார்.

120 பந்துகளில் 117 ரன்களை குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சச்சின், ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதலாவது ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார். ஆட்டநாயகனாக அவர் அறிவிக்கப்பட்டார்.

அவருக்கு பக்கபலமாக இளம் வீரர் ரோகித் சர்மா, 66 ரன்கள் எடுத்து வெற்றிக்கு துணை நின்றார். துவக்க வீரர் உத்தப்பா 17 ரன்களும், காம்பீர் 3 ரன்களும், யுவராஜ் சிங் 10 ரன்களும் எடுத்தனர். கேப்டன் தோனி 12 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலிய தரப்பில் ஹோப்ஸ் 2 விக்கெட்டுகளையும், ஹாக் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இரு அணிகளுக்கு இடையிலான 2வது இறுதிப் போட்டி வரும் 4ம் தேதி பிரிஸ்பேன் நகரில் நடைபெறுகிறது.

sarathecreator
03-03-2008, 08:47 AM
உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய இளைஞர் அணி சாம்பியன் (http://tamizh2000.blogspot.com/2008/03/blog-post.html)


கோலாலம்பூர்: கோலாலம்பூரில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்தது. இந்திய அணி சாம்பியன் ஆவது இது 2வது முறையாகும்.

கோலாலம்பூரில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் இந்தியா உள்பட பல்வேறு நாட்டு அணிகள் கலந்து கொண்டன.

இந்திய இளைஞர் அணி ஆரம்பத்திலிருந்தே ஒரு போட்டியிலும் தோற்காமல் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்த நிலையில் நேற்று இறுதிப் போட்டி நடந்தது.

இதில், இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் சந்தித்தன. வலுவான இந்திய அணியை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்கா திணறியது.

முதலில் இந்தியா பேட் செய்தது. மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடக்கத்திலிருந்தே தடுமாறி விளையாடிய இந்தியா, 45.4 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஸ்ரீவத்சவா 46 ரன்கள் எடுத்தார். பாண்டே 20 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து தென் ஆப்பிரிக்கா தனது இன்னிங்ஸைத் தொடங்கியது. இந்திய பேட்ஸ்மென்கள் சொதப்பினாலும் கூட பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். 11 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், 9வது ஓவரின்போது மழை குறுக்கிட்டது. இதையடுத்து 25 ஓவர்களில் 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று தென் ஆப்பிரிக்காவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் இந்த ரன்களை எட்ட முடியாமல் தென் ஆப்பிரிக்கா தடுமாறியது. இறுதியில், 25 ஓவர்கள் இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது.

இதன் மூலம் இந்திய் அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. இந்தத் தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல், இந்தியா சாம்பியன் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு இது 2வது உலகக் கோப்பையாகும். இதற்கு முன்பு, 2000மாவது ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்றிருந்தது.

இந்திய இளைஞர் அணிக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத்பவார் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய இளைஞர் அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் போனஸ் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பயிற்சியாளர் டேவ் வாட்மோர், அணி உதவியாளர்களுக்கு தலா ரூ. 10 லட்சம் பரிசளிக்கப்படவுள்ளது.

இந்திய இளைஞர் அணி இன்று பெங்களூர் திரும்புகிறது. அப்போது அணிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மதி
03-03-2008, 08:50 AM
நேற்று இந்திய கிரிக்கெட்டுக்கு திருநாள் தான்..
வெற்றி பெற்ற இரு அணியினருக்கும் பாராட்டுக்கள்.

அறிஞர்
04-03-2008, 10:25 AM
இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தி... காமன்வெல்த் வங்கி கோப்பையை வென்றது.
---------
வாய் சவுடால் பேசிய ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா மட்டையால் அடி கொடுத்தது...

(தூங்காமல் மேட்ச் பார்த்தேன்.. நல்ல போட்டி இது)

மதி
04-03-2008, 11:35 AM
இங்க கூட கடைசி அரைமணி நேரம் வேலையே ஓடல..
வெற்றி பெற்ற அணியினருக்கு வாழ்த்துகள்...!

சிவா.ஜி
04-03-2008, 12:55 PM
அடிச்சாச்சில்ல....
ஆஸ்த்ரேலியா....இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா....
இந்திய அணியினருக்கு வாழ்த்துகள்.

ஷீ-நிசி
04-03-2008, 01:00 PM
எல்லாருடைய கணிப்பையும் தவிடுபொடியாக்கி இந்தியா கோப்பையை வென்றது.

தோணி தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி தல சிங்கம் சச்சின் விளாசலோடு இந்த கோப்பையை வாங்கி ஆஸ்திரேலியாவின் முகத்தில், முதுகில் என்று எல்லா இடங்களிலும் கரியை பூசிவிட்டது.

ஆஸ்திரேலியாவினருக்கு மட்டுமல்ல, இந்தியா தோற்கும் என்று விமர்சித்த அத்தனை இந்தியர்களின் முகத்திலும் கரியை பூசியது.


வெற்றிபெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

அறிஞர்
04-03-2008, 02:30 PM
இங்க கூட கடைசி அரைமணி நேரம் வேலையே ஓடல..
வெற்றி பெற்ற அணியினருக்கு வாழ்த்துகள்...!sopcast ப்ரோகிராம் மூலம் ஆன்லைனில் பார்த்து இருக்கலாமே...

வவுனியன்
04-03-2008, 05:28 PM
உலகில் தலைசிறந்த வீரர்களைக் கொண்ட அணி இந்தியாதான், ஆனால் இந்திய அணி எப்போதும் வீரர்களை சரியாகவும் முழுமையாகவும் பாவித்தது கிடையாது.
அத்தோடு வீராகளும் தங்களது சுயநல ஆட்டம் ஆடுவதனையும் கைவிடப் போவதில்லை.

எப்போதுமே இந்திய அணி இப்படித்தான். சிகரத்தை அடைவதும், பின்னர் அங்கிருந்து ஒரேயடியாக பாதளத்துக்குள் விழுவதும் வழமையானதுதான்.

முன்பு ஒருகாலம், இப்போது இருக்கும் சர்மா, பிரவீன்குமாரை விடவும் பந்து வீச்சில் கலக்கியவர் அஜித் அகக்கார். ஆனால் அவர் தற்பொழுது எங்கே இருக்கிறார் என்றே தெரியாது.

இப்பொழுது கங்குலியை ஓரம்கட்டி விட்டார்கள், ஆனால் அணி பாதாளத்துக்குள் செல்லும்போதுதான் இவர்களுக்கு சீனியர்கள் தேவைப்படுவார்கள். அந்த நேரத்தில் தற்பொழுது சிறப்பாக விளையாடிவரும் இளம்வீரர்களுக்கு ஆப்பு வைத்து விடுவார்கள்.

மதி
05-03-2008, 12:32 AM
sopcast ப்ரோகிராம் மூலம் ஆன்லைனில் பார்த்து இருக்கலாமே...
இல்லை அறிஞரே..ஆபிஸில் அதெல்லாம் தடை செய்யப்பட்டுள்ளது.

தாமரை
05-03-2008, 12:47 AM
எப்படியோ அடுத்து ஐ.பி.எல் போட்டிகளுக்கு விளம்பர வருமானம் தொலைகாட்சி உரிம வருமானம் என காட்டுல மழை. (இந்த டோர்ணமெண்டில அடி வாங்கியிருந்தா ஏப்ரல்ல யாரு மேட்ச் பாக்குறது).

வசீகரன்
05-03-2008, 03:58 AM
எதிர்பார்க்கவில்லை...! இது இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வரலாற்று வெற்றிகளில் ஒன்று...
வீழ்த்தவே முடியாது என பலரின் தவறான கருதத்துக்களை உடைத்த வெற்றி இது....! நெஞ்சு நிமிர்கிறது இந்த வெற்றி.....!

ராஜா
07-03-2008, 12:49 PM
உலகில் தலைசிறந்த வீரர்களைக் கொண்ட அணி இந்தியாதான், ஆனால் இந்திய அணி எப்போதும் வீரர்களை சரியாகவும் முழுமையாகவும் பாவித்தது கிடையாது.
அத்தோடு வீராகளும் தங்களது சுயநல ஆட்டம் ஆடுவதனையும் கைவிடப் போவதில்லை.

எப்போதுமே இந்திய அணி இப்படித்தான். சிகரத்தை அடைவதும், பின்னர் அங்கிருந்து ஒரேயடியாக பாதளத்துக்குள் விழுவதும் வழமையானதுதான்.

முன்பு ஒருகாலம், இப்போது இருக்கும் சர்மா, பிரவீன்குமாரை விடவும் பந்து வீச்சில் கலக்கியவர் அஜித் அகக்கார். ஆனால் அவர் தற்பொழுது எங்கே இருக்கிறார் என்றே தெரியாது.

இப்பொழுது கங்குலியை ஓரம்கட்டி விட்டார்கள், ஆனால் அணி பாதாளத்துக்குள் செல்லும்போதுதான் இவர்களுக்கு சீனியர்கள் தேவைப்படுவார்கள். அந்த நேரத்தில் தற்பொழுது சிறப்பாக விளையாடிவரும் இளம்வீரர்களுக்கு ஆப்பு வைத்து விடுவார்கள்.

மிகச் சரியான கணிப்பு வவுனியன்..!

வெற்றியில் தலைகால் தெரியாமல் குதிக்கும் கூட்டத்தாரிடையே, வித்தியாசமாக சிந்திக்கும் ஆற்றல் கொன்டவர்களாகத் தெரிகிறீர்கள்.

உண்மையிலேயே திறன் கொண்ட அணியென்றால் ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றியைப்பெற ஏன் இவ்வளவு காலம் தேவைப்பட்டது என்ற கேள்விக்கு மட்டுமல்ல... அடுத்த வெற்றி எப்போது என்ற கேள்விக்கும் கூட பல "இரசிகர்களிடம்" சரியான பதில் இருக்காது.

ஒரு சாதாரண முத்தரப்பு போட்டி வெற்றிக்கு இவ்வளவு பெரிய கொண்டாட்டமும், பரிசுத்தொகையும் இருப்பது அடுத்த வெற்றி எந்த யுகத்திலோ என்று யோசிக்க வைக்கிறது.

வெற்றி பெற்ற அணியினருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்..!:aetsch013::aetsch013::aetsch013::aetsch013::aetsch013:

அறிஞர்
07-03-2008, 09:16 PM
எந்த அணியையும் வெல்லும்
எந்த அணியிடம் தோற்கும்
இது தான் இந்திய அணி.....

வெற்றியை கொண்டாட வேண்டியது தான்....
இந்த அளவுக்கு கொஞ்சம் ஓவர்தான்.

ராஜா
08-03-2008, 09:35 AM
கிரிக்கெட் செய்திகள்...1


ஆஸ்திரேலிய பத்திரிகைகள் பாண்டிங் கும்பல் மீது கடும் தாக்கு..!

35 வயதுக்கு மேற்பட்ட அரைக்கிழங்களையெல்லாம் வைத்துக்கொண்டு, தோனியின் சிறுவர்களுக்கு ஈடுகொடுக்க இயலாமல் தோற்றுவிட்டார்களாம்..!

பழைய பெருமைகளை தூக்கிப்போட்டுவிட்டு உருப்படியாக ஏதாவது சிந்தித்து செயல்பட வேண்டுமாம்..

ராஜா
08-03-2008, 09:44 AM
கிரிக்கெட் செய்திகள்...2

அணியின் துணைத் தலைவர் யுவராஜ் சிங்குக்கு முதன்மைத் தேர்வாளர் வெங் சர்க்கார் காட்டமான அறிவுரை..!

எட்டு ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடினாலும் டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் உனக்கு கிடைக்காமல் போனதற்கு நீயே காரணம்..

ஆஸ்திரேலியாவில் உன் செயல்பாடுகள் ஏமாற்றமளிக்கின்றன..!

இப்படியே போனால் உனக்கு சிரமம்தான்..!

ராஜா
08-03-2008, 09:49 AM
கிரிக்கெட் செய்திகள்...3

உலகின் தலைசிறந்த மட்டையாளருக்கு நான் வீசிய 54 பந்துகள், என் வாழ்க்கையையே மாற்றி விட்டன..!

பாண்டிங்குக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய இஷாந்த் ஷர்மா பெருமிதம்..!

ராஜா
08-03-2008, 09:58 AM
மற்ற செய்திகள்..

ஆஸ்திரேலியாவில் எனக்கேற்பட்ட அனுபவங்களை மறக்க விரும்புகிறேன்..எவரையும் குற்றம் சொல்லப்போவது இல்லை

கர்பஜன் சிங்.

தோல்வியினால் ரொம்பவும் துவண்டுபோகத் தேவையில்லை..!

ஆஸி. தேர்வுக்குழுத் தலை ஆண்ட்ரு கில்டிட்ச்

ராஜா
08-03-2008, 10:11 AM
எதிர்வரும் இந்திய தென்னாப்பிரிக்க போட்டித்தொடர்..

கால அட்டவணை...

முதல் டெஸ்ட்.. 26/ 3 /2008 காலை 10 மணி.

எம். ஏ.சிதம்பரம் விளையாட்டு அரங்கம், சென்னை.
_____________________________________________

2 வது டெஸ்ட்... 03/ 04/ 2008 காலை 10 மணி

சர்தார் பட்டேல் விளையாட்டு அரங்கம், அகமதாபாத்.
______________________________________________

3 வது டெஸ்ட்... 11 / 4 / 2008.. காலை 10 மணி

கிரீன் பார்க் விளையாட்டு அரங்கம், கான்பூர்.

வசீகரன்
08-03-2008, 10:11 AM
உண்மைதான்.... இந்த தடவை இந்திய அணியில் ரொம்பவே இளமை வேகம் காணப்பட்டது.... ஈஷாந்த்... ரொஹித்
உத்தப்பா... கௌதம் கம்பீர்.... போன்றோரின் ஆட்டம் அனைவரது கண்களையும் கவனத்தையும் ரொம்பவே விரித்தது... தலைசிறந்த வீரர்களை கொண்ட உலக சாம்பியன் சமீப போட்டிகளில் வெற்றிக்காக ரொம்ப மெனக்கெட்டது இந்த தொடராகத்தான் இருக்கும்....

மன்மதன்
08-03-2008, 11:58 AM
எப்படியோ அடுத்து ஐ.பி.எல் போட்டிகளுக்கு விளம்பர வருமானம் தொலைகாட்சி உரிம வருமானம் என காட்டுல மழை. (இந்த டோர்ணமெண்டில அடி வாங்கியிருந்தா ஏப்ரல்ல யாரு மேட்ச் பாக்குறது).

சரியா சொன்னிங்க பாஸ்..:icon_b:

அனுராகவன்
16-03-2008, 11:18 AM
நன்றி ராஜா அவர்களே!!
என் நன்றி

ராஜா
23-03-2008, 06:34 AM
முதல் டெஸ்ட்- தெ. ஆப்பிரிக்க அணி சென்னை வருகை
சென்னை: இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க அணி இன்று சென்னை வந்து சேர்ந்தது.

கேப்டன் கிரீம் ஸ்மித் தலைமையிலான தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்க வீரர்கள் வருகையையொட்டி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

50க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். விமான நிலையத்திலிருந்து வீரர்கள் அனைவரும் சொகுசுப் பேருந்துகளில் தாஜ்கோரமண்டல் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலிலும், சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்திலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையே முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 26ம் தேதி தொடங்குகிறது.

2வது போட்டி அகமதபாத்திலும், 3வது போட்டி கான்பூரிலும் நடைபெறுகிறது.

இந்திய வீரர்கள் பகுதி பகுதியாக வருகை:

இந்திய அணி வீரர்கள் நேற்று ஒரு பகுதியாகவும், இன்று காலை ஒரு பிரிவினரும் சென்னை வந்து சேர்ந்தனர்.

கேப்டன் கும்ப்ளே, கங்குலி, சச்சின், டோணி உள்ளிட்டோர் இன்று காலை வந்தனர். ஷேவாக் உள்ளிட்டோர் நேற்று இரவே வந்து விட்டனர்.

இந்திய வீரர்கள் அனைவரும் கன்னிமாரா ஹோட்டலில் தங்கியுள்ளனர். அங்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மழையால் பயிற்சி பாதிப்பு:

இதற்கிடையே, இன்றும் சென்னையில் நல்ல மழை பெய்துள்ளதால், இந்திய அணியினர் இன்று மாலை மேற்கொள்ளவுள்ள பயிற்சி திட்டமிட்டபடி நடைபெறுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.

தென் ஆப்பிரிக்க அணியினர் நாளை முதல் நெட் பிராக்டிஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

ராஜா
23-03-2008, 09:14 AM
இந்தியாவை வீழ்த்துவோம்: ஸ்மித் நம்பிக்கை

இந்திய அணியை வீழ்த்துவதற்குரிய ஆயுதங்கள் தங்களிடம் இருப்பதாக தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் கிரேம் ஸ்மித் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வரும் 26ம் தேதி நடைபெறும் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி சனிக்கிழமை அன்று காலை சென்னை வந்து சேர்ந்தது.

இதன் பின்னர் கேப்டன் ஸ்மித் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இந்தியாவில் தனது அணி பயணம் மேற்கொள்வது குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளிதார்.

சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் இந்திய களத்திற்கேற்ப பால் ஹாரிஸ், ராபின் பீட்டர்சன் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் தங்கள் அணியில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பேட்டிங்கிலும் முதல் தரமான 6 வீரர்களை தென் ஆப்ரிக்க அணி கொண்டிருக்கிறது என்றார்.

ஆஸ்திரேலிய தொடரில் இந்தியா அபாரமாக செயல்பட்டதாகக் கூறிய அவர், அதிக ரன்களை குவித்த பல பேட்ஸ்மேன்கள் இந்தியாவிடம் இருப்பதை சுட்டிக் காட்டினார்.

எனினும் இந்தியாவை வீழ்த்தும் ஆயுதங்கள் தங்களிடம் இருப்பதாகவும், அதற்கான உத்திகளை தாங்கள் கையாளவிருப்பதாகவும் ஸ்மித் தெரிவித்தார்.

இந்திய- ஆஸ்திரேலிய தொடரில் நிலவியது போல் சொற்போர் தற்போதைய தொடரில் இருக்காது. நல்ல கிரிக்கெட் ஆட்டமாக மட்டுமே இது இருக்கும் என்றார் கேப்டன் ஸ்மித்.

ராஜா
23-03-2008, 09:16 AM
சவாலை எதிர்கொள்வோம்: கும்ளே

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும். சிறப்பாக விளையாடி இதனை இந்திய அணி எதிர்கொள்ளும் என்று, கேப்டன் அனில் கும்ளே கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்திய அணி சிறப்பாக விளையாடி இருப்பதாகக் கூறினார். கடைசியான நடந்த 2 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு டிரா செய்திருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

சொந்த மண்ணில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதக அம்சம் என்ற கும்ளே, ஆஸ்திரேலியத் தொடரைப்போல் சிறப்பாக விளையாடி தென் ஆப்ரிக்கா அளிக்கும் சவாலை முறியடிக்க முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

இந்திய அணியில் சீனியர்- ஜூனியர் என்ற பாகுபாடு கிடையாது. பத்திரிக்கைகளும் ஊடகங்களும் தான் அவ்வாறு எழுதுவதாக கும்ளே கூறினார்.

இந்திய- தென் அப்ப்ரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் கிரிக்கெட் டெஸ்ட் வரும் 26ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தற்போது பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

அனுராகவன்
26-03-2008, 08:44 AM
இந்திய- தென் அப்ப்ரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் கிரிக்கெட் டெஸ்ட் 26 தேதி அதாவது இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது..
தற்போது ஸ்கோர் நிலவரம்..
முதலில் தென்னாப்பிரிக்கா முதலில் மட்டையே பிடித்து ஆடி வருகிறது..
ஸ்கோர்..
ஸ்மீத்....73(அவுட்)
மெக்கன்ஜி..94(அவுட்)
காலிஸ்..3(அவுட் இல்லை)
அல்மா..31(அவுட் இல்லை)
206-2....

ராஜா
30-03-2008, 05:34 AM
குடிபோதை வாகனம்: கிப்ஸ் கைதாகி விடுதலை

தென் ஆப்பிரிக்க தலைநகர் கேப்டவுனில் மது அருந்தி விட்டு, குடிபோதையில் வண்டி ஓட்டியதாக தென் ஆப்பிரிக்க துவக்க ஆட்டக்காரர் ஹெர்ஷல் கிப்ஸ் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

ஆனால் அவர் உடனடியாக 67.53 டாலர்கள் தொகை செலுத்தி ஜாமீனில் விடு*வி*க்க*ப்பட்டார். என்றாலும் கிப்ஸ், வரும் ஜூன் 27-ம் தேதி கேப்டவுன் நீதிபதிகள் முன்னால் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கேப்டவுன் நகரின் கடற்கரைப் பகுதியில் வெள்ளியன்று நள்ளிரவு 3.45 மணியளவில் கிப்ஸ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக அவர் சரியாக விளையாடதால் தென் ஆப்பிரிக்க் அணியின் நடப்பு இந்திய தொடருக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் ஏப்ரல் 18-ம் தேதி துவங்கும் ஐ.பி.எல். இருபதுக்கு 20 போட்டிகளில் ஹைதராபாத் அணிக்கு கிப்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அணியின் நடப்பு இந்திய தொடருக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் ஏப்ரல் 18-ம் தேதி துவங்கும் ஐ.பி.எல். இருபதுக்கு 20 போட்டிகளில் ஹைதராபாத் அணிக்கு கிப்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ராஜா
30-03-2008, 01:01 PM
சென்னை கிரிக்கெட் டெஸ்ட் டிராவில் முடிந்தது

சென்னை : இந்தியா - தென்னாப்ரிக்கா இடையிலான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. சென்னையில் நடைபெற்ற இந்த போட்டியின் இறுதி நாள் ஆட்டத்தில் தென்னாப்ரிக்கா அணி ஆட்டமுடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 331 ரன்கள் எடுத்திருந்தது. ஆட்டம் டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 627 ரன்களும், தென்னாப்ரிக்கா 540 ரன்களும் எடுத்திருந்தன.

அனுராகவன்
31-03-2008, 02:46 AM
நன்றி ராஜா அவர்களே!!
என் நன்றி உங்களுக்கு

அறிஞர்
31-03-2008, 03:06 AM
சென்னை கிரிக்கெட் போட்டி எப்பவும் விறு விறுப்பாக இருக்கும்....

ஆனால் இந்த முறை டிராவில் முடிந்தது... சற்று வருத்தமே...

வரும்போட்டிகளில் இந்தியா சாதிக்குமா...

mania
31-03-2008, 06:30 AM
குடிபோதை வாகனம்: கிப்ஸ் கைதாகி விடுதலை

தென் ஆப்பிரிக்க தலைநகர் கேப்டவுனில் மது அருந்தி விட்டு, குடிபோதையில் வண்டி ஓட்டியதாக தென் ஆப்பிரிக்க துவக்க ஆட்டக்காரர் ஹெர்ஷல் கிப்ஸ் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

ஆனால் அவர் உடனடியாக 67.53 டாலர்கள் தொகை செலுத்தி ஜாமீனில் விடு*வி*க்க*ப்பட்டார். என்றாலும் கிப்ஸ், வரும் ஜூன் 27-ம் தேதி கேப்டவுன் நீதிபதிகள் முன்னால் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கேப்டவுன் நகரின் கடற்கரைப் பகுதியில் வெள்ளியன்று நள்ளிரவு 3.45 மணியளவில் கிப்ஸ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக அவர் சரியாக விளையாடதால் தென் ஆப்பிரிக்குடிபோதை வாகனம்: கிப்ஸ் கைதாகி விடுதலை

தென் ஆப்பிரிக்க தலைநகர் கேப்டவுனில் மது அருந்தி விட்டு, குடிபோதையில் வண்டி ஓட்டியதாக தென் ஆப்பிரிக்க துவக்க ஆட்டக்காரர் ஹெர்ஷல் கிப்ஸ் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

ஆனால் அவர் உடனடியாக 67.53 டாலர்கள் தொகை செலுத்தி ஜாமீனில் விடு*வி*க்க*ப்பட்டார். என்றாலும் கிப்ஸ், வரும் ஜூன் 27-ம் தேதி கேப்டவுன் நீதிபதிகள் முன்னால் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கேப்டவுன் நகரின் கடற்கரைப் பகுதியில் வெள்ளியன்று நள்ளிரவு 3.45 மணியளவில் கிப்ஸ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக அவர் சரியாக விளையாடதால் தென் ஆப்பிரிக்க் அணியின் நடப்பு இந்திய தொடருக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் ஏப்ரல் 18-ம் தேதி துவங்கும் ஐ.பி.எல். இருபதுக்கு 20 போட்டிகளில் ஹைதராபாத் அணிக்கு கிப்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அணியின் நடப்பு இந்திய தொடருக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் ஏப்ரல் 18-ம் தேதி துவங்கும் ஐ.பி.எல். இருபதுக்கு 20 போட்டிகளில் ஹைதராபாத் அணிக்கு கிப்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கொஞ்சம் ஓவராவே போட்டுட்டார் போல.....:rolleyes::rolleyes: ரெண்டு ரெண்டா தெரியுதே.....!!!! :D:D
அன்புடன்
மணியா...:D

ராஜா
06-04-2008, 07:56 AM
2வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி..!

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இன்று நடந்த 3ம் நாள் ஆட்டத்தில் இந்தியா தனது 2வது இன்னிங்சை ஆடியது.

இதில் அதிகபட்சமாக கங்குலி 87 ரன்கள் எடுத்தார். ஷேவாக் 17, ஜாபர் 19, திராவிட் 17, லட்சுமண் 35, தோனி 52, கும்ப்ளே 5, ஹர்பஜன் சிங் 4, ஆர்பி சிங் 8, ஸ்ரீசாந்த் 17 ரன்கள் எடுத்தனர். ஐகே பதான் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்நிலையில் , 2வது இன்னிங்சின் ஆட்ட முடிவில் இந்தியா 94.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 328 ரன்கள் மட்டுமே எடுத்தது.

முன்னதாக, தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 494 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா தனது முதல் இன்னிங்சில் 76 ரன்களிலேயே சுருண்டது.

இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி, ஒரு இன்னிங்ஸ் 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

சென்னையில் நடந்த இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி, டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. 3வது டெ**ஸ்*ட் போ*ட்டி கா*ன்*பூ*ரி**ல் வரும் 11*ம் தே*தி நடைபெறு*கிறது.

(மூலம் - வெப்துனியா)

ராஜா
30-05-2008, 02:31 PM
முத்தரப்பு தொடர்..

இந்திய அணி அறிவிப்பு..!

ப்ரக்யான் ஓஜா, யூசுஃப் பத்தான் தேர்வு..

சச்சின், கங்கூலிக்கு கல்தா..!!

ராஜா
04-06-2008, 12:13 PM
இந்தியா- பாக்.- பங்களாதேஷ் முத்தரப்பு தொடர்..

போட்டி அட்டவணை..

Jun 8 [Sun], 2008
Bangladesh Vs Pakistan Shere Bangla National Stadium, Mirpur

Jun 10 [Tue], 2008
India Vs Pakistan Shere Bangla National Stadium, Mirpur

Jun 12 [Thu], 2008
Bangladesh Vs India Shere Bangla National Stadium, Mirpur

Jun 14 [Sat], 2008 Final Shere Bangla National Stadium, Mirpur

ராஜா
04-06-2008, 12:25 PM
ஆசியக் கோப்பை அட்டவணை..

Jun 24 [Tue], 2008 Group A
Bangladesh Vs United Arab Emirates Gaddafi Stadium, Lahore

Jun 24 [Tue], 2008 Group B
Pakistan Vs Hong Kong National Stadium, Karachi

Jun 25 [Wed], 2008 Group A
Bangladesh Vs Sri Lanka Gaddafi Stadium, Lahore

Jun 25 [Wed], 2008 Group B
Hong Kong Vs India National Stadium, Karachi

Jun 26 [Thu], 2008 Group B
Pakistan Vs India National Stadium, Karachi

Jun 26 [Thu], 2008 Group A
Sri Lanka Vs United Arab Emirates Gaddafi Stadium, Lahore

Jun 28 [Sat], 2008 Second Stage
not known Vs not known National Stadium, Karachi

Jun 29 [Sun], 2008 Second Stage
not known Vs not known National Stadium, Karachi

Jun 30 [Mon], 2008 Second Stage
not known Vs not known National Stadium, Karachi

Jul 2 [Wed], 2008 Second Stage
not known Vs not known National Stadium, Karachi

Jul 3 [Thu], 2008 Second Stage
not known Vs not known National Stadium, Karachi

Jul 4 [Fri], 2008 Second Stage
not known Vs not known National Stadium, Karachi

Jul 6 [Sun], 2008 Final
not known Vs not known National Stadium, Karachi

ராஜா
13-09-2008, 10:25 AM
போதுமா போ"தாதா"..!

எதிர்வரும் இரானி கோப்பை (உள்நாட்டு) கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சவுரவ் கங்குலி கழற்றிவிடப்பட்டுள்ளார்.


இத்துடன் அவர் கிரிக்கெட் வாழ்க்கை முற்றுப்பெற்றுவிட்டதாகப் பலர் கருத்து தெரிவித்துள்ளபோதிலும், போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு தாதாவின் உடல்தகுதி திருப்திகரமாக இல்லையென்று தேர்வாளர்கள் கூறியுள்ளனர்.

அறிஞர்
15-09-2008, 01:54 PM
தாதா மீண்டும் அணியில் இடம்பிடிக்கப் போவதாக சவால் விட்டுள்ளார்..

வசீகரன்
16-09-2008, 11:31 AM
தாதா மீண்டும் அணியில் இடம்பிடிக்கப் போவதாக சவால் விட்டுள்ளார்..

சாதிக்க நேரம் பார்த்து நிறைய இளைஞர்கள் காத்திருக்கிறார்கள்....

அவரது நேரம் முடிந்து விட்டது...! இளைஞர்களுக்கு வழி விட்டு ஒதுங்கலாமே..!!!
தொடர்ந்து அவரது ஃபிட்னஸ் கவலைக்கிடமாகவே உள்ளது...!!!

rajatemp
20-09-2008, 04:18 AM
தாதா மீண்டும் அணியில் இடம்பிடிக்கப் போவதாக சவால் விட்டுள்ளார்..

வயதானவர்கள் கிரிக்கெட்டிலா இருக்கும்

ராஜா
20-09-2008, 05:19 AM
:icon_b::icon_b::icon_b::icon_b::icon_b:

poo
20-09-2008, 07:23 AM
மூத்த வீரர்கள் ருசிகண்ட பூனைகளாயிற்றே.. எப்படி விட்டுட்டு போவாங்க?!

ராஜா
08-11-2008, 06:24 AM
ஹாங்காங் சிக்சஸ் 5 ஓவர் போட்டி...

இங்கிலாந்து எதிர் தென் ஆப்ரிக்கா..

5 ஓவர் போட்டி.. முதலில் மட்டை பிடித்த இங்கிலாந்து 100 ஓட்டங்கள் குவித்துள்ள*து.

ராஜா
08-11-2008, 06:26 AM
ஹாங்காங் சிக்சஸ் (5 ஓவர்) போட்டி...

பிராட்மன் பிரிவில் இங்கி, தெ.ஆ, பாக் மற்றும் இந்தியா..

இதுவரை ஆடிய 2 ஆட்டங்களிலுமே இந்தியா தோல்வி..!

ராஜா
08-11-2008, 07:09 AM
அந்தப்போட்டியில் தென்னாப்பிரிக்கா 15 ஓட்டங்கள் வேறுபாட்டில் தோற்றது.

அடுத்து இந்தியா எதிர் பாக்.

பாக். முதலில் மட்டை பிடித்து 65 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

ராஜா
08-11-2008, 07:32 AM
மிகக்குறைவான வெற்றி இலக்கை, எட்டமுடியாமல் இந்தியா தோல்வியுற்றது..

கடைசி ஓவரில் 9 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், உதிரிகளாக 2 ஓட்டங்கள் கிடைத்தும்கூட 3 ஓட்ட வேறுபாட்டில் ரசிகர்கள் முகத்தில் இந்தியா கரிபூசி, போட்டியிலிருந்து வெளியேறியது.


இந்திய அணி "வீரர்கள்.."

நிக்கில் சோப்ரா (தல)

அமே குராசியா (வி.கா.)

ஷர்மா, டேவிட் ஜான்சன், விவேக் ராஸ்தான் & ஓயாசிஸ்.

ராஜா
08-11-2008, 07:34 AM
அடுத்த போட்டி..

இலங்கை எதிர் ஆல் ஸ்டார்ஸ்..!

ராஜா
08-11-2008, 07:48 AM
ஆல் ஸ்டார்ஸ் அணியில் இலங்கை வீரர்கள்..

சனத் ஜெய சூர்யா ( ஒரு ஓவரில் 32 ஓட்டம் கொடுத்தார்..!)

சமிந்தா வாஸ்..!

மற்றும்

ஃப்ளெமிங், ஹோகார்ட், சந்தர்பால்

ராஜா
08-11-2008, 08:11 AM
ஹாங்காங் சிக்சஸ் (5 ஓவர்) போட்டி...

முதலில் மட்டை பிடித்த இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 93 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய ஆல்ஸ்டார்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி இலக்கை எளிதில் எட்டி வெற்றி பெற்றது.

ராஜா
10-11-2008, 07:52 AM
10*/11/2008.

நாக்பூர் டெஸ்டில் இந்தியா வென்றதன் மூலம், ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் 2 வது இடத்துக்கு முன்னேறியது..!

ராஜா
04-12-2008, 06:20 AM
இந்திய அணியின் பாக். பயணம் ரத்து..

மும்பை தாக்குதல் சம்பவத்தை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப் பயணம் ரத்து செய்யப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி 2009 ஆ*ம் ஆ*ண்டு ஜனவ*ரி மாத*ம் பா*கி*ஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெ*ஸ்*ட் போ*ட்டிக*ள், 5 ஒருநா*ள் போ*ட்டிகள் ம*ற்று*ம் 20 - 20 போ*ட்டிக*ளி*ல் *விளையாடத் *தி*ட்ட**மிப*ட்டிரு*ந்தது.

இந்நிலையில் இந்திய அணியின் பாகிஸ்தான் பயணம் ரத்து செய்யப்படுவதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ராஜா
04-12-2008, 06:21 AM
ஒருநாள் தரவரிசை: தோனி தொடர்ந்து முதலிடம்..

ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில், 779 புள்ளிகளுடன் தோனி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர் யுவராஜ் சிங் 744 புள்ளிகள் பெற்று, இப்பட்டியலில் 6-வது இடத்தை பெற்றுள்ளார். சச்சின் 12-வது இடத்தில் உள்ளார்.

இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஹசியும், 3-வது இடத்தில் தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் கிரேம் ஸ்மித்தும் உள்ளனர்.

வசீகரன்
04-12-2008, 10:01 AM
ஒருநாள் தரவரிசை: தோனி தொடர்ந்து முதலிடம்..

ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

டோனி என்னவோ அந்தளவுக்கு விளையாடுவதாக எனக்கு தெரியவில்லையே...!!!
அவரை தொடர்ந்து முதல் இடத்தில் வைத்திருக்கும் மர்மம் தான் என்னவோ...???

பாரதி
11-12-2008, 01:40 PM
இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டு அரங்கில் இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான முதலாவது ஐந்துநாள் துடுப்பாட்ட போட்டி துவங்கியது. பூவா, தலையாவில் வென்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாட தீர்மானித்தது. இந்திய அணியில் கங்கூலிக்கு பதிலாக யுவ்ராஜ்சிங் சேர்க்கப்பட்டுள்ளார். தேநீர் இடைவேளை வரையில் ஒரு மட்டையாளரை மட்டுமே இழந்து, நிதானமாக ஆடிய இங்கிலாந்து அதன் பின் சிறப்பான பந்துவீச்சின் காரணமாக மேலும் நான்கு ஆட்டக்காரர்களை இழந்தது. இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். பந்து வீச்சில் ஜாஹீர்கான், ஹர்பஜன்சிங் தலா இரு விக்கெட்டுக்களையும் மிஸ்ரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

முதலாவது நாள் ஆட்டமுடிவின் போது இங்கிலாந்து அணியின் ஓட்டவிபரம் 229 / 5.

aren
11-12-2008, 08:00 PM
ஏன் தான் சென்னையில் கிரிக்கெட் மாட்ச் எப்பொழுது மழை வரும் சமயம் பார்த்து வைக்கிறார்கள் என்று புதிராக இருக்கிறது. வருடத்தில் ஒரு சில வாரங்களே சென்னையில் மழை பெய்யும். அந்த சமயம் பார்த்து சரியாக கிரிக்கெட் மாட்ச் சைத்து ரசிகர்களின் வயித்தெறிச்சலை ஏன் இவர்கள் சம்பாதித்துக்கொள்கிறார்கள் என்றே தெரியவில்லை.

தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அடுத்த முறையாவது இதை கவனித்தில் கொண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் கிரிக்கெட் மாட்சை வைத்துக்கொள்ளவேண்டும். அப்ப*டி இல்லையென்றால் ஆக*ஸ்ட் அல்ல*து செப்டெம்ப*ர் மாத*ம் ச*ரியாக* இருக்கும் என்று நினைக்கிறேன்.

பாரதி
12-12-2008, 05:06 AM
அன்பு ஆரென்,
ஆரம்பத்தில் சென்னையில் இந்த சமயத்தில் இந்தப்போட்டியை நடத்துவதாக திட்டம் இல்லை. ஆனால் மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து அங்கு நடைபெறுவதாக இருந்த போட்டியை ரத்து செய்து, வேறு இடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அப்படி இடம் மாற்றியதால்தான் சென்னையில் இப்போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இன்று மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்தின் ஓட்ட எண்ணிக்கை விபரம் : 294 / 8

பாரதி
12-12-2008, 06:24 AM
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 316 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. ப்ரியர் மட்டும் சிறப்பாக ஆடி 53 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியத் தரப்பில் ஹர்பஜன்சிங், அமித் மிஸ்ரா தலா மூன்று விக்கெட்டுக்களையும், ஜாஹீர்கான் இரண்டு விக்கெட்டுக்களையும், இஷாந்த் சர்மா, யுவராஜ்சிங் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பாரதி
12-12-2008, 07:02 AM
இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் வீரேந்திர சேவாக் ஒன்பது ஓட்டங்களுக்கு, ஆண்டர்சன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

தற்போது இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கை விபரம் : 16 / 1

பாரதி
12-12-2008, 07:46 AM
தேநீர் இடைவேளையின் போது இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கை விபரம் : 37 / 3. சேவாக்கை தொடர்ந்து கம்பீர், டிராவிட் ஆகியோர் ஸ்வானின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். சச்சின் டெண்டுல்கர் 3 ஓட்டங்களுடன் ஆடி வருகிறார்.

பாரதி
12-12-2008, 10:53 AM
இரண்டாம் நாள் ஆட்ட முடிவின் போது இந்தியா ஆறு விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்களை மட்டுமே சேகரித்துள்ளது. அணித்தலைவர் டோனி 24 ஓட்டங்களுடனும், ஹர்பஜன்சிங் 13 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்று சேவாக் 9 ஓட்டங்களுக்கும், கம்பீர் 19 ஓட்டங்களுக்கும், டிராவிட் 3 ஓட்டங்களுக்கும், டெண்டுல்கர் 37 ஓட்டங்களுக்கும், லக்ஷ்மண் 24 ஓட்டங்களுக்கும், யுவ்ராஜ்சிங் 14 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஸ்வான் 2 விக்கெட்டுகளையும், ஹார்மிசன், ஆண்டர்சன், ஃபிளிண்டாஃப், பனேசர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பாரதி
13-12-2008, 05:05 AM
மூன்றாம் நாள் பகல் உணவு இடைவேளையின் போது இந்திய அணி ஒன்பது ஆட்டக்காரர்களை இழந்து 241 ஓட்டங்களை சேர்த்துள்ளது. அமித் மிஸ்ரா 12 ஓட்டங்களுடனும், இஷாந்த சர்மா 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். அணித்தலைவர் டோனி 53 ஓட்டங்களும், ஹர்பஜன்சிங் 40 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பாரதி
13-12-2008, 06:37 AM
இந்தியா முதல் இன்னிங்ஸில் 241 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. ஃபிளிண்டாஃப் மற்றும் பனேசர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், ஸ்வான் 2 விக்கெட்டுகளையும், ஹார்மிசன், ஆண்டர்சன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
__________________

ராஜா
13-12-2008, 09:32 AM
இங்கிலாந்து 134 க்கு 3.

ஸ்ட்ராஸ் 62*

காலிங்வுட் 39*

வசீகரன்
13-12-2008, 09:57 AM
இங்கிலாந்து இந்த தடவை வரிந்து கட்டி விளையாடி கொண்டு இருக்கிறது
பார்ப்போம்.... இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை...

ராஜா
13-12-2008, 01:29 PM
வலுவான நிலையில் இங்கிலாந்து..!

3 விக்கெட் இழப்புக்கு 172..

247 ஓட்டங்கள் முன்னிலை..!!

இன்னும் 2 நாட்கள் மீதமுள்ள நிலையில் இந்தியாவுக்கு மழை கைகொடுக்குமா?

பாரதி
14-12-2008, 05:17 AM
நான்காம் நாள் மதிய உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 244 ஓட்டங்களை குவித்துள்ளது. ஸ்ட்ராஸ் 102 ஓட்டங்களுடனும், கோலிங்வுட் 93 ஓட்டங்களுடனும் ஆடிக்கொண்டிருக்கின்றனர். மொத்தமாக இங்கிலாந்து இதுவரை 319 ஓட்டங்கள் பெற்று முன்னிலையில் இருக்கிறது.

பாரதி
14-12-2008, 07:58 AM
நான்காம் நாள் ஆட்ட தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 301 ஓட்டங்களை எடுத்துள்ளது. 4 வது விக்கெட்டுக்கு ஸ்ட்ராஸும் கோலிங்வுட்டும் இணைந்து 200க்கும் மேற்பட்ட ஓட்டங்களை எடுத்தனர். ஸ்ட்ராஸும் கோலிங்வுட்டும் தலா 108 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி தனது ஆட்டத்தை முடித்துக்கொள்ளும் அறிவிப்பை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பாரதி
14-12-2008, 08:21 AM
இங்கிலாந்து அணி தனது ஒன்பதாவது ஆட்டக்காரரை 311 ஓட்டங்கள் எடுத்திருந்த போது இழந்தது. அத்துடன் தனது ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. இந்திய அணி வெற்றி பெற 387 ஓட்டங்களை எடுக்க வேண்டும். இன்று கிட்டத்தட்ட 30 ஓவர்களும் நாளைய முழுநாள் ஆட்டமும் உள்ளது. ஆனால் இதுவரை இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளில் நான்காவதாக ஆடிய அணி வெற்றி பெற எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் 276 மட்டுமே. எனவே இந்த கடினமான இலக்கை இந்தியா எவ்விதம் எதிர்கொள்ளும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பாரதி
14-12-2008, 10:36 AM
நான்காம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 131 ஓட்டங்களை எடுத்துள்ளது. இன்று வீசப்பட்ட 29 ஓவர்களில் வீரேந்திர சேவாக் சிறப்பாக விளையாடி 83 ஓட்டங்களை எடுத்தார். அவர் ஸ்வானின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். கம்பீர் 41 ஓட்டங்களுடனும், டிராவிட் 2 ஓட்டங்களுடனும் ஆடிக்கொண்டிருக்கின்றனர். இந்தியா வெற்றி பெற இன்னும் 256 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன.

பாரதி
15-12-2008, 05:15 AM
இன்று கடைசி நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 213 ஓட்டங்களை எடுத்துள்ளது. இன்று டிராவிட் 4 ஓட்டங்கள் எடுத்தும், கம்பீர் 66 ஓட்டங்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். டெண்டுல்கர் 27 ஓட்டங்களுடனும், லக்ஷ்மண் 20 ஓட்டங்களுடனும் ஆடுகளத்தில் உள்ளனர். இந்தியா வெற்றி பெற 66 ஓவர்களில் இன்னும் 174 ஓட்டங்களை எடுக்க வேண்டும்.

ராஜா
15-12-2008, 08:25 AM
தொட்டுவிடும் தூரத்தில் வெற்றி..!

இந்தியா வெற்றிபெற இன்னும் 63 ஓட்டங்களே தேவை..

கைவசம் 6 விக்கெட்டுகள்.

சச்சின் 76*

யுவராஜ் 53*

ராஜா
15-12-2008, 09:30 AM
இந்தியா வெற்றி..!

இந்திய வெற்றிக்குத் திலகம் வைத்தாற்போன்று சச்சின் சதம்..!

சென்னை மண், பெரும்பாலும் இந்திய அணிக்குச் சாதகமானது என்பது இன்னும் ஒருமுறை நிரூபணம்..!!

வாழ்த்துகள் இந்தியா..!!!

"பொத்தனூர்"பிரபு
15-12-2008, 09:44 AM
வெற்றி.........
வெற்றி...
வெற்றி........
வெற்றி........
வெற்றி.......
வெற்றி.........

"பொத்தனூர்"பிரபு
15-12-2008, 09:46 AM
சச்சின் 103 நாட் அவுட்
யுவராஜ் சிங் 85 நாட் அவுட்

"பொத்தனூர்"பிரபு
15-12-2008, 09:48 AM
99 இல் இருந்து 4 ரன்கள் அடித்து தனது சதம் மற்றும் இந்தியாவின் வெற்றியையும் அடையசெய்தார் சச்சின்

"பொத்தனூர்"பிரபு
15-12-2008, 09:59 AM
http://3.bp.blogspot.com/_1ii0oYjwrWs/SUY3-z3PSqI/AAAAAAAAAMY/mv02HBln_gw/s320/chennai+test+2008.jpg (http://3.bp.blogspot.com/_1ii0oYjwrWs/SUY3-z3PSqI/AAAAAAAAAMY/mv02HBln_gw/s1600-h/chennai+test+2008.jpg)

http://2.bp.blogspot.com/_1ii0oYjwrWs/SUY3-_viHXI/AAAAAAAAAMQ/cVpHkvsZqT4/s320/chennai+test+2008.bmp (http://2.bp.blogspot.com/_1ii0oYjwrWs/SUY3-_viHXI/AAAAAAAAAMQ/cVpHkvsZqT4/s1600-h/chennai+test+2008.bmp)

http://3.bp.blogspot.com/_1ii0oYjwrWs/SUY3-rv8clI/AAAAAAAAAMI/6Q2spOC-AHM/s320/chennai+test+2008+(2).bmp (http://3.bp.blogspot.com/_1ii0oYjwrWs/SUY3-rv8clI/AAAAAAAAAMI/6Q2spOC-AHM/s1600-h/chennai+test+2008+(2).bmp)

aren
15-12-2008, 10:10 AM
என்னவென்று சொல்வது. டெஸ்ட் போட்டி 20/20 வந்தவுடன் அழிந்துவிடும் என்று சொன்னவர்கள் இனிமேல் சிறிது காலத்திற்கு பேசமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

இந்திய அணியில் யாருமே சதம் அடிக்காமல் டெஸ்டை வெல்வார்கள் என்று நினைத்தேன். கடைசி நான்கு அடித்து சதத்தை எட்டிவிட்டார் சச்சின்.

இதுதான் முதல் முறை சச்சின் நான்காவது இன்னிங்ஸில் சதம் அடித்து இந்தியா டெஸ்ட் வென்றது.

இந்திய அணியினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

அருமையாக டெஸ்ட் தொடரை இந்த குருகிய நாட்களில் நடத்திக்காட்டிய தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

ராஜா
15-12-2008, 10:19 AM
அருமையாக டெஸ்ட் தொடரை இந்த குறுகிய நாட்களில் நடத்திக்காட்டிய தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை.


வழிமொழிகிறேன் மாட்டிரிக்ஸ்..!

அத்துடன் தொலைக்காட்சியில் மட்டும் ஆட்டத்தைப் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திக்கொண்ட சென்னை மழைக்கும் நன்றி நவில்கிறேன்..!

aren
15-12-2008, 10:27 AM
திராவிடின் நிலை என்னவாகும் என்று தெரியவில்லை.

மொஹாலியில் நடக்கும் போட்டியில் அவருக்கு கடைசி சந்தர்பம் கொடுப்பார்கள் என்றே தோன்றுகிறது. ஆகையால் அடுத்த டெஸ்டில் திராவிட் நிச்சயம் சதம் அடிப்பார் என்றே நான் நினைக்கிறேன்.

anna
15-12-2008, 10:31 AM
வரலாற்று சிறப்பு மிக்க அசத்தலான வெற்றி. நான் என்னமோ மண்ணை கவ்வி விடுவோம் என தான் நினைத்தேன். ஐந்தாம் நாள் ஆட்டத்தில் ஆடுகளம் பேட்டிங் செய்ய ஒத்துழைத்து விட்டது.எனி-வே வெற்றி பெற்ற நமது அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.கிரிக்கெட்டின் மார்க்கண்டேயனின் சச்சினின் ஆட்டம் அருமை திலகம் வைத்தாற்போல் சச்சின் சதம் சூப்பர்.

anna
15-12-2008, 10:35 AM
திராவிடின் நிலை என்னவாகும் என்று தெரியவில்லை.

மொஹாலியில் நடக்கும் போட்டியில் அவருக்கு கடைசி சந்தர்பம் கொடுப்பார்கள் என்றே தோன்றுகிறது. ஆகையால் அடுத்த டெஸ்டில் திராவிட் நிச்சயம் சதம் அடிப்பார் என்றே நான் நினைக்கிறேன்.

டிராவிட் இந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க வெற்றியோடு தன் ஓய்வை அறிவித்து விடலாம்.அவரின் இடத்துக்கு அருமையான பல பேட்ஸ்மேன்கள் காத்துக்கொண்டு உள்ளனர்.ஒரு காலத்தில் அவரின் ஆட்டம் அனைவரையும் மெய்சிலர்க்க வைக்கும். இப்போ சுத்தமாக ·பார்ம் போச்சு அவர் ஒய்வை அறிவிப்பது தான் மரியாதை. இல்லையேல் ஓரம்கட்டப்படுவார் என்றே தோன்றுகிறது.

ராஜா
15-12-2008, 10:37 AM
அசத்தல் படங்கள் பொத்தனூராரே..!

நன்றி..!

மதி
15-12-2008, 03:28 PM
வாழ்த்துகள் இந்திய அணியினருக்கு...!
சாதிச்சுட்டாங்க...

ராஜா
17-12-2008, 04:28 AM
http://content-ind.cricinfo.com/inline/content/image/57989.html?alt=1

அடுத்த டெஸ்ட் போட்டி..

19 டிசம்பர், 2008/ வெள்ளிக்கிழமை, காலை 9 மணி.

பஞ்சாப் கிரிக்கெட் கழக மைதானம்,மொஹாலி.

இது இந்தியாவின் மிக அழகிய மைதானம், வெறும் 2 ஆண்டுகளில் (1993) நிர்மாணிக்கப்பட்டது என்பது வியப்புக்குரிய செய்தி..!

ஆரம்பத்தில் பந்துவீச்சுக்கு சாதகமாகவே இருந்தது.. ( 1999ல் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அரை நாளில் 83 ஓட்டங்களுக்கு இந்தியா சுருண்ட கொடுமைகூட நடந்தது..!)

நாளடைவில் உயிரற்ற பிட்சாக மாறி டிரா ஆகும் போட்டிகளாகத் தந்துகொண்டிருக்கிறது..!


மட்டையாளர் சொர்க்கமான இம்மைதானம் ஒருநாள் போட்டிகளில் இரசிகர்களுக்கு சிறந்த கேளிக்கைக்குரியதாகத் திகழ்கிறது.

1996 உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸி, மே.இ.தீவுகள் போட்டி நினைவிருக்கிறதா..? சொற்ப ரன்களில் ஆஸி வீரர் வார்னே இறுதி ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட் வீழ்த்தி மயிர்க்கூச்செரியும் வெற்றி பெற்றது இங்குதான்..!

அய்யா
18-12-2008, 12:54 PM
வாழ்த்துகள் இந்திய அணியினரே!

முடிந்த போட்டிக்கு மட்டுமல்ல; தொடங்கப்போகிற போட்டிக்கும் சேர்த்துதான்!

அறிஞர்
18-12-2008, 01:44 PM
இந்த போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றால், இங்கிலாந்தி கதி.. அதோகதிதான்...

ஒரு நாள் 5-0, டெஸ்ட் 2-0... சூப்பர்.

அறிஞர்
18-12-2008, 01:46 PM
பாகிஸ்தான் பயணத்தை இந்தியா ரத்துச் செய்துள்ளது.

நல்ல முடிவு...

பாகிஸ்தான் இலங்கையை நாடுகிறது.

ராஜா
18-12-2008, 01:48 PM
இந்த டெஸ்ட் டிரா ஆகவே வாய்ப்பு அதிகம்..!

இங்கிலாந்து டாஸ் வென்றால் அவ்வணி வெல்ல நூலிழை வாய்ப்புள்ளது.

arun
18-12-2008, 06:23 PM
ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 132 ரன்கள் லீடிங்கில் இருக்கிறது

ஸ்கோர் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில்

முதல் இன்னிங்க்ஸ்
ஆஸ்திரேலியா 375 ஆல் அவுட்
தென் ஆப்ரிக்கா 243/8

"பொத்தனூர்"பிரபு
19-12-2008, 04:07 AM
http://content-ind.cricinfo.com/inline/content/image/57989.html?alt=1

அடுத்த டெஸ்ட் போட்டி..

19 டிசம்பர், 2008/ வெள்ளிக்கிழமை, காலை 9 மணி.

பஞ்சாப் கிரிக்கெட் கழக மைதானம்,மொஹாலி.

இது இந்தியாவின் மிக அழகிய மைதானம், வெறும் 2 ஆண்டுகளில் (1993) நிர்மாணிக்கப்பட்டது என்பது வியப்புக்குரிய செய்தி..!

ஆரம்பத்தில் பந்துவீச்சுக்கு சாதகமாகவே இருந்தது.. ( 1999ல் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அரை நாளில் 83 ஓட்டங்களுக்கு இந்தியா சுருண்ட கொடுமைகூட நடந்தது..!)

நாளடைவில் உயிரற்ற பிட்சாக மாறி டிரா ஆகும் போட்டிகளாகத் தந்துகொண்டிருக்கிறது..!


மட்டையாளர் சொர்க்கமான இம்மைதானம் ஒருநாள் போட்டிகளில் இரசிகர்களுக்கு சிறந்த கேளிக்கைக்குரியதாகத் திகழ்கிறது.

1996 உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸி, மே.இ.தீவுகள் போட்டி நினைவிருக்கிறதா..? சொற்ப ரன்களில் ஆஸி வீரர் வார்னே இறுதி ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட் வீழ்த்தி மயிர்க்கூச்செரியும் வெற்றி பெற்றது இங்குதான்..!


தகவலுக்கு நன்றி
நிறைய தகவல்களை நுனிவிரலில் வைத்திருப்பீர்கள் போல

"பொத்தனூர்"பிரபு
19-12-2008, 04:11 AM
இந்தியா வெற்றி....

இப்போதைக்கு டாஸ் -ல் வென்றுள்ளது....
முதலில் பேட் செய்ய முடிவெடுத்து
2 வது ஓவரில் சேவாக் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தர்

"பொத்தனூர்"பிரபு
19-12-2008, 04:13 AM
15 / 1
கம்பீர் 9(36),ட்ராவிட்3 (23) விளையடுகிறார்கள்


---------------------------------------------------

aren
19-12-2008, 04:41 AM
நம்ம திராவிட் சுவர் மாதிரி அப்படியே நிற்கிறார். ஆடுவது மாதிரி தெரியவில்லை.

இந்த மாட்ச்தான் அவருக்கு கடைசியாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதில் அடித்தால்தான் அடுத்த மாட்சிற்கு சான்ஸ் கிடைக்கும். ஆகையால் அவர் கொஞ்சம் தைரியமாக களத்தில் இறங்கி ஆடவேண்டும். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

"பொத்தனூர்"பிரபு
19-12-2008, 04:51 AM
ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப மெதுவாக விளையாடுராங்க

"பொத்தனூர்"பிரபு
19-12-2008, 05:34 AM
51 / 1
உணவு இடைவேளை

"பொத்தனூர்"பிரபு
19-12-2008, 06:40 AM
நின்னுட்டாங்கையா

105 / 1
கம்பீர் 61
ட்ராவிட் 39

"பொத்தனூர்"பிரபு
19-12-2008, 07:31 AM
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச்

"பொத்தனூர்"பிரபு
19-12-2008, 07:57 AM
134 / 1

ட்ராவிட் 50 (153 பந்து)
கம்பீர் 78 (165 பந்து)


.....

அருள்
19-12-2008, 08:06 AM
உலக அதிசயம் டிராவிட் 50

அருள்
19-12-2008, 08:56 AM
ட்ராவிட் 63 (153 பந்து)
கம்பீர் 101 (165 பந்து)

மன்மதன்
19-12-2008, 12:58 PM
உலக அதிசயம் டிராவிட் 50

ஆடியே ஆகணும் என்ற கட்டாயம்.
100 எடுப்பார் .(400 பந்தில்) :rolleyes:

ஆதவா
19-12-2008, 01:34 PM
ஆடியே ஆகணும் என்ற கட்டாயம்.
100 எடுப்பார் .(400 பந்தில்) :rolleyes:

வெகு மந்தமான ஆட்டம்.. 72 ஓவரில் 171 தானா? இந்த டெஸ்ட் ட்ராதாங்கோ!!!

ராஜா
19-12-2008, 02:05 PM
ட்ராவிட்க்கு இன்னும் 10 டெஸ்ட் உத்தரவாதம்..!

arun
19-12-2008, 05:35 PM
திராவிடுக்கு வாழ்த்துக்கள்

ஆடிய கடைசி 11 இன்னிங்ஸ்களில் முதல் 50

arun
19-12-2008, 05:36 PM
ட்ராவிட்க்கு இன்னும் 10 டெஸ்ட் உத்தரவாதம்..!

:D :D :D :D :D :D :D :D :D :D

பாரதி
20-12-2008, 03:33 AM
2வது ஐந்து நாள் போட்டியின் இரண்டாவது நாளான இன்று, இந்திய அணியின் இப்போதைய ஓட்ட விபரம் : 226 / 1
கம்பீர் : 126
டிராவிட் : 92

ராஜா
20-12-2008, 03:43 AM
திராவிட் சதமடிப்பாரா..?

இல்லே வெளியில் போகும் பந்தை வாங்கி ஸ்டம்புக்குள் விடுவாரா..?

ராஜா
20-12-2008, 03:47 AM
திராவிட் & கம்பீர்..

522 பந்துகளில் 232 ஓட்ட பங்களிப்பு.

இம்மைதானத்தில் இது புதிய சாதனை..!

ராஜா
20-12-2008, 03:56 AM
டெஸ்ட் வரலாற்றில் 3 வது ஆட்டக்காரர் எடுத்திருக்கும் மிகக்கூடிய ஓட்டங்கள் (8078) என்ற சாதனை ராகுல் திராவிடின் வசம்..!

ராஜா
20-12-2008, 04:02 AM
தனது 26வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்கிறார் திராவிட்..!

இதற்குமுன் பதற்றம் நிறைந்த தொண்ணூறுகளில் 10 முறை ஆட்டமிழந்திருக்கும் ராகுல் இம்முறை இரசிகர்களை ஏமாற்றவில்லை..!

பாரதி
20-12-2008, 04:03 AM
இந்தியா 241 / 1
கம்பீர் :132
டிராவிட் : 100 (இது 26வது சதம்!)

ராஜா
20-12-2008, 04:38 AM
இவ்வாண்டில் தனது 1000ஆவது டெஸ்ட் ஓட்டத்தை பூர்த்திசெய்கிறார் கம்பீர்..

ராஜா
20-12-2008, 04:48 AM
கவுதம் கம்பீர்..

322 பந்துகளில் 153 ஓட்டங்கள்...

21 பவுண்டரிகள், 1 ஆறு..

276/1

ராஜா
20-12-2008, 05:02 AM
இந்திய அணி 300 ஓட்டங்களைக் கடக்கிறது..!

பாரதி
20-12-2008, 06:06 AM
கம்பீர் 179 ஓட்டங்களுக்கு ஸ்வானின் பந்து வீச்சில் ஆண்டர்சனிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியா : 320 / 2
டிராவிட் : 130
சச்சின் : 0

பாரதி
20-12-2008, 06:27 AM
டிராவிட் 136 ஓட்டங்களுக்கு ஸ்வானின் பந்து வீச்சில் பனேசரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியா : 329 / 3
சச்சின் : 3
லக்ஷ்மண் : 0

பாரதி
20-12-2008, 06:50 AM
சச்சின் டெண்டுல்கர் 11 ஓட்டங்களுக்கு ஸ்வானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்தியா : 337 / 4

பாரதி
20-12-2008, 06:55 AM
24 பந்துகளை எதிர்கொண்ட லக்ஷ்மண் ஓட்டமெதுவும் எடுக்காமல் ஃபிளிண்டாப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்தியா : 339 / 5

ராஜா
20-12-2008, 06:55 AM
என்ன இது..?

17 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுகள் விழுந்துவிட்டனவே..!

ராஜா
20-12-2008, 07:00 AM
320 ஓட்டங்கள் வரை 1 விக்கெட்..

339 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்..!

சாப்பிடப்போன வீரர்களுக்கு என்ன ஆயிற்று..?

ராஜா
20-12-2008, 08:43 AM
395/6.

தோனி 16 (63 பந்துகளில்..)

ஹர்பஜன் 14 (12 பந்துகளில்..)

பாரதி
21-12-2008, 01:00 PM
நேற்றைய ஆட்டத்தின் முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 453 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இன்று ஆடத்துவங்கிய இங்கிலாந்து இன்றைய ஆட்டத்தின் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 282 ஓட்டங்களை எடுத்திருக்கிறது. அணித்தலைவர் பீட்டர்சன் சிறப்பாக ஆடி 144 ஓட்டங்களும், ஃபிளிண்டாப் 62 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். களத்தில் ஆண்டர்சன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இந்திய தரப்பில் ஜாஹீர்கானும், மிஸ்ராவும் தலா இரண்டு விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா, ஹர்பஜன்சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இன்றும் தொடர்ந்து மூன்றாவது நாளாக, வெளிச்சம் போதாமையால் ஆட்டம் முன்னதாகவே முடிவடைந்தது.

இன்னுமொரு செய்தி:
இன்று நடந்து முடிந்த ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்காவிற்கு இடையேயான முதலாவது மட்டைப்பந்து போட்டியில் சவாலாக நிர்ணயிக்கப்பட்ட 414 ஓட்டங்களை தனது இரண்டாவது இன்னிங்ஸில் எடுத்து தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது!! இது இதுவரை நடைபெற்றுள்ள ஐந்து நாள் போட்டிகளில் நாலாவது இன்னிங்ஸில் வெற்றி பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட ஓட்டங்களில் இரண்டாவது அதிகபட்சமாகும்!

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ் - 375
தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸ் - 281
ஆஸ்திரேலியா இரண்டாம் இன்னிங்ஸ் - 319
தென்னாப்பிரிக்கா இரண்டாம் இன்னிங்ஸ் - 414 / 4

ராஜா
22-12-2008, 05:00 AM
இங்கிலாந்து 298 / 8.

பாரதி
22-12-2008, 05:29 AM
தற்போது இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 302 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. ஹர்பஜன் சிங் 4 விக்கெட்டுக்களை சாய்த்தார். ஜாஹீர்கான் 3 விக்கெட்டுக்களையும், மிஸ்ரா 2 விக்கெட்டுக்களையும், இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர். இந்தியா 151 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து, முதல் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 8 ஓட்டங்களை எடுத்துள்ளது.

ராஜா
22-12-2008, 06:37 AM
சேவாக் (17) ரன் அவுட்..!

30/1


இந்தியா 181 ஓட்டங்கள் முன்னணி..1

ராஜா
22-12-2008, 07:06 AM
திராவிட் காலி..!


க்ரிஸ் பிராடின் பந்து வீச்சில் ஸ்டம்பைக் கோட்டை விட்டார்..!

36/2.

arun
22-12-2008, 06:00 PM
இன்னுமொரு செய்தி:
இன்று நடந்து முடிந்த ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்காவிற்கு இடையேயான முதலாவது மட்டைப்பந்து போட்டியில் சவாலாக நிர்ணயிக்கப்பட்ட 414 ஓட்டங்களை தனது இரண்டாவது இன்னிங்ஸில் எடுத்து தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது!! இது இதுவரை நடைபெற்றுள்ள ஐந்து நாள் போட்டிகளில் நாலாவது இன்னிங்ஸில் வெற்றி பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட ஓட்டங்களில் இரண்டாவது அதிகபட்சமாகும்!

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ் - 375
தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸ் - 281
ஆஸ்திரேலியா இரண்டாம் இன்னிங்ஸ் - 319
தென்னாப்பிரிக்கா இரண்டாம் இன்னிங்ஸ் - 414 / 4

ஆஸ்திரேலியாவுக்கு பலத்த அடி

arun
22-12-2008, 06:06 PM
நான்காம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது

யுவராஜ் சிங் 39 ரன்களுடனும் கவுதம் கம்பீர் 44 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

285 ரன்கள் முண்ணனியில் உள்ளனர்

ராஜா
23-12-2008, 05:04 AM
டிராவை நோக்கி மொகாலி டெஸ்ட்..!

பனிமூட்டம் காரணமாக இறுதிநாள் ஆட்டம் தாமதமாக (தற்போதுதான்) துவங்கியது..

136/4

ராஜா
23-12-2008, 07:07 AM
வழக்கம்போல உணவு இடைவேளைக்குப்பின் இந்திய விக்கெட்டுகள் வீழ்கின்றன..

242/6

யுவராஜ் ரன் அவுட்..

தோனி வந்ததும் போனார்..

கம்பீர் 93*

இந்த இன்னிங்சிலும் சதமடிப்பாரா..?

அமரன்
23-12-2008, 07:16 AM
அடிக்கனும்.. அதுக்காகத்தானே ஆட்டத்தை தொடர்கிறார் தோனி..

ராஜா
23-12-2008, 07:19 AM
கம்பீரும் அவுட்..! (97)

யுவராஜ் 86.

இந்தியா முடித்துக்கொண்டது.. 251/7

இங்கிலாந்து வெல்ல 403 ஓட்ட இலக்கு..!

ராஜா
23-12-2008, 07:23 AM
அடிக்கனும்.. அதுக்காகத்தானே ஆட்டத்தை தொடர்கிறார் தோனி..

கம்பீர் இந்த இன்னிங்சிலும் சதமடித்திருந்தால், அது இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா சாதித்த எட்டாவது நிகழ்வாக இருந்திருக்கும்..

முன்னர் அச்சாதனையைச் செய்தோர்..

விஜய் ஹசாரே,

சுனில் கவாஸ்கர்,

ராகுல் திராவிட்..

தாமரை
06-01-2009, 04:16 AM
ரஞ்சி காலிறுதிப் போட்டியில் வெற்றியைச் சாதகமாக்கிய பாலாஜி இன்று அரையிறுதியில் சுரேஷ் ரெய்னா, முகம்மது கைஃப் விக்கெட்டுகளைக் கைப்பற்றி
இறுதிப் போட்டிக்கு ராஜபாட்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.

இறுதிப் போட்டியில் தமிழ்நாடு மும்பை அணிகள் மோதும்ம் என எதிர் பார்க்கப்படுக்கிறது.

ஓவியன்
07-01-2009, 09:08 AM
இங்கிலாந்து கிரிக்கட் அணியின் அணித்தலைவர் கெவின் பீட்டர்சன் இன்று திடீரென ராஜினாமாச் செய்துள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு. இதனை (http://content-gulf.cricinfo.com/england/content/current/story/385633.html) சொடுக்குங்கள்...

arun
26-02-2009, 04:53 PM
அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி விட்டன

ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்கா சென்றுள்ளது முந்தைய தொடர் தோல்விக்கு ஆஸ்திரேலியா பதிலடி கொடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்

முதல் டெஸ்ட்

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 254/5

பாரதி
31-07-2009, 02:08 PM
ஐந்து நாள் மட்டைப்பந்து போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற ஆலன் பார்டரின் சாதனையை இன்று ரிக்கி பாண்டிங் முறியடித்தார்.
--------------------------------------------------------------------------
இம்மாதம் 23 ஆம் தேதி ஜஸ்டின் லாங்கர் ஆஸ்திரேலிய அணி வீரர்களில் முதல்தரப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை பிராட்மேனிடமிருந்து தனது வசமாக்கிக்கொண்டார்.

அமரன்
01-08-2009, 07:56 AM
இரு சாதனையாளருக்கும் வாழ்த்துகள்.

அடுத்தாண்டு நடைபெற இருக்கும் மேற்கிந்தியாவுடனான தொடருடன், ஐந்துநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக முத்தைய முரளீதரன் அறிவித்துள்ளாராமே..

பாரதி
16-08-2009, 07:42 AM
வாகையர் கோப்பைக்கான இந்திய மட்டைப்பந்து அணியில் இடம் பெறும் வீரர்கள் அடங்கிய பட்டியல் இந்திய மட்டைப்பந்து வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

சச்சின், கம்பீர், டிராவிட், சுரேஷ் ரெய்னா, யுவ்ராஜ் சிங், தோனி, யூசூஃப் பதான், ஹர்பஜன் சிங், பிரவீண் குமார், இஷாந்த் சர்மா, ஆஷிஷ் நெஹ்ரா, ஆர்.பி.சிங், அமித் மிஸ்ரா, தினேஷ் கார்த்திக், அபிஷேக் நய்யார்.

ஓவியன்
30-08-2009, 09:28 AM
இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோற்கும் நிலையில் இன்று இருக்கும் நியூசிலாந்து அணி, தம் அணித்தலைவர் டேனியல் விற்றோரியின் அபாரத் துடுப்பாட்டத்தினால் போராடிக் கொண்டிருக்கிறது......

கேப்டன் இன்னிங்ஸ் என்பார்களே, அதனைத்தான் விற்றோரி செய்து கொண்டிருக்கிறார்....

ஆனாலும் 9 விக்கெட்டுக்களை இழந்து அல்லாடிக்கொண்டிருக்கிறது நியூசிலாந்து அணி...

aren
30-08-2009, 01:21 PM
நியூஜிலாந்த் தோற்றாலும் விட்டோரியின் ஆட்டம் அபாரம்

பாரதி
07-09-2009, 06:17 PM
சர்வதேச 20-20 போட்டிகளிலிருந்து தாம் ஓய்வு பெறுவதாக ரிக்கி பாண்டிங் இன்று அறிவித்துள்ளார்.

ஓவியன்
07-09-2009, 06:32 PM
ஆமாம், தோல்விகளின் பொறுப்புக்களை பாண்டிங் உணர்கிறாரெனத் தெரிகிறது...

அய்யா
08-09-2009, 07:15 AM
நல்ல முடிவு.

அய்யா
17-10-2009, 07:00 AM
இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் அட்டவணை.

1) 25 அக். ஜெய்ப்பூர்.

2) 28 அக். நாக்பூர்.

3) 31 அக். டெல்லி.

4) 2 நவ. மொஹாலி.

5) 5 நவ. ஹைதராபாத்.

6) 8 நவ. கௌஹாத்தி.

7) 11 நவ. மும்பை.

வியாசன்
17-10-2009, 07:29 AM
அய்யா பார்ப்பதற்கு ஆவல்தான் என்ன செய்வது பார்க்கமுடியாதநிலை தகவலுக்கு நன்றிகள்

aren
17-10-2009, 08:05 AM
நான் இனிமேல் இந்தியா ஆடும் போட்டிகளில் அதிக அக்கறை காட்டவேண்டாம் என்று நினைத்திருக்கிறேன். அதை நிச்சயம் கடைபிடிப்பேன் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.

நாம் இவர்களை ஹீரோ ஆக்குகிறோம் இவர்களும் கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள், நாம்தான் ஓட்டாண்டியாகிக்கொண்டிருக்கிறோம்.

வியாசன்
17-10-2009, 08:07 AM
நான் இனிமேல் இந்தியா ஆடும் போட்டிகளில் அதிக அக்கறை காட்டவேண்டாம் என்று நினைத்திருக்கிறேன். அதை நிச்சயம் கடைபிடிப்பேன் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.

நாம் இவர்களை ஹீரோ ஆக்குகிறோம் இவர்களும் கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள், நாம்தான் ஓட்டாண்டியாகிக்கொண்டிருக்கிறோம்.

ஆரென் எப்போது இந்த ஞானம் பொறந்திச்சு சரி சரி அப்படியே கடைப்பிடியுங்கள்

aren
17-10-2009, 09:53 AM
ஆரென் எப்போது இந்த ஞானம் பொறந்திச்சு சரி சரி அப்படியே கடைப்பிடியுங்கள்

என் மனைவி திட்டியதிலிருந்து.

உண்மை விளிம்பி
ஆரென்

அமரன்
18-10-2009, 08:42 AM
என் மனைவி திட்டியதிலிருந்து.

உண்மை விளிம்பி
ஆரென்

அப்போ நீங்க எப்பவோ இந்த முடிவுக்கு வந்திருக்கனுமே ஜி..

வியாசன்
18-10-2009, 09:09 AM
என்ன ஆரென் மனைவி சொல்லே மந்திரமா?

புத்திசாலி மனைவி கிடைத்ததுக்கு நீங்கள் நன்றி சொல்லவேண்டும்

அமரன்
18-10-2009, 09:41 AM
என்ன ஆரென் மனைவி சொல்லே மந்திரமா?

புத்திசாலி மனைவி கிடைத்ததுக்கு நீங்கள் நன்றி சொல்லவேண்டும்
அப்போ அண்ணி என்ன சொல்ல வேண்டும் என்கிறீர்கள்:)

aren
19-10-2009, 05:37 PM
அப்போ அண்ணி என்ன சொல்ல வேண்டும் என்கிறீர்கள்:)

ஏதும் சிண்டு முடியவில்லையே.

பாரதி
17-01-2010, 08:33 AM
சச்சின் டெண்டுல்கர் ஐந்து நாட்கள் மட்டைப்பந்து போட்டியில் 13,000 ஓட்டங்களைப் பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை அடைந்துள்ளார். இன்று பங்களாதேஷில் நடைபெறும் போட்டியில் இச்சாதனையை படைத்தார்.

அனுராகவன்
18-01-2010, 04:35 PM
அரிய செய்திகள்..
இன்னும் பல சுட சுட செய்திகள் வர வாழ்த்துக்கள்

அய்யா
22-01-2010, 10:07 AM
சச்சின் டெண்டுல்கர் ஐந்து நாட்கள் மட்டைப்பந்து போட்டியில் 13,000 ஓட்டங்களைப் பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை அடைந்துள்ளார். இன்று பங்களாதேஷில் நடைபெறும் போட்டியில் இச்சாதனையை படைத்தார்.

பாராட்டுகள் சச்சின்!

அய்யா
22-01-2010, 11:15 AM
http://sports.dinamalar.com/SportsImages/IND-SA.jpg

நன்றி ; தினமலர்.காம்.

aren
30-01-2010, 08:52 AM
இந்த வீடியோவைப் பாருங்கள். மனீஷ் பாண்டே பிடித்த காட்ச் பிரமாதம்

http://www.youtube.com/watch?v=Hbc8rxs32x0&ண்ற்=1

பா.ராஜேஷ்
30-01-2010, 10:24 AM
ஆஹா! மிக அற்புதமான கேட்ச். இவரை போன்ற வீரர்கள் இந்திய அணிக்கு மிகவும் அவசியம்.. (பட்ட அடி கொஞ்சம் பலம் போல இருக்கிறதே ;) )

ஓவியன்
31-01-2010, 06:52 PM
ஐ.பி.எல் 20-இருபது போட்டியொன்றில் ஹைதரபாத் அணிக்கெதிராக 73 பந்து வீச்சுக்களில் 114 ஓட்டங்களைக் குவித்தவராச்சே...

இவருக்கு இந்திய கிரிக்கட் அணியில் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கின்றது...

aren
09-02-2010, 02:59 AM
மேற்கு இண்டீஸ் மறுபடியும் சொதப்புகிறது.

புதிதாக போலார்டு, கீமர் ரோச் போன்றவர்கள் வந்திருக்கிறார்கள், மறுபடியும் பழைய மேற்கு இண்டீஸைப் பார்க்கலாம் என்று நினைத்தால் இப்படி சொதப்புகிறார்களே.

என்னத்த சொல்றது.

ராஜா
22-07-2012, 04:57 PM
http://2.bp.blogspot.com/-1JBc9_hjD1c/T_QNzOSeFDI/AAAAAAAACsM/SWZsCWIIwUI/s1600/539319_489370674413071_1989264572_n.jpg

jayanth
22-07-2012, 05:41 PM
நன்றி ராஜா...!!!

ராஜா
23-07-2012, 07:03 AM
நன்றி ஜயந்த்..!

ராஜா
23-07-2012, 07:06 AM
இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: முச்சதம் அடித்து ஆம்லா புதிய சாதனை

http://tamil.thatscricket.com/img/2012/07/23-hasim-amala-300.jpg

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் பந்துவீச்சை சிறப்பாக ஆடிய தென் ஆப்பிரிக்க வீரர் ஹஷிம் ஆம்லா, முச்சதம் அடித்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 300 ரன்களை கடந்த முதல் தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை ஆம்லா படைத்துள்ளார்.


ஜோடி சாதனை:

ஆம்லா-காலிஸ் ஜோடி 377 ரன்கள் எடுத்து, தென் ஆப்பிரிக்க 3வது விக்கெட்டுக்கு அதிகபட்ச ரன்களை சேர்த்த ஜோடி என்ற சாதனையை படைத்தது.

அதிக சதம் அடித்தவர்கள்:

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இந்திய வீரர் சச்சின்(51 சதம்) உள்ளார். அடுத்த இடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் காலிஸ்(43 சதம்) உள்ளார். 3வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்(41 சதம்) உள்ளார்.

ராஜா
23-07-2012, 07:09 AM
கிரிக்கெட் வீரர் மார்க் பவுச்சர் 'ஆப்ரேஷன்' வெற்றி-பார்வை திரும்ப கிடைக்கும்: டாக்டர்கள் நம்பிக்கை

http://tamil.thatscricket.com/img/2012/07/20-15-mark-boucher-eye-injury-300.jpg

முன்னாள் தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர்(35). இந்த மாதம் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வரும் தென் ஆப்பிரிக்கா அணியில் இவர் இடம் பெற்றிருந்தார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, கடந்த 9ம் தேதி கவுண்டி அணியான சேமர்சேட் அணிக்கு எதிராக 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா கலந்து கொண்டது. இப்போட்டியின் போது தென் ஆப்பிரிக்க சுழல்பந்துவீச்சாளர் இப்ராம் தகிர் வீசிய பந்து ஸ்டம்பில் பட்டு போல்டானது. அப்போது ஸ்டம்பின் மீது இருந்த 'பைல்ஸ்' எதிர்பாராதவிதமாக விக்கெட் கீப்பரான மார்க் பவுச்சரின் இடது கண்ணை பதம் பார்த்தது.
இதனால் மார்க் பவுச்சரின் இடது கண்ணில் காயம் ஏற்பட்டது. மேலும் கடும் ரத்த போக்கு ஏற்பட்டால், பவுச்சருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பவுச்சரின் இடது கண் பார்வையை இழக்கலாம் என்ற அச்சம் நிலவியது.

மார்க் பவுச்சரின் கண்ணில் ஏற்பட்டுள்ள காயத்திற்காக, 3 மணி நேர அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இங்கிலாந்தில் இருந்து தென் ஆப்பிரிக்காவிற்கு நாடு திரும்பிய, பவுச்சருக்கு நேற்று 2வது முறையாக கேப்டவுனில் கண் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு மார்க் பவுச்சரின் இடது கண் மூலம் மீண்டும் பார்வை கிடைக்கலாம் என்று டாக்டர்கள் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ராஜா
24-07-2012, 09:57 AM
இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்றது இந்தியா-முதலில் பேட்டிங் தேர்வு

http://tamil.thatscricket.com/img/2012/07/24-virat-kohli-rohit-sharma-2-300.jpg

Ind 53 / 4 (11.3 Ov)

ராஜா
24-07-2012, 10:26 AM
இந்திய மேற்பாதி தகர்வு..

74 / 5 (17.2 Ov)

ராஜா
24-07-2012, 10:54 AM
தானாகத் தரவேறும் வரைபடம்..

http://live.cricbuzz.com/includes/archive/2012_SL_IND/SL_IND_JUL24/gph_rprog.png

ராஜா
24-07-2012, 01:41 PM
தென் ஆப்ரிக்கா இன்னிங்ஸ் வெற்றி * "நம்பர்-1' இங்கிலாந்துக்கு "அடி'

http://sports.dinamalar.com/SportsImages/Dale-Steyn-336.jpg

ஓவல் டெஸ்டில், தென் ஆப்ரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. டெஸ்ட் "ரேங்கிங்' பட்டியலில் "நம்பர்-1' இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் சொதப்பியது.

இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட், லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 385, தென் ஆப்ரிக்கா 637/2 (டிக்ளேர்) ரன்கள் எடுத்தன. பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி, நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்திருந்தது. பெல் (14), போபரா (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

பெல் அரைசதம்:

நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு போபரா (22) ஏமாற்றினார். பின் இணைந்த இயான் பெல், மாட் பிரையர் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. படுமந்தமாக ஆடிய இந்த கூட்டணியை பிரிக்க தென் ஆப்ரிக்க பவுலர்கள் லேசாக தடுமாற்றம் கண்டனர். பொறுப்பாக ஆடிய பெல் அரைசதம் அடித்தார். ஆறாவது விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்த போது இம்ரான் தாகிர் சுழலில் மாட் பிரையர் (40) சிக்க, தென் ஆப்ரிக்க அணிக்கு ஓரளவு நிம்மதி கிடைத்தது. சிறிது நேரத்தில் ஸ்டைன் வேகத்தில் பெல் (55) நடையைக் கட்டினார்.

ஸ்டைன் வேட்டை:

அடுத்து வந்த ஸ்டூவர்ட் பிராட் (0), சுவான் (7), ஆண்டர்சன் (4) மூவரும் ஸ்டைன் பந்தில் பெவிலியன் திரும்பினர். இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 240 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது. இதன்மூலம் தென் ஆப்ரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றது. டிம் பிரஸ்னன் (20) அவுட்டாகாமல் இருந்தார். வேகத்தில் அசத்திய ஸ்டைன் 5 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் இவர், டெஸ்ட் அரங்கில் 18வது முறையாக ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றினார். சுழலில் அசத்திய இம்ரான் தாகிர் 3 விக்கெட் வீழ்த்தினார். ஆட்டநாயகன் விருதை "டிரிபிள் செஞ்சுரி' அடித்த தென் ஆப்ரிக்காவின் ஹசிம் ஆம்லா தட்டிச் சென்றார்.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் ஆக., 2ம் தேதி லீட்சில் துவங்குகிறது.

முதல் வெற்றி

இங்கிலாந்துக்கு எதிராக பேட்டிங், பவுலிங்கில் அசத்திய தென் ஆப்ரிக்க அணி, லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் முதன்முறையாக வெற்றி பெற்றது. முன்னதாக இங்கு 13 முறை டெஸ்டில் விளையாடிய தென் ஆப்ரிக்க அணி 7 போட்டியை (1907, 24, 29, 35, 47, 60, 65) "டிரா' செய்தது. இங்கிலாந்து அணி 6 போட்டியில் (1912, 51, 55, 94, 2003, 08) வெற்றி பெற்றது.

ராஜா
25-07-2012, 05:18 AM
இந்திய அணியைப் புரட்டி எடுத்த இலங்கை

http://tamil.thatscricket.com/img/2012/07/25-gambhir-india-12-300.jpg

இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சொதப்பல் பேட்டிங் செய்த இந்திய பேட்ஸ்மேன்களால் ரன்களை சேர்க்க முடியவில்லை. இதனால் எளிய வெற்றி இலக்கை விரட்டிய இலங்கை அணி போட்டியில் வெற்றி பெற்று, தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி நேற்று ஹம்பன்டோட்டா மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியின் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. பேட்டிங்கை அதிரடியாக துவங்கிய இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. 2 பவுண்டரிகள் அடித்து 15 எடுத்திருந்த ஷேவாக், பெரேராவின் பந்தில் அவரிடமே கேட்சாகி வெளியேறினார்.
அடுத்து வந்த விராத் கோஹ்லி 1 ரன் மட்டுமே எடுத்து கீப்பர் கேட்சானார். ரோஹித் சர்மா டக் அவுட்டானார். சுரேஷ் ரெய்னா 1 ரன்னில் ஏமாற்றினார். அணியின் பரிதாப நிலையை சரி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டோணி 11 ரன்களில் சங்கக்காராவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
ஆல் ரவுண்டர் இர்பான் பதான் 6 ரன்களில் திருப்திப்பட்டு கொண்டார். விக்கெட்கள் ஒருபுறம் சரிந்து கொண்டே இருக்க, கம்பிர் மட்டும் ஒருமுனையில் நின்று பொறுமையாக ஆடி வந்தார். கம்பிர் உடன் ஜோடி சேர்ந்த அஸ்வின் சற்றுநேரம் நிலைத்து நின்று ஆடினார். 3 பவுண்டரிகளை அடித்த அஸ்வின் 21 ரன்களில் எதிர்பாராத வகையில் ரன் அவுட்டானார்.

அதன்பிறகு ஜாகிர்கான்(2), ஓஜா(5) ஆகியோர் வரிசையாக வெளியேறினர். கம்பிர் மட்டும் பொறுப்பாக ஆடி அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார். ஆனால் அவரும் 65 ரன்கள் எடுத்த நிலையில் சங்கக்காராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் 33.3 ஓவர்களின் முடிவில் இந்தியா அனைத்து விக்கெட்களையும் இழந்து 138 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இலங்கை தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பெரேரா, ஆஞ்சிலோ மேத்யூஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

139 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு, தில்ஷன், சகா தரங்கா ஜோடி சிறப்பான துவக்கத்தை அளித்தது. துவக்கத்தில் தில்ஷன் கொடுத்த எளிய கேட்சை கோட்டைவிட்டார் ஷேவாக். அதன்பிறகு நிலைத்து ஆடிய அவர் அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்ந்த தில்ஷன்-தரங்கா ஜோடி சிறப்பாக ஆடியது. இந்த நிலையில் தில்ஷன் 50 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வினின் சுழலில் சிக்கினார். ஆனால் தரங்கா அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

வெற்றி இலக்கை இலங்கை அணி 19.5 ஓவரில் எட்டி, 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துவக்க வீரர் தரங்கா 59 ரன்களுடன் கடைசி வரை அவுட்டாகாமல் இருநதார். இதன்மூலம் இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

ராஜா
26-07-2012, 04:52 AM
கபில் தேவுக்கு பி.சி.சி.ஐ., மன்னிப்பு! * ரூ. 1.5 கோடி பெறுகிறார்

http://sports.dinamalar.com/SportsImages/Kapil-Dev-6-336.jpg

:பி.சி.சி.ஐ.,யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை மறந்து, பொது மன்னிப்பு கேட்டார் கபில் தேவ். இது ஏற்றுக் கொள்ளப்பட்டதால், ரூ. 1.5 கோடி சிறப்பு நிதி உதவி உட்பட அனைத்து சலுகைகளையும் உடனடியாக பெறுகிறாõர்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ். கடந்த 1983ல் உலகக் கோப்பை பெற்று தந்த இவர், ஓய்வுக்கு பின் இந்திய கிரிக்கெட் போர்டுடன் (பி.சி.சி.ஐ.,) முறைத்துக் கொண்டார். பி.சி.சி.ஐ.,க்கு போட்டியாக 2007ல் துவங்கப்பட்ட இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.,) அமைப்பின் தலைவராக செயல்பட்டார்.
இதனால் கபில் தேவ், கிரண் மோரே உள்ளிட்டோருக்கு பி.சி.சி.ஐ., தடை விதித்தது. இதில், மோரே, பி.சி.சி.ஐ.,க்கு பொது மன்னிப்பு கடிதம் எழுதி, சிறப்பு நிதி ரூ. 60 லட்சம் மற்றும் "பென்ஷன்' பெற்றார்.

பின் கபில் தேவுடன் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் சமரச முயற்சியில் ஈடுபட்டார். அப்போது, பொது மன்னிப்பு கடிதம் அளிக்க கபில் ஒத்துக் கொண்டார். இந்நிலையில் நேற்று காலை பி.சி.சி.ஐ., அலுவலகத்துக்கு சென்ற கபில் தேவ், தலைவர் சீனிவாசனை சந்தித்து பேசினார். இதுகுறித்து சீனிவாசன் வெளியிட்ட அறிக்கை:

ஐ.சி.எல்., அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து "ராஜினாமா' செய்துள்ளதாக, பி.சி.சி.ஐ.,க்கு எழுதிய கடிதம் கிடைத்தது. இதில்,"பி.சி.சி.ஐ.,க்கு தொடர்ந்து ஆதரவு தரவுள்ளதாகவும், எதிர்காலத்தில் முன்னேற்றத்துக்கு உதவ விரும்புவதாகவும்,' அவர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டுக்கு மிகப்பெரும் சேவை செய்துள்ள கபில் தேவின் இந்த அறிவிப்பை, பி.சி.சி.ஐ., வரவேற்கிறது. வரும் ஆண்டுகளில் கபில் தேவுடன் இணைந்து செயல்படுவது, வளர்ச்சிக்கு துணையாக இருக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

எல்லாம் கிடைக்கும்:

இதுகுறித்து பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,"" கபில் தேவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால், ரூ. 1.5 கோடி சிறப்பு நிதி, தவிர, மாத "பென்ஷன்' ரூ. 35 ஆயிரம் வழங்கப்படும். கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலுவை தொகை உட்பட அனைத்து சலுகைகளும் உடனடியாக தரப்படும்,'' என்றார்.

நாங்கள் சிறுவர்கள்:

மீண்டும் பி.சி.சி.ஐ.,யுடன் கைகோர்த்தது குறித்து கபில் தேவ் கூறுகையில்,"" பி.சி.சி.ஐ., எங்களது பெற்றோர் போல. நாங்கள் எல்லாம் சிறுவர்கள் தான். இதற்கு முன் இங்கு இருந்த போது, கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் வளர்ச்சிக்கு உதவினேன். தற்போதும் இதையே தொடர முடிவு செய்துள்ளேன்,'' என்றார்.

ராஜா
26-07-2012, 06:53 AM
டெஸ்ட் ரேங்கிங்: சச்சின் பின்னடைவு

http://sports.dinamalar.com/SportsImages/ICC-Logo_6.jpg

சர்வதேச டெஸ்ட் வீரர்களுக்கான தர வரிசைப் பட்டியலில், இந்தியாவின் சச்சின், 12வது இடத்துக்கு தள்ளப்பட்டார். டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நேற்று வெளியிட்டது. இதில் இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (749 புள்ளி), ஒரு இடம் பின்தங்கி 12வது இடம் பிடித்தார். இவரைத் தவிர வேறு இந்திய வீரர் யாரும் "டாப்-20' இடத்துக்குள் இல்லை.

முதல் மூன்று இடங்களில் இலங்கையின் சங்ககரா(892), தென்ஆப்ரிக்காவின் காலிஸ் (874), ஆம்லா (872) உள்ளனர். பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஜாகிர் கான் (697), பிரக்யான் ஓஜா (572) மட்டும் 12வது, 20வது இடத்தில் உள்ளனர். இதில், முதல் மூன்று இடத்தில் தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் (896), பாகிஸ்தானின் அஜ்மல் (832), இலங்கையின் ஹெராத் (782) உள்ளனர்.

"ஆல் ரவுண்டர்கள்' வரிசையில் தென் ஆப்ரிக்க வீரர் காலிஸ் (616) முதலிடம் பிடித்தார். வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் (404), நியூசிலாந்து வீரர் வெட்டோரி (349) அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.

ராஜா
27-07-2012, 12:24 PM
சாம்பியன்ஸ் லீக்: 'பி' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள்!

http://tamil.thatscricket.com/img/2012/07/27-champions-league-t20.jpg

சாம்பியின்ஸ் லீக் டுவென்டி20 தொடரில் பங்கேற்க உள்ள அணிகளின் பிரிவுகள் வெளியிடப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் 'பி' பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் இடம் பெற்றுள்ளன.

சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 தொடர் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்று முதல் 4 இடங்களை பிடித்த அணிகளும், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆஸ்திரேலியா நாடுகளை சேர்ந்த உள்ளூர் அணிகள் என்று மொத்தம் 14 அணிகள் பங்கேற்க உள்ளன.

ராஜா
27-07-2012, 12:33 PM
இந்திய பேட்ஸ்மேன்களின் வீழ்ச்சிக்கு மோசமான ஆடுகளமே காரணம்-கேப்டன் டோணி குற்றச்சாட்டு

http://tamil.thatscricket.com/img/2012/07/25-dhoni-2.jpg

இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இதற்கு இந்திய கேப்டன் டோணி, இலங்கை ஆடுகளத்தை குற்றச்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,

இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் ஆடுகளம் விக்கெட்டை விட்டு விலகி இருந்தது. ஆனால் 2வது போட்டியில் வித்தியாசமாக இருந்தது. பந்து ஆடுகளத்தில் பிட்சாகி மிக தாழ்வாகவே வந்தது. விராத் கோஹ்லி அவுட்டான பிறகு, இந்திய விக்கெட்கள் வரிசையாக விழ ஆரம்பித்துவிட்டது. பேட்ஸ்மேன்கள் ஆடுகளத்தின் தன்மையை அறியவதற்கு முன்பாகவே அவுட்டாகி வெளியேறினர். இது அரிதாக நடக்க கூடிய ஒன்று தான். இந்த சூழ்நிலையிலும் இர்பான் பதான், அஸ்வின் போன்றவர்கள் இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த முயன்றனர்.

பந்து ஸ்டெம்பிற்கு வரும் போது மெதுவாக வந்தது. காற்று அதிகமாக இருந்ததால், பந்துகள் ஸ்வீங் ஆகாவில்லை என்று நினைக்கிறேன் ஆனால் அடுத்த போட்டி நடைபெற உள்ள கொழும்பு பிரேமதாசா மைதானத்தில், பலத்த காற்று இருக்காது. இந்திய பேட்ஸ்மேன் அவசரப்பட்டு ஆடியதாக நான் நினைக்கவில்லை. ஒரிரு ரன்களாக எடுக்க பேட்ஸ்மேன்கள் முயன்றனர். ரோஹித் சர்மா பந்தை சிறப்பாக தான் ஆடித்து ஆடினார். ஆனால் பந்து இன்சைடு-எஜ் ஆகி போல்டாகிவிட்டார்.
அவர் அவுட்டாகாமல் இருந்திருந்தால், தொடர்ந்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தி இருப்பார். இது போன்ற தோல்விகளில் இருந்து இந்திய அணி பாடம் கற்று கொள்ள வேண்டும். அடுத்த போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

ராஜா
27-07-2012, 12:39 PM
டுவிட்டரில் ஹர்பஜன் சிங்கை கெட்ட வார்த்தையில் திட்டிய இங்கிலாந்து நபர்!

http://tamil.thatscricket.com/img/2012/07/26-harbhajan-singh-300.jpg

இங்கிலாந்தை சேர்ந்த டாமி ஜான்சன் என்பவர் டுவிட்டர் இணையதளத்தில் ஹர்பஜனை கெட்ட வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளார்.

டாமி ஜான்சன்: நான் ஒரு இங்கிலாந்து குடிமகன் என்று சொல்லி கொள்ள பெருமைப்படுகிறேன். ஹர்பஜன் சிங், நீ யாருடன் டுவிட்டிங் செய்து கொண்டிருக்கிறாய் என்று தெரியுமா? நான் உனது தலையில் உள்ள தலைபாகையை கிழித்து, ... அடித்து கரைத்து விடுவேன்.

ஹர்பஜன் சிங்: நீ ஒரு கிறுக்கன் போல இருக்கிறது. உனக்கு கடவுள் நல்ல புத்தியை தரட்டும். விரைவில் குணமாகு...

டாமி ஜான்சன்: மக்கி போன மரமே, உனது ...., தலைபாகை கலைத்து எறிந்துவிடு..

ஹர்பஜன் சிங்: ஜான்சன், உனது பெற்றோர் இப்படியா சொல்லி வளர்த்தார்கள்? உனக்கு தைரியம் இருந்தால், பந்துடன் நேரில் வா. நீ சொல்வதை உன்னால் செய்ய முடியுமா என்று பார்ப்போம். ஒழுங்காக பேச கடவுள் உனக்கு நல்ல புத்தி தரட்டும் எனது சகோதரனே...

டாமி ஜான்சன்: நான் ஒரு கால்பந்து போக்கிரி. எனது பெயர் டாமி ஜான்சன். உன்னை விட பல பெரிய ஆட்களை பார்த்தவன் நான். எனக்கு கடவுள் கோகோயின் போதைப் பொருளை இன்னும் தர வேண்டும்...

இதன் இடையே டாமி ஜான்சனின் மோசமான வார்த்தைகளுக்கு அஜய் சதீஷ் என்பவர் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறுகையில், ஹர்பஜன் சிங்கை மோசமாக விமர்சித்த டாமி ஜான்சன் மீது நான் புகார் அளிக்க உள்ளேன் என்றார்.

இதன்பிறகு மீண்டும் வந்த டாமி ஜான்சன்: இந்தியா என்று சொல்கிறார்களே, அது எங்கே இருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா? நான் இங்கிலாந்தின் குடிமகன் என்று கூறி கொள்ள பெருமை அடைகிறேன் என்று கூறினார்.

இங்கிலாந்து கவுன்டி அணிக்காக விளையாடி வரும் ஹர்பஜன் சிங், விக்கெட்கள் எடுக்காமல் சொதப்பி வருவது கவுன்டி அணி ரசிகர்களுக்கு கூட கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராஜா
28-07-2012, 03:32 AM
எழுச்சி பெறுமா இந்தியா - இன்று இலங்கையுடன் 3வது மோதல்..

http://sports.dinamalar.com/SportsImages/Mahendra-Singh-Dhoni-336_62.jpg

இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று நடக்கிறது. கடந்த போட்டியில் சொதப்பிய இந்திய அணி, இன்று எழுச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பின் களமிறங்கினாலும், முதல் போட்டியில் வெற்றி பெற்று நம்பிக்கை தந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் படுமோசமாக தோல்வியடைந்தது. இன்று, இரு அணிகள் மோதும் மூன்றாவது ஆட்டம், கொழும்புவில் பகலிரவு போட்டியாக நடக்கிறது.

இந்திய அணி கேப்டன் தோனி, பெரும்பாலும் அணியில் பெரிய மாற்றத்தை விரும்ப மாட்டார். தொடரின் முதல் போட்டியில் களமிறங்கும் அணிதான், கடைசிவரை நீடிக்கும். அதேநேரம், ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு தொடரில் சொதப்பிய ரோகித் சர்மா, முதல் இரு போட்டியில் 1, 0 என, ஏமாற்றினார்.
கடைசியாக ரோகித் சர்மா விளையாடிய 10 போட்டிகளில், 156 ரன்கள் தான் எடுத்துள்ளார். இருந்தும், இவருக்கு தோனி தொடர்ந்து வாய்ப்பு தந்து ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறார்.

தனது கடைசி போட்டியில் (2011, டிச.,) சதம் அடித்த மனோஜ் திவாரி நிலை தான் பரிதாபமாக உள்ளது. அணியில் இடம்பெற்று, உடற்தகுதி இருந்தும், தொடர்ந்து 14 போட்டிகளில் களத்துக்கு வெளியே தான் உட்கார வைக்கப்பட்டுள்ளார். துவக்கத்தில் சேவக், காம்பிர் அடுத்து விராத் கோஹ்லி, ரெய்னா தங்கள் இடத்தை உறுதி செய்து விடுவதால், ரகானேவும் இடமில்லாமல் தடுமாறுகிறார். "மிடில்ஆர்டருக்கும்' இவர் ஒத்து வரமாட்டார் என்பதால், இன்றும் வாய்ப்பு கிடைக்காது என்பது உறுதி.

ஓஜா சிக்கல்:

பிரேமதாசா மைதானம் வழக்கமாக சுழற் பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும். ஆனால், பிரக்யான் ஓஜா காயம் அடைந்தது, இந்திய அணியின் பவுலிங்கில் பின்னடைவு தான். இதனால், அஷ்வினுடன், "போதை' ராகுல் சர்மா களமிறங்குவாரா இல்லையா என்பது உறுதியில்லாமல் <உள்ளது. ஏனெனில், இவர் போதை மருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளதால், போட்டியில் களமிறங்க பி.சி.சி.ஐ., , அனுமதிக்குமா என்று தெரியவில்லை. இதனால், வேகத்தில் "சீனியர்' ஜாகிர் கான், உமேஷ் யாதவ், "ஆல்-ரவுண்டர்' இடத்தில் இர்பான் பதான் கைகொடுக்க வேண்டும்.

பேட்டிங் பலம்:

இலங்கை அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் வலுவாகத்தான் உள்ளது. சதம் அடித்த சங்ககரா, தில்ஷன், தரங்கா இன்றும் அசத்தலை தொடரலாம். பவுலிங், பேட்டிங்கில் ஜொலிக்கும் "ஆல்-ரவுண்டர்' பெரேரா இந்த அணிக்கு பெரும் பலமாக உள்ளார். இவருடன் மாத்யூஸ், சண்டிமால், திரிமான்னேவும் தங்கள் பங்கிற்கு ரன்கள் சேர்க்கின்றனர்.


மலிங்கா ஆறுதல்:
முதல் போட்டியில ஏமாற்றிய மலிங்கா, அடுத்து வழக்கமான தனது விக்கெட் வேட்டைக்கு திரும்பியது, கேப்டன் ஜெயவர்தனாவுக்கு ஆறுதல் தான். இளம் <இசுரு உதனா, சுழலில் ரங்கனா ஹெராத், ஜீவன் மெண்டிஸ், சேனநாயகேவும் கைகொடுக்க காத்திருக்கின்றனர்.

ராஜா
28-07-2012, 07:44 AM
45 வயசு வரைக்கும் விளையாடுவேன் - பீதி கிளப்பும் டெண்டுல்கர்!

http://tamil.thatscricket.com/img/2012/07/28-sachin21-300.jpg

ஏன் ரிட்டயராகிறார் என்று கேட்ட காலம் போய், எப்போது ரிட்டராவார் என்று கேட்கவைத்துவிடுவார் போலிருக்கிறது சச்சின் டெண்டுல்கர். இன்னும் ஆறு ஆண்டுகள்... அதாவது 45 வயது வரை கிரிக்கெட் விளையாடத் திட்டமிட்டிருக்கிறாராம் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டில் யாரும் எளிதில் எட்ட முடியாதபடி சாதனை மேல் சாதனை படைத்திருப்பவர் டெண்டுல்கர். தற்போது தெண்டுல்கருக்கு 39 வயதாகிறது. அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அவசர அவசரமாக அந்த தகவல்களை மறுத்தார் டெண்டுல்கர். இப்போதைக்கு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று அவர் கூறிவிட்டார்.

இந்த நிலையில் மும்பையில் நேற்று பிஎம்டபிள்யூ புதிய ரக கார் அறிமுகவிழாவில் கலந்து கொண்ட டெண்டுல்கர் நிருபர்களிடம் கூறுகையில், "இப்போது என் முழு கவனமும் கிரிக்கெட்டில்தான் உள்ளது. 5 அல்லது 6 ஆண்டுகளுக்குப் பிறகுதான் என்ன செய்வது என முடிவு செய்ய வேண்டும். என்ன துறையைத் தேர்ந்தெடுப்பது என்பதை இப்போதே சொல்வது கடினம்," என்றார். இதன்மூலம் 45 வயது வரை கிரிக்கெட் விளையாடுவேன் என்பதை டெண்டுல்கர் சூசகமாக உணர்த்தியுள்ளார். எனவே டெண்டுல்கர் இப்போதைக்கு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

ராஜா
28-07-2012, 05:07 PM
India: 256 / 5, 46 Overs

வெற்றிபெற, 24 பந்துகளில் 31 ஓட்டங்கள் தேவை..

ராஜா
28-07-2012, 05:08 PM
India: 276 / 5, 48.1 Overs

11 பந்துகளில் 11 ஓட்டங்கள் தேவை..

ராஜா
28-07-2012, 05:11 PM
India: 281 / 5, 49 Overs

6 பந்துகளில் 6 ஓட்டங்கள் தேவை..

ராஜா
28-07-2012, 05:16 PM
இந்தியா வெற்றி..

288 / 5, 49.4 Overs

ராஜா
29-07-2012, 09:22 AM
3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா

http://tamil.thatscricket.com/img/2012/07/29-gambhir-plays.jpg

இந்தியா - இலங்கை இடையேயான 3-வது கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட் செய்தது. இலங்கை அணியின் சங்ககாரா 73 ரன்களையும் ஜெயவர்த்தனா 65 ரன்களையும் குவித்தனர். பின்வரிசை ஆட்டக்காரர்களான மேத்யூஸும் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மெண்டிஸ் 45 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி மொத்தம் 286 ரன்களை எடுத்தது.

பின்னர் ஆடத் தொடங்கிய இந்திய அணி தொடக்கத்தில் சரியாக விளையாடவில்லை. 3 ரன்களில் சேவாக் அவுட்டானது அதிர்ச்சியடைய வைத்தது. விராத் கோஹ்லி நிதானமாக ஆடி 65 பந்துகளில் 38 ரன்களை எடுத்தார். கேப்டன் டோணி 49 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரோஹித் சர்மா முதல் பந்திலேயே அவுட்டாகிப் போனார். இந்திய அணியில் கம்பீர் மட்டும் அபாரமாக ஆடினார். 101 பந்துகளில் 102 ரன்களை அவர் குவித்தார். அவர் ஆட்டமிழக்கும் போது இந்திய அணி 38.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்திருந்தது.

பின்னர் ஜோடி சேர்ந்த ரெய்னா, பதான் இருவரும் வெளுத்துக் கட்டத் தொடங்கினர். கடைசி ஓவர் வரை வெற்றிக்காக இருவரும் போராடினர். கடைசி ஓவரின் 4-வது பந்தில் பதான் ஒரு பவுண்டரி அடித்து வெற்றி இலக்கைத் தாண்டினார். ரெய்னா 45 பந்துகளில் 65 ரன்களுடனும், 31 பந்துகளில் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ரெய்னா ஆட்டநாயகனாகத் தேர்வானார்.

இந்தியா- இலங்கை இடையேயான 4-வது ஒருநாள் போட்டி செவ்வாய்க்கிழமையன்று நடைபெற உள்ளது.

ராஜா
29-07-2012, 09:26 AM
இந்தியாவுடன் போட்டி நடக்கலைனா நாங்க திவாலாகியிருப்போம்-பாக். கிரிக்கெட் வாரியம்

http://tamil.thatscricket.com/img/2012/07/29-pak-cricket-board.jpg

இந்தியா- பாகிஸ்தான் இடையே ஒருநாள் போட்டிகளை இந்த ஆண்டின் டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் அண்மையில் ஒப்புதல் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள இஜாஜ் பட், இந்தியாவில்தான் என்றில்லை.. இருநாடுகளுக்கும் பொதுவான ஒரு நாட்டில் இரண்டு நாட்டு அணிகளுக்கு இடையே அடுத்த ஆண்டு போட்டி மட்டும் நடைபெறாமல் இருந்தால் நிச்சயம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிதிநிலைமை படுமோசமாக இருந்திருக்கும் என்றும் கூறிய்ள்ளார்.

"2006-ம் ஆண்டில் இருந்து இந்தியாவுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாடவில்லை. 2009-க்குப் பிறகு வெளிநாட்டுப் போட்டிகளையும் பாகிஸ்தான் மேற்கொள்ளவில்லை. இதனால் இந்தியாவில் நடைபெறக் கூடிய இந்த ஒருநாள் தொடர் பாகிஸ்தானுக்கு மிகவும் முக்கியமானது" என்றும் பட் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவுடன் விளையாடும்போது ஒளிபரப்பு உரிமத்தின் மூலம் 40 முதல் 45 மில்லியன் அமெரிக்க டாலர் பாகிஸ்தானுக்குக் கிடைக்கும். இதே இந்தியா போட்டிகளை நடத்தினால் அந்நாட்டுக்கு மீடியா உரிமங்கள் மூலம் 100 மில்லியன் டாலர் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டி மூலம் கிடைக்கும் வருவாயில் பாகிஸ்தானும் பங்கு கோர வேண்டும். அப்படி இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொள்ளாத நிலையில் பாகிஸ்தான் அந்நாட்டு அணி விளையாடுவதற்கான உத்தரவாதத்தைப் பெற வேண்டும் என்றும் இஜாஜ் பட் கூறியிருக்கிறார்.

ராஜா
31-07-2012, 04:41 AM
தொடரை வெல்லுமா இந்தியா * இன்று இலங்கையுடன் 4வது மோதல்

http://sports.dinamalar.com/SportsImages/Mahendra-Singh-Dhoni-336_44.jpg

இலங்கை சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியின் முடிவில் இந்திய அணி 2-1 என, தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இன்று, இரு அணிகள் இடையிலான நான்காவது ஆட்டம், கொழும்புவில் இன்று பகலிரவு போட்டியாக நடக்கிறது. இரண்டாவது போட்டியில் பேட்டிங்கில் ஏமாற்றிய இந்திய அணி, மூன்றாவது ஆட்டத்தில் எழுச்சி பெற்றது. காம்பிர் சதம் அடித்து "பார்முக்கு' திரும்பினார். மற்றொரு துவக்க வீரர் சேவக், விராத் கோஹ்லி சற்று நிலைத்து விளையாட முயற்சிக்க வேண்டும். தோனி முன்னதாக களமிறங்குவது நல்லது தான் என்றாலும், இவரது "புண்ணியத்தில்' தொடர்ந்து 1, 0, 0 என சொதப்பி வரும் ரோகித் சர்மாவுக்கு இன்றும் வாய்ப்பு கிடைக்கும் என்றே தெரிகிறது. இதனால் தனது கடைசி போட்டியில் (2011, டிச.,) சதம் அடித்த மனோஜ் திவாரி நிலை பரிதாபம் தான்.

சாதனை வெற்றி:

மூன்றாவது போட்டியில் ஆறாவது விக்கெட்டுக்கு இணைந்த ரெய்னா, இர்பான் பதான் சிறந்த ஜோடியாக (92 ரன்கள்) அசத்தியது. இதனால், இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில், 250க்கு மேல் ரன்கள் "சேஸ்' செய்து வென்ற முதல் அணி என்ற சாதனை படைத்தது. இன்றும் இவர்களது அசத்தல் தொடரும் பட்சத்தில் இந்திய அணி தொடரை கைப்பற்றலாம்.

பவுலிங் ஏமாற்றம்:

பவுலிங்கில் இந்திய அணி பெரிதும் சொதப்புகிறது. முதலில் ஜாகிர் கான், நல்ல துவக்கம் தந்தாலும், இர்பான் பதான், டிண்டா ஆகியோர் சொதப்புவதால், இலங்கை அணி விழித்துக் கொள்கிறது. இன்று இந்திய பவுலர்கள் சுதாரித்துக் கொண்டால் நல்லது. சுழலில் அஷ்வினுடன், ராகுல் சர்மாவும் கைகொடுக்க வேண்டும்.

மழை வரலாம்..

இன்று போட்டி நடக்கும் கொழும்புவில், வானம் மேகமூட்டமாக இருக்கும். வெப்பநிலை அதிகபட்சம் 30, குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியசாக இருக்கும். இடியுடன் கூடிய மழைவர 50 சதவீதம் வாய்ப்புள்ளது

ராஜா
31-07-2012, 10:56 AM
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இலங்கை, முதலில் பேட்டிங்

117 / 2, 24 ஓவர்களில்..

ராஜா
31-07-2012, 03:36 PM
இலங்கை : 251 / 8

இந்தியா : 153 / 4 ( 32 ஓவர்களில்..)

jayanth
31-07-2012, 04:39 PM
தொடரை வென்றது இந்தியா...

http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/57622.gif (javascript:emoticonp(':greenstars:')) http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/57622.gif (javascript:emoticonp(':greenstars:')) http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/57622.gif (javascript:emoticonp(':greenstars:'))

ராஜா
31-07-2012, 04:57 PM
வாழ்த்துகள் இந்தியா..!

தகவலுக்கு நன்றி ஜயந்த்..!

ராஜா
01-08-2012, 03:55 AM
தொடரை வென்றது இந்தியா

கொழும்பு, ஜூலை 31: இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா. கொழும்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 4-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
முதலில் பேட் செய்த இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இந்தியா 42.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்து வென்றது. விராட் கோலி 128 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். ரெய்னா 51 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். இருவரும் கடைசி வரை களத்தில் இருந்தனர்.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. தொடக்க வீரர்கள் உபுல் தரங்கா, தில்ஷான் ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். 48 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து தில்ஷான் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய திரிமனேவும் சிறப்பாக விளையாடினார். இதனிடையே தரங்கா 51 ரன்களில் வெளியேறினார். திரிமனே 47 ரன்கள் எடுத்தார். இதனால் இலங்கை அணி வலுவான ஸ்கோரை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கேப்டன் ஜெயவர்த்தனா 3 ரன்களில் சேவாக் பந்து வீச்சில் ஆட்டமிழந்தது, இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது. அடுத்து வந்த மேத்யூஸ் (14 ரன்கள்), மெண்டிஸ் (17 ரன்கள்), பெரேரா (2 ரன்கள்) ஆகியோரை மனோஜ் திவாரி சிறிய இடைவெளியில் ஆட்டமிழக்கச் செய்தார். முன்னதாக சண்டிமால் 28 ரன்களில் திவாரி பந்தில் வெளியேறினார். இதனால் இலங்கை அணியின் ரன்வேகம் குறைந்தது. இதனால் இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது. ஹெராத் 17 ரன்களுடனும், மலிங்கா 15 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணியில் ராகுல் சர்மாவுக்கு பதிலாக இடம் பெற்ற மனோஜ் திவாரி 10 ஓவர்களில் 61 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். அஸ்வின் 2 விக்கெட் எடுத்தார். மொத்தம் 8 பந்து வீச்சாளர்களை கேப்டன் தோனி பயன்படுத்தினார்.

அடுத்து பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர் கம்பீர் முதல் ஓவரிலேயே ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அடுத்து கோலி களமிறங்கினார். அதிரடியாக விளையாட முற்பட்ட சேவாக் 29 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய ரோஹித் சர்மா வழக்கம் போல மோசமாகவே விளையாடினார்.
அவர் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். அப்போது இந்திய அணி 12.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. அடுத்து வந்த மனோஜ் திவாரி 21 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கோலியுடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். இதனால் ஸ்கோர் உயர்ந்தது. 40-வது ஓவரில் பவுண்டரி அடுத்து கோலி சதமடித்தார். பின்னர் அதே ஓவரில் கோலி கொடுத்த கேட்சை இலங்கை வீரர்கள் கோட்டைவிட்டனர்.

இதையடுத்து கோலி அதிரடியாக விளையாடினார். அடுத்த ஓவரிலேயே ரெய்னா அரைசதமடித்தார். ஹெராத் வீசிய 42-வது ஓவரில் கோலி 4 பவுண்டரிகளை விளாசினார். இதனால் இந்திய அணி இலக்கை நோக்கி வேகமாக முன்னேறியது. 43-வது ஓவரின் 2-வது பந்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்து வென்றது. இதன் மூலம் இலங்கைக்கு எதிரான தொடரையும் வென்றுள்ளது. இந்தியாவுக்கு இது 400-வது ஒருநாள் கிரிக்கெட் வெற்றியாகும். 5-வது ஒருநாள் ஆட்டம் ஆகஸ்ட் 4-ல் நடைபெறவுள்ளது.

கோலி சாதனை

இதுவரை 89 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கியுள்ள கோலி 13-வது சதமடித்து சாதனை படைத்துள்ளார். இதுவரை எந்த பேட்ஸ்மேனும் ஒருநாள் போட்டியில் இவ்வளவு குறைவான ஆட்டத்தில் 13 சதம் என்ற சாதனையை எட்டியதில்லை. இந்த ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்களைக் எட்டியுள்ளார். இதில் சராசரி 77.15. கடந்த 8 ஆட்டங்களில் 5 சதங்களை விளாசியுள்ளார். இந்தத் தொடரில் இரு சதங்களை எடுத்துள்ளார்.

சுருக்கமான ஸ்கோர்

இலங்கை 8 விக்கெட் இழப்புக்கு
251 (50 ஓவர்களில்)
(தரங்கா 51, திரிமனே 47,
திவாரி 4வி/61, அஸ்வின் 2வி/46)

இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு
255(42.2 ஓவர்களில்)
(கோலி 128*, ரெய்னா 58*,
மேத்யூஸ் 1வி/18)

ரெய்னா இந்தத் தொடரில் 3 அரைசதங்களை எடுத்துள்ளார். இவை அனைத்திலும் இந்தியா வென்றுள்ளது. இது அவருக்கு 24-வது அரை
சதம். இவற்றில் 8 அரை சதங்கள் இலங்கைக்கு எதிராக எடுக்கப்பட்டவை.

அனுராகவன்
04-08-2012, 11:15 PM
வெற்றி பெற்ற இந்திய அணிக்கு என் வாழ்த்துக்கள்..

ராஜா
06-09-2012, 11:48 AM
http://c224126.r26.cf3.rackcdn.com/T20%20World%20Cup%202012.png

http://i.imm.io/A0Dd.png

ராஜா
06-09-2012, 11:49 AM
http://i.imm.io/A0Dz.png

ராஜா
06-09-2012, 11:52 AM
http://i.imm.io/A0DS.png

ராஜா
06-09-2012, 11:53 AM
http://i.imm.io/A0Ep.png

ராஜா
06-09-2012, 11:54 AM
http://i.imm.io/A0EE.png

jayanth
06-09-2012, 02:15 PM
தகவல் பகிர்விற்கு நன்றி ராஜா...

அமரன்
06-09-2012, 08:55 PM
கிண்ணதை வெல்லப் போவது நாங்கதானுங்கோ... என்று ஆளாளுக்கு வாயால ஆடத் துவங்கிட்டாங்க.. கள ஆட்டம் எப்படி இருக்குமோ?

முன்னோடியாக தகவல்களை தருவதில் அண்ணனுக்கு நிகர் அண்ணனே.

ராஜா
17-09-2012, 12:22 PM
இந்தியா (எ) பாகிஸ்தான் ( டி20 உ.கோ. பயிற்சி ஆட்டம்..)

ஸ்கோர் விபரம்:

இந்தியா: 185/3 (20)
பேட்டிங்: கோலி(75), ரோஹித் சர்மா(56), சேவாக்(26)
பந்துவீச்சு: அஜ்மல்(22/2), குல்(31/1)

பாகிஸ்தான்: 186/5 (19.1)
பேட்டிங்: கம்ரான் அக்மல்(92), முகமது ஹபீஸ்(38), சோயிப் மாலிக்(37)

http://www.espncricinfo.com/db/PICTURES/CMS/149900/149925.jpg

பந்துவீச்சு: அஸ்வின்(23/4)

முடிவு: பாகிஸ்தான் அணி இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

jayanth
17-09-2012, 02:33 PM
தகவல் பகிர்விற்கு நன்றி ராஜா...

ராஜா
19-09-2012, 06:35 AM
டுவென்டி20 உலக கோப்பை: வெற்றியுடன் துவக்குமா இந்தியா? இன்று ஆப்கானிஸ்தானுடன் மோதல்

http://tamil.thatscricket.com/img/2012/09/19-gambhir-sehwag-raina-600-45.jpg

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று இலங்கையில் துவங்கியது. இதில் பங்கேற்கும் 12 அணிகள், 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் பங்கேற்க உள்ளன. இதில் ஏ பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் இன்று நடைபெற உள்ள லீக் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன. அனுபவம் குறைந்த கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தானை, இன்று எளிதாக இந்தியா வீழ்த்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்திய அணி:

இந்திய அணியை பொறுத்த வரை பேட்டிங் வரிசை சிறப்பாக உள்ளது. கம்பிர், ஷேவாக், சுரேஷ் ரெய்னா, விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், டோணி ஆகியோர் அதிரடியாக ஆடும் தன்மை கொண்டவர்கள். ஆனால் பயி்ற்சி போட்டிகளில் ஏமாற்றிய கம்பிர் இன்றைய லீக் போட்டியில் எழுச்சி காண வேண்டியுள்ளது. மேலும் பேட்டிங்கில் சொதப்பி வந்த ரோஹித் சர்மா, பார்மிற்கு திரும்பியிருப்பது கூடுதல் பலம்.

இந்திய அணியில் பந்துவீச்சில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சு எடுபடவில்லை. ஆனால் அஸ்வின் பயிற்சி போட்டியில் சிறப்பாக ஆடினார். இதனால் இன்று அஸ்வினுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்துவீ்ச்சாளர்களான ஜாகிர் கான், இர்பான் பதான் ஆகியோர் ரன்களை வாரி வழங்குவதை, இன்றைய போட்டியில் தவிர்க்க வேண்டும்.

ஆப்கானிஸ்தான்:

இதுவரை சர்வதேச அளவிலான 11 டுவென்டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்று உள்ளது. இதில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தான், பயிற்சி போட்டியில் இலங்கை ஏ அணியை வீழ்த்தியுள்ளது.

டுவென்டி20 போட்டி என்பது இரு அணிகளில் யாருக்கு வேண்டுமானாலும் சாதகமாக அமையலாம். எனவே இந்தியாவிற்கு எதிரான இன்றைய போட்டியில் முழுதிறமை வெளிப்படுத்தினால், ஆப்கானிஸ்தான் வெற்றி பெற கூட வாய்ப்புள்ளது.

பயிற்சி போட்டியில் பேட்டிங்கில் அசத்திய முஹம்மது ஷசாத், முஹம்மது நபி, ஸ்டானிக்ஜாய் ஆகியோர் இன்றைய போட்டியிலும் சிறப்பாக ஆடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் நஜிபுல்லா ஜட்ரான், முஹம்மது நபி, முகமது நசிம், சமியுல்லா ஷென்வாரி ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர்.

இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி இரவு 7.30 மணிக்கு துவங்க உள்ளது.

ராஜா
19-09-2012, 06:35 AM
டுவென்டி20 உலக கோப்பை: வெற்றியுடன் துவக்குமா இந்தியா? இன்று ஆப்கானிஸ்தானுடன் மோதல்

http://tamil.thatscricket.com/img/2012/09/19-gambhir-sehwag-raina-600-45.jpg

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று இலங்கையில் துவங்கியது. இதில் பங்கேற்கும் 12 அணிகள், 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் பங்கேற்க உள்ளன. இதில் ஏ பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் இன்று நடைபெற உள்ள லீக் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன. அனுபவம் குறைந்த கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தானை, இன்று எளிதாக இந்தியா வீழ்த்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்திய அணி:

இந்திய அணியை பொறுத்த வரை பேட்டிங் வரிசை சிறப்பாக உள்ளது. கம்பிர், ஷேவாக், சுரேஷ் ரெய்னா, விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், டோணி ஆகியோர் அதிரடியாக ஆடும் தன்மை கொண்டவர்கள். ஆனால் பயி்ற்சி போட்டிகளில் ஏமாற்றிய கம்பிர் இன்றைய லீக் போட்டியில் எழுச்சி காண வேண்டியுள்ளது. மேலும் பேட்டிங்கில் சொதப்பி வந்த ரோஹித் சர்மா, பார்மிற்கு திரும்பியிருப்பது கூடுதல் பலம்.

இந்திய அணியில் பந்துவீச்சில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சு எடுபடவில்லை. ஆனால் அஸ்வின் பயிற்சி போட்டியில் சிறப்பாக ஆடினார். இதனால் இன்று அஸ்வினுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்துவீ்ச்சாளர்களான ஜாகிர் கான், இர்பான் பதான் ஆகியோர் ரன்களை வாரி வழங்குவதை, இன்றைய போட்டியில் தவிர்க்க வேண்டும்.

ஆப்கானிஸ்தான்:

இதுவரை சர்வதேச அளவிலான 11 டுவென்டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்று உள்ளது. இதில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தான், பயிற்சி போட்டியில் இலங்கை ஏ அணியை வீழ்த்தியுள்ளது.

டுவென்டி20 போட்டி என்பது இரு அணிகளில் யாருக்கு வேண்டுமானாலும் சாதகமாக அமையலாம். எனவே இந்தியாவிற்கு எதிரான இன்றைய போட்டியில் முழுதிறமை வெளிப்படுத்தினால், ஆப்கானிஸ்தான் வெற்றி பெற கூட வாய்ப்புள்ளது.

பயிற்சி போட்டியில் பேட்டிங்கில் அசத்திய முஹம்மது ஷசாத், முஹம்மது நபி, ஸ்டானிக்ஜாய் ஆகியோர் இன்றைய போட்டியிலும் சிறப்பாக ஆடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் நஜிபுல்லா ஜட்ரான், முஹம்மது நபி, முகமது நசிம், சமியுல்லா ஷென்வாரி ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர்.

இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி இரவு 7.30 மணிக்கு துவங்க உள்ளது.

ராஜா
19-09-2012, 06:39 AM
டுவென்டி20 உலக கோப்பை: மென்டிஸ் 6 விக்கெட் வீழ்த்தி சாதனை-இலங்கை 82 ரன்களில் அபார வெற்றி

http://tamil.thatscricket.com/img/2012/09/19-ajantha-mendis.jpg

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய இலங்கை வீரர் அஜந்தா மென்டிஸ் 6 விக்கெட்களை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார். இதன் மூலம் இலங்கை அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

aren
19-09-2012, 06:44 AM
அஜெந்தா மெண்டீஸஸுக்கு திரும்பவும் விளையாட சந்தர்பம் கிடைக்குமா என்று நினைத்திருந்தேன், ஆனால் நேற்று அபாரமாக பந்துவீசி இன்னும் பல போட்டிகளுக்கு பலமான அஸ்திவாரம் அமைத்துவிட்டார். பாராட்டப்படவேண்டியவர். சந்தர்பத்தை அருமையாக பயன்படுத்திக்கொண்டதற்காக.

அமரன்
19-09-2012, 10:55 AM
இரு மெண்டிஸ்களும் நேற்று ஶ்ரீலங்காப் பிரசைகளுக்கு போதையூட்டி விட்டார்கள்.


ஆரென் அண்ணா..
அஜந்த மெண்டிஸ் காயம் காரமாகத்தானே ஆடவில்லை..


இன்றைய போடியில் இந்தியா வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை..

aren
20-09-2012, 03:05 AM
இந்தியா சொதப்பலாக ஆடியது. எங்கே ஆஃப்கானிஸ்தான் வென்றுவிடுமோ என்றுகூட ஒரு கட்டத்தில் நினைத்தேன். ஜாஹீர்கான் பந்துவீசு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. ஆட்டத்தில் ஈடுபாடு இல்லாமல் ஆடியதுபோல் இருந்தது அவருடைய பந்துவீச்சு.

பாலாஜி, யுவராஜ், அஸ்வின் மற்றும் பதானின் பந்துவீச்சு நன்றாகவே இருந்தது.

மட்டையாளர்கள் கொஞ்சம் சரியாக ஆடியிருக்கவேண்டும். அடுத்த ஆட்டத்திலாவது காம்பீரும், ஷேவாக்கும் கை கொடுக்கவேண்டும்.

அடுத்த ஆட்டத்திற்கு ரோஹிட் சர்மாவிற்கு பதில் ஹர்பஜனை கொண்டு வந்தாலும் வரக்கூடும். ஆனால் தோனி இதை விரும்பவில்லை என்றே தெரிகிறது.

நாஞ்சில் த.க.ஜெய்
20-09-2012, 04:58 AM
இன்னும் ஒரு விடயம் புரியவில்லை ரஹானே,புஜாரா,தினேஸ்கார்த்திக் இந்த மட்டையாளர்களை தவிர்த்து சர்மாவை எடுத்திருப்பது ஏனோ நெருடலாக படுகிறது..நேற்று முந்தினம் இந்தியா விளையாடும் முன் ஆஃப்கானிஸ்தான் வெற்றி பஎரும் என்று நினைத்தேன் அதர்கேற்றவாறு ஆட்டம் இருந்தது ...

aren
02-10-2012, 04:35 AM
நேற்றைய இலங்கை இங்கிலாந்து ஆட்டத்திற்கு ஜெயவர்தனேவிற்கு பதில் சங்ககரா காப்டனாக களம் இறங்கினார். காரணம் ஜெயவர்தனே போன ஆட்டத்தில் மெதுவாக ஆடியதால் இன்னும் ஒரு முறை இப்படி நடந்தால் அவர் ஒரு ஆட்டம் வெளியே இருக்கவேண்டும். அது இந்த மாதிரியான பெரிய போட்டிகளை பாதிக்கும் என்பதால் சமயோசிதமாக சங்ககராவை காப்டனாக உள்ளே இறக்கினார்கள். இது மிகவும் துணிச்சலான மற்றும் சமயோசிதமான முடிவு. இதை நிச்சயம் பாராட்டவே வேண்டும் இது தவறாக சிலருக்கு தோன்றினாலும்.

அன்புரசிகன்
02-10-2012, 05:18 AM
நேற்றைய இலங்கை இங்கிலாந்து ஆட்டத்திற்கு ஜெயவர்தனேவிற்கு பதில் சங்ககரா காப்டனாக களம் இறங்கினார். காரணம் ஜெயவர்தனே போன ஆட்டத்தில் மெதுவாக ஆடியதால் இன்னும் ஒரு முறை இப்படி நடந்தால் அவர் ஒரு ஆட்டம் வெளியே இருக்கவேண்டும். அது இந்த மாதிரியான பெரிய போட்டிகளை பாதிக்கும் என்பதால் சமயோசிதமாக சங்ககராவை காப்டனாக உள்ளே இறக்கினார்கள். இது மிகவும் துணிச்சலான மற்றும் சமயோசிதமான முடிவு. இதை நிச்சயம் பாராட்டவே வேண்டும் இது தவறாக சிலருக்கு தோன்றினாலும்.

முன்பு முரளி கூறியதாய் நினைவு. வாட்சனும் கூட.. அணித்தலைவராக இருக்கும் போது தமது ஆட்டங்களில் கவனம் செலுத்தவது கடினம் என்று...

நன்றாக ஆடவேண்டும் என்று நினைப்பவர்கள் அணித்தலைவராக வரவிரும்புவது குறைவு...

அது சிலருக்கு உரித்தான ஒரு கலை. சங்ககார கங்குலி அசாருதீன் பொன்டிங் ஸ்டீவ்வோ மார்க் டெய்லர் இப்படி....

aren
02-10-2012, 06:14 AM
அன்பு, நீங்கள் நினைப்பது அல்ல நான் சொல்ல வந்தது.

ஸ்லோ ஓவர் ரேட் காரணத்தால் இவரை மாட்ச் ரெஃப்ரி ஒரு ஆட்டம் வெளியே இருக்கச் சொல்லிவிடுவார் இன்னொரு முறை அப்படி நடந்தால். அதை தவிர்க்கவே சங்ககராவை காப்டனாக உள்ளே டாஸ் போட கொண்டு வந்தார்கள். மற்றபடி ஜெயவர்தனேதான் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டார். ஸ்லோ ஓவர் ரேட் மாட்ச் ரெஃப்ரி சொன்னால் அணித்தலைவராக இருந்த சங்ககராதான் பாதிக்கப்படுவார். ஆனால் கடந்த 12 மாதத்தில் இதுதான் முதல் முறை என்பதால் சங்ககராவிற்கு நஷ்டம் எதுவும் இல்லை. ஆனால் ஜெயவர்தனே ஏற்கெனவே ஒரு முறை தண்டனை பெற்றிருப்பதால் இன்னொரு முறை ஸ்லோ ஓவர் ரேட் வந்தால் அவர் ஒரு ஆட்டம் வெளியே இருக்கவேண்டிவரும்.

தோனிகூட இந்த காரணத்தால் ஒரு மாட்ச் வெளியே இருக்கும்படியானது. சமீபத்தில் பாகிஸ்தானின் மிஸ்பா ஒரு டெஸ்ட் போட்டியில் வெளியே இருக்கும்படியானது.

அமரன்
07-10-2012, 06:07 PM
என் விருப்பத்துக்குரிய மேற்கிந்திய அணி டி20 உலககோப்பையை வென்று விட்டது..

இலகுவான இலக்கை நிர்ணயித்து, நேர்த்தியான பந்துவீச்சு, களத்தடுப்பால் இதை சாதிக்க முடிந்தது. வாழ்த்திகள் மேற்கிந்திய அணிக்கு..

நீண்ட காலமாக எதையும் சாதிக்காமல் இருந்து, அண்மைகாலமாக இருட்டில் தவித்த அணிக்கு இந்த வெற்றி பிரகாசமான பாதையை திறந்து விடட்டும்

கோபாலன்
08-10-2012, 10:05 AM
ஒரு அணியாக, நல்ல போராட்டத்தை வெளிப்படுத்தி, கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வாழ்த்துக்கள் . :)